Thursday, February 2, 2012

நிலையான முகவரி

கடலுக்கு அலையது முகவரி
நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கும் நீதான் முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கும் நீதான் முகவரி

மனதுக்கு நினைவே  முகவரி
நினைவுக்கு மொழிதான் முகவரி
பகலுக்கு ஒளிதான் முகவரி-என்
படைப்புக்கும் நீதான் முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கவிதைக்கு பல்லவி முகவரி
உடலுக்கு முகம்தான் முகவரி-வாழ்வில்
எனக்கென்றும் நீதான் முகவரி

 (கல்லூரிக் காலப் பிதற்றல் 2 )


59 comments:

  1. வதனமே சந்திரபிம்பமோ..?!
    முகமது சந்திரபிம்பமோ..?! :-))))

    ReplyDelete
  2. சின்னப்பயல் //

    மிகச் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை
    முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. கவிதைக்கு முகவரி நீங்கள் தான்

    ஆகா அருமையான எழுத்து கோர்வை.அருமையான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //எனக்கென்றும் நீதான் முகவரி.//கிடைத்ததா, நிலைத்ததா, இல்லை கடைசியில் கூறியது போல்.......?

    ReplyDelete
  5. முகத்தில் வரி வந்தபிறகு கூட பலருக்கு நிலையான முகவரி கிடைப்பதில்லை..

    சிந்திக்க வைக்கும் கவிதை நன்று.

    ReplyDelete
  6. ரோமியோவின் கல்லூரிக் காலப் பிதற்றல் கூட மிகவும் நன்றாக இருக்கிறது. நிச்சயம் இந்த ரோமியோவை சுற்றி பெரும் பெண்கள் கூட்டம் இருந்திருக்கும் என நின்னைக்கிறேன்

    ReplyDelete
  7. முகவரி இருந்த காதல் கவிதையா, முகவரி தேடிய காதல் கவிதையா?

    ReplyDelete
  8. சரி ! கடைசியில் அந்த நிலவின் உண்மையான
    நிலையான விலாசம் கிடைத்ததைச் சொன்னால் தான்
    கவிதை நிறைவு பெறும் ..இல்லையா ? கவிதை
    அவர்களைக் கவர்ந்ததோ இல்லையோ எங்களைக்
    கவர்ந்து விட்டது. ஆஹா , தத்துவப் பேரரசின்
    காதல் பக்கம் அறிந்து வியப்பாக உள்ளது.

    ReplyDelete
  9. முகவரி தேடிய கல்லூரிப் பாடல் நன்று! ஜி.எம்.பி. சார் எழுப்பியுள்ள கேள்விதான் ரமணி ஸார் எனக்குள்ளும்!

    ReplyDelete
  10. dhanasekaran .S //.
    .
    கவிதைக்கு முகவரி நீங்கள் தான் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. G.M Balasubramaniam ..//

    //எனக்கென்றும் நீதான் முகவரி //.

    நிலைத்த முகவரியே

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. guna thamizh //..

    முகத்தில் வரி வந்தபிறகு கூட பலருக்கு நிலையான முகவரி கிடைப்பதில்லை
    .
    தங்கள் உடன் வரவுக்கும்
    சிந்திக்க வைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. Avargal Unmaigal .

    ரோமியோவின் கல்லூரிக் காலப் பிதற்றல் கூட மிகவும் நன்றாக இருக்கிறது.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. ஸ்ரீராம். //.

    முகவரி இருந்த காதல் கவிதைதான்

    தங்கள் உடன் வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ஸ்ரவாணி //

    ஆஹா , தத்துவப் பேரரசின்
    காதல் பக்கம் அறிந்து வியப்பாக உள்ளது //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  16. கணேஷ் //

    முகவரி தேடிய கல்லூரிப் பாடல் நன்று! ஜி.எம்.பி. சார் எழுப்பியுள்ள கேள்விதான் ரமணி ஸார் எனக்குள்ளும்!

    நிலைத்த முகவரியே

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  17. வணக்கம்! முகவரிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்த தபால்கார கவிஞர் ரமணிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. இது பிதற்றல் மாதிரி இல்லையே சார், மிக அழகான கவிதையாக அல்லவா இருக்கிறது.

    ReplyDelete
  19. ஓ கல்லூரிகாலத்திலேயே ஆரம்பிச்சுட்டீங்கள்ளா? வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. கல்லூரிக்காலத்திலேயே உங்களுக்கு கவிதை முகவரி கிடைத்து விட்டது நிதர்சனம் - உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது....

    ReplyDelete
  21. தி.தமிழ் இளங்கோ //

    முகவரிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்த தபால்கார கவிஞர் ரமணிக்கு பாராட்டுக்கள்.

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  22. RAMVI //

    இது பிதற்றல் மாதிரி இல்லையே சார், மிக அழகான கவிதையாக அல்லவா இருக்கிறது //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி. .

    ReplyDelete
  23. Lakshmi //

    ஓ கல்லூரிகாலத்திலேயே ஆரம்பிச்சுட்டீங்கள்ளா? வாழ்த்துகள் //

    .தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி. .

    ReplyDelete
  24. வெங்கட் நாகராஜ் //

    கல்லூரிக்காலத்திலேயே உங்களுக்கு கவிதை முகவரி கிடைத்து விட்டது நிதர்சனம் - உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது..

    .தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  25. நிலையான முகவரியைத் தேடிய போது உங்கள் முகவரி கவிதைதான் எனக்கு கிடைத்தது, நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  26. USHA RANI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. " கவிஞன் ஒருவன் தன்னை தனது இருபது வயதுக்குள் அடையாளம் காட்டாவிட்டால் அவன் கவிஞனே ஆக முடியாது " என்று பிரெஞ்சுக் கவிஞர் 'பாடிலேர்' கூறியுள்ளார். நானும் எனது முதல் கவிதையை 16 வயதிலே எழுதிவிட்டேன். நீங்களும் இளம்வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் என்றுதான் கருதுகிறேன். அருமையான கவிதை சார். சரம் சரமாய் வந்து விழும் வார்த்தைகள் கதம்பமாய்.... மணக்கிறது. தொடருங்கள் சார்.

    ReplyDelete
  28. எத்தனையோ முகவரிகளைச் சொல்லிவிட்டீர்களே. நானும் கவிதை படிக்க முகவரி ஒன்று சொல்கிறேன்.

    முகவரி: http://yaathoramani.blogspot.in

    ஓ.கே.வா சார்! அசத்தலான கவிதை.

    ReplyDelete
  29. சக்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. துரைடேனியல் //
    .
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  31. அய்யா!
    இது பிதற்றல்_
    அல்ல -உங்கள் நினைவுகள்!

    கவர்ந்து விட்டது!
    உன்கள் கவிதை!

    ReplyDelete
  32. Seeni //..

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  33. காதல் முகவரி தேடிவிட்டு பிதற்றல் என்கிறீர்களே !

    ReplyDelete
  34. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  35. நல்ல ரசனையான கவிதை. இதைப் படித்தால் முகவரி தர மறுப்பவரும் மனம் இளகித் தந்துவிடுவாரே... பிதற்றலே அழகு காதலில். மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  36. கீதா //

    பிதற்றலே அழகு காதலில்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  37. கல்லூரிக்காலத்தில் பொங்கும் கவிதைகள்.இந்தக் கவிதையும் முகவரியை அடைந்ததா.
    வாங்கின கவிதையும் உங்கள் முகவரி தேடி வந்ததா?
    அருமை ரமணி சார்.

    ReplyDelete
  38. வல்லிசிம்ஹன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  39. ரசிகனால் மட்டுமே கவிதை புனைய முடியும் என்பதை உணர்த்தியுள்ளீர்!

    ReplyDelete
  40. ரமேஷ் வெங்கடபதி

    ரசிகனால் மட்டுமே கவிதை புனைய முடியும் என்பதை உணர்த்தியுள்ளீர்!//


    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  41. கவிதையின் கருவுக்கு முகவரி நீங்கள்தானய்யா!வித்தியாசமான கருவை கையில் எடுத்துக்கொண்டு அதனை நேர்த்தியாக கவிதையிலும் உரைநடையில் செதுக்குவதற்கு உங்களுக்குத்தான் முதலிடம்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. அழகான காதல் கவிதை சார்.....

    ReplyDelete
  43. ஸாதிகா //

    கவிதையின் கருவுக்கு முகவரி நீங்கள்தானய்யா! //

    தங்கள் வரவுக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  44. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  45. நமக்கு எது முகவரி?

    ReplyDelete
  46. விமலன் //

    மிகச் சரியாக பின்னூட்டத்தை
    புரிந்து கொள்ள இயலவில்லை
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  47. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி
    (ஓட்டுப் பட்டையை சரியாக திறக்க முடியாததால்
    விட்டுவிட்டேன் )

    ReplyDelete
  48. Vow..1980's காதல்? ரசித்தேன்...காதலர் ரமணியை...

    ReplyDelete
  49. ரெவெரி //

    தங்கள் வரவுக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  50. சிந்திக்க வைக்கும் கவிதை !
    "எனக்கென்றும் நீதான் முகவரி"
    கொடுத்து வைத்தவர் யாரோ ?
    நன்றி சார் !

    ReplyDelete
  51. முகவரியில் முடிந்த கவிதை வரி சிறிதானாலும் அழகு! .வாழ்த்துகள் சகோதரா.

    எனக்கு சில வெளை வேட்பிரஸ் மக்கர் பண்ணும். அதனால் தான் மாறியும் வருவதுண்டு. எனக்கும் ஆசை பெயரைச் சொடுக்க வலை வரவேண்டும் என்று. கருத்திட படமே வராது. ஒரு ஆச்சரியக் குறி வரும்.(வேட்பிரஸ், என்பதால். இது எனக்கு மட்டும் அல்ல . வேறு ஆட்களையும் கவனித்துள்ளேன்.) அதனால் தான் எனது வலை முகவரியைத் தவறாது எழுதுவது. கூகிளில் ஒட்டியாவது வரட்டும் என்று. வசதியீனத்திற்கு வருந்துகிறேன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  52. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  53. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    விளக்கப் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. superaa irukku ayyaa

    ReplyDelete
  55. கலை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. முகவரிக் கவிதை,காதலின் முத்திரைக் கவிதை.

    ReplyDelete
  57. Murugeswari Rajavel //

    முகவரிக் கவிதை,காதலின் முத்திரைக் கவிதை//.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete