Friday, February 3, 2012

சக்தியும் சிவனும்

தன் பண்டைப் பெருமைகளை
பக்தர்களுக்கு விளக்கமாகச் சொல்லி
ஊரை இழுத்தது தேர்

தன் ஊரின் பெருமையை நிலை நாட்டி
தம்  பக்திக்கு மேலும் மெருகூட்டிக்கொண்டது
தேரை இழுத்த ஊர்

அம்மணமாய் ஆற்றலின்றிக் கிடந்தாலும்
வசீகரச் சிரிப்பால்  உறவுகளை இழுத்தது
பிறரை சார்ந்திருக்கவே முடிந்த குழந்தை

வாரி அணைத்து உச்சிமோந்து
கவலைகளை உதிர்த்து களிப்பில் மிதந்தனர்
அன்பை கொடுத்தெடுக்கத் தெரிந்த உறவினர்

தரிசாய் கிடந்தாலும்  கடந்த பருவத்து
செழிப்பினை நினைவூட்டி
உழவனைக் கவர்ந்தது  நிலம்

உயிரைக் கொடுத்து உழைப்பை விதைத்து
விளைச்சளைப் பயனாக்கி
உவகை கொண்டான் உழவன்

ஆகம சாஸ்திரவிதிகளால் 
காந்தம்போல் ஒளிர்வதாய்
வசீகரித்து நின்றது கோவில்

வெற்று இரும்பாய் உள்நுழைந்து
தன் சக்தி பொருத்துச் சக்தியேற்றி
சந்தோஷமடைந்து போனான் பக்தன்

சிவம் என்றுமே சவம்தான
தனித்தியங்காது சந்தேகமில்லை
ஆயினும்
சக்தி மிக்க சக்தி
சக்திபெறக்கூட
சவமான சிவம் நிச்சயம்  தேவை

இயற்கையின் சூட்சுமம் அறியாது
நம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.
அறிந்திருந்தும் சக்திபெற முயலாது
வெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------ .
அறிந்ததனை அனுபவமாக்கி
ஆனந்தமாக  இருக்கத் தெரிந்தவன் எவனோ
அவன்  மட்டுமே புத்திசாலி

53 comments:

  1. //அறிந்ததனை அனுபவமாக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி///


    மிகச் சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  2. என்ன ரமணி சார் தூக்கம் வரவில்லையா? இவ்வளவு லேட்டாக பதிவு போட்டு இருக்கிறீர்கள். அல்லது நான் எப்போதும் லேட்டாக கருத்து சொல்லிகிறேன். இப்பவாவது இவன் சிக்கிரமாக வந்து கருத்து சொல்லட்டடும் என்று எனக்காக லேட்டாக பதிவு போட்ட்டு இருக்கிறீர்களா?

    ReplyDelete
  3. அறிந்ததை அனுபவமாக்க
    தெரிந்தவன் எவனோ -
    அவனே புத்திசாலி!

    என்னை கவர்ந்த வரி!
    நல்ல வரி!

    ReplyDelete
  4. அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி..

    அருமையாக முடித்திருந்தீர்கள்..

    ReplyDelete
  5. அருமை. நடுவில் பழைய பெரும பேசும் பொருட்களையும், குழந்தையையும் கொண்டாடும் இடத்தில் வயதானவர்களை அம்போ என்று விட்டு விடுகிறோம் என்ற கருத்து வரப் போகிறதோ என்று நினைத்தேன். வேறு திசையில் சிறப்பாக முடித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. vargal Unmaigal //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  7. //அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி//

    முடித்த விதம் இன்னும் அழகு.

    ReplyDelete
  8. Avargal Unmaigal //

    தங்கள் பகுதி நாட்டைச் சேர்ந்தவர்கள் விடிந்ததும் பார்க்கிற மாதிரிஒரு பதிவு போடலாம் என நினைத்துத்தான் நள்ளிரவில் இந்தப் பதிவைப் போட்டேன்சரியாகக் கணித்துச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  9. நல்ல கருத்து. சக்தி சக்தி பெறுவதற்கும் சவமான சிவம் நிச்சயம் தேவை - அருமையான வரிகள். கருப்பொருளை மிக ரசித்தேன் ஸார்.

    ReplyDelete
  10. Seeni //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. chennaicinema //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. ஸ்ரீராம். //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. அமைதிச்சாரல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. கணேஷ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. பாலும் சுவையும் இணைந்து இருந்தால் தான்
    அதன் இனிமை ....
    செய்வதனை அறிந்து செய்ததை அனுபவமாக்கியவனே
    வாழத்தெரிந்தவன்...
    எவ்வளவு அருமையாக சொல்லிட்டீங்க நண்பரே..

    ReplyDelete
  16. மகேந்திரன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. அருமையான பல கருத்துக்களை உள்ளடக்கியது கவிதை. பிரமாதம். ஆணின்றி பெண்ணில்லை. பெண்ணின்றி ஆணில்லை என்ற கருத்து எனக்குப் பிடித்தது.மனம் கவர்ந்த பதிவு. தொடரவும்.

    ReplyDelete
  18. நெய்க்குத் தொன்னை ஆதாரம் ..
    அது போல் தொன்னைக்கு நெய் ஆதாரம் ...
    யாரும் ,எதுவும் ஏதேனும் ஒருவிதத்தில்
    சார்ந்து இருத்தல் இன்றி
    தனித்திருக்க இயலாது. உண்மை.

    ReplyDelete
  19. அசராது இரவு 12.35 மணிக்குக் கூட பதிவு போடறீங்களே....

    கவிதை நல்ல கருத்துகளைக் கொண்டு இருந்தது....

    வாழ்த்துகள்....

    ReplyDelete
  20. வணக்கம்!
    பழம்பெருமை பேசி ஊர் கூடித் தன்னை இழுக்கச் செய்த தேர். ஒரே ஒரு வசீகரிப்பில் குழந்தையை உச்சி மோந்த ஊர். உழவனின் உழைப்பில் மயங்கிய நிலம் என்னும் நல்லாள். சக்தியின் அன்பினில் கட்டுப்பட்ட சிவன். எல்லாம் அன்பெனும் ஒரு நூலிழையில். கவிதையின் மையக் கருத்து உள்பொருளாக அமைந்து உள்ளது. அருமை.

    ReplyDelete
  21. எதிர்ப்பவனும் உணரும்நாள் வாழ்நாளில் ஒருமுறையேனும் வரும்! வேகங்கொண்ட விவேகம் கவிதையில்!

    ReplyDelete
  22. துரைடேனியல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும்அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. ஸ்ரவாணி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. வெங்கட் நாகராஜ் //

    கவிதை நல்ல கருத்துகளைக் கொண்டு இருந்தது....
    வாழ்த்துகள்....//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. ரமேஷ் வெங்கடபதி //

    வேகங்கொண்ட விவேகம் கவிதையில்! //

    ReplyDelete
  27. ரமேஷ் வெங்கடபதி //

    வேகங்கொண்ட விவேகம் கவிதையில்! //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக  இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன்  மட்டுமே புத்திசாலி
    // அருமையான வரிகள் .
    சிவனையும் சக்தியையும் புரிந்து கொண்டால் போதும்.

    ReplyDelete
  29. இயற்கையின் சூட்சுமம் அறியாது
    நம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.
    அறிந்திருந்தும் சக்திபெற முயலாது
    வெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------ .
    அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி




    ரொம்ப சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  30. தனிமரம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற வேண்டும் அறிந்தவன் புத்திசாலி.ஆங்கிலத்தில் NO LUNCH IS FREE
    என்றொரு சொல் வழக்கு உண்டு.

    //இயற்கையின் சூட்சுமம் அறியாது
    நம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.
    அறிந்திருந்தும் சக்திபெற முயலாது
    வெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------// .
    இவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  33. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி
    அங்கு மிகச் சரியான வார்த்தையைப் போடுவது
    பதிவின் நோக்கத்தை தக்ர்த்துவிடும் என்பதால்
    அவர்கள் அவர்கள் நோக்கத்தில்
    போட்டுக் கொள்ளட்டும் என விட்டுவிட்டேன்

    ReplyDelete
  34. அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி=//////////////

    ithu romba romba superbaa irukkuthu ayyaa

    ReplyDelete
  35. வணக்கம் அண்ணா, வழமைபோலவே ஒரு அழகான அர்த்தம் பொதிந்த கவிதையைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் கவிதையில் எப்பொழுதும் ஒரு லாஜிக் இருக்கும். அதுவே எனக்கு பிடித்த விடயம். கடைசி வரிகள் மிக பிரமாதம். சிந்திக்க வைத்தன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. கலை //

    ithu romba romba superbaa irukkuthu ayyaa

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. பி.அமல்ராஜ் //

    உங்கள் கவிதையில்
    எப்பொழுதும் ஒரு லாஜிக் இருக்கும். அதுவே எனக்கு பிடித்த விடயம். கடைசி வரிகள் மிக பிரமாதம். சிந்திக்க வைத்தன. வாழ்த்துக்கள்.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. தன் பண்டைப் பெருமைகளை
    பக்தர்களுக்கு விளக்கமாகச் சொல்லி
    ஊரை இழுத்தது தேர்
    >>>
    ஊர் தாம் தேர் இழுக்கும். இதென்ன புதுசா த்ந்நெ ஊரை இழுக்குது. சிந்தனை புதுசா இருக்கே

    ReplyDelete
  39. ராஜி //


    ஊரின் பெருமை தேரின் பெருமை அறிந்துதானே
    சேவிக்கவும் தேரை இழுத்து புண்ணியம் தேடவும் போகிறோம்
    சிறப்பில்லா ஊரையும் தேரையும் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்
    வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. Rathnavel Natarajan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. நல்ல சிந்தனை....
    ஒன்றை ஒன்று கவர்ந்து உலகம் வாழ்கிறது...
    பாராட்டுகள்..

    ReplyDelete
  42. அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி

    அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் .வரிக்கு வரி ஆழ்ந்த சிந்தனைப் பகிர்வு

    ReplyDelete
  43. அய்யா ரமணி அவர்களே!
    நீங்கள் அணிப்பியதாக
    எழுதிய கமென்ட் வரவில்லை!

    ReplyDelete
  44. Advocate P.R.Jayarajan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. வெற்று இரும்பாய் உள்நுழைந்து
    தன் சக்தி பொருத்துச் சக்தியேற்றி
    சந்தோஷமடைந்து போனான் பக்தன்!நன்றி !

    ReplyDelete
  47. சக்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. இயற்கையின் சூட்சுமம் அறியாது
    நம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.
    அறிந்திருந்தும் சக்திபெற முயலாது
    வெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------ .
    அறிந்ததனை அனுபவமாக்கி
    ஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ
    அவன் மட்டுமே புத்திசாலி

    சின்ன சின்ன கோபங்கள் கவிக்கு அழகு அது அற்புதமாய் கவிதையில் தெரிகிறது

    ReplyDelete
  49. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. 'விளைச்சலை'ப் பயனாக்கி உவகை கொண்டான் உழவன்,சக்தி ,சிவம் கொண்டு சிறப்பான சிந்தனை.

    ReplyDelete
  51. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete