Saturday, February 11, 2012

மகான்களாக ஒரு சுருக்கு வழி

விலைவாசி உயர்வு கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்பு போல
கிலோவுக்கு விலை விசாரிக்கும்
அவசியம் இல்லையென்பதாலும்
அதை நான்கால் வகுக்கும்
அவஸ்தை இப்போதில்லை என்பதாலும்

அதிக கரண்ட் கட் கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்புபோல்
கரண்ட் கட்டாகும் நேரத்தை விட
கரண்ட் வரும்
நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
அதை நினைவில் வைப்பதே
வசதியாய் இருக்கிறது என்பதாலும்

மந்திரிகளை
அடிக்கடி மாற்றுவது கூட
மகிழ்வுக்குரியதாகத்தான் இருக்கிறது
போட்டித்தேர்வுகளில்
மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க 
அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்

எத்தனை கோடி
ஊழல் குறித்த செய்திகளும்
இப்போது அதிர்ச்சியடையச் செய்வதில்லை
எப்படியும் அடுத்தவாரம்
இதைவிட கூடுதல் தொகையில்
ஊழல் செய்தி வரும் என்பதாலும்
இன்றைய  கோடி எப்படியும்
நாளை நமக்கே
பைசாப் போல் தெரியும் என்பதாலும்

சரியாகச் சொன்னால்
இதுபோன்ற அவஸ்தைகள் கூட
இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத  பொறுமையும் முதிர்ச்சியும்  கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட  மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்

69 comments:

  1. நஷ்டத்திலும் லாபம் தான்.
    தவமின்றி மகான் வரம் ..... நல்லது தானே ? !
    கிண்டல் தொனி .. ஆதங்கம் + அழகு .

    ReplyDelete
  2. வணக்கம்!
    மகான்களாக மாறி விட்டதால் தினமும் நம்மை மின்வெட்டால் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

    ReplyDelete
  3. //எங்கெங்கோ தேடி ஓடியும்
    கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
    மரத்துப் போன மனத்தாலும்
    எருமைமாட்டுத்தனத்தாலும்
    இப்போது மிக எளிதாய்
    நமக்கு கிடைத்துவிடுகிறது//

    ரமணி ஐயா,

    எள்ளல்!

    ReplyDelete
  4. இந்த ஒவ்வொரு புகழ்ச்சியிலும் வஞ்சம் இருக்கிறதே..
    எல்லாம் நன்மைக்கே என்று இப்படியும் சொல்லலாம்
    என்று நீங்கள் சொல்கையில் அழகாக இருக்கிறது நண்பரே.

    'சகித்துக்கொண்டு வாழ்வது போனது ....
    சகிப்பே வாழ்வாகிப் போனது...'

    ReplyDelete
  5. ஸ்ரவாணி //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. சத்ரியன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. மகேந்திரன் //


    'சகித்துக்கொண்டு வாழ்வது போனது ....
    சகிப்பே வாழ்வாகிப் போனது...'

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. இவ்வளவு சுதந்திரம் இந்நாட்டிற்கு தேவையில்லை!

    மக்கள் தங்கள் தலைவர்களை சினிமா கொட்டகையில் தேடுகிறார்கள்!
    அமைதியை நுகர்வு பொருள்களில் பெறுகிறார்கள்! நுகர்வு கலாச்சாரம் மக்களின் அறிவை மழுங்கடைத்து, தோலை கெட்டியாக்கி விட்டது!

    ReplyDelete
  10. சரியாகச் சொன்னால்
    இதுபோன்ற அவஸ்தைகள் கூட
    இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
    எங்கெங்கோ தேடி ஓடியும்
    கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
    மரத்துப் போன மனத்தாலும்
    எருமைமாட்டுத்தனத்தாலும்
    இப்போது மிக எளிதாய்
    நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
    நாமும் கூட மிக எளிதாக
    மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்

    ரொம்ப சரியான வார்த்தைகளில் சொன்னீங்க.வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வேதனை நிரம்பிய விஷயங்களை எள்ளல் நடையில் சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்வது... நாமெல்லாம் வேதனையைக் கூட இப்படி நகைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம். இல்லை! அருமை ஸார்!

    ReplyDelete
  12. எள்ளல் நடையில்
    எழுதிய வரிகள்
    உள்ள நிலையை
    உணர்த்தும் வரிகள்
    நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. இதுபோன்ற அவஸ்தைகள் கூட
    இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
    எங்கெங்கோ தேடி ஓடியும்
    கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
    மரத்துப் போன மனத்தாலும்
    எருமைமாட்டுத்தனத்தாலும்
    இப்போது மிக எளிதாய்
    நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
    நாமும் கூட மிக எளிதாக
    மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்//

    மறுபடியும் ஒரு ஆதங்கம்- ஆழமான, அர்த்தமுள்ள கவிதை வ‌ரிகளில்!!

    ReplyDelete
  14. ஒவ்வொரு சிந்தனைகளையும் நயமாகச் சொன்னீர்கள் அன்பரே..

    அருமை
    மீண்டும் மீண்டும் படித்தேன்..

    அதிலும்..

    போட்டித்தேர்வுகளில்
    மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க
    அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
    நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
    அவஸ்தை இல்லை என்பதாலும்

    என்னை மேலும் மேலும் சிரிக்கவத்தது.

    ReplyDelete
  15. கவிதையில் உள்ள கிண்டலை ரசித்தேன் சார்.....
    த.ம 5.

    ReplyDelete
  16. த ம ஓ 6


    முதலில் ஓட்டுப்பட்டை காணவிலை
    எனவை தற்போது ஓட்டுப் போட்டேன்

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. கோவை2தில்லி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. unmaithaan ayyaa...

    superaa sirikka vaichi kadaisila erumai maadu sollitinga...i like it...super...

    ReplyDelete
  21. கலை //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. guna thamizh //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. மனோ சாமிநாதன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. கணேஷ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. சிரிக்க சிந்திக்க அருமையான பதிவு.

    ReplyDelete
  27. தீதும்,நன்றும் பிறர் தர வாரா.மகான்களாக மாற நாமே தேர்ந்தெடுத்த வழி.இவ்வழியில் மகானென்றால், இன்னொன்றில் துறவி?அரசியல் அவலம் அழகான கவிதையின்,பாடு பொருளாய்!

    ReplyDelete
  28. கரண்ட் கட்டாகும் நேரத்தை விட
    கரண்ட் வரும்
    நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
    அதை நினைவில் வைப்பதே
    வசதியாய் இருக்கிறது என்பதாலும்

    நிஜம் தான். மரத்துப் போய் விட்டது.
    அருமை.

    ReplyDelete
  29. Rathnavel Natarajan //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. Murugeswari Rajavel //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. இதைவிட கூடுதல் தொகையில்
    ஊழல் செய்தி வரும் என்பதாலும்
    இன்றைய கோடி எப்படியும்
    நாளை நமக்கே
    பைசாப் போல் தெரியும் என்பதாலும்
    உண்மைதான் ஐயா பத்து ரூபாய் இல்லையென்றாலும் எத்தனை கூடி ஊழல் செய்தி படிக்கும் போதும் மிகச்சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம் அருமையான பகிர்வு .

    ReplyDelete
  33. அத்திப் பழத்தைப் பிட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  34. நல்ல கவிதை ரமணி சார்..

    ReplyDelete
  35. sasikala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. அய்யா !
    நடப்பு அரசியலை ஒரு-
    புடி புடுனு பிடிச்சதும்-
    கிண்டலை இணைத்ததும்!
    அருமை!

    ReplyDelete
  39. இப்படி பாஸிட்டீவா நினைச்சா நல்லது தான் போல.
    சூப்பர் கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. Seeni //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. மகான்களாக மாறிவிட முடிகிற நிகழ்வுகள் அருமையாய் படம் பிடித்துள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  43. நான் மகான் அல்ல என இனி யாரும் சொல்ல முடியாது !

    ReplyDelete
  44. இப்படியே மரத்து மரத்து போனால் உண்மையிலேயே ஞானியாகக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு நன்றி! (ஹி...ஹி..) அருமையிலும் அருமை ரமணி சார்! எள்ளல் கவிதை. துள்ளல் கருத்து. அழகு...!

    ReplyDelete
  45. மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க
    அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
    நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
    அவஸ்தை இல்லை என்பதாலும்
    >>>
    வாழை பழத்துல ஊசி ஏத்துற மாதிரி னிதர்சன உரிமையை சொல்லியிருக்கீங்க ஐயா.

    ReplyDelete
  46. ஆதங்கமும் அலுப்புமாய் கவிதை அல்லாடி நிற்கிறது.சகிப்புத் தன்மை நிறையவே வேண்டிக்கிடக்கு இனறைய வாழ்வுக்கு !

    ReplyDelete
  47. எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பொறுமையும், அமைதியும் எம்மை மகான் ஆக்கி விடுகிறது என்பதே யதார்த்தம். இதையே உங்கள் பதிவு கூறுகிறது. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  48. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. ananthu //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. kovaikkavi ... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. வேடிக்கையாய் சொன்னாலும் உள்ளாடிக்கிடக்கும் வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றங்களுக்கு மனதைத் தயார்படுத்திக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. நாமும் மகான்களாகிவிட்டோமென்பதை எண்ணி நாம் பெருமைப்பட்டுக்கொள்வதை விடவும், நாடு முழுவதிலும் மகான்களை உருவாக்கிவிட்டதாக அவர்கள் நம்மிலும் பெருமை பேசிக் கொள்(ல்)வார்கள்.

    ReplyDelete
  55. கீதமஞ்சரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. ஒவ்வொரு புகழ்ச்சியிலும் வஞ்சம் நன்றாக விளையாடியிருக்கிறது ஐயா..வேடிக்கை போல சொன்னாலும் உள்ளே இருக்குமும் வேதனையைப் அறிந்து கொள்ள முடிகிறது.

    அருமையான பதிவு

    ReplyDelete
  57. நாட்டைப் பற்றி நல்ல எண்ணங்கள் தங்கள் கவிதை வெளிப்படுவது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

    அருமையான கவிதை

    ReplyDelete
  58. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. நாட்டைப் பற்றி நல்ல எண்ணங்கள் தங்கள் கவிதை வெளிப்படுவது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.அருமையான கவிதை




    உங்களுக்கு எனது இடுகையில் விருது இருக்கிறது .

    ReplyDelete
  61. //மரத்துப் போன மனத்தாலும்
    எருமைமாட்டுத்தனத்தாலும்//

    சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  62. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. மனசாட்சி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. எல்லோரும் மகான்கள்.? ஹூம்.! எதைச் சொல்லி நோவது.?எல்லாம் மரத்துப்போனால் மகானாகலாம் என்றால் மகன்கள் என்றால் உணர்வற்றவர்கள் என்றும் கொள்ளலாமோ.?( (எருமை மாடுகள் என்று சொல்ல மனம் வரவில்லை. )

    ReplyDelete
  65. மகன்கள் அல்ல. எழுத்துப் பிழை. மகான்கள்.

    ReplyDelete
  66. G.M Balasubramaniam //

    எருமை மாட்டுத்தனம் எனத்தான் சொல்லியுள்ளேன்
    என நினைக்கிறேன்
    கோபபபடவேண்டியவைகளுக்கும் கோபப்படாமல் இருப்பதை
    பொறுமை எனச் சொல்ல மனம் வரவில்லை
    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. எப்படி எல்லாம் சிந்திக்கறீங்க!

    ReplyDelete
  68. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete