விலைவாசி உயர்வு கூட
வசதியாகத்தான் இருக்கிறது
அவசியம் இல்லையென்பதாலும்
அதை நான்கால் வகுக்கும்
அவஸ்தை இப்போதில்லை என்பதாலும்
அதிக கரண்ட் கட் கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்புபோல்
கரண்ட் கட்டாகும் நேரத்தை விட
கரண்ட் வரும்
நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
அதை நினைவில் வைப்பதே
வசதியாய் இருக்கிறது என்பதாலும்
மந்திரிகளை
அடிக்கடி மாற்றுவது கூட
மகிழ்வுக்குரியதாகத்தான் இருக்கிறது
போட்டித்தேர்வுகளில்
மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க
அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்
எத்தனை கோடி
ஊழல் குறித்த செய்திகளும்
இப்போது அதிர்ச்சியடையச் செய்வதில்லை
எப்படியும் அடுத்தவாரம்
இதைவிட கூடுதல் தொகையில்
ஊழல் செய்தி வரும் என்பதாலும்
இன்றைய கோடி எப்படியும்
நாளை நமக்கே
பைசாப் போல் தெரியும் என்பதாலும்
சரியாகச் சொன்னால்
இதுபோன்ற அவஸ்தைகள் கூட
இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்
வசதியாகத்தான் இருக்கிறது
முன்பு போல
கிலோவுக்கு விலை விசாரிக்கும்அவசியம் இல்லையென்பதாலும்
அதை நான்கால் வகுக்கும்
அவஸ்தை இப்போதில்லை என்பதாலும்
அதிக கரண்ட் கட் கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்புபோல்
கரண்ட் கட்டாகும் நேரத்தை விட
கரண்ட் வரும்
நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
அதை நினைவில் வைப்பதே
வசதியாய் இருக்கிறது என்பதாலும்
மந்திரிகளை
அடிக்கடி மாற்றுவது கூட
மகிழ்வுக்குரியதாகத்தான் இருக்கிறது
போட்டித்தேர்வுகளில்
மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க
அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்
எத்தனை கோடி
ஊழல் குறித்த செய்திகளும்
இப்போது அதிர்ச்சியடையச் செய்வதில்லை
எப்படியும் அடுத்தவாரம்
இதைவிட கூடுதல் தொகையில்
ஊழல் செய்தி வரும் என்பதாலும்
இன்றைய கோடி எப்படியும்
நாளை நமக்கே
பைசாப் போல் தெரியும் என்பதாலும்
சரியாகச் சொன்னால்
இதுபோன்ற அவஸ்தைகள் கூட
இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்
நஷ்டத்திலும் லாபம் தான்.
ReplyDeleteதவமின்றி மகான் வரம் ..... நல்லது தானே ? !
கிண்டல் தொனி .. ஆதங்கம் + அழகு .
வணக்கம்!
ReplyDeleteமகான்களாக மாறி விட்டதால் தினமும் நம்மை மின்வெட்டால் சுட்டுத் தள்ளுகிறார்கள்.
//எங்கெங்கோ தேடி ஓடியும்
ReplyDeleteகிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது//
ரமணி ஐயா,
எள்ளல்!
இந்த ஒவ்வொரு புகழ்ச்சியிலும் வஞ்சம் இருக்கிறதே..
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே என்று இப்படியும் சொல்லலாம்
என்று நீங்கள் சொல்கையில் அழகாக இருக்கிறது நண்பரே.
'சகித்துக்கொண்டு வாழ்வது போனது ....
சகிப்பே வாழ்வாகிப் போனது...'
ஸ்ரவாணி //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சத்ரியன் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
ReplyDelete'சகித்துக்கொண்டு வாழ்வது போனது ....
சகிப்பே வாழ்வாகிப் போனது...'
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இவ்வளவு சுதந்திரம் இந்நாட்டிற்கு தேவையில்லை!
ReplyDeleteமக்கள் தங்கள் தலைவர்களை சினிமா கொட்டகையில் தேடுகிறார்கள்!
அமைதியை நுகர்வு பொருள்களில் பெறுகிறார்கள்! நுகர்வு கலாச்சாரம் மக்களின் அறிவை மழுங்கடைத்து, தோலை கெட்டியாக்கி விட்டது!
சரியாகச் சொன்னால்
ReplyDeleteஇதுபோன்ற அவஸ்தைகள் கூட
இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்
ரொம்ப சரியான வார்த்தைகளில் சொன்னீங்க.வாழ்த்துகள்.
வேதனை நிரம்பிய விஷயங்களை எள்ளல் நடையில் சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்வது... நாமெல்லாம் வேதனையைக் கூட இப்படி நகைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம். இல்லை! அருமை ஸார்!
ReplyDeleteஎள்ளல் நடையில்
ReplyDeleteஎழுதிய வரிகள்
உள்ள நிலையை
உணர்த்தும் வரிகள்
நன்று!
சா இராமாநுசம்
இதுபோன்ற அவஸ்தைகள் கூட
ReplyDeleteஇப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்//
மறுபடியும் ஒரு ஆதங்கம்- ஆழமான, அர்த்தமுள்ள கவிதை வரிகளில்!!
ஒவ்வொரு சிந்தனைகளையும் நயமாகச் சொன்னீர்கள் அன்பரே..
ReplyDeleteஅருமை
மீண்டும் மீண்டும் படித்தேன்..
அதிலும்..
போட்டித்தேர்வுகளில்
மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க
அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்
என்னை மேலும் மேலும் சிரிக்கவத்தது.
கவிதையில் உள்ள கிண்டலை ரசித்தேன் சார்.....
ReplyDeleteத.ம 5.
த ம ஓ 6
ReplyDeleteமுதலில் ஓட்டுப்பட்டை காணவிலை
எனவை தற்போது ஓட்டுப் போட்டேன்
சா இராமாநுசம்
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
unmaithaan ayyaa...
ReplyDeletesuperaa sirikka vaichi kadaisila erumai maadu sollitinga...i like it...super...
கலை //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
guna thamizh //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிரிக்க சிந்திக்க அருமையான பதிவு.
ReplyDeleteதீதும்,நன்றும் பிறர் தர வாரா.மகான்களாக மாற நாமே தேர்ந்தெடுத்த வழி.இவ்வழியில் மகானென்றால், இன்னொன்றில் துறவி?அரசியல் அவலம் அழகான கவிதையின்,பாடு பொருளாய்!
ReplyDeleteகரண்ட் கட்டாகும் நேரத்தை விட
ReplyDeleteகரண்ட் வரும்
நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
அதை நினைவில் வைப்பதே
வசதியாய் இருக்கிறது என்பதாலும்
நிஜம் தான். மரத்துப் போய் விட்டது.
அருமை.
Rathnavel Natarajan //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இதைவிட கூடுதல் தொகையில்
ReplyDeleteஊழல் செய்தி வரும் என்பதாலும்
இன்றைய கோடி எப்படியும்
நாளை நமக்கே
பைசாப் போல் தெரியும் என்பதாலும்
உண்மைதான் ஐயா பத்து ரூபாய் இல்லையென்றாலும் எத்தனை கூடி ஊழல் செய்தி படிக்கும் போதும் மிகச்சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம் அருமையான பகிர்வு .
அத்திப் பழத்தைப் பிட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteநல்ல கவிதை ரமணி சார்..
ReplyDeletesasikala //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அய்யா !
ReplyDeleteநடப்பு அரசியலை ஒரு-
புடி புடுனு பிடிச்சதும்-
கிண்டலை இணைத்ததும்!
அருமை!
இப்படி பாஸிட்டீவா நினைச்சா நல்லது தான் போல.
ReplyDeleteசூப்பர் கவிதை. தொடர வாழ்த்துக்கள்.
Seeni //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
vanathy //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகான்களாக மாறிவிட முடிகிற நிகழ்வுகள் அருமையாய் படம் பிடித்துள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநான் மகான் அல்ல என இனி யாரும் சொல்ல முடியாது !
ReplyDeleteஇப்படியே மரத்து மரத்து போனால் உண்மையிலேயே ஞானியாகக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு நன்றி! (ஹி...ஹி..) அருமையிலும் அருமை ரமணி சார்! எள்ளல் கவிதை. துள்ளல் கருத்து. அழகு...!
ReplyDeletetha ma 10.
ReplyDeleteமந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க
ReplyDeleteஅவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்
>>>
வாழை பழத்துல ஊசி ஏத்துற மாதிரி னிதர்சன உரிமையை சொல்லியிருக்கீங்க ஐயா.
ஆதங்கமும் அலுப்புமாய் கவிதை அல்லாடி நிற்கிறது.சகிப்புத் தன்மை நிறையவே வேண்டிக்கிடக்கு இனறைய வாழ்வுக்கு !
ReplyDeleteஎம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பொறுமையும், அமைதியும் எம்மை மகான் ஆக்கி விடுகிறது என்பதே யதார்த்தம். இதையே உங்கள் பதிவு கூறுகிறது. வாழ்த்துகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இராஜராஜேஸ்வரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ananthu //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi ... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேடிக்கையாய் சொன்னாலும் உள்ளாடிக்கிடக்கும் வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றங்களுக்கு மனதைத் தயார்படுத்திக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. நாமும் மகான்களாகிவிட்டோமென்பதை எண்ணி நாம் பெருமைப்பட்டுக்கொள்வதை விடவும், நாடு முழுவதிலும் மகான்களை உருவாக்கிவிட்டதாக அவர்கள் நம்மிலும் பெருமை பேசிக் கொள்(ல்)வார்கள்.
ReplyDeleteகீதமஞ்சரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஒவ்வொரு புகழ்ச்சியிலும் வஞ்சம் நன்றாக விளையாடியிருக்கிறது ஐயா..வேடிக்கை போல சொன்னாலும் உள்ளே இருக்குமும் வேதனையைப் அறிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteஅருமையான பதிவு
நாட்டைப் பற்றி நல்ல எண்ணங்கள் தங்கள் கவிதை வெளிப்படுவது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteஅருமையான கவிதை
Avargal Unmaigal //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
dhanasekaran .S //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நாட்டைப் பற்றி நல்ல எண்ணங்கள் தங்கள் கவிதை வெளிப்படுவது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.அருமையான கவிதை
ReplyDeleteஉங்களுக்கு எனது இடுகையில் விருது இருக்கிறது .
//மரத்துப் போன மனத்தாலும்
ReplyDeleteஎருமைமாட்டுத்தனத்தாலும்//
சரியாக சொன்னிர்கள்
மாலதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எல்லோரும் மகான்கள்.? ஹூம்.! எதைச் சொல்லி நோவது.?எல்லாம் மரத்துப்போனால் மகானாகலாம் என்றால் மகன்கள் என்றால் உணர்வற்றவர்கள் என்றும் கொள்ளலாமோ.?( (எருமை மாடுகள் என்று சொல்ல மனம் வரவில்லை. )
ReplyDeleteமகன்கள் அல்ல. எழுத்துப் பிழை. மகான்கள்.
ReplyDeleteG.M Balasubramaniam //
ReplyDeleteஎருமை மாட்டுத்தனம் எனத்தான் சொல்லியுள்ளேன்
என நினைக்கிறேன்
கோபபபடவேண்டியவைகளுக்கும் கோபப்படாமல் இருப்பதை
பொறுமை எனச் சொல்ல மனம் வரவில்லை
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
எப்படி எல்லாம் சிந்திக்கறீங்க!
ReplyDeleteஸாதிகா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி