Sunday, April 29, 2012

ஏணியாக எப்போதுமிருந்து..

பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
நியாயஸ்தர்கள் நாம் தான்
குழம்பிப் போய் இருக்கிறோம்

கண்ணைத் திறந்து பார்க்கச் சொல்லி
கருணைகாட்டச் சொல்லி நாமெல்லாம்
கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருக்கையில்

சன்னதிக்குள் ஒரு கயவன்
காம லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறான்

அம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்
அவன் தெளிவாய் இருக்கிறான்
நாம்தான் குழம்பிப்போய்த் தவிக்கிறோம்

கோவில்கள் கொடியோரின் கூடாரம்
என்கிற அதிரடி வசனங்களால்
நம்மை மெய்சிலிர்க்கச் செய்து
ஆட்சியைப்பிடித்தவர்களின்
வாரீசுகள் எல்லாம்

கோவில் கோவிலாய் போய்
குடும்பத்தோடு நேர்த்திக்கடன்
செலுத்திக் கொண்டிருக்க

நாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்
அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்
எப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள்

இரண்டு எல்லைகளில்
இருப்பவர்கள் எல்லாம்
பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க

இடையில் இருக்கும் நாமதான்
குழப்பத்தில் இருக்கிறோம்

இவர்களுக்கெல்லாம்
ஏணியாக எப்போதுமிருந்து
எதை எதையோ இழக்கிறோம்

61 comments:

  1. அதை அவர்கள் செய்வதற்கு இந்த சிஸ்டம் பச்சைக்கொடி காட்டுகிறது.நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் ஒவ்வொரு வரியும் உண்மை பேசுகிறது. ஆழ்ந்து யோசித்தால் நாம்தான் ஏணியாக இருந்து இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது, அருமையான படைப்பு.

    ReplyDelete
  3. ///அவன் தெளிவாய் இருக்கிறான் நாம்தான் குழம்பிப்போய் இருக்கிறோம்///

    மிக மிக உண்மைதான். நம்மை குழப்புவதில் அவர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் தலைவர்களாகவும் நாம் தொண்டனாகவும் இருக்கிறோம்

    ReplyDelete
  4. அருமையான கவிதை! கொஞ்சம் பராசக்தி வாசனை வீசுகிறது!

    ReplyDelete
  5. இரண்டு எல்லைகளில்
    இருப்பவர்கள் எல்லாம்
    பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க
    இடையில் இருக்கும் நாமதான்
    குழப்பத்தில் இருக்கிறோம்
    ஏணியாக எப்போதுமிருந்து
    எதை எதையோ இழக்கிறோம்

    ரொம்ப சரிதான்

    ReplyDelete
  6. இன்றைய நடைமுறையை
    ரெம்ப சரியா சொன்னீர்கள் சார்

    ReplyDelete
  7. உண்மை;உண்மை;உண்மை
    மிக்க நன்றி ரமணி ஸார்!

    செய்பவன் ஜெயிக்கிறான்.
    சிந்திப்பவன் தோற்கிறான்

    திட்டுபவன் ஜெயிக்கிறான்
    திட்டமிடுபவன் தோற்கிறான்

    பிரிப்பவன் ஜெயிக்கிறான்
    சேர்ப்பவன் தோற்கிறான்

    சத்தம் ஜெயிக்கிறது
    சட்டம் தோற்கிறது

    தெளிவான அவர்கள் "தாங்களே" களத்திலிறங்கி,நமக்கு இன்னல் பல செய்துகொண்டிருக்க,

    குழப்பசாலிகள் நாமோ,"யாராவது"
    நம்மை காக்க வர மாட்டார்களா என
    அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்

    அவர்கள்,தங்களிடம் உள்ள பணம்,பதவி,பலம் என்ற மூன்று ஆயுதங்களையும் மிக நேர்த்தியாக பயன்படுத்த,
    நாமோ நம்மிடம் உள்ள ஒரே ஆயுதமான "வாக்குச்சீட்டை" எப்படி பயன் படுத்துவது எனத்தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  8. நாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்
    அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்
    எப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள்
    உண்மையான வரிகள் ஐயா . மிகவும் அருமை .

    ReplyDelete
  9. // இரண்டு எல்லைகளில்
    இருப்பவர்கள் எல்லாம்
    பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க
    இடையில் இருக்கும் நாமதான்
    குழப்பத்தில் இருக்கிறோம்
    ஏணியாக எப்போதுமிருந்து
    எதை எதையோ இழக்கிறோம்//

    முற்றும் உண்மை!-இதை
    உணர்ந்தால்நன்மை
    கற்றவர் கூட- இதைக்
    கருதுவ தில்லை
    மற்றவர் நிலையிலும்-ஒரு
    மாற்றமும் இலையே
    செற்றமே தரினும்-ஏதும்
    செய்வது அறியோம்
    சா இராமாநுசம்

    ReplyDelete
  10. வணக்கம்!

    // இடையில் இருக்கும் நாமதான்
    குழப்பத்தில் இருக்கிறோம் //

    உண்மைதான்! நாம் ஏணியாகவே இருந்த இடத்திலேயே இருக்கிறோம். இருந்தாலும் வீழ்ந்துவிடவில்லை!

    ReplyDelete
  11. டைமிங் வரிகள்.......
    ஆமா குழம்பித்தான் இருக்கிறோம் - . அல்லகைகள் தெளிந்து விட்டால்???தெளியவே விடுவதில்லையே அல்லக்கைகளை.

    ReplyDelete
  12. பிறர் ஏற வசதியான ஏணியாகவே எப்போதும் இருந்து, அவர்கள் ஏறியபின் அவர்களாலேயே எட்டி உதை வாங்கிடும் ஏணியின் அவல நிலையில் தான் நம் அப்பாவி மக்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை அழகாகவே சொல்லிவிட்டீர்கள்.

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பிறர் ஏற வசதியான ஏணியாகவே எப்போதும் இருந்து,
    >>>
    பிறர் முன்னேற நாம எதோ ஒரு விதத்தில் உதவியா இருக்கோம்ன்னு சந்தோசப்பட்டுக்கோங்க.

    ReplyDelete
  14. அருமையான வரிகள் ..!

    ReplyDelete
  15. //இரண்டு எல்லைகளில்
    இருப்பவர்கள் எல்லாம்
    பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க
    இடையில் இருக்கும் நாமதான்
    குழப்பத்தில் இருக்கிறோம்//

    உண்மை சார். அழகாக அருமையாக சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  16. விமலன் //


    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. //பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
    கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
    நியாயஸ்தர்கள் நாமதான்
    குழம்பிப் போய் இருக்கிறோம்//

    மிகச்சரியான வரிகள். த.ம.9

    ReplyDelete
  18. கணேஷ் //

    ஆசிரியர் பணிக்கிடையிலும் பதிவுக்கு வந்து
    அருமையான பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. Avargal Unmaigal //

    மிக மிக உண்மைதான். நம்மை குழப்புவதில் அவர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் தலைவர்களாகவும் நாம் தொண்டனாகவும் இருக்கிறோம்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. மனோ சாமிநாதன் //

    அருமையான கவிதை! கொஞ்சம் பராசக்தி வாசனை வீசுகிறது!/

    மிகச் சரி
    அந்த வாசம் கலந்தால்தான் இந்தப் படைப்புக்கு
    சரியாக இருக்கும் எனக் கலந்தேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. Lakshmi //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. செய்தாலி //

    இன்றைய நடைமுறையை
    ரெம்ப சரியா சொன்னீர்கள் சார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. Ganpat //.

    ..உண்மையாகச் சொன்னால் என் பதிவைவிட
    தங்கள் பின்னூட்டமே நல்ல கவிதையாக உள்ளது

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. சசிகலா //

    உண்மையான வரிகள் ஐயா . மிகவும் அருமை //

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. புலவர் சா இராமாநுசம் //

    முற்றும் உண்மை!-இதை
    உணர்ந்தால்நன்மை
    கற்றவர் கூட- இதைக்
    கருதுவ தில்லை
    மற்றவர் நிலையிலும்-ஒரு
    மாற்றமும் இலையே
    செற்றமே தரினும்-ஏதும்
    செய்வது அறியோம் //

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. தி.தமிழ் இளங்கோ //

    உண்மைதான்! நாம் ஏணியாகவே இருந்த இடத்திலேயே இருக்கிறோம். இருந்தாலும் வீழ்ந்துவிடவில்லை!//

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. மனசாட்சி™ //
    .
    டைமிங் வரிகள்....//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் //

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ராஜி //

    பிறர் முன்னேற நாம எதோ ஒரு விதத்தில் உதவியா இருக்கோம்ன்னு சந்தோசப்பட்டுக்கோங்க.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. வரலாற்று சுவடுகள் //

    அருமையான வரிகள் ..!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. RAMVI //

    உண்மை சார். அழகாக அருமையாக சொல்லியிருக்கீங்க.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. கோவை2தில்லி //

    மிகச்சரியான வரிகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. ஏய்த்து பிளைப்பவன் நன்றாக வாழ்கிறான்,ஏணியாய் இருப்பவன் ஏமாந்து போகிறான்.அருமையான சிந்தனை அய்யா.

    ReplyDelete
  34. ஆமாம் .
    எப்போதுமே அவர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.- நாம் குழம்பிக் கொண்டே இருப்பதால்.

    ReplyDelete
  35. எல்லா வரிகளும் அப்படியே உண்மை தான். ஏணியா இருப்பவன் இளிச்சவாயன் தான். தொடருங்கள்.

    ReplyDelete
  36. நாம் குழம்பும் வரை அவர்கள் நம்மைக் குழப்பியபடியே முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் - தெளிவான எண்ணத்தோடு!

    நல்ல கவிதை. த.ம. 10

    ReplyDelete
  37. வணக்கம் நண்பரே..

    விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்.
    என்னால் சரியாக வலைப்பக்கம் வரமுடியவில்லை..

    ஏற்றி விடுபவன் எப்போதும் ஏற்றி விடும் நிலையிலேயே
    நின்று விடுகிறான் என்று உரைக்கும் கவிநயம் அருமை நண்பரே..

    ReplyDelete
  38. உங்கள் யோசனைகளை ஓடும் திசைகள் அபாரம். மிகவும் ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  39. //பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
    கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
    நியாயஸ்தர்கள் நாமதான்
    குழம்பிப் போய் இருக்கிறோம்//
    அசத்தல் ஆரம்பம்

    ReplyDelete
  40. அருமையான வரிகளில் அழகான கவிதை

    ReplyDelete
  41. ஸாதிகா //

    அருமையான வரிகளில் அழகான கவிதை //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. T.N.MURALIDHARAN //

    அசத்தல் ஆரம்பம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. Seeni //

    valikal inge-
    vaarthaiyaaka!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. ஸ்ரீராம். //

    உங்கள் யோசனைகளை ஓடும் திசைகள் அபாரம். மிகவும் ரசிக்க முடிந்தது.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. மகேந்திரன் //

    ஏற்றி விடுபவன் எப்போதும் ஏற்றி விடும் நிலையிலேயே
    நின்று விடுகிறான் என்று உரைக்கும் கவிநயம் அருமை நண்பரே..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. வெங்கட் நாகராஜ் //

    நாம் குழம்பும் வரை அவர்கள் நம்மைக் குழப்பியபடியே முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் - தெளிவான எண்ணத்தோடு!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. vanathy //

    எல்லா வரிகளும் அப்படியே உண்மை தான். ஏணியா இருப்பவன் இளிச்சவாயன் தான். தொடருங்கள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. சிவகுமாரன் //

    ஆமாம் .
    எப்போதுமே அவர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.- நாம் குழம்பிக் கொண்டே இருப்பதால்/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. விஜயன் //

    ஏய்த்து பிளைப்பவன் நன்றாக வாழ்கிறான்,ஏணியாய் இருப்பவன் ஏமாந்து போகிறான்.அருமையான சிந்தனை அய்யா.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. உண்மையிலும் உண்மையான வார்த்தைகள்.ஆனாலும் மாற்றக் கஸ்டம்.வலியவன் என்றும் வலிந்து வரித்தபடிதான் !

    ReplyDelete
  51. அருமையான ஆக்கம் ஐயா.

    ReplyDelete
  52. ஹேமா //

    உண்மையிலும் உண்மையான வார்த்தைகள்.ஆனாலும் மாற்றக் கஸ்டம்.வலியவன் என்றும் வலிந்து வரித்தபடிதான் //!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. AROUNA SELVAME //

    அருமையான ஆக்கம் ஐயா./

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
    கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
    நியாயஸ்தர்கள் நாமதான்
    குழம்பிப் போய் இருக்கிறோம்

    நியாயஸ்தர்களுக்குத்தான் சங்கடம்..

    ReplyDelete
  55. பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
    கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
    நியாயஸ்தர்கள் நாமதான்
    குழம்பிப் போய் இருக்கிறோம்////

    நிஜமான வரிதான்..... என்ன பண்ணுறது பாஸ். இப்போ இவங்களுக்குத்தானே காலம்.... :( வாயுள்ள பிள்ளைதான் இப்போ எல்லாம் பிழைக்குது.. அதனிடம் நியாயம் எல்லாம் இல்லை :(

    ReplyDelete
  56. இராஜராஜேஸ்வரி //

    நியாயஸ்தர்களுக்குத்தான் சங்கடம்.//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. துஷ்யந்தன் //.

    நிஜமான வரிதான்..... என்ன பண்ணுறது பாஸ். இப்போ இவங்களுக்குத்தானே காலம்.... :( வாயுள்ள பிள்ளைதான் இப்போ எல்லாம் பிழைக்குது.. அதனிடம் நியாயம் எல்லாம் இல்லை :( //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. //ஏணியாக எப்போதுமிருந்து
    எதை எதையோ இழக்கிறோம்// ஒவ்வொரு பதிவிலும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளது கண்டிப்பாக அனைத்தையும் படிக்க வேண்டும் அய்யா

    ReplyDelete
  59. சீனு //

    // ஒவ்வொரு பதிவிலும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளது கண்டிப்பாக அனைத்தையும் படிக்க வேண்டும் அய்யா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete