Tuesday, May 1, 2012

காலத்துக்கு தக்கபடி...

பூஞ்செடிகளும்
முள்வேலிகளுமே
பூங்காக்களை
அடையாளம் காட்டிப் போகின்றன
ஊருக்கு
அழகு சேர்த்துப் போகின்றன

நண்பர்களும்
 பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்

நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல

இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்
நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்

நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்
உயிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்

நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல

இன்றைய நிலையில்...

அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை


71 comments:

  1. நிதர்சனமான வார்த்தைகள்! நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு என்று முன்னோர்கள் சொன்னது, பகையாளியின் குடும்பத்தில் உறவாடி பகைமையைக் கெடு என்றுதான். பகைமையைக் கெடுத்து, எதிரியை நண்பனாக்கிக் கொண்டால், என்றும் அமைதி நிலவுமே வாழ்வில்! அதை நோக்கியே நாம் அடியெடுத்து வைக்க வேண்டுமென்பது என் எண்ணம். அழகாய் அதை எடுத்தியம்பிய உங்கள் எழுத்து தந்தது மகிழ்வு. நன்றி ஸார்!

    ReplyDelete
  3. எவனையும் அதிகம் விரும்பாதே.., எவனையும் அதிகம் வெறுக்காதே ...!

    ReplyDelete
  4. உண்மை தான்.. மனங்களே நிரந்திர நண்பனையும் பகைவனையும் தீர்மானிக்கிறது. மனம் மாறுபட்டு செயல்பட்டால் உங்கள் வழி நிற்கலாம்.

    --

    ReplyDelete
  5. வாழ்வியல் நுட்பங்களை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் அன்பரே.

    ReplyDelete
  6. வாழ்வுக்கு தேவையானது-
    நல்ல
    எளிய முறையில் சொன்னதுக்கு-
    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பயணியாக இருந்துகொண்டு அது கொடுக்கும் அனுபவங்களை அனுபவித்து , சற்றே தள்ளி நின்று... ஒரு பார்வையாளனாகவும் இருந்து அந்த அனுபவங்கள் சொல்லும் உண்மைகளை நீங்கள் சொல்லிவருவது அருமை,!!!

    //இடம் மாறத் தக்கவை எப்படி
    எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?//

    அந்த வகையில் இதுவும் எங்களை யோசிக்க வைத்த உண்மை

    ReplyDelete
  8. என்ன ஆச்சு சார்
    உங்களின் ஒவ்வொரு கவிதைகளிலும்
    வாழ்க்கைக்கான படிப்பினை உண்டு சார்

    ReplyDelete
  9. //அரசியலில் மட்டும் அல்ல
    அன்றாட வாழ்வில் கூட

    நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை//

    ஆமாம் சார். இது உண்மை தான்.

    ReplyDelete
  10. நண்பர் என்று நினைத்து அளவுக்கு அதிகமாகப் பாசம் வைத்தவர்கள் கூட நம்பிக்கை துரோகியாக உள்ளனர்.
    இது என் இன்றைய 01.05.2012 அனுபவம்.

    ReplyDelete
  11. வாழ்வியல் ரகசியத்தை ஒவ்வொரு பதிவிலும் அழகாய் விளக்கக் காண்கிறேன். இந்த முறையும் ஒரு அலாதியான கருத்துச் செறிந்த கவிதை. இடம் மாறத் தக்கவைகளிடம் அலட்சியம் கொள்வது அறிவுடைமையல்ல. மனம் ஈர்த்த வரிகள். மிகுந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  12. மிக நல்ல பகிர்வு.. த.ம. 7

    ReplyDelete
  13. நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை


    அழகான உண்மையான வரிகள்.

    ReplyDelete
  14. நட்பையும் பகையையும்
    அதனதன் இடத்தில் வைத்து
    பக்குவமாய்ப் பாதுகாப்போம்

    சிறப்பான சிந்தனை வரிகள்.. பராட்டுக்கள்

    ReplyDelete
  15. நம் தரம் கண்டு
    மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
    உண்மை நண்பனாகிறான்
    உயிர்த் தோழனாய்
    நிலை மாற்றம் கொள்கிறான்

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  16. //நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
    நலமிழக்கவும் வேண்டாம்
    பகைவரென அழிக்கமுயன்று
    நிலை குலையவும் வேண்டாம்//

    பளிச் என்று பிடிச்ச வரிகள்

    ReplyDelete
  17. நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை
    >>
    நல்ல கொள்கை. இதை கடைப்பிடித்தால் வாழ்வில் மகிழ்ச்சி தவிர வேறெதும் வராது. நல்லதொரு கவி படைத்து, பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  18. நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை
    ///நிச்சயமாக..

    ReplyDelete
  19. ரமேஷ் வெங்கடபதி //.

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. கணேஷ் //

    பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு என்று முன்னோர்கள் சொன்னது, பகையாளியின் குடும்பத்தில் உறவாடி பகைமையைக் கெடு என்றுதான்//

    அனைவரும் அவசிய்ம் அறிந்துகொள்ள வேண்டிய
    அருமையான விளக்கம்
    பின்னூட்டமாய்க் கொடுத்துச் சிறப்பித்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. வரலாற்று சுவடுகள் //

    எவனையும் அதிகம் விரும்பாதே.., எவனையும் அதிகம் வெறுக்காதே ...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. ஷோ.ரா. கதிர் //

    உண்மை தான்.. மனங்களே நிரந்திர நண்பனையும் பகைவனையும் தீர்மானிக்கிறது. மனம் மாறுபட்டு செயல்பட்டால் உங்கள் வழி நிற்கலாம்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. நட்பையும் பகையையும்
    அதனதன் இடத்தில் வைத்து
    பக்குவமாய்ப் பாதுகாப்போம்// இதை விட பக்குவமா யாராலும் சொல்ல முடியாது ஐயா. மிகவும் அருமை .

    ReplyDelete
  24. இன்றைய நிலையில்...

    அரசியலில் மட்டும் அல்ல
    அன்றாட வாழ்வில் கூட

    நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை
    சரியாகச் சொன்னீர்கள் அனைத்தும் உண்மை!

    ReplyDelete
  25. guna thamizh //

    வாழ்வியல் நுட்பங்களை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் அன்பரே.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. Seeni //
    .
    வாழ்வுக்கு தேவையானது-
    நல்ல
    எளிய முறையில் சொன்னதுக்கு-
    மிக்க நன்றி!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. வேர்கள் //

    நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பயணியாக இருந்துகொண்டு அது கொடுக்கும் அனுபவங்களை அனுபவித்து , சற்றே தள்ளி நின்று... ஒரு பார்வையாளனாகவும் இருந்து அந்த அனுபவங்கள் சொல்லும் உண்மைகளை நீங்கள் சொல்லிவருவது அருமை,!!!//

    உண்மையில் தங்கள் பாராட்டு என்னை மிகவும்
    மகிழச் செய்தது.இலக்கணவரம்புக்குள் சிக்காமல்
    கதை கட்டுரை எனப் போகாமல் சுருக்கமாகச்
    சொல்லவேண்டியதை சொல்ல முயன்றுவருகிறேன்
    தங்கள் பாராட்டு எனக்கு கூடுதல் உத்வேகம் தருகிறது
    நன்றி

    ReplyDelete
  28. செய்தாலி //

    என்ன ஆச்சு சார்
    உங்களின் ஒவ்வொரு கவிதைகளிலும்
    வாழ்க்கைக்கான படிப்பினை உண்டு சார் //

    தங்கள் தொடர்ந்த பின்னூட்டமும் வாழ்த்தும்
    என்னை முன்னோக்கியே நகர்த்திச் செல்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. வை.கோபாலகிருஷ்ணன் //

    ஆமாம் சார். இது உண்மை தான்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. கீதமஞ்சரி //
    .
    வாழ்வியல் ரகசியத்தை ஒவ்வொரு பதிவிலும் அழகாய் விளக்கக் காண்கிறேன். இந்த முறையும் ஒரு அலாதியான கருத்துச் செறிந்த கவிதை.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. வெங்கட் நாகராஜ்

    .
    மிக நல்ல பகிர்வு.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Lakshmi //

    அழகான உண்மையான வரிகள்./

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. இராஜராஜேஸ்வரி //

    சிறப்பான சிந்தனை வரிகள்.. பராட்டுக்கள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. Asiya Omar //

    அருமையான வரிகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. மனசாட்சி™ s //..

    பளிச் என்று பிடிச்ச வரிகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. ராஜி //

    நல்ல கொள்கை. இதை கடைப்பிடித்தால் வாழ்வில் மகிழ்ச்சி தவிர வேறெதும் வராது. நல்லதொரு கவி படைத்து, பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா /

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. //சசிகலா //

    இதை விட பக்குவமா யாராலும் சொல்ல முடியாது ஐயா. மிகவும் அருமை //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. புலவர் சா இராமாநுசம் .//.

    சரியாகச் சொன்னீர்கள் அனைத்தும் உண்மை!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. koodal bala //

    நல்ல சிந்தனை!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. அனுபவங்கள் தாமே இவற்றை ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுக் கொடுக்கும். நன்றாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  42. ஸ்ரீராம். //

    அனுபவங்கள் தாமே இவற்றை ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுக் கொடுக்கும். நன்றாகச் சொன்னீர்கள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. /இடம் மாறத் தக்கவை எப்படி
    எதிரானவைகளாக இருக்கக்கூடும் ??/ரசித்த வரிகள்.

    ReplyDelete
  44. காலத்திற்குத் தக்கபடியான யோசனையைத்
    தகுந்தபடி கொடுத்துள்ளீர்கள் ரமணி ஐயா. நன்றிங்க.

    ReplyDelete
  45. G.M Balasubramaniam //

    /இடம் மாறத் தக்கவை எப்படி
    எதிரானவைகளாக இருக்கக்கூடும் ??/ரசித்த வரிகள் /

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. AROUNA SELVAME //
    .
    காலத்திற்குத் தக்கபடியான யோசனையைத்
    தகுந்தபடி கொடுத்துள்ளீர்கள் ரமணி ஐயா. நன்றிங்க./

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. வணக்கம்! தங்கள் பதிவைப் படித்ததும்,

    “ நட்பு என்ற செடியிலிருந்துதான் பகை என்ற கிளை
    தோன்றுகிறது “ - கி.ஆ.பெ.விசுவநாதம்

    என்ற பொன்மொழி ஞாபகம் வந்தது. நண்பர்கள், உறவினர்கள் செய்த துரோகத்தை மன்னித்து விடலாம். ஆனால் மறக்க முடியாது.

    ReplyDelete
  48. அருமையோ அருமை.

    ReplyDelete
  49. தி.தமிழ் இளங்கோ //

    “ நட்பு என்ற செடியிலிருந்துதான் பகை என்ற கிளை
    தோன்றுகிறது “ - கி.ஆ.பெ.விசுவநாதம்

    அருமையான பொன்மொழியை பின்னூட்டமாகக் கொடுத்து
    அறியச் செய்தமைக்கும் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. vanathy //


    அருமையோ அருமை //

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. நிரந்தர நண்பனும் ,நிரந்தர எதிரியும் அரசியலில் மட்டுமல்ல நிரந்தர வாழ்விலும் உண்டு எனவே அறிகிறேன்.நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. //இடம் மாறத் தக்கவை எப்படி// உண்மை தான் அய்யா

    //நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை
    //

    நிச்சயம்மான நிதர்சனமான உண்மை. யாரயும் ஒதுக்கவும் வேண்டாம் வெறுக்கவும் வேண்டாம். ஆழமான பதிவு

    ReplyDelete
  53. சீனு //

    நிச்சயம்மான நிதர்சனமான உண்மை. யாரயும் ஒதுக்கவும் வேண்டாம் வெறுக்கவும் வேண்டாம். ஆழமான பதிவு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. விமலன் //

    நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. நிரந்தர எதிரியும்
    நிரந்தர நண்பனும்
    நிச்சயமாய் இல்லவே இல்லை

    >>>>

    இது தான்னே டாப்பு!

    ReplyDelete
  56. விக்கியுலகம் //

    இது தான்னே டாப்பு!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. நமக்கு நாமே நட்பும் பகையும் கூட.
    யோசிக்க வைத்தக் கவிதை.

    ReplyDelete
  58. அப்பாதுரை //
    .
    நமக்கு நாமே நட்பும் பகையும் கூட.
    யோசிக்க வைத்தக் கவிதை.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. "தெரிந்தே கெடுப்பது பகையாகும்
    தெரியாமல் கெடுப்பது உறவாகும்"

    எனும் கவியரசரின் அமரவரிகள் நினைவுக்கு வந்தன.

    மிக அருமையாக சிந்தித்திருக்கிறீர்கள்(வழக்கம் போல)

    "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் தமிழ் மறையை மனதில் நிறுத்தினால், நட்பேது பகையேது?

    வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  60. Ganpat //

    மிக அருமையாக சிந்தித்திருக்கிறீர்கள்(வழக்கம் போல)

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. இப்படி ரொம்ப ஹெவியான விஷயத்தை எப்படி லைட்டா சொல்லமுடியுது சார்?

    சாமானியர்கள் ஒரு பத்துத்தடைவையாவது படித்தால் தான் மெய்ப்பொருள் காண முடியும்.

    நான் இப்பத்தான் இரண்டாவது தடவைப் படிக்கப் போகிறேன். வெங்கட் கவுண்ட ஸ்டார்ட்ஸ்...2

    ReplyDelete
  63. VENKAT //

    இப்படி ரொம்ப ஹெவியான விஷயத்தை எப்படி லைட்டா சொல்லமுடியுது சார்? //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. ஆகா எப்படி சார் இப்படி . உண்மை உண்மை உலகமே இப்படித்தான் .


    நீரும் நெருப்பும் போல
    நட்பும் பகையும்
    எதிர் எதிரானவை அல்ல

    இடம் மாறத் தக்கவை எப்படி
    எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

    ReplyDelete
  65. சந்திரகௌரி //
    .
    ஆகா எப்படி சார் இப்படி . உண்மை உண்மை உலகமே இப்படித்தான் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  67. சசிகலா //


    தங்கள் அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. வலிமையான கருத்துக்கள்
    இனிமையுடன் கூடிய
    எளிமையான நடையில்...

    ReplyDelete
  69. ANBU //

    வலிமையான கருத்துக்கள்
    இனிமையுடன் கூடிய
    எளிமையான நடையில்..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete