Wednesday, June 13, 2012

ஆஸ்கருக்குரிய அன்றாட நடிகர்களும் பரிசு தட்டிப் போகும் போலி நடிகர்களும்..

எதிர் வீட்டு சுஜாதா
மிகத் தெளிவாகத் தெரிகிற
மாடிப்படி ஐந்தாவது படிக்கட்டில் அமர்ந்து
சப்தம் போட்டு பாடம் படிக்கிறான்
பிஞ்சில் பழுத்திட்ட இரண்டும் கெட்டான்
பெருமையில் பூரித்துப் போகிறார்
பாசக்கார ஏமாளி அப்பா

"ஒரு மாதம் உன்னைப் பார்க்காதது
உலகே வெறுத்துப் போச்சு
வேலையாவது மண்ணாங்கட்டியாவது
அவசியம் இந்த வாரம் ஊர் வருவேன்" என
சின்னவீட்டுக் கட்டிலில் படுத்தபடி
அலைபேசியில் பாசத்தைப் பொழிந்தார்
ராமன் என்ற ராமனாதன்
தாலிச் சரட்டை கண்ணில் ஒன்றிக்கொண்டாள்
பத்தாம் பசலி சீதையம்மா

" முதலில் போய் நீங்கள்
அதைக் கவனியுங்கள் சார்
நான் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்"
வலுக்கட்டாயமாக அதிகாரியை
வெளியில் அனுப்பி சிரித்துக் கொண்டார்
வெளியே அவசர வேலை வைத்திருந்த
கெட்டிக்கார ஊழியன்

"குடும்பம் துண்டு
தொண்டன் வேட்டி
துண்டை அவசியமெனில் தூர எறிவேனே ஒழிய
உயிர் போனாலும் வேட்டியை
துறக்கமாட்டேன் " என
தனது புதல்வனின் பதவி ஏற்பு விழாவில்
அடுக்கு மொழியில்
ஆக்ரோஷப்பட்டார் தலைவர்
அவருடைய தன்னலம் துறந்த தியாகத்தில்
அதிர்ந்து கிடந்தது கூட்டம்

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்
அமையும் சூழலுக்கேற்ப சுயமாய்
மிக நேர்த்தியாய் நடிக்கும் நடிகர்கள்
ஆயிரம் ஆயிரமாய் இருக்க..

யாரோ எழுதி யாரோ இயக்கிய
ஏதோ ஒரு படத்திற்கு
கிடைத்த சிறந்த நடிகருக்கான பரிசுக்கு
தான் பட்ட சிரமங்களை
தொலைகாட்சியில் அடுக்கிக் கொண்டிருக்கிறார்
அந்த ரிமோட் கண்ட்ரோல்  நடிகர்

அவரது அறியாமையை ரசித்து
 நாளும் சிரித்துத்  தொலைப்போமா ?
உலகத்தோடு ஓட்ட ஒழுகி மகிழந்து
 நாமும் ரசித்துத் தொலைப்போமா ?

57 comments:

  1. அருமை.... தினம் தினம் வாழ்க்கையிலேயே நடித்துக் கொண்டு இருக்கும் இவர்களுக்கெதிரே ஆஸ்கர் விருது வாங்கும் நடிகன் எங்கே... :(

    அருமையான பகிர்வு. வாழ்த்துகள்.

    த. ம. 2

    ReplyDelete
  2. நாட்டு நடப்பை -
    நக்கலாக சொல்லிடீங்க!

    ReplyDelete
  3. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்
    அமையும் சூழலுக்கேற்ப சுயமாய்
    மிக நேர்த்தியாய் நடிக்கும் நடிகர்கள்

    அருமை சார்.

    ReplyDelete
  4. சூப்பரா சொல்லிட்டீங்க. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சார் என்னமா சொல்லுறீங்க....:)

    ReplyDelete
  6. பிஞ்சில் பழுத்திட்ட இரண்டும் கெட்டான்
    பாசக்கார ஏமாளி அப்பா
    பத்தாம் பசலி சீதையம்மா
    கெட்டிக்கார ஊழியன்
    ரிமோட் கண்ட்ரோல் நடிகர்...//

    எல்லாம் மிக வித்தியாசமான கற்பனைகள் நடைமுறை செற்களும் கூட..TM 4

    ReplyDelete
  7. இதுவும் இதற்கு முந்திய ஆக்கமும் வாசித்துச் செல்கிறேன் சார்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. அருமை அருமை மிகவும் அருமை..

    அதனால் தான் என்னவோ சிறந்த நடிகரான கலைஞர் சாதாரண நடிகர்களை கூப்பிட்டு பாராட்டி அதிக அளவு திரைப்பட விழா நடத்தினரோ என்னவோ .

    உண்மையான நடிகன் போலி நடிகனுக்கு அவாரு கொடுக்கும் அதிசயம் தமிழ்னாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும்

    ReplyDelete
  9. அருமை. ஏதாவது ஒரு பொய்யில்தான் தின வாழ்க்கையை நகர்த்துகிறது உலகம். அது இல்லா விட்டால் பொழுதுபோக்கு இல்லாமல் போரடித்து விடும் போல!

    ReplyDelete
  10. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்! எக்ஸலண்ட்! (6)

    ReplyDelete
  11. தெளிவான சிந்தனை
    சிறுதூறலாய் தூவுகிறது நண்பரே..

    ReplyDelete
  12. உங்கள் பாணி 50% உரைநடையாகவும் 50% கவிதையாகவும் இருப்பதால் இதை "கவியுரை" என்று அழைக்கலாமா?

    உங்கள் கவியுரை முற்றிலும் உண்மை.உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் அனைவரும் நடிகர்கள் என ஷேக்ஸ்பியர் சொன்னது இதைத்தான்!

    உலகம் இயங்குவதே பொய்யில்தான்.ஒருநாள் அனைவரும் உண்மை மட்டும் பேசுவது என உண்மையாக முடிவு செய்தால் அந்த கணமே உலகம் ஸ்தம்பித்து விடும்.அப்படி ஆகா விட்டால் அந்த முடிவே பொய்யாக இருக்க வேண்டும்.

    தறகாத்தல்,இனப்பெருக்கம் தவிர அனைத்துக்குணங்களும் ஜோடிக்கப்பட்டதே!

    ReplyDelete
  13. “All the world's a stage,
    And all the men and women merely players:
    They have their exits and their entrances;
    And one man in his time plays many parts,”
    - Shakespeare
    தங்கள் பதிவைப் படித்ததும் ஷேக்ஸ்பியரின் மேலே சொன்ன வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தன.

    ReplyDelete
  14. என்னுளும் அதிர்வுகள் ஏற்படுத்திய பதிவு அய்யா,
    மிக அழகாக குறிபிட்ட சம்பவங்களும்
    பத்திரங்களுக்கு நீங்கள் இன்ட பெயர்கள ராமன் சீதையும் அருமை


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
  15. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்
    அமையும் சூழலுக்கேற்ப சுயமாய்
    மிக நேர்த்தியாய் நடிக்கும் நடிகர்கள்
    ஆயிரம் ஆயிரமாய் இருக்க..

    நேர்த்தியான அவதனிப்புப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  16. நன்றாகச் சொன்னீர்கள். தினம்தோறும் நடிகர்கள்.

    ReplyDelete
  17. உலகமே ஒரு நாடக மேடை..இந்த மேடையில நடிக்கிறவங்களுக்கு விருது,பரிசு எல்லாம் வேற உலகத்தில கண்டிப்பா கிடைக்கும் ரமணி சார்..

    ReplyDelete
  18. "குடும்பம் துண்டு
    தொண்டன் வேட்டி
    துண்டை அவசியமெனில் தூர எறிவேனே ஒழிய
    உயிர் போனாலும் வேட்டியை
    துறக்கமாட்டேன் // இப்படி தன் வாழ்வை தொலைக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . அவர்களைப் பயன்படுத்தி கொழுக்கும் ஜென்மங்களும் .......
    நல்லா இருந்தது ஐயா.

    ReplyDelete
  19. நன்னா சொன்னீல் போங்கோ

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. வெங்கட் நாகராஜ் //

    அருமை.... தினம் தினம் வாழ்க்கையிலேயே நடித்துக் கொண்டு இருக்கும் இவர்களுக்கெதிரே ஆஸ்கர் விருது வாங்கும் நடிகன் எங்கே... :(//

    அருமையான பகிர்வு. வாழ்த்துகள்.

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Seeni s //

    நாட்டு நடப்பை -
    நக்கலாக சொல்லிடீங்க!/

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. Rathnavel Natarajan //


    அருமை சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. vanathy //

    சூப்பரா சொல்லிட்டீங்க. தொடர வாழ்த்துக்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. சிட்டுக்குருவி //.

    எல்லாம் மிக வித்தியாசமான கற்பனைகள் நடைமுறை செற்களும் கூட /

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. Ganpat //
    உங்கள் பாணி 50% உரைநடையாகவும் 50% கவிதையாகவும் இருப்பதால் இதை "கவியுரை" என்று அழைக்கலாமா?//


    நிச்சயமாக அழைக்கலாம்
    பட்டு போல பகட்டுமின்றி
    கதராடை போல அதிக எளிமையுமின்றி
    சொல்லிப் பார்க்கலாமே என்கிற முயற்சியில்
    இப்படி எழுதுகிறேன்
    இது எதனில் சேர்த்தி என்கிற குழப்பம் வேண்டாம் என்பதற்காகவே
    யாதோ எனத்தலைப்பிட்டுப் பதிவிடுகிறேன்
    இது தொடர்பாக மார்ச் 2011 இல் நான் எழுதியுள்ள
    யாதோ என்கிற பதிவு ஒருவேளை நல்ல் விளக்கமாய் இருக்கலாம்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அன்றாட நிகழ்வுகளின் அங்கதங்களைக் கவிதையாக்கும் உங்கள் பாணி ஒப்பற்றது,ரமணி

    ReplyDelete
  28. அவரது அறியாமையை ரசித்து
    நாளும் சிரித்துத் தொலைப்போமா ?
    உலகத்தோடு ஓட்ட ஒழுகி மகிழந்து
    நாமும் ரசித்துத் தொலைப்போமா ?//அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.பாராட்டுக்கள்!

    ReplyDelete
  29. எவ்வளவு அருமையான கவியுரை!!!

    வாழ்த்த வயதில்லை.
    வணங்குகிறேன் ரமணி ஐயா.

    ReplyDelete
  30. நல்ல கவிதை.!

    தா.மா.ஓ 11

    ReplyDelete
  31. இது நடைமுறை ஆகிவிட்டது Sir!நடந்தேரிக்கொண்டே இருக்கும் எதார்த்தம்! சூழ்ந்ிலைக்கு ஏற்ப நடித்து வாழப்பழகிக்கொள்வது புத்திசாலித்தனமாம் Sir!

    ReplyDelete
  32. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Avargal Unmaigal

    உண்மையான நடிகன் போலி நடிகனுக்கு அவாரு கொடுக்கும் அதிசயம் தமிழ்னாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும் //

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    தங்கள் வாவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. துளசி கோபால் //
    .
    சூப்பரு //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. ஸ்ரீராம். //
    .
    அருமை. ஏதாவது ஒரு பொய்யில்தான் தின வாழ்க்கையை நகர்த்துகிறது உலகம். அது இல்லா விட்டால் பொழுதுபோக்கு இல்லாமல் போரடித்து விடும் போல!//

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    தங்கள் வாவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. பா.கணேஷ்//
    .
    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்! எக்ஸலண்ட்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. மகேந்திரன் //

    தெளிவான சிந்தனை
    சிறுதூறலாய் தூவுகிறது நண்பரே..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. தி.தமிழ் இளங்கோ //.

    தங்கள் பதிவைப் படித்ததும் ஷேக்ஸ்பியரின் மேலே சொன்ன வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தன.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. சீனு //
    ..
    என்னுளும் அதிர்வுகள் ஏற்படுத்திய பதிவு அய்யா,
    மிக அழகாக குறிபிட்ட சம்பவங்களும்
    பத்திரங்களுக்கு நீங்கள் இன்ட பெயர்கள ராமன் சீதையும் அருமை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. இராஜராஜேஸ்வரி //


    நேர்த்தியான அவதனிப்புப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்../

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  41. மாதேவி //

    நன்றாகச் சொன்னீர்கள். தினம்தோறும் நடிகர்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  42. ராதா ராணி //

    உலகமே ஒரு நாடக மேடை..இந்த மேடையில நடிக்கிறவங்களுக்கு விருது,பரிசு எல்லாம் வேற உலகத்தில கண்டிப்பா கிடைக்கும் ரமணி சார்..//

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    தங்கள் வாவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. Sasi Kala //

    // இப்படி தன் வாழ்வை தொலைக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . அவர்களைப் பயன்படுத்தி கொழுக்கும் ஜென்மங்களும் .......
    நல்லா இருந்தது ஐயா.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  44. மனசாட்சி™//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  45. சென்னை பித்தன் //

    வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அன்றாட நிகழ்வுகளின் அங்கதங்களைக் கவிதையாக்கும் உங்கள் பாணி ஒப்பற்றது,ரமணி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  46. ஸாதிகா //

    அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.பாராட்டுக்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  47. AROUNA SELVAME //

    எவ்வளவு அருமையான கவியுரை!!!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  48. வரலாற்று சுவடுகள் //

    நல்ல கவிதை.!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  49. வாழைப்பழம் ஊசி ரமணி.

    ReplyDelete
  50. யுவராணி தமிழரசன் //
    .
    இது நடைமுறை ஆகிவிட்டது Sir!நடந்தேரிக்கொண்டே இருக்கும் எதார்த்தம்! சூழ்ந்ிலைக்கு ஏற்ப நடித்து வாழப்பழகிக்கொள்வது புத்திசாலித்தனமாம் Sir//

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    தங்கள் வாவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. அருமையான பகிர்வு...மிகவும் அருமை... வாழ்த்துகள் ரமணி சார்...

    ReplyDelete
  52. அப்பாதுரை //
    ..
    வாழைப்பழம் ஊசி ரமணி.//

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    தங்கள் வாவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. ரெவெரி//
    .
    அருமையான பகிர்வு...மிகவும் அருமை... வாழ்த்துகள் ரமணி சார்./
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  54. அத்தனையும் நிஜ வரிகள். எதை சிறந்தது என்று சொல்ல தெரியவில்லை......
    அருமையான கவிதை

    ReplyDelete
  55. Gobinath //
    .
    அத்தனையும் நிஜ வரிகள். எதை சிறந்தது என்று சொல்ல தெரியவில்லை......
    அருமையான கவிதை

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete