Friday, June 15, 2012

நம்பிக்கை

செடியை கொடியை மரத்தை
தாவரம் எனப்
பொதுமைப் படுத்திப்பார்த்தல் சரியா?

தாய் மண்ணின்
அடி வயிறு கிழித்து வெளியேறல்
ஒன்றுபோலத்தான் ஆயினும்
விதைக்குள் வீரியத்தை இயற்கை
வித்தியாசப்படுத்தியல்லவா வைத்திருக்கிறது ?

வேர்ப்பாதங்களை அழுந்த் ஊன்றி
அடிமரக்கால்களில் உறுதிஏற்றி
வான் நோக்கி நிமிரும் மரத்துக்கு
பற்றுக்கோடுவேண்டியதில்லைதான்.

மரமளவு இல்லையாயினும்
வீசுகிற காற்றுக்கு ஒப்ப ஆடி
தன்னை நிலை நிறுத்திக் கொள்கிற
செடிகளுக்குக் கூட
பிடியது அவசியமில்லைதான்

உறுதியற்ற வேர்க்காலுடன்
மெலுந்து போன உடலுடன்
சிறு ஊதற்காற்றுக்கே
தள்ளாடுகிற கொடியதற்கு
மரமோ மதிலோ
காய்ந்து போன குச்சியோ கூட
பற்றுக் கோடாய்
வேண்டியதாகத்தானே இருக்கிறது ?

46 comments:

  1. /விதைக்குள் வீரியத்தை இயற்கை
    வித்தியாசப்படுத்தியல்லவா வைத்திருக்கிறது/

    அருமை. நல்ல கவிதை.

    ReplyDelete
  2. தெளிவான சிந்தனை...
    ஆழமான உட்கருத்து...
    அருமையான சொற்கோர்வை...

    ReplyDelete
  3. தற்குறிப்பேற்ற அணிக்கு, இந்த கவிதை ஒரு நல்ல உதாரணம்.

    செடி, கொடி, மரம், தாவரம் எல்லாமே அதனதன் பாத்திரங்களை வாசிப்பவரின் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன.

    மிகநல்ல தோரணம் இது.

    ReplyDelete
  4. மனிதர்கள் போல்தான் தாவரங்களும்!
    சிறப்பான கவிதை

    ReplyDelete
  5. ஆம். மெலிந்த கொடிகளுக்கு நிச்சயம் பற்றுக் கோடு வேண்டித்தான் இருக்கிறது. அருமையான கருத்து. (3)

    ReplyDelete
  6. தாவரங்கள் பற்றிய புதுமையான சிந்தனை!
    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  7. த ம ஓ 2

    சா இராமாநுசம்

    ReplyDelete
  8. அருமையாக சிந்தனை செய்து தெளிவாக எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  9. மரமளவு இல்லையாயினும்
    வீசுகிற காற்றுக்கு ஒப்ப ஆடி
    தன்னை நிலை நிறுத்திக் கொள்கிற
    செடிகளுக்குக் கூட
    பிடியது அவசியமில்லைதான்

    ReplyDelete
  10. தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான கவிதை...:)
    தொடருங்கள் சார் உங்கள் கவிப் பயணத்தை TM 6

    ReplyDelete
  11. இந்தக் கவிதை மூலம் எதையாவது ஒப்பிடுகிறீர்களா.?கவிதையும் சொல்லிப் போன விதமும் நன்றாக இருக்கிறது. ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. யதார்த்தம் நிறைந்த கவிதை.ஏதாவது ஒரு சமயத்தில் ஏதேனும் ஒன்றிற்கு பற்றுக்கோலாய் ஆகிக்கொண்டேபோகிறா மனித வாழ்க்கை/

    ReplyDelete
  13. நல்ல கருத்துகளை தாங்கி நிற்கும் அருமையான கவிதை.


    படித்துப் பாருங்கள்



    தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்

    ReplyDelete
  14. வணக்கம் ரமணி ஐயா.

    நீங்கள் கொடுத்த “நம்பிக்கை“ கவிதையிலிருந்து
    எந்த கருத்தைச் சொல்ல வருகிறீர்கள்..?
    எனக்கு மற்றவர்களைப் போல் உள் ஆழக்கருத்தைப்
    புரிந்து கொள்ளும் பக்கவம் கிடையாது.

    எனக்காக பதில் கொடுத்தீர்கள் என்றால் உங்கள் நல்ல கவிதைக்கான கருத்தைப் புரிந்துக் கொண்ட
    திருப்தி அடைவேன்.
    நன்றி ரமணி ஐயா.

    ReplyDelete
  15. சிறப்பான கவிதை ரமணி சார்...

    ReplyDelete
  16. கவிதை... நம்பிக்கை எனும் பற்றுக்கோடு அவசியம் தான் நமக்கும்...

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    த.ம. 8

    ReplyDelete
  17. மனிதர்களில் பலர் கொடிகள் போலத்தான் இருக்கிறார்கள் பற்றுகோடு அவசியம் ஆகிப் போகிறது.
    மரம் போல் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் செடி போலாவது இருக்க முயல வேண்டும். தங்களின் பார்வை அருமை.

    ReplyDelete
  18. வித்தியாசமான சிந்தனை. வெகு தெளிவான விளக்கம். கவிதையாக...

    ReplyDelete
  19. கவியின் கருப்பொருளை
    மிகவும் அழகாக கையாண்டிருக்கிறீர்கள்
    நண்பரே...

    ReplyDelete
  20. நம்பிக்கை என்பது எதையாவது பற்றுக் கோடாய்க் கொண்டுதான் வருகிறதா? யோசிக்கிறேன்.

    ReplyDelete
  21. செமையா சொன்னீர்கள் சார்
    கருப்பொருள் ..... அருமை சார்

    ReplyDelete
  22. ராமலக்ஷ்மி //

    அருமை. நல்ல கவிதை.//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. சிசு//


    தெளிவான சிந்தனை...
    ஆழமான உட்கருத்து...
    அருமையான சொற்கோர்வை...//

    தற்குறிப்பேற்ற அணிக்கு, இந்த கவிதை ஒரு நல்ல உதாரணம்.

    செடி, கொடி, மரம், தாவரம் எல்லாமே அதனதன் பாத்திரங்களை வாசிப்பவரின் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன.//

    எழுதுவதை விட எழுத்து மிகச் சரியாக
    புரிந்து கொள்ளப்பட்டு பின்னூட்டம் இடப்படுகிறபோது
    அடைகிற மகிழ்வுக்கு அளவென்பதே இல்லை
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. சென்னை பித்தன் //

    மனிதர்கள் போல்தான் தாவரங்களும்!
    சிறப்பான கவிதை //

    தங்கள் வரவுக்கும் அழகான
    பொருட்செறிந்த பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. பா.கணேஷ் //

    ஆம். மெலிந்த கொடிகளுக்கு நிச்சயம் பற்றுக் கோடு வேண்டித்தான் இருக்கிறது. அருமையான கருத்து.//


    தங்கள் வரவுக்கும் அழகான
    பொருட்செறிந்த பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. புலவர் சா இராமாநுசம் //

    தாவரங்கள் பற்றிய புதுமையான சிந்தனை!
    அருமை!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. ஸாதிகா //
    ..
    அருமையாக சிந்தனை செய்து தெளிவாக எழுதி உள்ளீர்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. சின்னப்பயல் //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. சிட்டுக்குருவி //
    .
    தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான கவிதை...:)
    தொடருங்கள் சார் உங்கள் கவிப் பயணத்தை/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. G.M Balasubramaniam //

    .?கவிதையும் சொல்லிப் போன விதமும் நன்றாக இருக்கிறது. ரசித்தேன். பாராட்டுக்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. விமலன் //

    யதார்த்தம் நிறைந்த கவிதை.ஏதாவது ஒரு சமயத்தில் ஏதேனும் ஒன்றிற்கு பற்றுக்கோலாய் ஆகிக்கொண்டேபோகிறா மனித வாழ்க்கை///

    தங்கள் வரவுக்கும் அழகான
    பொருட்செறிந்த பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. சீனு //
    .
    நல்ல கருத்துகளை தாங்கி நிற்கும் அருமையான கவிதை. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. AROUNA SELVAME

    எனக்காக பதில் கொடுத்தீர்கள் என்றால் உங்கள் நல்ல கவிதைக்கான கருத்தைப் புரிந்துக் கொண்ட
    திருப்தி அடைவேன்.
    நன்றி ரமணி ஐயா.//

    நிஜமாகவா ! எனக்கு நம்பிக்கையில்லை

    ReplyDelete
  34. ரெவெரி //

    சிறப்பான கவிதை ரமணி சார்...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வரலாற்று சுவடுகள் //

    அருமை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வெங்கட் நாகராஜ் //


    கவிதை... நம்பிக்கை எனும் பற்றுக்கோடு அவசியம் தான் நமக்கும்...//

    தங்கள் வரவுக்கும் அழகான
    பொருட்செறிந்த பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. சிவகுமாரன் //
    .
    மனிதர்களில் பலர் கொடிகள் போலத்தான் இருக்கிறார்கள் பற்றுகோடு அவசியம் ஆகிப் போகிறது.//

    எழுதுவதை விட எழுத்து மிகச் சரியாக
    புரிந்து கொள்ளப்பட்டு பின்னூட்டம் இடப்படுகிறபோது
    அடைகிற மகிழ்வுக்கு அளவென்பதே இல்லை
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. கே. பி. ஜனா... //

    வித்தியாசமான சிந்தனை. வெகு தெளிவான விளக்கம். கவிதையாக...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. மகேந்திரன்//

    கவியின் கருப்பொருளை
    மிகவும் அழகாக கையாண்டிருக்கிறீர்கள்
    நண்பரே..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ஸ்ரீராம். //

    நம்பிக்கை என்பது எதையாவது பற்றுக் கோடாய்க் கொண்டுதான் வருகிறதா? யோசிக்கிறேன்.//

    சிந்திக்கவைக்கும் பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி
    நானும் யோசிக்கிறேன்
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. செய்தாலி //

    செமையா சொன்னீர்கள் சார்
    கருப்பொருள் ..... அருமை சார்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. செடியை, கொடியை மரத்தை தாவரம் எனக்கூறல் சரியா என யாருமே பதிலிடவில்லை. தாங்களும் பதிலிடவில்லை. வேறு எப்படித்தான் கூறுவது?
    விதைக்குள் வீரியம் வித்தியாசமே. மனிதப் பிறப்புப் போலவே.
    நம்பிக்கை நன்கு ஊன்றினால் வாழ்வில் பற்றுக்கோடு தேவையில்லை, ஆயினும் இறைவனிலாவது பற்று வைக்கிறோமல்லவா!.....
    ஆக மக்களிட்ட கருத்துகளில் எனக்கு ஒரு தெளிவு கிட்டவேயில்லை. தங்கள் பதிலிலும் வழுக்கி ஓடியது போலத் தெரிந்தது.
    என் கடன் பணி கவிதை எழுதுவதே. தெளிவை நீங்களே கொள்ளுங்கள் என்பது போல...
    2தடவையப்படி வாசித்தேன் கவிதையை - பிடித்தது...நல்வாழ்த்து. (இது தான் ரமணி சார்...)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  43. kovaikkavi //

    தங்கள் பதிலிலும் வழுக்கி ஓடியது போலத் தெரிந்தது.
    என் கடன் பணி கவிதை எழுதுவதே. தெளிவை நீங்களே கொள்ளுங்கள் என்பது போல...//

    அருமையான விரிவான தெளிவான
    பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
    திக்கு உள்ளவர்களுக்கும் போக்கு உள்ளவர்களுக்கும்
    தெய்வ நம்பிக்கை தேவையில்லை
    திக்கற்றவர்களுக்கு கற்பனையோ மடத்தனமோ
    தெய்வ நம்பிக்கை வாழுவதற்கு அவசியத்
    தேவையாகத்தானே இருக்கிறது
    என்பதை பூடகமாகச் சொல்ல் முயற்சித்துள்ளேன்
    எண்ணையில் எரியும் விளக்கினை முடிந்தால்
    தூண்டிவிடக் கூடிய வெறும் குச்சி மட்டுமே படைப்பாளி
    அவன் விளக்கோ ஜோதியோ எண்ணையோ அல்ல
    என்பது எனது அபிப்பிராயம்
    (அது தவறாகக் கூட இருக்கலாம் )
    ஆகையால் திட்டவட்டமாக இதுதான் என
    எதையும் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை
    மீண்டும் தங்கள் வரவுக்கு நன்றி கூறி..

    ReplyDelete
  44. உருவகத்துக்கு வயது வரம்பு உண்டா?
    சிந்திக்க வைக்கும் எழுத்து. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  45. அப்பாதுரை //

    நானும் யோசிக்கிறேன்
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete