Wednesday, June 27, 2012

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமயலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

60 comments:

  1. வாய்க்கப் பெற்றது இதுதான் என்பதைக் காலம் கடந்த பின்னே தான் உணர்கிறோம்!
    முத்திரைக் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. eakka peru moochi!

    anupavangal!
    ungal pakirvukal!

    ReplyDelete
  3. //குழம்பிபோய்
    கடந்துவந்த பாதையைப் பார்க்க
    காலம், சக்தி ,செல்வம்
    அனைத்தையும்
    ஏய்த்துப் பிடுங்கிய
    எக்களிப்பில்
    எகத்தாளமாய் சிரிக்கிறது அது///

    நல்ல கவிதை....

    த.ம. [3]

    ReplyDelete
  4. நல்லதொரு வாழ்க்கை தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்........

    த ம..4

    ReplyDelete
  5. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    ........... ....... ........ ...... ...........
    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
    - (பாடல்: கண்ணதாசன். படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)

    ReplyDelete
  6. தம்பி இளங்கோ சொன்னதை நானும் வழிமொழிகிறேன் கருத்து மிகவும் அருமை!

    த ம ஓ 6 சா இராமாநுசம்

    ReplyDelete
  7. ஒரு முழு வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கும் வரிகள்...

    இதுதான் வாழ்க்கை....


    ஒவ்வொறு நிமிடமும் நம்முன் விரிந்துக்கொண்டே இருக்கிறது புதிய புதிய வழிகள்...

    அவைகள் நம் வாழ்க்கையின் வெற்றிக்கான வழிகள் என்று நாம் கடந்துக்கொண்டுதான் இருக்கிறோம்...

    முடிவதில்லை வழிகளும்...
    வாழ்க்கை பயணங்களும்...

    ReplyDelete
  8. வாழ்க்கையின் பயணப்பாதை வட்ட வடிவமானது அது முடிவில் ஆரம்பிக்கும் மற்றொரு முடிவில்லாத வாழ்க்கை

    ReplyDelete
  9. மிகவும் அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. என் ஜாதி
    என் மதம்
    என் இனம் கடந்த
    இந்த முகமூடிக்குள்ளே தொலைந்து போன காலங்கள். அர்த்தமுள்ள வரிகள் .

    ReplyDelete
  11. வாழ்வின் அர்த்தம் சொல்லும் கவிதை சார்

    ReplyDelete
  12. //"உன்னத வாழ்வுக்கான பாதை
    இங்குதான் துவங்குகிறது "
    என்கிற அறிவ ப்புப் புடன்
    நீண்டு செல்கிறது
    ஆளரவமற்ற
    ஒரு புதியசாலை//

    ஏதோ ஒன்றை நோக்கி பயணிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றி அருமையான படைப்பு


    படித்துப் பாருங்கள்

    காவி நிறத்தில் ஒரு காதல்

    seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html

    ReplyDelete
  13. அருமையான கவிதை நண்பரே!

    த.ம.ஒ 11

    ReplyDelete
  14. அருமையான கவிதை.அழகிய வாழ்வியல் தத்துவம்

    ReplyDelete
  15. மலையாளப் படம் ஒன்று கண்டேன், பல நாட்களுக்கு முன். அதுதான் நினைவுக்கு வந்தது. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா.? “ இதா, இவிடம் வரெ “
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மனதில் பதிந்த கவிதை. கவிதை சொன்ன கருத்தும் அருமை. (12)

    ReplyDelete
  17. முடிந்து விட்டது என்று நினைக்கும்போது தொடங்குவதும், தொடங்கப் போகிறது என்று எதிர்பார்க்கும்போது முடிவதும் வாழ்க்கை விளையாட்டு! 'என் வீடு என் மனைவி என்றே தொடங்கும் பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  18. மிகவும் அருமையான கவிதை!

    ReplyDelete
  19. அருமையான கவிதை.
    காலம் எங்கே இட்டுச் செல்கிறது என்பதை அறியும்போது காலம் முடிய நிற்கிறது என்பதே காலத்தின் வி(த்)ந்தை!

    ReplyDelete
  20. கே. பி. ஜனா... said...

    //காலம் எங்கே இட்டுச் செல்கிறது என்பதை அறியும்போது காலம் முடிய நிற்கிறது என்பதே காலத்தின் வி(த்)ந்தை!//

    கவிதையும் அருமை, நண்பர் திரு, கே.பி.ஜனா அவர்களின் கருத்துக்களும் உண்மை.

    பாராட்டுக்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  21. REPLY TO புலவர் சா இராமாநுசம் said...
    //தம்பி இளங்கோ சொன்னதை நானும் வழிமொழிகிறேன் //
    புலவர் அய்யாவுக்கு! அது என்னுடைய கருத்து அல்ல. கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள். மேற்கோள் காட்டி கீழே குறிப்பும் (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம் ) தந்து இருந்தேன்.

    ReplyDelete
  22. பிரமிப்பு நீங்காது நாம் வாழ்க்கை முழுதும் பார்த்துக் கொண்டே இருப்பது காலம் மட்டுமே!

    ReplyDelete
  23. நல்ல கவிதை சார் ! எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று !

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

    படம் : சுமைதாங்கி (1962) பாடியவர் : P B ஸ்ரீநிவாஸ்
    இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் எழுதியது : கண்ணதாசன்.

    ReplyDelete
  24. புதியபாதை கவிதை சொல்லும் ரகசியம், முற்றும் உண்மை குரு....!

    ReplyDelete
  25. ரமணி சார்..


    எல்லோருக்கும் விதிக்கப்பட்டது இதுதான். இதுதான் மாற்றமில்லாதது. எளிய செர்ற்கள். அனுபவ வாழ்க்கை.

    ReplyDelete
  26. நல்லதொரு கவிதை..
    "உன்னத வாழ்வுக்கான பாதை
    இங்குதான் துவங்குகிறது "
    என்கிற அறிவ ப்புப் புடன்
    நீண்டு செல்கிறது
    ஆளரவமற்ற
    ஒரு புதியசாலை"
    அருமை ஐயா..

    ReplyDelete
  27. இது தான் வாழ்க்கை அது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. ரமேஷ் வெங்கடபதி //

    முத்திரைக் கவிதை! வாழ்த்துக்கள்!//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. Seeni //

    anupavangal!
    ungal pakirvukal!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. வெங்கட் நாகராஜ் //

    நல்ல கவிதை.... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. சிட்டுக்குருவி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான
    விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. புலவர் சா இராமாநுசம் //

    கருத்து மிகவும் அருமை! //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. கவிதை வீதி... // சௌந்தர் // //

    ஒரு முழு வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கும் வரிகள்...//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான
    விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. மோகன் குமார் //

    Arumai//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Lakshmi //

    மிகவும் அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. Sasi Kala //

    அர்த்தமுள்ள வரிகள் .//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. செய்தாலி//

    வாழ்வின் அர்த்தம் சொல்லும் கவிதை சார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. சீனு //.

    ஏதோ ஒன்றை நோக்கி பயணிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றி அருமையான படைப்பு//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. வரலாற்று சுவடுகள் //

    அருமையான கவிதை நண்பரே!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. ஸாதிகா //
    .
    அருமையான கவிதை
    .அழகிய வாழ்வியல் தத்துவம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் மனம் திறந்த ஒளிவுமறைவற்ற
    அருமையான விமர்சனப் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. பா.கணேஷ் //

    மனதில் பதிந்த கவிதை. கவிதை சொன்ன கருத்தும் அருமை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. ஸ்ரீராம்.//
    .
    முடிந்து விட்டது என்று நினைக்கும்போது தொடங்குவதும், தொடங்கப் போகிறது என்று எதிர்பார்க்கும்போது முடிவதும் வாழ்க்கை விளையாட்டு! 'என் வீடு என் மனைவி என்றே தொடங்கும் பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வந்தது.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான
    விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. மனோ சாமிநாதன் //

    மிகவும் அருமையான கவிதை!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. கே. பி. ஜனா... //

    அருமையான கவிதை.
    காலம் எங்கே இட்டுச் செல்கிறது என்பதை அறியும்போது காலம் முடிய நிற்கிறது என்பதே காலத்தின் வி(த்)ந்தை!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. வை.கோபாலகிருஷ்ணன் //

    கவிதையும் அருமை, நண்பர் திரு, கே.பி.ஜனா அவர்களின் கருத்துக்களும் உண்மை.
    பாராட்டுக்கள் இருவருக்கும்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் அருமையான விளக்கத்திற்கு
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  50. Kumaran //

    பிரமிப்பு நீங்காது நாம் வாழ்க்கை முழுதும் பார்த்துக் கொண்டே இருப்பது காலம் மட்டுமே!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. திண்டுக்கல் தனபாலன் //

    நல்ல கவிதை சார் ! //!

    தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. MANO நாஞ்சில் மனோ //

    புதியபாதை கவிதை சொல்லும் ரகசியம், முற்றும் உண்மை குரு..../

    தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. ஹ ர ணி //

    இதுதான் மாற்றமில்லாதது. எளிய செர்ற்கள். அனுபவ வாழ்க்கை./

    தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. மதுமதி //

    நல்லதொரு கவிதை..//

    தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப் போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. kovaikkavi //

    இது தான் வாழ்க்கை அது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. சூப்பர் கவிதை. வரிகள் அழகோ அழகு.

    ReplyDelete
  57. vanathy //

    சூப்பர் கவிதை. வரிகள் அழகோ அழகு.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete