Saturday, June 30, 2012

கூண்டில் அடைபட்ட சிங்கம்

கிடைக்கிற மூன்று கற்களை
சமமாய அடுக்கி
சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
பற்றவைத்து
பேப்பருக்குள் எடுத்து வந்த
 மளிகைச்சாமானகளை வைத்தே
சமைக்கத் துவங்குகிறாள் ஆச்சி

சமமற்ற தரையோ
சுழன்றடிக்கும் காற்றோ
எடுக்க மறந்த பொருட்களோ
அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை
கொதிக்கிற குழம்பின் வாசம்
கோவில் வெளியெங்கும்
பரவி விரிகிறது
என்றுமில்லா பசி
குடலுக்குள் உருண்டு புரள்கிறது

நிழலிருக்கும் இடத்தைப் பெருக்கி
சமதளம்ற்ற தரையில்
இலையைப் போடுகிறாள் ஆச்சி
ஊட்டினாலும் முகம் திருப்பும்
பேரப்ப்பிள்ளைகளெல்லாம்
போட்டி போட்டு இலை நிரப்பி
சப்புக் கொட்டி உண்ணுகிறார்கள்

நவ நாகரீக அடுப்படி
அனைத்துப் பொருட்களும் உள்ள
அஞ்சறைப்பெட்டி
சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர்
தேக்காலான சாப்பாட்டு மேஜை
இவைகளின்றி ஏதும் செய்ய இயலாத
மருமகள் கள் எல்லாம்
வரிசையாய் அமர
பரிமாறத் துவங்குகிறாள் ஆச்சி

சட்டிக் குழம்பும்
அண்டாச் சோறும்
கற்பூரமாய்க் கரைய
ஏனோ கண்கலங்குகிறாள்
வீட்டில் கேஸ் அடுப்பு கூட
பற்றவைக்கத் தெரியாத
 "அந்த க் காலத்து ஆச்சி "


69 comments:

  1. அனுசரணையாய் அவளைத் தங்கள்
    எல்லாம் எளிய உலகத்துள்
    அழைத்து வந்து சொல்லிக் கொடுத்தால்,
    அதில் அன்பும் இட்டு
    அவள் படைத்திடும் சாகசங்கள்
    எத்தனை எத்தனையோ...

    ReplyDelete
  2. கவிதையும் தலைப்பும் அழகு.

    ReplyDelete
  3. ஆச்சி மனதில் நிற்கிறார்.

    ReplyDelete
  4. அருமை.... விறகு அடுப்பில், கல்சட்டி வைத்து அத்தைப்பாட்டி செய்து கொடுத்த மணக்கும் குழம்பு சாதம் சாப்பிட்ட திருப்தி உங்கள் கவிதை படித்ததில்.....

    த.ம. 2

    ReplyDelete
  5. மாற்றங்களை சுமந்து வரும் காலம்
    எவ்வளவு நடைமுறை விஷயங்களை
    மெல்ல அழித்துவிட்டு, அனுபவித்தவரை
    பின்பு நினைத்து நினைத்து ஏங்க வைக்கிறது?

    ReplyDelete
  6. ஆச்சிகளின் கண்கலங்கல்களே நிஜமாயும்,நிதர்சனமாயும் ஆகிப்போனது இங்கே/

    ReplyDelete
  7. எல்லாம் ஆச்சி மலை ஏறி போச்சி

    ReplyDelete
  8. சட்டிக் குழம்பும், அண்டாச்சோறும் மரநிழலில் இலைபோட்ட சாப்பாட்டின் சுவைக்கு ஈடில்லை.பாட்டிகைகளினால் நினைக்கவே அமிர்தம்.

    அருமை.

    ReplyDelete
  9. ஆச்சி ..சமையலும் அவர் மனமும் கவிதையில் தெரிகிறது

    ReplyDelete
  10. அன்பினால் சமைத்தது.. மணக்கிறது.

    ReplyDelete
  11. சாப்பாடுடன் அன்பையும் குழைத்து ஊட்டி இருக்காங்க கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அந்த அன்புக்கும் பரிவுக்கும் பாத்திரங்களாக தகுதியும் இப்போதெல்லாம் இருக்கிறதா. ? அவர்கள் மனம் தெரிந்து நடந்தாலாவது நன்றாயிருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //சட்டிக் குழம்பும்
    அண்டாச் சோறும்
    கற்பூரமாய்க் கரைய
    ஏனோ கண்கலங்குகிறாள்
    வீட்டில் கேஸ் அடுப்பு கூட
    பற்றவைக்கத் தெரியாத
    "அந்த க் காலத்து ஆச்சி "//

    அழகான கவிதை.
    அற்புதமான படைப்பு.
    க்ருத்தினில் நல்ல ஆழம்.
    அன்றைய அந்த ருசி,
    இன்றைக்கு
    இந்த நாகரீக நங்கைகளுக்குச்
    சுட்டுப்போட்டாலும் வராது தான்.

    ReplyDelete
  14. "அந்த க் காலத்து ஆச்சி

    "கூண்டில் அடைபட்ட சிங்கம்.......

    ReplyDelete
  15. // கிடைக்கிற மூன்று கற்களை
    சமமாய அடுக்கி
    சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
    பற்றவைத்து
    ......................................
    சட்டிக் குழம்பும்
    அண்டாச் சோறும் //

    படிக்க ஆரம்பித்ததுமே கிராமத்துச் சொந்தங்கள் காதுகுத்து, கல்யாணம், சாமிப் படையல் காலங்களில் சுடச் சுட ஆக்கிப் போட்ட சோறும் , மணம் வீசும் குழம்பும் ஞாபகத்திற்கு வந்தன.

    ReplyDelete
  16. தவமென ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், செயலின் பலனில் தனித்துவம் மட்டுமல்ல சொற்களால் விளக்க முடியாத தரம் இருக்கும். குறிப்பாக சமையலை மிகுந்த ஈடுபாட்டுடன் மனம் ஒருங்கிணைந்து செய்தால் சுவையின் தரமே அலாதி.

    மனித ஈடுபாடு கொஞ்சமே தேவைப்படும் இன்றைய நவநாகரீகமான அடுப்படியில், தரம் இரண்டாம் பட்சமே. ஆச்சியின் கண்கலங்குதலுக்கு மனாதாலும் நினைவாலும் தான் செய்த சோற்றுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தின் வெளிப்படாகக்கூட இருக்கலாம். உணர்வுகளையும் விவரிக்க வார்த்தைகள் போதுவதே இல்லை. ஆனால் உங்கள் கவிதைகள் எப்படியோ அதை உணர்த்திவிடுவது தனிச்சிறப்பு.

    ReplyDelete
  17. ஐயா அருமையான படைப்பு.இப்பவே பசிக்கிறதே....!வா◌ாத்தைகளால் வசியம் செய்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  18. அருமை வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  19. ஆச்சியின் சமையலை சுவைபட கவிதையில் வடித்திருப்பது அருமை.

    ReplyDelete
  20. கடைசி வரியில் பொதிந்துள்ள தலைப்பின் ஆழம் அழகு

    ReplyDelete
  21. அருமையான ஆச்சி மட்டுமல்ல உங்கள் பதிவும் அருமை

    ReplyDelete
  22. படிக்கும் போதே பால்ய கால நினைவுகள் பசை போல ஒட்டிகொல்கிறது ............நினைவுகளின் மீள் பிரசவம் உங்கள் கவிதை மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஆச்சியின் கண்கலங்கலில் அர்தமுள்ளது! அந்த காலத்து சமையலே அலாதியான, சுவையானது நன்றி இரமணி த ம ஓ 10

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. டச்சிங் சார்.

    பால்யகால நினைவுகள் பல வந்து சென்றன
    பாட்டியின் பதமான சமையலில்....

    ReplyDelete
  25. ஆச்சியின் அன்பு அல்லவோ சமையலைச் சுவையானதாக ஆக்குகிறது!அருமை ரமணி

    ReplyDelete
  26. ஆச்சியின் சமையலை சுவைபட கவிதையில் வடித்திருப்பது அருமை ரமணி சார்...

    ReplyDelete
  27. எனது ஆத்தாவும் இப்படித்தான் கையில் விளக்கை வைத்துக் கொண்டு மண் சட்டியிலிருந்து எறாவை (இறால்) அள்ளிக் கொட்டுவாள். பேரப்பிள்ளைகளான நாங்கள் வரிசையில் அமர்ந்து,யாருக்கு அதிகமென்று போட்டி வைத்துக் கொள்வொம்.

    பழைய நினைவுகளை கிளறியது உங்கள் கவிதை.
    அருமை!!!.

    ReplyDelete
  28. கே. பி. ஜனா... //

    கவிதையும் தலைப்பும் அழகு.//

    தங்க்கள் உடன் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ராமலக்ஷ்மி //

    ஆச்சி மனதில் நிற்கிறார்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. வெங்கட் நாகராஜ் //

    அருமை.... விறகு அடுப்பில், கல்சட்டி வைத்து அத்தைப்பாட்டி செய்து கொடுத்த மணக்கும் குழம்பு சாதம் சாப்பிட்ட திருப்தி உங்கள் கவிதை படித்ததில்...../

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. ரமேஷ் வெங்கடபதி //

    மாற்றங்களை சுமந்து வரும் காலம்
    எவ்வளவு நடைமுறை விஷயங்களை
    மெல்ல அழித்துவிட்டு, அனுபவித்தவரை
    பின்பு நினைத்து நினைத்து ஏங்க வைக்கிறது?/

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. சின்னப்பயல் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. விமலன்//

    ..ஆச்சிகளின் கண்கலங்கல்களே நிஜமாயும்,நிதர்சனமாயும் ஆகிப்போனது இங்கே/

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. மனசாட்சி™ //

    எல்லாம் ஆச்சி மலை ஏறி போச்சி/



    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. மாதேவி //
    .
    சட்டிக் குழம்பும், அண்டாச்சோறும் மரநிழலில் இலைபோட்ட சாப்பாட்டின் சுவைக்கு ஈடில்லை.பாட்டிகைகளினால் நினைக்கவே அமிர்தம்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. மோகன் குமார் //

    ஆச்சி ..சமையலும் அவர் மனமும் கவிதையில் தெரிகிறது//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. ரிஷபன் //

    அன்பினால் சமைத்தது.. மணக்கிறது.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. Lakshmi //

    சாப்பாடுடன் அன்பையும் குழைத்து ஊட்டி இருக்காங்க கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. வரலாற்று சுவடுகள்//

    அருமை //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. G.M Balasubramaniam //

    அவர்கள் மனம் தெரிந்து நடந்தாலாவது நன்றாயிருக்கும். வாழ்த்துக்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. வை.கோபாலகிருஷ்ணன் //

    அழகான கவிதை.
    அற்புதமான படைப்பு.
    க்ருத்தினில் நல்ல ஆழம்.
    அன்றைய அந்த ருசி,
    இன்றைக்கு
    இந்த நாகரீக நங்கைகளுக்குச்
    சுட்டுப்போட்டாலும் வராது தான்.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. இராஜராஜேஸ்வரி //
    .
    "அந்த க் காலத்து ஆச்சி
    "கூண்டில் அடைபட்ட சிங்கம்.......//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. தி.தமிழ் இளங்கோ //

    படிக்க ஆரம்பித்ததுமே கிராமத்துச் சொந்தங்கள் காதுகுத்து, கல்யாணம், சாமிப் படையல் காலங்களில் சுடச் சுட ஆக்கிப் போட்ட சோறும் , மணம் வீசும் குழம்பும் ஞாபகத்திற்கு வந்தன./

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. திண்டுக்கல் தனபாலன் //
    ..
    மிகவும் அருமை சார் //!

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. ஸ்ரீராம்.//

    சிறு க(வி)தை!


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. VENKAT //

    உணர்வுகளையும் விவரிக்க வார்த்தைகள் போதுவதே இல்லை. ஆனால் உங்கள் கவிதைகள் எப்படியோ அதை உணர்த்திவிடுவது தனிச்சிறப்பு.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. Athisaya //

    ஐயா அருமையான படைப்பு.இப்பவே பசிக்கிறதே....!வா◌ாத்தைகளால் வசியம் செய்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. ஆதி//
    .
    அருமை வாழ்த்துக்கள் ஐயா//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. Seeni //

    aachi!!
    paasathin muthirchi!//

    தங்கள் வரவுக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. ஸாதிகா//

    ஆச்சியின் சமையலை சுவைபட கவிதையில் வடித்திருப்பது அருமை.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. சீனு //
    .
    கடைசி வரியில் பொதிந்துள்ள
    தலைப்பின் ஆழம் அழகு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. Avargal Unmaigal
    //

    அருமையான ஆச்சி மட்டுமல்ல உங்கள் பதிவும் அருமை /

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. கோவை மு.சரளா //

    படிக்கும் போதே பால்ய கால நினைவுகள் பசை போல ஒட்டிகொல்கிறது ............நினைவுகளின் மீள் பிரசவம் உங்கள் கவிதை மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. புலவர் சா இராமாநுசம் //

    ஆச்சியின் கண்கலங்கலில் அர்தமுள்ளது! அந்த காலத்து சமையலே அலாதியான, சுவையானது
    நன்றி இரமணி//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. துபாய் ராஜா //

    .
    டச்சிங் சார்.
    பால்யகால நினைவுகள் பல வந்து சென்றன
    பாட்டியின் பதமான சமையலில்....//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. சென்னை பித்தன் //

    ஆச்சியின் அன்பு அல்லவோ சமையலைச் சுவையானதாக ஆக்குகிறது!
    அருமை ரமணி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. ரெவெரி //.


    ஆச்சியின் சமையலை சுவைபட கவிதையில் வடித்திருப்பது அருமை ரமணி சார்.../

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. தோழன் மபா, தமிழன் வீதி //


    பழைய நினைவுகளை கிளறியது உங்கள் கவிதை.
    அருமை!!!

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. ஆச்சியுடன் எனக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது ரமணி ஐயா. அருமைங்க.

    ReplyDelete
  60. AROUNA SELVAME //
    .
    ஆச்சியுடன் எனக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது ரமணி ஐயா. அருமைங்க//.

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. ஆச்சி மனதில் நிறைந்து விட்டார்கள்.
    ஆச்சியின் அன்பு உண்வை ருசியாக்கியது.
    அந்த காலத்து மனிஷிகளுக்கு தேவை குறைவு மனது பெரிது.

    குலதெயவம் கோவில் போனால் கல் கூட்டி அங்கு உள்ள சுள்ளிகளை எடுத்து அருமையாய் பொங்கல் வைத்து, குழம்பு வைத்து அரைத்துக் கொண்டு போன துவையலுடன் பெரியவர்கள் பரிமாற உணவு உண்பது நினைவு வந்து விட்டது.

    ReplyDelete
  62. கோமதி அரசு//

    ஆச்சி மனதில் நிறைந்து விட்டார்கள்.
    ஆச்சியின் அன்பு உண்வை ருசியாக்கியது.
    அந்த காலத்து மனிஷிகளுக்கு தேவை குறைவு மனது பெரிது//

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete