Tuesday, July 17, 2012

கற்றுக் கொண்டவை (1)-துணைப்பதிவு (2)

தாய்மை   

அகன்று விரைந்து பரவி
ஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.

அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்

அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மாணி த்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது
 காணாது மறைககப்பட்ட  கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது
 ஒரு அழ்கிய  பூச்செடி

அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
செடிக்கு  உயிர்தரும் மகிழ்வினில்
 உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
பூச்செடியின்  ஆணிவேர்

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்திப்  பொத்தி வளர்த்த பிள்ளை

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது
அன்புகொண்ட  தாய்மை

31 comments:

  1. "சொற்க் காம்புகளின் உச்சியில்
    பூத்துச் சிரித்த
    உணர்வுப் பூக்களை..."

    - ‍வியத்தகு சொல்லாடல்.

    ReplyDelete
  2. தாய்மையின் சிறப்பு கூறும் உன்னத பதிவு நண்பரே...
    உவமேயங்கள் அத்தனையும் மனதில் நிற்கிறது...

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை! முத்திரைக் கவிதை..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அதன் முழு வளர்ச்சியில்
    தான் முற்றாய் மறைந்துபோனாலும்
    அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
    மன நிறைவு கொண்டது
    காணாது மறைககப்பட்ட கோலப்புள்ளிஃஃஃ

    அருமை சொந்தமே!!எங்கெல்லாம் இழப்பு,தியாகம் விரிகிறதோ அங'கெல்லாம் தாய்மை தான் தெரிகிறது.!

    ReplyDelete
  5. //சுட்டெரிக்கும் வறுமைக்கு
    துளி நிழல் தாராது போயினும்
    விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
    அவனின் வளர்ச்சி கண்டு
    அவனிருந்த அடிவயிறு தடவி
    ஆனந்தம் கொண்டது
    அன்புகொண்ட தாய்மை//

    சுட்டெறிக்கும் இந்த கடைசி வரிகள் மனதை என்னவோ செய்கின்றனவே!

    சிறந்த படைப்பு. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. அருமையான வரிகள் Sir!!!
    அவளது கருப்பை சிலிர்க்க நெஞ்சில் பொங்கும் சந்தோஷத்தோடும் பெருமிதத்தோடும் "நான் ஒன்றும் செய்துவிட வில்லை" என்று சொல்லி அனைத்தையும் செய்துவிட்டு விலகி மறைந்து நிற்கும் விந்தையானவள் அவள்!!!!!!!!!

    ReplyDelete
  7. அழகிய ஒப்பிடல்களுடன் ஒப்பிலா கவிதை ஒன்றை ஆக்கியுள்ளீர்கள்.
    //அதனுள்
    இருப்பிடம் தெரியாது
    கரைந்து கிடந்தாலும்
    தான் தான் காவேரி என
    பெருமிதம் கொண்டது
    தலைக்காவேரித் துளி நீர்.//
    வரிகள் அழகு.

    ReplyDelete
  8. //அதனை நிர்மானித்த பெருமிதத்தில்// நிர்மாணித்த?

    ReplyDelete
  9. தாய்மை என்ற சொல்லிலேயே அத்தனை தாய்மை இருக்கிறது, அதை அழகாய் உங்கள் கவியில் பாடியது அருமை ரமணி சார்

    ReplyDelete
  10. அருமையானதொரு படைப்பு !!!

    ReplyDelete
  11. இனிய நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    மன்னிக்கணும், என் தாமதமான வருகையை:(

    ReplyDelete
  12. நல்லதொரு படைப்பு !

    ReplyDelete
  13. //அவனிருந்த அடிவயிறு தடவி
    ஆனந்தம் கொண்டது
    அன்புகொண்ட தாய்மை//

    அது தான் அம்மா..

    நல்ல கருத்துள்ள கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

    த.ம. 5

    ReplyDelete
  14. அருமையான பகிர்வுக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. Kumaran //

    - ‍வியத்தகு சொல்லாடல்.//

    தங்கள் முதல் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. மகேந்திரன் //

    தாய்மையின் சிறப்பு கூறும் உன்னத பதிவு நண்பரே...
    உவமேயங்கள் அத்தனையும் மனதில் நிற்கிறது..//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. ரமேஷ் வெங்கடபதி //

    கவிதை மிக அருமை! முத்திரைக் கவிதை..வாழ்த்துக்கள்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. Athisaya //

    அருமை சொந்தமே!!எங்கெல்லாம் இழப்பு,தியாகம் விரிகிறதோ அங'கெல்லாம் தாய்மை தான் தெரிகிறது.//!


    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன்//

    சுட்டெறிக்கும் இந்த கடைசி வரிகள் மனதை என்னவோ செய்கின்றனவே!
    சிறந்த படைப்பு. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. யுவராணி தமிழரசன்//

    அருமையான வரிகள் Sir!!!
    அவளது கருப்பை சிலிர்க்க நெஞ்சில் பொங்கும் சந்தோஷத்தோடும் பெருமிதத்தோடும் "நான் ஒன்றும் செய்துவிட வில்லை" என்று சொல்லி அனைத்தையும் செய்துவிட்டு விலகி மறைந்து நிற்கும் விந்தையானவள் அவள்!!!!!!!!!

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கே. பி. ஜனா... //
    .
    அழகிய ஒப்பிடல்களுடன் ஒப்பிலா கவிதை ஒன்றை ஆக்கியுள்ளீர்கள்.வரிகள் அழகு.

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. சீனு //
    .
    தாய்மை என்ற சொல்லிலேயே அத்தனை தாய்மை இருக்கிறது, அதை அழகாய் உங்கள் கவியில் பாடியது அருமை ரமணி சார்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. இக்பால் செல்வன் //

    அருமையானதொரு படைப்பு !!!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. வரலாற்று சுவடுகள் //

    அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. AROUNA SELVAME //

    அருமைங்க ரமணி ஐயா.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. கே. பி. ஜனா//

    சரிசெய்துவிட்டேன்
    தவறினை சுட்டிக்காட்டியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. எந்த ஒன்றும் அதுவே அதாக இருப்பதில்லை. பலவற்றின் கூட்டு கண்டும் காணாமலும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றன. வரைந்து முடித்துவிட்ட வட்டத்தில் எது தொடக்கப் புள்ளி.?

    ReplyDelete
  28. G.M Balasubramaniam //

    சிந்தனையைத் தூண்டிப்போகும்
    அருமையான பின்னூட்டம்
    வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete