Tuesday, July 17, 2012

கற்றுக் கொண்டவை துணை ப்பதிவு (1)

நமைச்சல்..
தனித்து நிற்கவா ?
உயரம் கூட்டிக் கா ட்டவா ?
எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?

நமைச்சலுக்கான காரணம்
எதுவெனத்  தெரியாவிடினும்
கைகளால் சும்மா  இருக்க முடியவில்லை

எழுது வற்கான காரணம் 
என்னவென்று  புரியாவிடினும்
எழுதுபவர்களால் எழுதாதும்  இருக்கமுடியவில்லை

35 comments:

  1. புகழுக்கு ஏங்கும் மனதாலா... இல்லை நீங்கள் சொன்ன காரணங்களெல்லாமுமா... காரணம் புரியாவிடினும் காரியமென்னவோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிந்தனையைத் தூண்டிய சிறப்பான பகிர்வு. அருமை. (2)

    ReplyDelete
  2. எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம்.

    ReplyDelete
  3. எதுவாக இருந்தாலும் 'திருப்தி' இருந்தால் போதும்... ! சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள்... (த.ம.3)

    ReplyDelete
  4. //புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?//

    போனபின் சொல்வதற்கு ஒரு
    சிறப்புத் தகுதி வேண்டியா ?//

    //எழுது வற்கான காரணம் என்னவென்று புரியாவிடினும் எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை// ;)))))

    அருமையான உணர்வுகளை அப்பட்டமாகச் சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நிறை குடம் தளும்பாது என்பார்கள்.
    ஆனால் நீங்கள் நிறைந்து வழியும் குடம்.

    வணங்குகிறேன் ரமணி ஐயா.

    ReplyDelete
  6. ஒன்றை உருவாக்குவதன் போதைதான் துவக்கம். மற்றவர்களுக்கு அந்த ச்ருஷ்டியால் உண்டாகும் ஆனந்தம்தான் முடிவு.

    இதுதான் மூலம். மற்றெல்லாம் பின்வருபவைதான் என எனக்குத் தோன்றுகிறது ரமணியண்ணா.

    ReplyDelete
  7. // எழுதுவற்கான காரணம் என்னவென்று புரியாவிடினும் எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை //

    பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கும் வலைப் பதிவில் எழுதுவதற்கும் இடையே உள்ள ஒரு மனக்கிலேசம் இதுதான்.

    ReplyDelete
  8. அடுக்கப்ட்ட
    இந்த எதோ ஒரு காரணங்களுக்காக
    நிறையப்பேர் எதையோ எழுதிவருகிறார்கள்


    சிந்தனையில்
    ஊரும் நீரூற்றை
    மற்றவர்களுக்கும் பருக கொடுப்பது
    நல்லதும் நம்மையும் தானே சார்

    ReplyDelete
  9. எழுது வற்கான காரணம்
    என்னவென்று புரியாவிடினும்
    எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை

    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  10. எழுதுறது ஒரு சிரங்கு மாதிரி., அது நம்மளை பிடிச்சிட்டா அவ்வளவு சுலபத்துல விடாது ரமணி ஐயா! (TM 6)

    ReplyDelete
  11. //எழுது வற்கான காரணம்
    என்னவென்று புரியாவிடினும்
    எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை//

    சரியாச் சொன்னீங்க ஐயா... எழுதாதும் இருக்கமுடியவில்லை!

    த.ம. 8

    ReplyDelete
  12. எழுதுவதற்கு காரணம் எதுவும் தேவையில்லைதான். அவ்வாறே எழுதுவதை நிறுத்துவதற்கும்..

    வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
  13. எழுதுவதுக்கு காரணம் தேவையில்லை ஆனால்
    எழுத்தாளன் எழுதுவாதெல்லாம் காரணமாகத்தான்....

    ஏதோ ஒன்று புலப்படும் உண்மையான எழுத்தில்

    ReplyDelete
  14. யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
    குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?ஃஃஃ
    அருமை ஐயா!இப்படி ஏதேதோ காரணங்கள்முளைக்கின்றன்..!எழுதியவனுக்கே தெரியும் வலியும் வார்த்தையும் என்னவென்று!
    வாழத்துக்கள் ஐயா!!சிறப்பான தேடலிற்காய்.சந்திப்போம்.!

    ReplyDelete
  15. காரியத்துக்கான காரணங்கள் பல...
    சிந்தையில் விரிந்திட்ட
    அத்தனையும் சிலநேரங்களில்
    கருக்களாய் அமைந்துவிடும்....

    ReplyDelete
  16. யோசிக்க வைக்கின்ற வரிகள் Sir!!!
    சிறு துளியாய் சிந்தையில் துளிர்த்துவிட்ட மாத்திரத்தில் விருட்சமாய் வளர்ந்துவிட முட்டி மோதி பின் ஏதேதோ காரணம் கொண்டு விரல் வழியே பதிந்து போகும் சிந்தனைகள்!

    ReplyDelete
  17. // எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை// அது என்னவோ உண்மை தான்

    ReplyDelete
  18. /எழுது வற்கான காரணம்
    என்னவென்று புரியாவிடினும்
    எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை//

    மிகச் சரியாக சொல்லி இருக்கிறிர்கள்

    பொழுது போக்க எழுத ஆரம்பித்து இப்போது பொழுதெல்லாம் அதிலேயே கரைகிறது

    ReplyDelete
  19. ...
    பால கணேஷ் //

    காரணம் புரியாவிடினும் காரியமென்னவோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிந்தனையைத் தூண்டிய சிறப்பான பகிர்வு. அருமை

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. G.M Balasubramaniam//

    எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம்.//

    இந்தப் பதில் கூட என் படைப்பைப்போல
    மிகத் தெளிவாக காரணத்தைச் சொல்லிப் போகாததால்
    எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. திண்டுக்கல் தனபாலன் //
    .
    எதுவாக இருந்தாலும் 'திருப்தி' இருந்தால் போதும்... ! சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்க//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. மோகன் குமார் //
    .
    Unmai thaan. Thodarnthu ezhuthuvom//

    நிச்சயமாக
    புலிவால் பிடித்த நாயர் கதையாய்
    தொடரவும் முடியவில்லை
    விடவும் முடியவில்லை
    அதனாலேயே தொடர்ந்து எழுதுவோம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் //

    அருமையான உணர்வுகளை அப்பட்டமாகச் சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. AROUNA SELVAME //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. சுந்தர்ஜி //
    .
    ஒன்றை உருவாக்குவதன் போதைதான் துவக்கம். மற்றவர்களுக்கு அந்த ச்ருஷ்டியால் உண்டாகும் ஆனந்தம்தான் முடிவு//

    கவிதை போல ஒரு அருமையான
    பின்னூட்டம் தந்தமைக்கும்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  26. தி.தமிழ் இளங்கோ//.

    பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கும் வலைப் பதிவில் எழுதுவதற்கும் இடையே உள்ள ஒரு மனக்கிலேசம் இதுதான்.//

    வித்தியாசமான அருமையான
    பின்னூட்டம் கொடுத்து
    இது குறித்து இன்னமும் அதிகமாக
    சிந்திக்கச் செய்தமைக்கும்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. செய்தாலி //

    சிந்தனையில்
    ஊரும் நீரூற்றை
    மற்றவர்களுக்கும் பருக கொடுப்பது
    நல்லதும் நம்மையும் தானே சார்//


    கவிதை போல ஒரு அருமையான
    பின்னூட்டம் தந்தமைக்கும்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  28. Lakshmi //

    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. வரலாற்று சுவடுகள் //

    எழுதுறது ஒரு சிரங்கு மாதிரி., அது நம்மளை பிடிச்சிட்டா அவ்வளவு சுலபத்துல விடாது ரமணி//

    தங்கள் கருத்து மிகச் சரி
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  30. ஆடுன காலும், பாடுன வாயும் சொறி பிடிச்சவர் கையும் சும்மா இருந்தால் சொல்லுங்க!

    ReplyDelete
  31. நம்முடைய எழுத்து சமூகத்தை நேரான பாதையில் கொண்டு செல்ல முயற்ச்சிப்பதாக இருக்க வேண்டும். சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  32. துளசி கோபால் //

    ஆடுன காலும், பாடுன வாயும் சொறி பிடிச்சவர் கையும் சும்மா இருந்தால் சொல்லுங்க!

    தங்கள் கருத்து மிகச் சரி
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  33. சுவனப் பிரியன் //

    நம்முடைய எழுத்து சமூகத்தை நேரான பாதையில் கொண்டு செல்ல முயற்ச்சிப்பதாக இருக்க வேண்டும். சிறந்த பகிர்வு.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete