Wednesday, July 18, 2012

கற்றுக் கொண்டவை -துணைப்பதிவு2 (2)


ஆண்டவனுக்கு அருள்வோமா

அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நிலவைப் போல்
காற்றைப் போல்
சூரியக் கதிர்கள் போல்
அனைவருக்கும்
பொதுவாக இருப்பதே எளிது

தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
 தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே

நமக்காக இல்லையென்றாலும்
ஆண்டவனுக்காகவாவது
இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?
அவர்களது நிம்மதிக்காவாவது
இது குறித்து சிந்திக்கத் துவங்கி
மதம் விடுத்து மனிதனாகி
அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?

24 comments:

  1. சிந்தனையைத் தூண்டும் கவிதை!

    ReplyDelete
  2. இந்த தங்களின் மீள் பதிவும் மிக அருமையானது தான்.
    அனைவரையும் சிந்திக்கத்தூண்டுவது தான்.

    //இது குறித்து சிந்திக்கத் துவங்கி
    மதம் விடுத்து மனிதனாகி ஆண்டவனுக்கு நிம்மதி தர முயல்வோமா ?//

    சூப்பர் சார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. காலத்தின் தேவைக்குரியதும் கூட.

    “நிலவைப் போல்
    காற்றைப் போல்
    சூரியக் கதிர்கள் போல்
    அனைவருக்கும்
    பொதுவாக இருப்பதே எளிது”

    அருமை

    ReplyDelete
  4. ஆண்டவனுக்கே நிம்மதியா அது அவனுக்கே வெளிச்சம் தான் அய்யா

    ReplyDelete
  5. சிந்திக்க தூண்டும் படைப்பு (TM 3)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வித்தியாசமான கோணத்தில் மதங்கள் வேண்டாம்ன்னு சொல்லியிருக்கீங்க. நல்லதொரு படைப்பு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. நிலவைப் போல் காற்றைப் போல் சூரியக் கதிர்கள் போல் அனைவருக்கும்
    பொதுவாகத்தான் கடவுள் இருக்கிறார் ஆனால் நாம்தான் வேறுவேறு பெயர்களில் அவர்களை அழைக்கிறோம்

    ReplyDelete
  9. மதம் விடுத்து மனிதனாகி
    அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?

    திருடனாய் பார்த்து திருந்தாவிடில் திருட்டை ஒழிக்க
    முடியாது என்பதுபோல் மாற்று வழி ஒன்றில் மனிதரை திருந்தச் சொல்வதாக அமைந்துள்ள இக் கவிதையின் கோணம் மனத்தைக் கவர்ந்து நிற்கின்றது .அருமை!..தொடர் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  10. மதம் விடுத்து மனிதனாகி//
    என்மதம், உன் மதம் என்ற மதம் விடுத்து மனிதன் ஆவோம்.
    அருமை.

    ReplyDelete
  11. அருமையான சிந்தனைங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  12. மீள் பதிவாக இருந்தாலும்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    பகிர்வு...

    அருமை. வாழ்த்துகள். த.ம. 6

    ReplyDelete
  13. s suresh //

    சிந்தனையைத் தூண்டும் கவிதை!//

    தங்கள் முதல் வரவுக்கும்
    தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் //
    .
    இந்த தங்களின் மீள் பதிவும் மிக அருமையானது தான்.
    அனைவரையும் சிந்திக்கத்தூண்டுவது தான்//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  15. Gobinath //

    அருமையான பதிவு. காலத்தின் தேவைக்குரியதும் கூட.//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  16. சீனு //

    ஆண்டவனுக்கே நிம்மதியா அது அவனுக்கே வெளிச்சம் தான் அய்யா//

    தங்கள் உடன் வருகைக்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  17. வரலாற்று சுவடுகள் //

    சிந்திக்க தூண்டும் படைப்பு//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  18. ராஜி //
    .
    வித்தியாசமான கோணத்தில் மதங்கள் வேண்டாம்ன்னு சொல்லியிருக்கீங்க. நல்லதொரு படைப்பு. பகிர்வுக்கு நன்றி ஐயா.//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  19. Avargal Unmaigal //

    பொதுவாகத்தான் கடவுள் இருக்கிறார் ஆனால் நாம்தான் வேறுவேறு பெயர்களில் அவர்களை அழைக்கிறோம்//

    தங்கள் உடன் வருகைக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. அம்பாளடியாள்//

    இக் கவிதையின் கோணம் மனத்தைக் கவர்ந்து நிற்கின்றது .அருமை!..தொடர் வாழ்த்துக்கள் ஐயா//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  21. கோமதி அரசு //
    .
    மதம் விடுத்து மனிதனாகி//
    என்மதம், உன் மதம் என்ற மதம் விடுத்து மனிதன் ஆவோம்.அருமை.//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  22. AROUNA SELVAME //
    .
    அருமையான சிந்தனைங்க ரமணி ஐயா.//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் //
    .
    மீள் பதிவாக இருந்தாலும்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    பகிர்வு..//

    தங்கள் உடன் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete