Wednesday, July 18, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (3)

ஆடிக் காற்றுக்கு அம்மியே பறக்கிறது
என்பதைப்போல கவிஞர் வாலி அவர்களின்
பேச்சுக்கே இந்தக் கூட்டம் இத்தனை ரகளை
செய்கையில் எந்தத் தைரியத்தில் நடிகர்
கோபாலகிருஷ்ணன் அவர்கள் தைரியமாக
மேடை முன் வந்து மைக் பிடிக்கிறார்
என்கிற கேள்வி என்னுள் விஸ்வரூபம் எடுத்தது
அதற்கு இசைவாக கூட்டத்திலும் சப்தம்
கூடிக்கொண்டே போனது

நடிகர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடித்த
ஏறக்குறைய அத்தனை படங்களையும் நான்
பார்த்திருக்கிறேன் அதிகமாகஇரண்டாம் நிலை
நாயகனாகவும்,வில்லனுக்கு துணைபோகிற
நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்
.ஏ.வி.எம் ராஜன் அவர்களைப் போல
வித்தியாசமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு
அடித்தொண்டையில் ஒரேவிதமாகப்
பேசி  அவரையும் கஷ்டப்படுத்திக்
 கொண்டு நம்மையும் ரொம்பக் கஷ்டப்படுத்துவார்
எனவே அவர் குறித்து நல்ல அபிப்பிராயம்
இல்லாததால் அவர் முன் மேடைக்கு வந்து
மைக் பிடித்தது எனக்கும் கூட
ஏற்புடையதாக இல்லை

நடிகர் கோபாலகிருஷ்ணன் அவர்கள்
இந்த சலசலப்புக்கெல்லாம் சங்கடப்படுகிறவராகத்
தெரியவில்லை.அவர் கத்துபவர்களுக்கு மேலாக
தன் சப்தத்தை கூட்டிப் பேசத் துவங்கினார்

முதலில் தான் நடிகர் கோபாலகிருஷ்ணன் என
அறிமுகப்படுத்திக் கொண்டுதன்னைப் பற்றிப்
பேசத் துவங்கினார்

தானும் கல்லூரிக் காலங்களில் இதுபோன்று
நடந்துகொண்டதை நினைவு கூர்ந்த அவர்
தான் டபிள் எம்.ஏ  என்றும் அதில் ஒரு எம்..ஏ
ஆங்கில இலக்கியம் என்பதாலும்
சிறு வயது முதல் ஆங்கிலக்கல்வி முறையிலேயே
பயின்றதாலும் ஆங்கிலத்தில் பேசுகிற அளவு
சரளமாக தமிழில் பேசவராது என்பதாலும்
தன்னை ஆங்கிலத்திலேயே பேச ஒரு பத்து நிமிடம்
மட்டும் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டு
பேசத்துவங்கினார்

அவர் பேசப் பேச அவர் குரலில் இருந்த கம்பீரம்
ஆங்கில உச்சரிப்பு,அவர் கல்லூரி நாட்களில்
கல்லூரி மாணவர் தலைவராய் இருந்து செய்த
சாதனைகள்,இந்தியாவின் சிறந்த தலைவர்களை
கல்லூரிக்கு அழைத்து தான் நடத்திய கூட்டங்கள்
அதற்காகத் தான் பட்ட சிரமங்கள்
என அவருடைய கல்லூரி வாழ்வின்
நிகழ்வுகளை சாதனைகளைச் சொல்லிப் போக
சொல்லிப் போக ஒட்டு மொத்த கூட்டமும்
அதிர்ந்து போய் அமைதியாகிப் போனது

ஒரு மதம் பிடித்த யானை போல எங்கிருக்கிறோம்
என்ன செய்கிறோம் என அறியாது திசைத் தடுமாறிக்
கொண்டிருந்த அந்த மாணவர் கூட்டத்தை பத்து
நிமிடங்களின் அசையாது அமைதியாய்
கட்டிப் போட்டுவிட்டு"அப்படிபட்ட நான்
கவிஞர் வாலி அவர்களின் தமிழுக்கும்
தமிழ் புலமைக்கும் அடிமை அவரைப் பேசவிடாது
விருந்தினராக அழைத்து வந்து அவமதித்ததற்காக
நான் மிகவும் வருந்துகிறேன் "என முடித்த போது
ஒட்டு மொத்த கூட்டமும் தன் தவறுக்காக வருந்தியது
மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.கவிஞர் வாலி
அவர்களை பேசுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டது

பின் பேச வந்த கவிஞர் வாலி அவர்களின் பேச்சு
தடம் மாறாது தரம் மாறாது உண்மையான
இலக்கியத் தரமான பேச்சு எப்படி இருக்குமென
அனைவரும் அறியச் செய்து போனது
நாற்பதாண்டுக் காலமாகியும்
இன்றுவரை அதன் நினைவுகள் என்னைவிட்டு
அகலவே இல்லை

பொதுக்  கூட்டம் போல பலதரப்பட்ட மன நிலை
அல்லாத ஒரே மன நிலை கொண்ட
பார்வையாளர்களைக்கொண்ட மாணவர்களை---

கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
தன் திறமையான பேச்சால் மாணவர்களை
பல்வேறு உணர்வு நிலைக்குக்
தன்னிஷ்டப்படி கொண்டுபோய்
அலைக்கழித்த லாவகமும்---

எதிர் மன நிலையில் இருந்த மாணவர்களை
தன்னுடைய உணர்வுப்பூர்வமான பேச்சால்
கட்டி இழுத்து கரை சேர்த்த கோபாலகிருஷ்ணன்
அவர்களின் பேச்சுத் திறனும்--

சராசரி மன நிலையில் உன்னதங்களை
அறியாதிருந்த அந்தக் கூட்டத்திற்கு
தன்னுடைய கவித்துவமான பேச்சால்
அறியவும் உணரவும் வைத்த
கவிஞர் வாலி அவர்களின் பாண்டித்தியமும்--

அழகிய ஓவியங்களை வெறுமனே பார்த்து
அழகு என ரசித்துத் திரிந்த ஒருவனுக்கு
ஓவியக் கோடுகளின் நளின வளைவுகளின்
நேர்த்தியையும்,வண்ணங்களின் அர்த்தங்களையும்
புரியச் செய்தால் எப்படி இன்னும் சிறப்பாக
ரசிப்பானோ அதைப்போல---

பின்னாளில் தமிழகத்தின் தலைசிறந்த
பேச்சாளர்களின் பேச்சை மிகச் சரியாகக் கேட்டு
பூரணமாக ரசிக்கும் திறனையும்
மேடைப் பேச்சுக் குரிய மாபெரும் சக்தியினையும்
இந்த நிகழ்வுகள்தான்கற்றுக் கொடுத்தன என்பதை
இங்கு பதிவாகப் பதிவு செய்வது
 பெருமையாகத்தான் இருககிறது


24 comments:

  1. //அழகிய ஓவியங்களை வெறுமனே பார்த்து
    அழகு என ரசித்துத் திரிந்த ஒருவனுக்கு
    ஓவியக் கோடுகளின் நளின வளைவுகளின்
    நேர்த்தியையும்,வண்ணங்களின் அர்த்தங்களையும்
    புரியச் செய்தால் எப்படி இன்னும் சிறப்பாக
    ரசிப்பானோ அதைப்போல--//
    நீங்கள் கற்றுக்கொண்டவை அழகாக வெளிப்பட்டிருக்கிறது. கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  2. ayya !

    ilam thalai muraikal sinthikka vendiya vidayam!

    nantri!
    ayya!

    ReplyDelete
  3. அருமையா சொல்லி இருக்கீங்க..இதுவரைக்கும் நான் மேடை பேச்சு கேட்ட தில்லை..

    ReplyDelete
  4. தாங்கள் பதிவெழுதி வலையேற்றும் வேகத்தில் படித்து பின்னூட்டம் இடமுடியவில்லை..வேகம் ..வேகம்!

    பழைய சம்பவங்கள், அவற்றின் நினைவலைகள் என்றுமே இனிமையானவை!

    தொடரட்டும் உங்களது எழுத்துப்பணி!

    ReplyDelete
  5. இதுவரை நானும் மேடைப்பேச்செல்லாம் கேட்கும் வாய்ப்பு கிடைக்கலே. உங்க பதிவு அந்த வாய்ப்பை கொடுத்தது நன்றி

    ReplyDelete
  6. இது வாழ்க்கையின் பாடம்..
    அனுபவபப்பாடம் என்று அழிவில்லாதது...

    ReplyDelete
  7. கோபாலகிருஷ்ணன் ஹீரோவாகி விட்டார் இந்த பதிவில்

    ReplyDelete
  8. கோபாலகிருஷ்ணனின் நடிப்பைப் பற்றி நீங்கள் கூறியிருந்த கருத்து அருமை. நானும் இதே அலைவரிசையில் சிந்திப்பவன் என்பதால் மகிழ்ச்சி. மேடையை கையாண்டு கட்டுப்படுத்திய அவரின் பேச்சுத் திறனை உங்கள் மூலம் ரசித்ததில் நிறைவு.

    ReplyDelete
  9. வழக்கம் போல ஏற்ற இறக்கத்துடன் நயம்படச் சொல்லியுள்ளீர்கள் இன்றைக்கு டெல்லி கணேஷ் போல, அன்றைக்கு. நடிகர் கோபாலகிருஷ்ணன். அமைதியான நடிப்பினைக் கொண்டவர். ( இது மாதிரி செய்திகளை எழுதும் போது அவர்களது போட்டோவையும் பதிவில் சேர்க்கவும்) தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  10. //அழகிய ஓவியங்களை வெறுமனே பார்த்து
    அழகு என ரசித்துத் திரிந்த ஒருவனுக்கு
    ஓவியக் கோடுகளின் நளின வளைவுகளின்
    நேர்த்தியையும்,வண்ணங்களின் அர்த்தங்களையும்
    புரியச் செய்தால் எப்படி இன்னும் சிறப்பாக
    ரசிப்பானோ அதைப்போல---//

    மிகவும் பொருத்தமான அழகானதோர் உதாரணம்.
    நல்லதொரு பதிவு / பகிர்வு. பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  11. மேடையைக் கையாண்ட விதத்தில் அவர் நிமிர்ந்து நிற்கிறார்...

    ReplyDelete
  12. அழகிய ஓவியங்களை வெறுமனே பார்த்து
    அழகு என ரசித்துத் திரிந்த ஒருவனுக்கு
    ஓவியக் கோடுகளின் நளின வளைவுகளின்
    நேர்த்தியையும்,வண்ணங்களின் அர்த்தங்களையும்
    புரியச் செய்தால் எப்படி இன்னும் சிறப்பாக
    ரசிப்பானோ அதைப்போல---//

    அருமையான எடுத்துக்காட்டு.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.
    தமழ்மணநட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மேடைப்பேச்சில் அவர் அசத்தியது உங்கள் வரிகள் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  14. கவனிக்கவில்லை. நட்சத்திரவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. உங்களின் கருத்தோவியத்தின் வளைவுகளின் நேர்த்தியைக் கண்டு நான் மயங்கி நிற்கிறேன் ரமணி ஐயா.

    ReplyDelete
  16. அனுபவங்களின் வாயிலாய் கற்பது ஒரு வரம். அந்த வரத்தை உங்கள் வாயிலாய் நாங்களும் பெற்றோம். தவமின்றிப் பெறுகிறோம் என்பதில் கூடுதல் ஆனந்தம். நாற்பதாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும் நேற்றைய நிகழ்வினைப் போல் அழகாய் எடுத்தியம்பும் எழுத்துக்கும் உணர்வின் அற்புத வெளிப்பாட்டுக்கும் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  17. மிகச் சிறப்பான அனுபவத்தை சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  18. உங்கள் நல்லனுபவத்தினை நாங்களும் ரசிக்கும்படி பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    த.ம. 13

    ReplyDelete