Thursday, July 19, 2012

கற்றுக் கொண்டவை-துணைப் பதிவு (3) (1)

பதிவர் சக்தியறிவோம்

சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
சரக்கு இருக்கையிலே-வெட்டி
குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
ஞானம் இருக்கையிலே

வித்தை தெரிந்த பதிவர் இங்கே
நிறைய இருக்கிறோம்-எனவே
முத்தைப் போல மின்னும் பதிவு
நிறையப் பண்ணுவோம்

பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-மூத்த
பதிவர் இங்கு நிறைய இருக்க
புரிந்து  எழுதுவோம்

புதிய பதிவர் நிறைய எழுத
ஊக்கம் கொடுப்போம்-அவர்கள்
உரியமதிப்பை   எட்ட நாளும்
வாக்கும் அளிப்போம்

நொடியில் உலகை சுற்றும் வலிமை
பதிவுக்  கிருக்குது-எதையும்
எளிதாய் மாற்றும் சக்தி  வலிய
பதிவுக் கிருக்குது

எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க

சக்தி கூட சக்தி கூட
பொறுப்பும் கூடணும்-அந்த
ஸ்பைடர் மேனின் கருத்தை நாமும்
மனதில் கொள்ளணும்

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம்

24 comments:

  1. நல்ல கவிதை.பதிவர்களுக்காக ஒரு கவிதை இது புதுசு.

    ReplyDelete
  2. பதிவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தை கவிதையால் சொல்லிவிட்டீர்கள் அருமை..

    ReplyDelete
  3. போச்சி போங்க.....
    நினைத்ததை எல்லாம் தைரியமாக எழுதலாம் என்று தான் நான் வலை திறந்து எழுத ஆரம்பித்தேன்....ம்ம்ம்....

    இனி ரொம்ப ரொம்ப யோசிக்கனும் போல இருக்கு.
    நல்ல வழிகாட்டியமைக்கு மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  4. பதிவர் கையேடு என்று சொல்லி அனைத்து பதிவர்களுக்கும் அச்சிட்டே கொடுத்து விடலாம். அத்தனை நயத்தகு கருத்துக்கள். குறிப்பாக...எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம் நமக்கில்லை. அதனால் பொறுப்பாக எழுதுவோம் என்ற விஷயம். (கட்டிங் போட்டதையெல்லாம்கூட சிலர் எழுதறாங்க) வெகு அருமை.

    ReplyDelete
  5. //எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
    பதிவுக் கில்லேங்க-அதனால்
    பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
    புரிந்து கொள்வோங்க//

    இதை எல்லோரும் மனசில் வைக்கணும்.

    ReplyDelete
  6. // கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
    பதிவு எழுதுவோம் //
    மெய்தான். ஒரு பத்திரிக்கைக்கு எழுதும்போது அங்கே எடிட் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். இங்கே எல்லாமே நாம்தான். எனவே பொறுப்பு அதிகம்.

    ReplyDelete
  7. மிக அருமையான கருத்தை கவிதையாய் அழகாய் சொல்லியிருக்கீங்க அண்ணா

    ReplyDelete
  8. பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்புடனும் புரிதலுடனும் நடந்துகொண்டால் நமக்குள் சண்டை சச்சரவுகள், மனத்தாபங்களுக்கு இடமேது? மிகவும் தன்மையாய் மென்மையாய் அறிவுறுத்திய கவிதை. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  9. //பதிவர் நிறைய பெண்கள் இருக்க
    பண்பாய் எழுதுவோம்-//

    //எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
    பதிவுக் கில்லேங்க-அதனால்
    பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
    புரிந்து கொள்வோங்க//

    //கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
    பதிவு எழுதுவோம்-புதிய
    சக்தி யாக பதிவர் உலகை
    மாற்ற முயலுவோம்//

    மிகவும் அழகான வரிகளுடன் அசத்தலான கவிதை.
    மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. இது வெறுமனே கவிதையல்ல பதிவர்களுக்கான பாடம். புது வேதம். அருமை

    ReplyDelete
  11. எல்லா பதிவர்களும் படிக்க வேண்டிய பதிவைப்பற்றியான கவிதை சூப்பர் சார்....

    ....நொடியில் உலகை சுற்றும் வலிமை
    பதிவுக் கிருக்குது-எதையும்
    எளிதாய் மாற்றும் சக்தி வலிய
    பதிவுக் கிருக்குது....

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
  12. நல்ல கவிதை. எளிமையான கவிதை. பொருள் விளங்கும் கவிதை. பதிவர்களுக்கான கவிதை. பதிவரால் எழுதப் பட்ட கவிதை. நான் ரசித்துப் படித்த கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மூத்தோர் சொல்லும்
    முதுநெல்லிக்காயும்
    முன்னே கசக்கும்
    பின்னே இனிக்கும்!

    பதிவுலகினருக்கு
    தேவையான வழிகாட்டுதலுக்கு
    நன்றி உரைப்போம்!

    ReplyDelete
  14. பதிவருக்கு பதிவர் எழுதியகவிதை! அருமை!

    ReplyDelete
  15. கவிதை எழுதி கருத்தைச் சொல்லுவோம் - உங்கள்
    கருத்தையும் கவருவோம் என்று அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  16. மொக்கைப் பதிவர்களின்(நான் உட்பட) நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கீங்க சார்...அருமை... இது கவிதை என்பதைவிட அறிவுரைன்னு சொல்லலாம்.நன்றி சார்.

    ReplyDelete
  17. நல்ல விஷயத்தை நயம்பட உரைத்துள்ளீர்கள்!

    ReplyDelete
  18. ''..சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
    சரக்கு இருக்கையிலே-வெட்டி
    குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
    ஞானம் இருக்கையிலே...''

    திரும்பத் திரும்ப அடித்துக் கூறவேண்டும். எல்லோரும் காதில் எடுப்பார்களாக!.சொந்தச் சிந்தனைகளை நாம் கஷ்டப் பட்டு எழுதியும்.....!!!!!!
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. மிக அருமையான கவிதை. எல்லா பதிவர்களுக்கும் வேண்டிய பகிர்வு.

    த.ம. 11

    ReplyDelete
  20. சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
    சரக்கு இருக்கையிலே-வெட்டி
    குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
    ஞானம் இருக்கையிலே

    ReplyDelete