Thursday, July 19, 2012

கற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)

பருவம் தாண்டிப் பிறந்த காதல்

பருவம் தாண்டிப் பிறந்த காதல்
பாடாய்ப் படுத்துதடி-என்
வயதைத் தாண்டி வெளியே துள்ளி
வேதனைக் கொடுக்குதடி

பார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து
பாவனைக் காட்டுதடி-என்னைச்
சேர்த்து அணைத்துச  சொக்க வைத்து
சோதனை பண்ணுதடி

இரவில் எல்லாம் விழிக்க வைத்து
இம்சை பண்ணுதடி -பட்டப்
பகலில் கூட கனவில் லயித்து
கிறங்கச் சொல்லுதடி

கருவைக் கொடுத்து முதலில் என்னை
அருகில் அழைக்குதடி-பின்
உருவம் கொடுக்க அலைய விட்டு
வேதனைக் கூட்டுதடி

உறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து
உணர்வைக் கூட்டுதடி-அவர்கள்
உணர்வுப் பூர்வ பதிலைக் காட்டி
உயிரை உலுக்குதடி

நூறு இரண்டு  பதிவு கொடுத்தும்
வேகம் குறையலை யே -இரு
நூறு பதிவர் தொடரும் போதும்
தாகம் குறையலையே

பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே

21 comments:

  1. இது ஒரு தொடர் கதை... "மீண்டு எழுவது
    கனவில் சாத்தியமே" - உண்மை தான்...
    வாழ்த்துக்கள் சார் ... (த.ம. 2)

    ReplyDelete
  2. //பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
    அட்சய பாத்திரமே-அதற்கு
    அடிமை ஆனோர் மீண்டு எழுவது
    கனவில் சாத்தியமே//

    அழகான கவிதை. அனைத்தும் உண்மை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  3. நட்சத்திர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துகள். ரமணி ஐயா!.! அழகிய கவிதை ஐயா பதிவு எழுதுவதும் ஒரு சுகம் தான் நேரம் தான் கூடி வரணும்!ம்ம்

    ReplyDelete
  5. நலமா,ஐயா?
    நட்ச்சத்திர வாழ்த்துகள்

    ReplyDelete
  6. பருவம் தாண்டி வந்ததொன்றுமில்லையே?இப்பதானே பதிவுலகமே வந்தது? வைத்திருந்த காதலுக்கு வழி பிறந்ததிப்போது?

    ReplyDelete
  7. நான் சுட்டிக் காட்ட விழைந்த வரிகளை வை.கோ அவர்கள் சுட்டிக் காட்டிவிட்டார்கள்..அருமை அருமை..
    வாசித்தேன்..வாக்கிட்டேன்..

    ReplyDelete
  8. அருமையாக துவங்கி நச்சென்று முடித்துவிட்டீர்கள் (TM 6)

    ReplyDelete
  9. நல்ல உருவகம்! பின்னூட்டங்கள் எல்லாம் பதிவுப் பெண் பெற்ற குழந்தைகள்!

    ReplyDelete
  10. நல்ல நண்பர்களை அடைய பதிவுலகம் அளிக்கிறது நல்வாய்ப்பு! அதுதான் நம் எழுத்து தாகத்திற்கு வடிகால்!நம் எண்ணங்களை மற்றவருக்கு கொண்டு செல்லும் கருவி!

    இதுவும் ஒரு போதையே..இதுவும் கடந்து போகும்!

    ReplyDelete
  11. நூறு இரண்டு பதிவு கொடுத்தும்
    வேகம் குறையலை யே -இரு
    நூறு பதிவர் தொடரும் போதும்
    தாகம் குறையலையே

    பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
    அட்சய பாத்திரமே-அதற்கு
    அடிமை ஆனோர் மீண்டு எழுவது
    கனவில் சாத்தியமே

    மிகவும் அழகாகச் சொன்னீர்கள் அன்பரே..

    நல்ல எழுத்துகளால்
    நல்ல நண்பர்களைச் சம்பாதித்து
    நல்ல மதிப்பைப் பெற்ற நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. உங்களுடைய ஆத்மார்த்தமான வாழ்வியல் பதிவுகள் எங்களுக்கல்லவோ அட்சயப் பாத்திரம்! பதிவின் மீதான காதலைக் கலக்கலாய் பதிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  13. அழகு நிறைய எழுதிவிட்டீர்கள் ஒவ்வொன்றாய் படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  14. நட்கத்திரப் பதிவு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. நூறு இரண்டு பதிவு கொடுத்தும்
    வேகம் குறையலை யே -இரு
    நூறு பதிவர் தொடரும் போதும்
    தாகம் குறையலையே

    பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
    அட்சய பாத்திரமே-அதற்கு
    அடிமை ஆனோர் மீண்டு எழுவது
    கனவில் சாத்தியமே

    தாங்கள் எழுதும் எழுத்துக்களில்
    வாசகர்களுக்கும் அதிக மோகம்
    பெருகும்போது இந்தத் தவிப்பும்
    ஒருவகை சுகம்தானே!...தொடர
    வாழ்த்துக்கள் ஐயா.மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  16. உங்களின் அன்பு காதலியுடன்
    நீங்கள் என்றும் கொஞ்சி
    விளையாடி எங்களுக்கு
    கொஞ்ச குழந்தைகள்
    தந்தாலே கோடி இன்பம்... ரமணி ஐயா.

    ReplyDelete
  17. "பதிவுப்பெண்ணிவள்" மயங்கத்தான் வைக்கின்றாள்.

    ReplyDelete
  18. அட அட நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார். சூப்பர்

    ReplyDelete
  19. பதிவுலக கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. //பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
    அட்சய பாத்திரமே-அதற்கு
    அடிமை ஆனோர் மீண்டு எழுவது
    கனவில் சாத்தியமே//

    நல்ல கற்பனை... வாழ்த்துகள்.

    ReplyDelete