Friday, July 6, 2012

அம்மணமானவர்களின் ஊரில்.........


மந்தைகளாய்த் தொண்டர்கள் இருத்தலே
தான் தலைவானாகத் தொடர்வதற்கான
மிகச் சரியான தகுதியென்பதில்
தலைவர் மிகக் கவனமாய் இருந்தார்

அதுவரை எதிரியாயிருந்த அணியுடன்
கூட்டு சேரவேண்டிய அவசியம் குறித்து
அடுக்குமொழியில் மிக அழகாகக்
காரணங்களை  அவர் அடுக்கிப் போக
தொண்டர்கள் "அசந்தே" போயினர்

கரகோஷத்தை எதிர்பார்த்த தலைவருக்கு
அவர்களின் மௌனமான சம்மதம்
சங்கடமளிக்க, அதிர்ச்சியளிக்க,
புரியவில்லையோ என்கிற குழப்பத்தில்
கதை சொல்லி விளக்கத் துவங்கினார்

"நமக்கும் அவர்களுக்கும் இடையில்
கொள்கைகளில் கோட்பாடுகளில்
மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது\
அது குறையவில்லை
அதை நான் மறுக்கவுமில்லை
ஆனாலும் கூட
பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக
நாம் ஒன்று சேருவது என்பது
காலத்தின் கட்டாயம் "
என்ற முன்னுரையோடு
கதை சொல்லத் துவங்கினார் தலைவர்

"ஒரு கிராமத்து தோட்டத்தில்
செழித்து வளர்ந்திருந்தது ஒரு வாழைமரம்
அதன் அடியில் கிடந்தது ஒரு மண்ணாங்கட்டி
இருவரும் அருகருகே இருந்தும்
இருவரும் எதிரிகளைப் போலிருந்தனர்
ஒருவருக்கொருவர் உதவியாயில்லை
இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட
ஆதிக்க மனம் கொண்ட
காற்றும் மழையும் அவைகளை ஒழிக்கப் பார்த்தன
காற்றில் வாழை சாய்வது குறித்து
மண்ணாங்காட்டி கவலைகொள்ளவில்லை
மழையில் மண்ணாங்கட்டி கரைவது குறித்து
வாழையும்  வருத்தப்படவில்லை
அவைகள் அழிந்து கொண்டிருந்தன

அந்த சமயத்தில்தான் நம் போல
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அந்த வாழைக்கும் வந்தது

"மண்ணாங்கட்டி நாம் மிக அருகில் இருந்தும்
சிறு சிறு வேறுபாடுகளை பெரிதுபடுத்தி
மிக விலகிப்போய்விட்டோம்
அது இந்த ஆதிக்கக் காரர்களுக்கு
மிகுந்த வசதியாய் போய்விட்டது
இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது
காற்று பலமாக வீசினால் நீ என் மீது
சாய்ந்துகொள் நான் சாயமாட்டேன்
மழையெனில் நான் உன்னை மூடிக்கொள்கிறேன்
நீ கரையமாட்டாய்"  என்றது
அது போலவே நாமும் அவர்களும் ..." என
கதை சொல்லி முடிப்பதற்குள்
கரகோஷம் அரங்கத்தை அதிரச் செய்தது

மிகப் பெரிய கொள்கை விளக்கத்தை
ஒரு எளிய கதையில் சொல்லிய தலைவரின்
மதியூகத்தை எண்ணி தொண்டர்கள்
புளங்காகிதம் கொண்டனர்

தலைவர் பெருமையுடன் கூட்டத்தைப் பார்த்திருக்க
முன் வரிசையில் இருந்த தொண்டர் ஒருவர் எழுந்து
"தலைவா நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆனால் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால்
என்ன செய்வது ? " என்றான்

தலைவர் அதிர்ந்து போனார்
இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
இதனை வளர விடுவது ஆபத்து என்பது
அவருக்குப் புரிந்து போயிற்று
அவரது பழுத்த அரசியல் அறிவும்
உடன் கைகொடுத்தது

"கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலுகிற இவன்
நிச்சயம் நம் தொண்டனில்லை
எதிரிகளின் ஒற்றன்
இவனை அடித்து வெளியேற்றுங்க்கள் " என்றார்

வெறி பிடித்த கூட்டம் அந்த "முட்டாளை " நோக்கி
அதி வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தது


67 comments:

  1. "கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலுகிற இவன்
    நிச்சயம் நம் தொண்டனில்லை
    எதிரிகளின் ஒற்றன்
    இவனை அடித்து வெளியேற்றுங்க்கள் " ///////

    உண்மையான தொண்டர்களுக்கு தந்திரம் படைத்த அரசிய்ல வாதிகளால் நடப்பது இதுதான்..........

    ஆகவே யாரும் உண்மையான தொண்டனாக இருக்க முடியாது...:(

    ReplyDelete
  2. // பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக
    நாம் ஒன்று சேருவது என்பது
    காலத்தின் கட்டாயம் //

    பொது எதிரிகள் என்பவர்கள் மக்கள் தானே

    //மதியூகத்தை எண்ணி தொண்டர்கள்
    புளங்காகிதம் கொண்டனர்//

    இன்றைய அரசியல் நிலையை வெகு அழகாக கவிதை வடிவில் கொடுத்த விதம் அருமை

    தம 2

    ReplyDelete
  3. நிதர்சனம். சிந்திக்கத் தெரிந்தவனை அரசியல்வாதிகள் இப்படித்தான் கையாண்டுவிட்டு ஆட்டு மந்தைகளையே தம் அறிவால் பேச்சால் மயக்கி வைத்துள்ளனர். அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  4. மண்ணாங்கட்டியை கொண்டு சொல்ல வேண்டியதை தெளிவுபட சொல்லியுள்ளீர்கள் ஐயா...

    சில இடங்களில் இந்த சோல் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது... (கெட்டவார்த்தையாகவும் கூட)

    ReplyDelete
  5. அரசியலில் ஆட்டுமந்தைக்கூட்டமாக தலை ஆட்டிக்கொண்டிருந்தால் தான் இருக்கமுடியும் போல இருக்கு.

    ReplyDelete
  6. // தலைவர் அதிர்ந்து போனார்
    இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
    கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
    இதனை வளர விடுவது ஆபத்து என்பது
    அவருக்குப் புரிந்து போயிற்று//

    நாடு இன்றுள்ள உண்மை நிலை இதுதான்
    என்பதை தெளிவாக காட்டினீர்

    த ம ஓ 4

    சா இராமாநுசம்

    ReplyDelete
  7. //இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
    கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
    இதனை வளர விடுவது ஆபத்து என்பது
    அவருக்குப் புரிந்து போயிற்று
    அவரது பழுத்த அரசியல் அறிவும்
    உடன் கைகொடுத்தது//

    நாட்டு நடப்பை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளது அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. உண்மையை உங்கள் பாணியில் அழகாய் சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete
  9. மிக மிகச்சிறப்பான படைப்பு! உண்மையும் கூட!

    ReplyDelete
  10. சூப்பர். அழகான ஒரு கதையின் மூலம் நடப்பை படம் பிடிச்சுக் காட்டிட்டீங்க ஸார்... அசத்தல்.

    ReplyDelete
  11. உங்களின் குட்டிக்கதையும் அருமை! அதனூடே புகுந்து கேள்வி கேட்ட‌வனின் புத்தி கூர்மையும், அந்தக் கேள்வியை அதையும்விட புத்திசாலித்தனமாக உபயோகித்துக்கொன்ட தலைவனின் சாமர்த்தியமும் இன்றைய சுயநலமான அரசியலை தோலுரித்துக்காட்டிய உங்களின் சிந்தனை வரிகளும் அதையும் விட அருமை!! ‌

    ReplyDelete
  12. அருமையான பதிவு. அரசியல்வாதிகளின் குள்ளநரிப்புத்தியையும் அப்பாவித்தொண்டர்களின் அறியாமையையும் தெளிவாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  13. இதுபோன்றவர்களைத்தான் ராஜதந்திரி என்கிறார்கள்..
    அவர்கள் ஊதும் மகுடிக்கு நாமும்
    பெட்டிப்பாம்பாக ஆகித்தான் போனோம் நண்பரே...
    சிந்தனை அருமை...

    ReplyDelete
  14. haaa haaa!

    emaali makkalum!
    emaatrum thalaivanum!

    sonna kathaiyum!
    ethaartha nadaiyum-
    arumai!

    ReplyDelete
  15. //வெறி பிடித்த கூட்டம் அந்த "முட்டாளை " நோக்கி
    அதி வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தது//

    இன்றைய மதங்களும், பெரும் நிறுவனங்களும் கூட இதனைத் தான் செய்துக் கொண்டிருக்கின்றன !!!

    அருமையான கதை சகோ .. !!!

    ReplyDelete
  16. இந்த ஆட்டு மந்தைகள் நம்நாட்டில் மட்டுமல்ல.. அயல்நாட்டிலும் உண்டு! அந்த ஆட்டு மந்தைகளுக்கும் ஏதாவது ஒன்றை' அடைய வேண்டுமெனும் 'Hidden Agenda ' இருக்கும்!

    பதிவுகளில் வித்தியாசப் படுத்தும் தங்கள் வழி..தனி வழி!

    ReplyDelete
  17. நாட்டு நடப்பு. ஹூம்.!

    ReplyDelete
  18. ஆட்டுமந்தைகள் இருக்கும் வரை தலைவர்களுக்குக் கொண்டாட்டம் தான் என்பதை விளக்கமாகச் சொன்னது கவிதை.

    த.ம. 8

    ReplyDelete
  19. அரசியலில் ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே அறிவாளிகள். எதிர்த்து பேசியவன் நிச்சயம் முட்டாள்தான்.

    ReplyDelete
  20. சரியாக சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  21. அரசியலில் இதெல்லாம் சகஐமப்பா..

    ReplyDelete
  22. சும்மா ஒரு மாறுதலுக்கு எல்லாம் இல்லை.நிஜம்தான் இது.அவர்களது கையில் இருக்கும் கயிறாய் சுழற்றி விட சுற்று பம்பரமாக,தலையாட்டும் பொம்பயாக நாம் இருக்க வேண்டும் என்பதே இன்றைய நிலையாய் உள்ளது.நிதர்சன கவிதை.

    ReplyDelete
  23. க்விதை அல்ல நிஜங்களின் கதை

    ReplyDelete
  24. அரசியல் சூத்திரதாரிகளின் மெய்முகங்களைக் கவிதையிலும், கவிதைக்குள் கதையிலும், கதைக்குள் கருவிலும் பதிவு செய்து பொதுஜனத்துக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் உங்கள் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. மனங்கவர்ந்த படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  25. இப்படிப் பட்ட பேச்சுத் திறமையும், மரமண்டைத் தொண்டர்களும் இல்லாவிடில் இத்தனை காலம்
    ஓட்டமுடியுமா?ஆனார் எத்தனைகாலம்தான் ஏமாற்ற முடியும் இந்த நாட்டிலே?
    நல்ல உறைக்கும் பதிவு. வாழ்த்துக்கள் தொடர.

    ReplyDelete
  26. இதனை வளர விடுவது ஆபத்து என்பது
    அவருக்குப் புரிந்து போயிற்று.

    எல்லோருக்கும் புரிந்தால் நன்றாக இருக்கும் . நாடும் செழிக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  27. ரமணி ஐயா....

    குட்டக் குட்டக் குனிந்து
    கூன் விழுந்து போயாயிற்று....
    அதை நிமிர்த்த
    கைத்தடி கொடுக்கிறீர்கள்
    முயற்சித்தவன் முதுகெலும்பு நிமிரும்.
    முண்டங்கள்....???

    அருமையான பதிவு ஐயா... ஒவ்வொரு முறையும்
    உங்களின் கருத்தின் ஆழத்தைக் கண்டு வியக்கிறேன்.
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  28. நிஜத்தில் நடப்பதை கவிதையில் விழிக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  29. சகோ நீண்ட இடைவேளை பிறகு மீண்டும் நான் ...
    வாங்களேன் உங்க அளவிற்கு முடியாது ,நம்ம கிறுக்கல் தான்
    http://tamilyaz.blogspot.com/2012/07/my-brothers-pain.html

    ReplyDelete
  30. நாட்டு நடப்பை சரியாக சொல்லி விட்டீர்கள் ரமணி சார்...

    ReplyDelete
  31. வாழை, மண்ணாக்கட்டி கதை அருமை.
    ஆமாம் சாமி போடும் கூட்டங்கள் தான் தலைவர்களுக்கு வேண்டும்.

    தொண்டர்கள் விழித்துக் கொண்டால் தலைவர்களுக்கு ஆபத்து.
    இதை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  32. சிட்டுக்குருவி//

    .உண்மையான தொண்டர்களுக்கு தந்திரம் படைத்த அரசிய்ல வாதிகளால் நடப்பது இதுதான்...//

    முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. சீனு //

    இன்றைய அரசியல் நிலையை வெகு அழகாக கவிதை வடிவில் கொடுத்த விதம் அருமை /

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  34. பால கணேஷ்//
    ..
    நிதர்சனம். சிந்திக்கத் தெரிந்தவனை அரசியல்வாதிகள் இப்படித்தான் கையாண்டுவிட்டு ஆட்டு மந்தைகளையே தம் அறிவால் பேச்சால் மயக்கி வைத்துள்ளனர். அருமையாகச் சொன்னீர்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. ♔ம.தி.சுதா♔//

    மண்ணாங்கட்டியை கொண்டு சொல்ல வேண்டியதை தெளிவுபட சொல்லியுள்ளீர்கள் ஐயா...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  36. Lakshmi //



    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  37. புலவர் சா இராமாநுசம்//

    நாடு இன்றுள்ள உண்மை நிலை இதுதான்
    என்பதை தெளிவாக காட்டினீர்//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன்//.

    நாட்டு நடப்பை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளது அருமை. பாராட்டுக்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  39. மனசாட்சி™ //

    உண்மையை உங்கள் பாணியில் அழகாய் சொல்லி உள்ளீர்கள்//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  40. வரலாற்று சுவடுகள்//

    தங்கள் வரவுக்கும் வாக்கிற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. s suresh //
    .
    மிக மிகச்சிறப்பான படைப்பு! உண்மையும் கூட!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  42. நிரஞ்சனா //
    .
    சூப்பர். அழகான ஒரு கதையின் மூலம் நடப்பை படம் பிடிச்சுக் காட்டிட்டீங்க ஸார்... அசத்தல்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/.

    ReplyDelete
  43. மனோ சாமிநாதன்//.

    தலைவனின் சாமர்த்தியமும் இன்றைய சுயநலமான அரசியலை தோலுரித்துக்காட்டிய உங்களின் சிந்தனை வரிகளும் அதையும் விட அருமை!!//

    ‌தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. Gobinath //

    அருமையான பதிவு. அரசியல்வாதிகளின் குள்ளநரிப்புத்தியையும் அப்பாவித்தொண்டர்களின் அறியாமையையும் தெளிவாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. மகேந்திரன் //
    ..
    இதுபோன்றவர்களைத்தான் ராஜதந்திரி என்கிறார்கள்..
    அவர்கள் ஊதும் மகுடிக்கு நாமும்
    பெட்டிப்பாம்பாக ஆகித்தான் போனோம் நண்பரே...
    சிந்தனை அருமை...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. Seeni //

    sonna kathaiyum!
    ethaartha nadaiyum-
    arumai!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/.

    ReplyDelete
  47. இக்பால் செல்வன் //

    இன்றைய மதங்களும், பெரும் நிறுவனங்களும் கூட இதனைத் தான் செய்துக் கொண்டிருக்கின்றன !!!
    அருமையான கதை சகோ ..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. ரமேஷ் வெங்கடபதி//

    பதிவுகளில் வித்தியாசப் படுத்தும் தங்கள் வழி..தனி வழி!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/.

    ReplyDelete
  49. G.M Balasubramaniam \

    ///
    நாட்டு நடப்பு.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  50. வெங்கட் நாகராஜ் /
    /.
    ஆட்டுமந்தைகள் இருக்கும் வரை தலைவர்களுக்குக் கொண்டாட்டம் தான் என்பதை விளக்கமாகச் சொன்னது கவிதை.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. திண்டுக்கல் தனபாலன் //
    .
    நல்லதொரு சிந்தனை பகிர்வு சார் ! நன்றி //

    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/.

    ReplyDelete
  52. விச்சு //
    .
    அரசியலில் ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே அறிவாளிகள். எதிர்த்து பேசியவன் நிச்சயம் முட்டாள்தான்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. ஸாதிகா //

    சரியாக சொல்லி விட்டீர்கள்.//


    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/.

    ReplyDelete
  54. தீபிகா(Theepika) //
    .
    அரசியலில் இதெல்லாம் சகஐமப்பா.//.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. விமலன் //


    நிதர்சன கவிதை.//

    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  56. ரிஷபன்//

    க்விதை அல்ல நிஜங்களின் கதை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. கீதமஞ்சரி //

    அரசியல் சூத்திரதாரிகளின் மெய்முகங்களைக் கவிதையிலும், கவிதைக்குள் கதையிலும், கதைக்குள் கருவிலும் பதிவு செய்து பொதுஜனத்துக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் உங்கள் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. மனங்கவர்ந்த படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. radhakrishnan //..

    நல்ல உறைக்கும் பதிவு. வாழ்த்துக்கள் தொடர.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. Sasi Kala//


    எல்லோருக்கும் புரிந்தால் நன்றாக இருக்கும் . நாடும் செழிக்கும் நன்றி ஐயா.//

    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  60. AROUNA SELVAME //


    அருமையான பதிவு ஐயா... ஒவ்வொரு முறையும்
    உங்களின் கருத்தின் ஆழத்தைக் கண்டு வியக்கிறேன்.
    நன்றிங்க ஐயா.//

    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  61. மாதேவி //

    நிஜத்தில் நடப்பதை கவிதையில் விழிக்க வைத்துவிட்டீர்கள்//.

    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  62. ரியாஸ் அஹமது//

    வாங்களேன் உங்க அளவிற்கு முடியாது ,நம்ம கிறுக்கல் தான் //

    உற்சாகப்படுத்துவதற்காக சொல்வதைப்
    புரிந்து கொண்டேன்.சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை
    தங்கள் தரமான பதிவுகளைத் தொடர்வதில்
    எப்போதும் பெருமிதம் கொள்பவன் நான்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  63. ரெவெரி //
    .
    நாட்டு நடப்பை சரியாக சொல்லி விட்டீர்கள் ரமணி சார்...//


    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  64. கோமதி அரசு ///


    தொண்டர்கள் விழித்துக் கொண்டால் தலைவர்களுக்கு ஆபத்து.இதை அழகாய் சொல்லி விட்டீர்கள்//



    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கருத்துடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி
    .

    ReplyDelete