Saturday, August 11, 2012

சிற்பியும் கல்கொத்தியும்

குளங்களில் கண்மாயில்
விளைந்து கிடக்கிற
வளமான களிமண்ணெடுத்து
கையில் இருக்கிற அச்சினில்
திணித்துத் திணித்து எடுக்கிறேன்
கண்ணனும் சிவனும்
சதுர்த்திப் பிள்ளையாரும்
பொம்மைகளாய்
என் எதிரில் பிறந்துப் பெருகுகிறார்கள்

ஆயினும் வீட்டில்
எப்போதும் பூசைக்கு
என் பேரன் கைகளால் பிசைந்து
அரை நாள் செலவ்ழித்து
மீண்டும் மீண்டும் திருத்திப்
பிள்ளையாரைப் போலச  செய்திருக்கிற
விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

பிள்ளையர்ர் கூட
அதில் கு டியிருக்கத்தான்
விருப்பப்படுவார்ப்  போலப் படுகிறது
 எனக்கு

60 comments:

  1. அருமை...

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று தானே...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  2. கைகளால் பிசைந்து
    அரை நாள் செலவ்ழித்து
    மீண்டும் மீண்டும் திருத்திப்
    பிள்ளையாரைப் போலச செய்திருக்கிற
    விக்ரகம் தரும் நிறைவு திருத்தமாகச்செய்த அச்சில் குடியேறுமா என்ன !

    அழகான படைப்புக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  4. நல்ல ரசனையான கவிதை சார்... குழந்தையின் படைப்பில் இறைவனைக் காணும் கவி அழகு

    ReplyDelete
  5. குழந்தைகளுக்கு பிடித்தவராயிற்றே பிள்ளையார். அவர்கள் பிடித்த பிள்ளையார்தானே அவருக்குப் பிடிக்கும்.

    ReplyDelete
  6. வழித் தோன்றலர் கைப் பக்குவம் அமிழ்தினும் இனிது..யாழினும் இனிது..!வள்ளுவன் வாக்கே மெய்!

    நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல கவிதை.வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. சிற்பியின் வார்ப்புகளில் அடுத்தவர்களின் தெய்வங்கள். அவனது பேரனின் வார்ப்பில் இவனது தெய்வம். படைப்பின் ரகசியம்.

    ReplyDelete
  9. கடவுளால் தானே கடவுளை வடிவப்படுத்தமுடியும்..

    பூமியப் படைச்சது சாமியா?
    சாமியப் படைச்சது பூமியா?

    என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
    சாமியப் படைச்சது பூமிதான்..

    ReplyDelete
  10. அருமை அருமை. தத்துவமும், வாழ்க்கையின் நிதர்சனமும், மழலையின் மகத்துவமும் சொல்லும் அற்புத படைப்பு. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  11. சார் குழந்தைகள் எனக்கும் மிக பிடிக்கும்

    உங்கள் வயது நாற்பது என நினைதொருக்கு " என் பேரன்" என்று நீங்கள் சொன்னது அதிர்ச்சியாய் இருக்கும் ! :)

    ReplyDelete
  12. இறைவன் நீக்கமற நிறைந்தவன்... அருமை அய்யா உங்கள் பதிவு

    ReplyDelete
  13. அருமை

    தங்களின் பல கவிதைகளைக்கு வாழ்த்து சொல்ல முடியாமல்
    போயிற்று.

    இந்த மறுமொழியின் வாயிலாக அத்தனைக்கும் வாழ்த்தினை விளம்புகிறேன்

    அன்புடன்

    திகழ்

    ReplyDelete
  14. குழந்தைகள் அலம்பிய உணவை அம்மாக்கள் அருவருப்பில்லாமல் உண்பதைக் கண்டிருக்கிறேன்.அதுதான் சுவை என்பார்கள்.அதுபோலத்தான் நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் ஐயா !

    ReplyDelete
  15. என் பேரன் கைகளால் பிசைந்து
    அரை நாள் செலவ்ழித்து
    மீண்டும் மீண்டும் திருத்திப்
    பிள்ளையாரைப் போலச செய்திருக்கிற
    விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

    பிள்ளையர்ர் கூட
    அதில் கு டியிருக்கத்தான்
    விருப்பப்படுவார்ப் போலப் படுகிறது
    எனக்கு//

    பேரன் செய்த பிள்ளையார் மிக சிறப்பு அல்லவா!

    இறைவனும் சிறு குழந்தையாக குழந்தைகளிடம் இருக்கத்தான் விரும்புவார்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  16. அதுதான் மனமொன்றி செய்வதன் மகத்துவம்,!

    ReplyDelete
  17. வித்தியாசமான பதிவு!
    யோசிக்கத் துாண்டிய பதிவு.

    கடவுள் என்றால் இப்படித்தான் இப்படித்தான் என்று கட்டுப்பாடுகளைத் திணித்து திணித்து பலபேருக்குச் சிறுவயதிலே பயமோ அல்லது வெறுப்போ வந்துவிடச் செய்தார்கள் பெற்றோரும் உற்றோரும்.

    நீங்கள் உங்கள் பேரன் செய்த சிலையைப் பெருமைப்படுத்தி திரு. குணா தமிழ் அவர்கள் சொன்னது போல் கடவுளுடன் குழந்தையையும் பெருமை படுத்துகிறீர்கள்.
    உயர்ந்த எண்ணம்! படித்தவர்கள் நிச்சயம் இதைப் பின்பற்றுவார்கள்.
    வணங்குகிறேன் ரமணி ஐயா.

    ReplyDelete
  18. மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்று கூறுவார்கள், செம்மையான,குழந்தை மனங்களில்தான் இறைவன் நிச்சயம் குடியிருக்க விரும்புவார்.அருமையான கவிதை

    ReplyDelete
  19. நம்பிக்கையே அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் சக்தி .
    நல்ல கருத்து சார்.

    ReplyDelete
  20. நிச்சயமாக குழந்தையின் படைப்பைத்தான் விரும்புவார். அருமை.

    ReplyDelete
  21. அருமை! சிறப்பான கவிதை!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    ReplyDelete
  22. குழந்தையால் நம்மை விட சிறப்பாய் செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
    என் பதிவைப் படித்து கருத்து கூறியமைக்கு நன்றி.

    ReplyDelete
  23. குட்டிக்கையில் பிறக்கிற அழகும்,பிறப்பும்,ஜனிக்கிற உருவத்திற்கும் தனி அழகுண்டுதான்.

    ReplyDelete
  24. அன்புதான் இறைவன்...
    உண்மை அன்பின் உருவம் குழந்தை..........

    அருமையான படைப்பு....

    ReplyDelete
  25. குழந்தையும்,தெய்வமும் ஒன்று என்ற பாடல் ஞாபகம் வருகிறது. அருமையான கவிதை. தொடருங்கள்.

    ReplyDelete
  26. தெய்வத்திற்கு, தெய்வத்திற்கு சமமான குழந்தையின் ஆராதனை தான் சரி!

    ReplyDelete
  27. திண்டுக்கல் தனபாலன்//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. இராஜராஜேஸ்வரி //

    கைகளால் பிசைந்து
    அரை நாள் செலவ்ழித்து
    மீண்டும் மீண்டும் திருத்திப்
    பிள்ளையாரைப் போலச செய்திருக்கிற
    விக்ரகம் தரும் நிறைவு திருத்தமாகச்செய்த அச்சில் குடியேறுமா என்ன !


    மனம் கவர்ந்த அருமையான
    மிகச் சரியான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. கலாநேசன்

    நல்லா இருக்குங்க..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. சீனு //

    நல்ல ரசனையான கவிதை சார்... குழந்தையின் படைப்பில் இறைவனைக் காணும் கவி அழகு//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. T.N.MURALIDHARAN //

    குழந்தைகளுக்கு பிடித்தவராயிற்றே பிள்ளையார். அவர்கள் பிடித்த பிள்ளையார்தானே அவருக்குப் பிடிக்கும்.//

    மனம் கவர்ந்த அருமையான
    பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. ரமேஷ் வெங்கடபதி //

    வழித் தோன்றலர் கைப் பக்குவம் அமிழ்தினும் இனிது..யாழினும் இனிது..!வள்ளுவன் வாக்கே மெய்!//

    மனம் கவர்ந்த அருமையான
    பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. Lakshmi //

    நல்ல கவிதை.வாழ்த்துகள்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. தி.தமிழ் இளங்கோ //

    சிற்பியின் வார்ப்புகளில் அடுத்தவர்களின் தெய்வங்கள். அவனது பேரனின் வார்ப்பில் இவனது தெய்வம். படைப்பின் ரகசியம்.//

    மனம் கவர்ந்த அருமையான
    மிகச் சரியான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. முனைவர்.இரா.குணசீலன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. துரைடேனியல் //

    அருமை அருமை. தத்துவமும், வாழ்க்கையின் நிதர்சனமும், மழலையின் மகத்துவமும் சொல்லும் அற்புத படைப்பு. வாழ்த்துக்கள் சார்!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. மோகன் குமார் //

    உங்கள் வயது நாற்பது என நினைதொருக்கு " என் பேரன்" என்று நீங்கள் சொன்னது அதிர்ச்சியாய் இருக்கும் ! :)

    மூத்த பதிவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால்
    வயதுக்குழப்படி வராது என நினைக்கிறேன்
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. Ayesha Farook //

    . அருமை அய்யா உங்கள் பதிவு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. திகழ் s//

    அருமை

    இந்த மறுமொழியின் வாயிலாக அத்தனைக்கும் வாழ்த்தினை விளம்புகிறேன்//

    தாங்கள் தொடர்வதற்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டம் அளித்து என்னை வாழ்த்தியமைக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஹேமா //


    மனம் கவர்ந்த அருமையான
    மிகச் சரியான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. கோமதி அரசு //

    இறைவனும் சிறு குழந்தையாக குழந்தைகளிடம் இருக்கத்தான் விரும்புவார்.
    கவிதை அருமை.//

    மனம் கவர்ந்த அருமையான
    மிகச் சரியான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. G.M Balasubramaniam//

    அதுதான் மனமொன்றி செய்வதன் மகத்துவம்,!//

    மிகச் சிறப்பாக செய்யப்பட்ட
    கடமையாகச் செய்யப்பட்டதைக்காட்டிலும்
    சுமாராகச் செய்யப்பட்ட ஈடுபாட்டுடன் செய்யப்பட்டதே
    சிறந்தது.பல சமயங்களில் இலக்கணபடி மிகச் சரியாக
    இருக்கிற கவிதைகளைவிட இலகணம் மற்ந்த
    கவிதைகள் சிறப்பாக இருப்பதைப்போல
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. AROUNA SELVAME //

    வித்தியாசமான பதிவு!
    யோசிக்கத் துாண்டிய பதிவு.

    கடவுள் என்றால் இப்படித்தான் இப்படித்தான் என்று கட்டுப்பாடுகளைத் திணித்து திணித்து பலபேருக்குச் சிறுவயதிலே பயமோ அல்லது வெறுப்போ வந்துவிடச் செய்தார்கள் பெற்றோரும் உற்றோரும்.

    நீங்கள் உங்கள் பேரன் செய்த சிலையைப் பெருமைப்படுத்தி திரு. குணா தமிழ் அவர்கள் சொன்னது போல் கடவுளுடன் குழந்தையையும் பெருமை படுத்துகிறீர்கள்.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கரந்தை ஜெயக்குமார் //

    செம்மையான,குழந்தை மனங்களில்தான் இறைவன் நிச்சயம் குடியிருக்க விரும்புவார்.அருமையான கவிதை //


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. ஸ்ரவாணி

    நம்பிக்கையே அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் சக்தி நல்ல கருத்து சார்.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. மாதேவி //

    நிச்சயமாக குழந்தையின் படைப்பைத்தான் விரும்புவார். அருமை.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. s suresh //

    அருமை! சிறப்பான கவிதை!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. விமலன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. இடி முழக்கம் //

    அன்புதான் இறைவன்...
    உண்மை அன்பின் உருவம் குழந்தை
    அருமையான படைப்பு...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. ஆஹா! அருமையான கவிதை!

    ReplyDelete
  52. கே. பி. ஜனா... //

    ஆஹா! அருமையான கவிதை!


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. சிற்பியும் கல்கொத்தியும் என்று எத்தனை அருமையான தலைப்பிட்டு படைப்பின் ஆழத்தை உணர்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  54. கீதமஞ்சரி //

    சிற்பியும் கல்கொத்தியும் என்று எத்தனை அருமையான தலைப்பிட்டு படைப்பின் ஆழத்தை உணர்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.//

    மரபுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும்
    உள்ள வித்தியாசத்தை வித்தியாசமாக
    சொல்ல நினைத்தேன்
    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. பேரனென்றால் கொள்ளைப் பிரியம் அது தான்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  56. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. வெங்கட் நாகராஜ்//
    .
    இனிய கவிதை//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete