Sunday, August 12, 2012

வட்டம் ஞானத்தின் சின்னமே

சராசரியாக இருப்பதில்
எரிச்சல் கொண்டு
மீறத் துவங்குகையில்தான்
வட்டத்தின்
முதற்புள்ளி வைக்கப்ப டுகிறது
அவனும் வாழத் துவங்குகிறான்

 வாழ்வைக் கூர்ந்து நோக்குதலும்
தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதலுமே
வட்டத்திற்கான கோட்டை
வளர்த்துப் போகிறது
அவனும் வளரத் துவங்குகிறான்

கண்டதை புரிந்ததை
தன்னில் புதைத்துக்கொள்ளாது
பகிர்தலைப் பற்றி
அறியத் துவங்குகையில்தான்
வட்டம் மிக லேசாக வளைந்து
வடிவம் கொள்ளத் துவங்குகிறது
அவனும் நிமிறத் துவங்குகிறான்

பகிர்தலின் பரிமானங்களைப்
புரிந்து கொண்டவன்
பகிரத் தக்கவைகளைப்
புரிந்து கொள்கையில்தான்
வட்டம் ஆரம்பப் புள்ளியை நோக்கி
மெல்ல நகரத் துவங்குகிறது
அவனும் முதிரத் துவங்குகிறான்

மிகத் தெளிவாகப் பகிரவும்
பகிரத் தக்கவைகள் குறித்த முதிர்ச்சியும்
முழுமையாக அறிந்தவனுக்கு
 "அனைவரும் அனுபவித்து அறியட்டுமே
நாம் ஏன் குழப்பவேண்டும் " என்கிற  எண்ணம்
அடி மனதில் உதயமாக
வட்டம் முழுமையடையத் துவங்குகிறது
அவனும் ஞானம் பெறத் துவங்குகிறான் 

28 comments:

  1. வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி... இதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்...அருமை ஐயா...

    ReplyDelete
  2. அழகிய சிந்தனை .தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  3. அழகான வரிகளில் கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள். த. ம. 2

    ReplyDelete
  4. சராசரியாக இருப்பதில்
    எரிச்சல் கொண்டு
    மீறத் துவங்குகையில்தான்
    வட்டத்தின்
    முதற்புள்ளி வைக்கப்ப டுகிறது
    அவனும் வாழத் துவங்குகிறான்

    ஆரம்பமே யோசிக்க வைக்கிறது..

    ReplyDelete
  5. ஆமாம் ஒளிவட்டம் மின்னுவது உண்மை ரமணி சார் !

    ReplyDelete
  6. தெளிவான சிந்தனை ரமணி சார்.

    ReplyDelete
  7. புள்ளிகள் கோலமாகி கோலங்கள் காலத்தின் கையில் சிக்கி காலம் காலமாய் பாடிக்கொண்டிருக்கும் பாடலே வாழ்க்கை. உருமாறும் வழிமாறும் ஆனால் மனம் எப்பொழுதும் வாழ்வையும் தாழ்வையும் மட்டும் எண்ணும் காலச்சக்கரத்தில் நாமும் அங்கமாக.

    ReplyDelete
  8. ///கண்டதை புரிந்ததை
    தன்னில் புதைத்துக்கொள்ளாது
    பகிர்தலைப் பற்றி
    அறியத் துவங்குகையில்தான்
    வட்டம் மிக லேசாக வளைந்து
    வடிவம் கொள்ளத் துவங்குகிறது
    அவனும் நிமிறத் துவங்குகிறான்///

    அருமையான வரிகள் ஐயா (TM 4)

    ReplyDelete
  9. ம்ம்ம் ...வட்டம்
    நேர்த்தியாக சொல்லபட்டு இருக்கிறது சார்

    ReplyDelete
  10. /// "அனைவரும் அனுபவித்து அறியட்டுமே
    நாம் ஏன் குழப்பவேண்டும் " என்கிற எண்ணம்
    அடி மனதில் உதயமாக
    வட்டம் முழுமையடையத் துவங்குகிறது
    அவனும் ஞானம் பெறத் துவங்குகிறான் ///

    100 % உண்மை...

    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 7)

    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete

  11. வழகுக்கம் போல சிந்தனை வட்டம் அருமையாக
    சூழல்கிறது வாழ்த்துக்கள்!


    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. வட்டக்கவிதை மனதில் வட்டம் போட்டுக்கொண்டது! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

    ReplyDelete
  13. மிகத் தெளிவாகப் பகிரவும்
    பகிரத் தக்கவைகள் குறித்த முதிர்ச்சியும்
    முழுமையாக அறிந்தவன் முழுமையாக்கிய வட்டம் வாழ்க்கைத்துவம்.. பாராட்டுக்கள் !

    ReplyDelete
  14. மனித மனதின் வளர்ச்சியையும், முதிர்ச்சியும் தாங்கள் சொன்ன விதம் என்னுள் மிக அழுத்தமாக பதிந்துவிட்டது சார்! காரணம் நானும் தாங்கள் குறிப்பிட்ட வட்டத்தின் எதோ ஒரு புள்ளியில் நிர்ப்பதாய் உணர்ந்ததாலோ என்னவோ? ஆழமாக யோசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி Sir!

    ReplyDelete
  15. வட்டத்தை கொண்டு விளக்கிய தத்துவங்கள் அழகு.

    ReplyDelete
  16. மனித மனதின் வளர்ச்சியையும், முதிர்ச்சியும் தாங்கள் சொன்ன விதம் என்னுள் மிக அழுத்தமாக பதிந்துவிட்டது சார்! காரணம் நானும் தாங்கள் குறிப்பிட்ட வட்டத்தின் எதோ ஒரு புள்ளியில் நிர்ப்பதாய் உணர்ந்ததாலோ என்னவோ? ஆழமாக யோசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி Sir!

    ReplyDelete
  17. அழகாக இருக்கிறது வித்தியாசமான சிந்தனையும் கூட..... (த.ம 11)

    ReplyDelete
  18. நன்றாக உள்ளது

    ReplyDelete
  19. வட்டம் திட்டவட்டமான ஞானத்தைச் சொல்வது போல் கவிதை அமைத்த விதம் அருமை ஐயா...
    த.ம 12

    ReplyDelete
  20. வட்டத்தின் முழுமையும்,ஒழுங்கும் ஞானத்தின் குறியீடோ!.அவ்வட்டமே ஞானியின் ஒளி வட்டமாய்!
    அருமை.
    த.ம.13

    ReplyDelete
  21. வட்டத்துக்குள் வேறொரு பரிமாணம்

    ReplyDelete
  22. வட்டம் போடத்தொடங்கி முடியும் நுனி தொடமுன்னரே வாழ்வு முடிந்துவிடுகிறது சிலசமயங்களில்.ஞான ஒளிதரும் வரிகள் !

    ReplyDelete
  23. அப்ப...பூஜியத்துக்குள்ளேதான் மனிதனின் ராஜ்ஜியம்!

    ReplyDelete
  24. என் ஞானத்தின் சின்னம் மிகச்சிறிய வட்டம் தான்!!!

    உங்களின் பிரமாண்டமான வட்டத்தைக் கண்டு பிரமிக்கிறேன் ரமணி ஐயா.
    நன்றி்.

    ReplyDelete
  25. வட்டத்திற்குள் வாழ்க்கை... என்ன ஒரு தத்துவம்.... அருமையாகச் சொன்ன உங்களுக்கு ஒரு பூங்கொத்து!

    த.ம. 15

    ReplyDelete