Tuesday, August 14, 2012

திரிசங்கு நரகம்

செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும்                        சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது

வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும்                        நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது

எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
 பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி  ஏங்கியே தேய்கிறது
கௌசிக  மனம் தானே  படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று  வாழ்ந்தே சாகிறது

62 comments:

  1. நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாய்ச் சொல்லும் கவிதை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. மத்திமரின் நிலையை விளக்கும் நல்ல கவிதை.

    ReplyDelete
  3. Money can buy everything , except good-health and peace of mind....Mawley.

    ReplyDelete
  4. நடுத்தர மக்கள் இதைப் புரிந்து கொண்டால்
    வாழ்வு சொர்க்கம் தான். அழகான பதிவு .

    ReplyDelete
  5. எப்படி முயன்றும்
    முடியாமையால்
    முன்னவர்போல்
    சுகத்தில் நிலைக்க இயலாமலும்
    ஒருபடி இறங்க
    இயலாமையால்
    பின்னவர்போல்
    நலத்தை சுகிக்க முடியாமலும்
    பாவம் மத்திமரின்
    உடலும் மனமும் மட்டும்
    நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
    கௌசிக மனம் படைத்த
    திரிசங்கு நரகத்தில்
    நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது

    முற்றிலும் உண்மை!...பகிர்வுக்கு நன்றி ஐயா .

    ReplyDelete
  6. சத்தியமான வார்த்தைகள் குரு....வாசித்து கண் கலங்கியது...!

    ReplyDelete
  7. திரிசங்கு சொர்க்கம் போல் இருந்தாலும்
    பயந்து பயந்து வாழ்வதால் நரகம்தான் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    எப்படிங்க உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது!!
    வணங்குகிறேன் ரமணி ஐயா.

    ReplyDelete
  8. திரிசங்கு சொர்க்கம் என்பது உண்மையில் திரிசங்கு நரகம் என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்.நற்பதிவு தந்ததற்கு நன்றி.ஐயா

    ReplyDelete
  9. தலைப்பே கவிதை. அருமை.
    கௌசிக மனம் என்றால் என்ன?

    ReplyDelete
  10. //திரிசங்கு நரகத்தில்
    நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது//

    திரிசங்கு நரகமா ? புதிதாக இருக்கிறது.
    :)

    ReplyDelete
  11. நடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!

    இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  12. நடுத்தர மக்களின் மன இயல்பை அருமையாக படம் பிடித்துக் காட்டி விட்டது கவிதை.
    மனதை கனக்க வைத்து விட்டது திரிசங்கு நரகம்.

    ReplyDelete

  13. அருமையான ஒப்புமை. திரிசங்கு நரகம். படித்து மகிழ்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!

    ReplyDelete
  15. பல உண்மையான கருத்துக்களை நச்சென்று சொல்லி உள்ளீர்கள்...நன்றி

    ReplyDelete
  16. இன்றைய சூழ்நிலையை மிகவும் அழகாக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர் உங்களின் உள்ளகருத்து போற்றப் படவேண்டியது பின்பற்றப் படவேண்டியது பாராட்டுகள் .

    ReplyDelete
  17. செல்வம்...
    கோடையை வாடையாக்கி
    வாடையை கோடையாக்கி
    வறுமை...
    கோடையை கோடையாகவும்
    வாடையை வாடையாகவுமே வைத்திருந்து//
    என்ன ஒரு அழகான விளக்கம்!

    ReplyDelete
  18. உண்மையை அழகுர கவிதையில் உரைத்திருப்பது நன்று.

    ReplyDelete
  19. மக்களின் நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. நடுத்தர மக்களின் வாழ்க்கையை படம் பிடித்த கவிதை! சிறப்பு!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
  22. சித்திரவீதிக்காரன் //

    நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாய்ச் சொல்லும் கவிதை. பகிர்விற்கு நன்றி.


    தங்கள் முதல் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. ராமலக்ஷ்மி //

    மத்திமரின் நிலையை விளக்கும் நல்ல கவிதை.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. இடி முழக்கம் //

    அருமை...தோழரே..//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. V Mawley

    தங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிஆனாலும் இப்போது பணத்தால் மட்டுமே
    எதனை வேண்டுமானாலும் வாங்கலாம்
    என்கிற சூழல் நிலவுவதுதான் அனைத்து
    பிரச்சனைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன்

    ReplyDelete
  26. ஸ்ரவாணி ..//.

    நடுத்தர மக்கள் இதைப் புரிந்து கொண்டால்
    வாழ்வு சொர்க்கம் தான். அழகான பதிவு .//


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. அம்பாளடியாள் //

    முற்றிலும் உண்மை!..//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. MANO நாஞ்சில் மனோ //

    சத்தியமான வார்த்தைகள் குரு....வாசித்து கண் கலங்கியது...!//


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. AROUNA SELVAME //

    திரிசங்கு சொர்க்கம் போல் இருந்தாலும்
    பயந்து பயந்து வாழ்வதால் நரகம்தான் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.//


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. Seeni //

    arumai!//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. நண்டு @நொரண்டு -ஈரோடு //


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. அ .கா . செய்தாலி //.

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. T.N.MURALIDHARAN //

    திரிசங்கு சொர்க்கம் என்பது உண்மையில் திரிசங்கு நரகம் என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்.நற்பதிவு தந்ததற்கு நன்றி.ஐயா//


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. மிகவும் எதார்த்தம் சார்! நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் சார்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. திரிசங்கு நரகம்.அழுத்தமாக எதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.தலைப்பு கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது சார்.

    ReplyDelete
  36. வறுமையைச் சுற்றி நடக்கும் திரிசங்கு நரகம் தெரிகிறது வரிகளில்.இனிய சுதந்திர வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete
  37. திண்டுக்கல் தனபாலன்

    அருமை.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. தி.தமிழ் இளங்கோ //

    நடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. கோமதி அரசு //

    நடுத்தர மக்களின் மன இயல்பை அருமையாக படம் பிடித்துக் காட்டி விட்டது கவிதை.
    மனதை கனக்க வைத்து விட்டது திரிசங்கு நரகம்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. G.M Balasubramaniam //


    அருமையான ஒப்புமை. திரிசங்கு நரகம். படித்து மகிழ்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

    அருமை//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. Lakshmi //

    நடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. NKS.ஹாஜா மைதீன் //

    பல உண்மையான கருத்துக்களை நச்சென்று சொல்லி உள்ளீர்கள்...நன்றி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. போளூர் தமிழ்ச் சங்கம் //

    இன்றைய சூழ்நிலையை மிகவும் அழகாக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர் உங்களின் உள்ளகருத்து போற்றப் படவேண்டியது பின்பற்றப் படவேண்டியது பாராட்டுகள் .//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கே. பி. ஜனா...//

    என்ன ஒரு அழகான விளக்கம்! //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. ஸாதிகா //

    உண்மையை அழகுர கவிதையில் உரைத்திருப்பது நன்று.//


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. மாதேவி //

    மக்களின் நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. s suresh //

    நடுத்தர மக்களின் வாழ்க்கையை படம் பிடித்த கவிதை! சிறப்பு!//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. யுவராணி தமிழரசன்

    மிகவும் எதார்த்தம் சார்! நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் சார்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. Murugeswari Rajavel //

    திரிசங்கு நரகம்.அழுத்தமாக எதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.தலைப்பு கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. ஹேமா //

    வறுமையைச் சுற்றி நடக்கும் திரிசங்கு நரகம் தெரிகிறது வரிகளில்.இனிய சுதந்திர வாழ்த்துகள் ஐயா //!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. அப்பாதுரை
    தலைப்பே கவிதை. அருமை.
    கௌசிக மனம் என்றால் என்ன?//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    அதிக செருக்கு கொண்ட மனம் என சொல்ல நினைத்து
    கௌசிகனை துணைக்கழைத்துள்ளேன்
    இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ?

    ReplyDelete
  53. கோவி.கண்ணன் //

    திரிசங்கு நரகமா ? புதிதாக இருக்கிறது.//

    திரிசங்கு மகாராஜாவுக்குஅந்தரத்தில் சொர்க்கம்
    மத்யமருக்கு செல்வருக்கும் ஏழைக்கும் இடையில்
    நரகமென சொல்ல முயன்றிருக்கிறேன்

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  54. //முன்னவர்போல்
    சுகத்தில் நிலைக்க இயலாமலும்
    ஒருபடி இறங்க
    இயலாமையால்
    பின்னவர்போல்
    நலத்தை சுகிக்க முடியாமலும்
    பாவம் மத்திமரின்
    உடலும் மனமும் மட்டும்
    நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
    கௌசிக மனம் தானே படைத்த
    திரிசங்கு நரகத்தில்
    நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது//

    நடுத்தர மக்களின் நிலை சொல்லும் உங்கள் கவிதை அருமை....

    த.ம. 12

    ReplyDelete

  55. வெங்கட் நாகராஜ் //

    நடுத்தர மக்களின் நிலை சொல்லும் உங்கள் கவிதை அருமை....//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete