Wednesday, August 8, 2012

பிரசவமும் படைப்பும்

."இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
 போகிற போக்கில் 
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.

 அவனுக்கு எப்படி புரியச் சொல்வது ?

 கொத்துகிற தூரத்தில் 
சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும் 

கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்

 என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக

 அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
 ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
 அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
 அவைகள் அடங்காது சீறிக் கொத்த

 ஒவ்வொரு கணமும்
 நான் நொந்து வீழ்வதும்
 ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும் 

எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
 சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளமென 
 உணர்வுகள் பொங்கிப் பெருக
சம  நிலை தடுமாறித தொலைய 

தலையணைக்குள் மெத்தையினை
 திணிக்கமுயலும் முட்டாளாய்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
 திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
 வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை 

எப்படி  விளக்கினால் அவனுக்குப் புரியும் ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
 கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
லைந்துகிடக்கும்  வார்த்தைகளை 
லாவகமாய் சேர்த்துக் காட்டும்
 பண்டித விளையாட்டா படைப்பு ?


இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
 இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
 இணைவாகச் சேரும் 
காலத்தையும் கணத்தையும்
 எது நிர்ணயம் செய்யக்கூடும்? 

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
 ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனை கலைத்துவிட்டுப் போவதும்

 எங்கோ தலைதெறிக்கப் போகும்
 ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும் 

விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
 இணைகிற இணைப்பு வீணாகிப்போக
 வேண்டா வெறுப்பாக புணரும் நாளில்
 கரு தங்கிச் சிரிப்பதையும்
விளக்கிச்சொன்னால்

ஒ ருவேளை அவன்
 புரிந்து கொள்ளக்  கூடுமோ ?

மீள்பதிவு 

74 comments:

  1. காலத்தையும் கணத்தையும்
    எது நிர்ணயம் செய்யக்கூடும்?

    எப்படி புரியச் சொல்வது ?

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். ஆழமான அர்த்தங்கள் கொண்டவை. அற்புதமான பதிவு.

    ReplyDelete
  3. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?"
    "கற்பனை வறண்டு போனதா ?" /// கூவச்சொன்னால் குயில் கூவுவதில்லை.

    ReplyDelete
  4. /// கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
    கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
    கலைந்துகிடக்கும் வார்த்தைகளை
    லாவகமாய் சேர்த்துக் காட்டும்
    பண்டித விளையாட்டா படைப்பு ? ///

    அருமை வரிகள்... வாழ்த்துக்கள்...

    மீள் பதிவு... படித்ததில்லை...
    நன்றி…(TM 2)

    ReplyDelete
  5. கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
    கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
    கலைந்துகிடக்கும் வார்த்தைகளை
    லாவகமாய் சேர்த்துக் காட்டும்
    பண்டித விளையாட்டா படைப்பு ?

    அருமை அன்பரே

    ReplyDelete
  6. எண்ணங்களின் வெளிப்பாடே எழுத்துக்களாய் உருவம் பெற்றிடும் போது எவரின் உந்(றுத்)துதலினாலும் ஏற்றமொரு தன்மையினைப் பெற்றிட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

    மீள்பதிவென காட்டிய வரிகளில் நயம் மிளிர்கிறது. சலிப்பில்லாத் தன்மையினையும் சறுக்காமல் தந்து விட்டன.

    நன்றி

    ReplyDelete
  7. தலையணைக்குள் மெத்தையினை
    திணிக்கமுயலும் முட்டாளாய்//

    த‌ங்க‌ முடியாதென‌/ தாங்க‌ முடியாதென‌//

    கேட்ப‌வ‌ர்க‌ளுக்கென்ன‌ ...?!

    கொந்த‌ளித்து பீறிடுகிற‌து ப‌டைத்த‌லின் அவ‌ஸ்தை.

    ReplyDelete
  8. உணர்வுகளை வார்த்தைக்குள்
    திணிக்க முயன்று தோற்கிற கணங்களை//
    என்ன இது!!! எப்படி கோர்க்கிறீர்கள் இவ்வார்த்தைகளை.... ஒவ்வொரு வரியும் அருமை.
    அனுபவித்து எழுதியுள்ளீர்கள். வாசிக்கின்ற போது மனசு ரசித்து உணர்ச்சி பிரவாகமெடுக்கிறது.
    எழுதுங்கள் இது போன்று இன்னும் நிறைய.....

    ReplyDelete
  9. ரமணி .........உங்கள் ஆதங்கம் இந்த சமூகத்தின் அவலத்தை படம்பிடித்து காட்டுகிறது

    வரி வரியாக சாட்டையில் அடித்து சென்று இருக்கிறீர்கள் ..........

    //அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
    ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
    அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
    அவைகள் அடங்காது சீறிக் கொத்த//

    எவ்வளவு முயன்றும் தலை தூக்கி நிற்கிறது அதன் சீற்றம் ..........

    முட்டி மோதி வெளிவந்தாலும் நடப்பது மட்டுமே நடக்கிறது

    நடக்காதது நடக்காது தான்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உயிரைக் கருவாக்கும் ரகசிய விசித்திரத்தை, இங்கு எண்ணத்தைப் படைப்பாக்கும் விசித்திர ரகசியத்தோடு ஒப்பிட்டு மிக அருமையாய் உண்மை உணரச் செய்திருக்கிறீர்கள். எத்தனைப் பெரிய, சிக்கலான விஷயங்களையும், ஏற்ற உவமைகளோடும், உதாரணங்களோடும் தெளிவாய் புலப்படுத்துவது தங்கள் தனித்திறன். அதைப் போற்றி வாழ்த்துகிறேன் ரமணி சார்.

    ReplyDelete
  11. பொதுவாக ஒரு கற்பனை தூண்டலை கரு எனக்குறிப்பிடுவது வழக்கம்..ஒரு 'கரு'விற்காக காத்திருக்கிறேன்.கிடைத்தால் விளாசிவிடுவேன் என்று பல கதாசிரியர்கள்,கவிஞர்கள் சொல்லக்கேட்டுள்ளோம்..அதை தெள்ளத்தெளிவாக விளக்குவது உங்களின் இந்த பதிவு. அதுவும்,
    //விரதங்களும் வேண்டுதல்களும்
    வேண்டிய மட்டும் செய்துமுடித்து
    இணைகிற இணைப்பு வீணாகிப்போக
    வேண்டா வெறுப்பாக புணரும் நாளில்
    கரு தங்கிச் சிரிப்பதையும்//
    என்ற வரிகள்..அற்புதம்..
    ரமணி ஸார் ...YOU ROCK!

    ReplyDelete
  12. மீ. ப வாக இருந்தாலும் அது நெஞ்சத்தின்
    மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் மீட்டுத் தரும்
    பதிவாகவே உள்ளதினால் நீங்கள் ஒரு சி . ப
    [ சிறந்த பதிவர் ] ரமணி சார்.

    ReplyDelete
  13. அழுத்தமான பதிவு.அழைப்பிதழ் வெளியிடுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்..நன்றி..

    ReplyDelete
  14. அருமையான பதிவு..

    ReplyDelete
  15. நல்ல பதிவு ஐயா! (TM 8)

    ReplyDelete
  16. உங்கள் பேனாவின் முனை வடித்து முடிப்பதற்குள் வரிசையாய் வந்து விழுந்த உங்கள் வார்த்தைகளை என்னவென்று சொல்வது? ” கொப்பளிக்கும் கவிதை”

    ReplyDelete
  17. தலையணைக்குள் மெத்தையினை
    திணிக்கமுயலும் முட்டாளாய்
    உண்ர்வுகளை வார்த்தைக்குள்
    திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
    வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை ..

    ஒவ்வொரு எழுத்தாளரின் நிலையையும் ஒருமித்து தங்கள் வரிகளில் கண்டேன் நன்றி ஐயா.

    ReplyDelete
  18. படைப்பு ஓர் உள்ளார்ந்த உணர்வு..
    எத்தனை மடை போட்டு மறைத்தாலும்..
    பொங்கி எழுகையில் தடுக்க முடியாத ஒன்று..
    மனித இனமே உணர்வுகளின் பிடியில் சிக்கி
    இருப்பவர்கள் அல்லவா...
    வரும் நேரம் வரும்...
    கொடுத்துக் கிடைப்பதில்லை
    சொல்லி வருவதில்லை

    அருமையான படைப்பு நண்பரே..

    ReplyDelete
  19. வார்த்தை ஜாலங்களோடு கருத்துக் கோர்வைகளும் இணைந்து கவிதையாய் மலர்ந்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
  20. உங்கள் கற்பனைக்குக் கிட்டக்கூட போகப் பயமாயிருக்கு.அற்புதம் !

    ReplyDelete
  21. சிறப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  22. அருமையான வரிகள் சார்! எத்தனை முறை படித்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது!

    ReplyDelete
  23. ரொம்ப நல்லா இருக்கு.கவிதை.

    ReplyDelete
  24. உங்களின் மீள்பதிவு....!!!

    எங்களின் கண்களையும் மனங்களையும் விட்டு
    மீள முடியாத பதிவு!!

    அருமைங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  25. உணர்ச்சிக் கொந்தளிப்பு அருமை.
    அத்தனையும் தூக்கி எறிந்து விட்டுப் பொங்குவதே ஆக்கம்.
    இங்கு மொழி சவுக்காகவும்,
    துவக்காகவும் மாறுகிறது.
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  26. Rajeswari Jaghamani //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  27. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

    ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். ஆழமான அர்த்தங்கள் கொண்டவை. அற்புதமான பதிவு.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  28. சின்னப்பயல் //

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  29. திண்டுக்கல் தனபாலன் //

    அருமை வரிகள்... வாழ்த்துக்கள்...//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  30. முனைவர்.இரா.குணசீலன் //



    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  31. சிவஹரி //

    மீள்பதிவென காட்டிய வரிகளில் நயம் மிளிர்கிறது. சலிப்பில்லாத் தன்மையினையும் சறுக்காமல் தந்து விட்டன.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  32. நிலாமகள் //

    கொந்த‌ளித்து பீறிடுகிற‌து ப‌டைத்த‌லின் அவ‌ஸ்தை.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  33. கவிதை வீதி... // சௌந்தர் // //

    மெய் சிலிர்த்தேன்...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  34. Robert //

    என்ன இது!!! எப்படி கோர்க்கிறீர்கள் இவ்வார்த்தைகளை.... ஒவ்வொரு வரியும் அருமை.
    அனுபவித்து எழுதியுள்ளீர்கள். வாசிக்கின்ற போது மனசு ரசித்து உணர்ச்சி பிரவாகமெடுக்கிறது.
    எழுதுங்கள் இது போன்று இன்னும் நிறைய.....//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    விரிவான உணர்வுபூர்வமான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  35. கோவை மு சரளா //

    ரமணி .........உங்கள் ஆதங்கம் இந்த சமூகத்தின் அவலத்தை படம்பிடித்து காட்டுகிறது
    வரி வரியாக சாட்டையில் அடித்து சென்று இருக்கிறீர்கள் //.


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  36. கீதமஞ்சரி //
    .
    எத்தனைப் பெரிய, சிக்கலான விஷயங்களையும், ஏற்ற உவமைகளோடும், உதாரணங்களோடும் தெளிவாய் புலப்படுத்துவது தங்கள் தனித்திறன். அதைப் போற்றி வாழ்த்துகிறேன் ரமணி சார்//

    தங்க்கள் எழுத்தின் ரசிகன் நான்
    தங்களால் பாராட்டப்படுவது
    உண்மையில் எனக்கு அதிக ஊக்கம் தருகிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Ganpat //

    பொதுவாக ஒரு கற்பனை தூண்டலை கரு எனக்குறிப்பிடுவது வழக்கம்..ஒரு 'கரு'விற்காக காத்திருக்கிறேன்.கிடைத்தால் விளாசிவிடுவேன் என்று பல கதாசிரியர்கள்,கவிஞர்கள் சொல்லக்கேட்டுள்ளோம்..அதை தெள்ளத்தெளிவாக விளக்குவது உங்களின் இந்த பதிவு. //


    எந்தப் படைப்பையும் அதன் ஆணிவேரை
    உயிரை மிகச் சரியாகப் பிடித்து
    விமர்சிக்கிற தங்கள் விமர்சனமே எனக்கு
    அதிக பலம் தருகிறது
    நல்ல பதிவுகள் தரவேண்டும் என்கிற
    உந்துதலையும் தருகிறது
    தொடர்ந்த வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான விரிவான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. koodal bala //

    அருமை!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  39. ஸ்ரவாணி //

    மீ. ப வாக இருந்தாலும் அது நெஞ்சத்தின்
    மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் மீட்டுத் தரும்
    பதிவாகவே உள்ளதினால் நீங்கள் ஒரு சி . ப
    [ சிறந்த பதிவர் ] ரமணி சார்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  40. மதுமதி //

    அழுத்தமான பதிவு.அழைப்பிதழ் வெளியிடுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்..நன்றி..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    விடுமுறை நாளாகிப்போனதால்
    ஒரு நாள் தாமதமாகப் பதிவிடலாம் என இருந்தேன்
    தாங்கள் கேட்டுக் கொண்டதும் ஏதாவது காரணம்
    இ ருக்கும் எனப் புரிந்து கொண்டு உடன் பதிவிட்டுவிட்டேன்
    தாமதத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  41. கோவி //

    அருமையான பதிவு..//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  42. வரலாற்று சுவடுகள் //

    நல்ல பதிவு ஐயா!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  43. தி.தமிழ் இளங்கோ //

    உங்கள் பேனாவின் முனை வடித்து முடிப்பதற்குள் வரிசையாய் வந்து விழுந்த உங்கள் வார்த்தைகளை என்னவென்று சொல்வது? ” கொப்பளிக்கும் கவிதை”//

    தங்கள் மனம் திறந்த அருமையான
    உணர்வுபூர்வமான பின்னூட்டம்
    அதிக பலம் தருகிறது
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. Sasi Kala //

    ஒவ்வொரு எழுத்தாளரின் நிலையையும் ஒருமித்து தங்கள் வரிகளில் கண்டேன் நன்றி ஐயா. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  45. வேடந்தாங்கல் - கருண் //

    அருமை..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  46. மகேந்திரன் //

    படைப்பு ஓர் உள்ளார்ந்த உணர்வு..
    எத்தனை மடை போட்டு மறைத்தாலும்..
    பொங்கி எழுகையில் தடுக்க முடியாத ஒன்று..
    அருமையான படைப்பு நண்பரே.. //


    தங்கள் மனம் திறந்த அருமையான
    உணர்வுபூர்வமான பின்னூட்டம்
    அதிக பலம் தருகிறது
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. T.N.MURALIDHARAN //

    வார்த்தை ஜாலங்களோடு கருத்துக் கோர்வைகளும் இணைந்து கவிதையாய் மலர்ந்திருப்பது பிரமிக்க வைக்கிறது.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  48. ஹேமா //

    உங்கள் கற்பனைக்குக் கிட்டக்கூட போகப் பயமாயிருக்கு.அற்புதம் !//

    நான் தங்கள் படைப்புகளுக்கு
    தரவேண்டிய பின்னூட்டத்தை எனக்கு அளித்து
    என்னை கௌரவப்படுத்தியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    அருமை .//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  50. s suresh //

    சிறப்பு! வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  51. யுவராணி தமிழரசன் //

    அருமையான வரிகள் சார்! எத்தனை முறை படித்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  52. Lakshmi //

    ரொம்ப நல்லா இருக்கு.கவிதை.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  53. AROUNA SELVAME //

    உங்களின் மீள்பதிவு....!!!

    எங்களின் கண்களையும் மனங்களையும் விட்டு
    மீள முடியாத பதிவு!!//


    தங்கள் மனம் திறந்த அருமையான
    உணர்வுபூர்வமான பின்னூட்டம்
    அதிக பலம் தருகிறது
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. kovaikkavi //

    உணர்ச்சிக் கொந்தளிப்பு அருமை.
    அத்தனையும் தூக்கி எறிந்து விட்டுப் பொங்குவதே ஆக்கம்.
    இங்கு மொழி சவுக்காகவும்,
    துவக்காகவும் மாறுகிறது.//


    தங்கள் மனம் திறந்த
    உணர்வுபூர்வமான பின்னூட்டம்
    அதிக பலம் தருகிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
    ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
    அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
    அவைகள் அடங்காது சீறிக் கொத்தஃஃஃஃஃஃஃ

    இது தான் ஒரு கவிஞனின் பலமும் பலஹீனமும்.இந்த லாவகம் தான் அடிக்கடி தேவைப்படும்.ஈற்றில் சிறப்பான கணிப்பும் வடிப்பும் கொடுத்து வென்று விடுவான்.நண்பரை சில நாளுக்கு எழுதச்சொல்லுங்கள்.அவர் தானாகவே புரிந்த கொள்வார்.வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  56. இந்த கவிதையில் நீங்கள் மெத்தையை தலையணைக்குள் நுழைப்பதை சாத்தியமாக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  57. உணர்வுகளை சொற்களுக்குள் அடைக்க முடியாதா ?? உங்கள் எழுத்துக்கள் அடைக்கிறது... உணர்வுகளும் அதற்கான உவமைகளும் மனதில் பதிகின்றன.. வார்த்தையால் எங்களால் சொல்ல முடியாத உணர்வுகளை நீங்கள் சொற்களுக்குள் அடக்கி விட்டீர்கள் என்ற சந்தோசமும் வந்து போகிறது...

    ReplyDelete
  58. //தலையணைக்குள் மெத்தையினை
    திணிக்கமுயலும் முட்டாளாய்
    உண்ர்வுகளை வார்த்தைக்குள்
    திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
    வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை

    எப்படி விளக்கினால் அவனுக்குப் புரியும் ? //

    மிகச்சரியான ஒப்பீடு ரமணி சார்.அருமை!

    ReplyDelete
  59. நான் என்ன பெரியதாக சொல்லிவிட போகிறேன்..மெய் சிலிர்த்தைவிட...

    ReplyDelete
  60. Athisaya //

    தங்கள் மனம் திறந்த
    உணர்வுபூர்வமான பின்னூட்டம்
    அதிக பலம் தருகிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. இடி முழக்கம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  62. சுந்தரா //.

    மிகச்சரியான ஒப்பீடு ரமணி சார்.அருமை!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  63. மணிகண்டன். மா //

    நான் என்ன பெரியதாக சொல்லிவிட போகிறேன்..மெய் சிலிர்த்தைவிட... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  64. Kumaran //

    இந்த கவிதையில் நீங்கள் மெத்தையை தலையணைக்குள் நுழைப்பதை சாத்தியமாக்கியிருக்கிறீர்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  65. "தலையணைக்குள் மெத்தையினை
    திணிக்கமுயலும் முட்டாளாய்
    உண்ர்வுகளை வார்த்தைக்குள்
    திணிக்க முயன்று தோற்கிற கணங்களை" அனைத்து படைப்பாளிகளின் சில தருணங்கள் அழகாக உங்கள் கவிதையில் அமர்ந்திருக்கின்றன.
    அருமை!

    ReplyDelete
  66. கிரேஸ்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  67. நித்தம் எதிர் கொள்ளும் அவலங்களும்,அசிங்கங்களும்
    கணம் தோறும் காயப்படுத்தும் சிறுமைகளும்,
    துரோகங்களும்- படைப்பாளர்களுக்கு இது சற்றே அதிகமாக நிகழக் கூடுமோ?
    நெஞ்சு பொறுக்குதில்லையே-பாரதியின் வரிகள் தான் மீண்டும்,மீண்டும்...

    ReplyDelete
  68. படைத்தலின் கடினம் புரிகிறது...

    நல்ல கவிதை.

    த.ம. 15

    ReplyDelete
  69. Murugeswari Rajavel

    நித்தம் எதிர் கொள்ளும் அவலங்களும்,அசிங்கங்களும்
    கணம் தோறும் காயப்படுத்தும் சிறுமைகளும்,
    துரோகங்களும்- படைப்பாளர்களுக்கு இது சற்றே அதிகமாக நிகழக் கூடுமோ?//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete
  70. வெங்கட் நாகராஜ் //

    படைத்தலின் கடினம் புரிகிறது...

    நல்ல கவிதை. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த் நன்றி

    ReplyDelete