Tuesday, August 7, 2012

நரகமாகும் வாழ்வு

ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினை
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் மிருகபலமும் தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்
தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க
கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறி சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது
நாம் வாழும் வாழ்வு

37 comments:

  1. நாட்டில் நடக்கும் உண்மைகளை உரத்தி சொல்லு உள்ளீர்கள் சார்... நன்றி…(T.M. 2)

    ReplyDelete
  2. //வெற்றியினை
    பணமும் ஜாதியும் தீர்மானிக்க
    கேலிக் கூத்தாகிறது தேர்தல்//

    சிந்திக்க தூண்டும் வரிகள் (TM 3)

    ReplyDelete
  3. புறத்தை சொல்லி அகத்தை கோடிட்டு காட்டிய கவிதைகளை கண்டதுண்டு ........

    ஆனால் அகம் சுட்டி புறத்தை விளக்கும் கவிதை உங்களுடையது .

    ஆழமான அழுத்தமான நிதர்சனங்கள் ........
    படிக்கும் போதே திருப்பி போட்டு பார்க்க வைக்கிறது நிகழ்வுகளை .

    ரசித்தேன்

    ReplyDelete
  4. இதைத்தான் 'கலி' எனக் கூறுகிறார்களோ ?
    தனியாக நரகம் வேண்டியதில்லை நாம் இப்போது
    வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்வே நரகம் தான்
    என உண்மையை எடுத்து சொன்ன விதம்
    ' நச் ' என உள்ளது ரமணி சார்.

    ReplyDelete
  5. விதையொன்று போட்டால்
    சுரையொன்று விளைகிறது..
    வினைகள் ஒருபக்கம் கொடுத்தால்
    எதிர்பக்கம் எதிர்வினை...
    இன்றைய சூழலை அழகாக சொல்லும்
    கவிதை நண்பரே..

    ReplyDelete
  6. வெற்றியினை
    பணமும் ஜாதியும் தீர்மானிக்க
    கேலிக் கூத்தாகிறது தேர்தல்/////

    சிந்தனை மிக்க வரிகள் சார்...( த, ம-4)

    ReplyDelete
  7. #உணவினை
    நாவும் மனமும் தீர்மானிக்க
    வெந்துச் சாகிறது குடல்#

    உண்மையான வரிகள்.....அருமை tm 6

    ReplyDelete
  8. மொத்தத்தில்
    தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
    செயலிழந்து கிடக்க
    கேடுகெட்டவை எல்லாம்
    அரியனையேறி சிரிக்க
    நரகமாகிக் கொண்டிருக்கிறது
    நாம் வாழும் வாழ்வு

    வேற வழி....?
    இறந்த பிறகாவது சொர்க்கத்தில் வாழலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது ரமணி ஐயா.

    ReplyDelete
  9. //தேவைகளை
    விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
    ஓடாய்த் தேய்கிறது செழுமை//

    நிதர்சனமான உண்மை :(

    ReplyDelete
  10. நியானமான கோபம் சார்

    ReplyDelete
  11. ஒவ்வொரு வரியும் பளார் பளார் என்று அறைவது மாதிரி இருக்கு !!
    தொடருங்கள் சகோ நாங்கள் பாடம் கற்கிறோம் ... நன்றி

    ReplyDelete
  12. ஒவ்வொரு வரிகளும் சுடுகிறது

    ReplyDelete
  13. //தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
    செயலிழந்து கிடக்க
    கேடுகெட்டவை எல்லாம்
    அரியனையேறி சிரிக்க//
    என்ன வேதனை!
    பிரமாதம் ரமணி!
    த.ம.9

    ReplyDelete
  14. நியாயத்தை
    பதவியும் மிருகபலமும் தீர்மானிக்க
    இறந்து கொண்டிருக்கிறது தர்மம்
    ///// nice

    ReplyDelete
  15. அருமையான பதிவு அய்யா! வரிகளும் அருமை அதனுள் உள்ள கருத்துதும் அருமை

    ReplyDelete
  16. நிதர்சனங்களின் பட்டியலில் உங்கள் ஆதங்கம் வெளிப்படுகிறது. நானும் பங்கு கொள்கிறேன்.

    ReplyDelete
  17. அத்தனை வரிகளும் வைரம். உங்களின் ஆதங்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது ஐயா. அருமை.

    ReplyDelete
  18. உண்மை..அருமை..

    ReplyDelete
  19. நிதர்சனம் சொல்லிப் போகும் வரிகள்....

    அருமை.

    த.ம. 12

    ReplyDelete
  20. இன்றைய சமூக அவலங்களை சாடும் வரிகள்! அற்புதமான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
  21. "நரகமாகும் வாழ்வு".
    கருத்துள்ள கவிதை.

    ReplyDelete
  22. அத்தனை வரிகளும் அருமை.

    ReplyDelete
  23. மொத்தத்தில்
    தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
    செயலிழந்து கிடக்க
    கேடுகெட்டவை எல்லாம்
    அரியனையேறி சிரிக்க
    நரகமாகிக் கொண்டிருக்கிறது
    நாம் வாழும் வாழ்வு

    அருமை சார்

    ReplyDelete
  24. தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
    செயலிழந்து கிடக்க
    கேடுகெட்டவை எல்லாம்
    அரியனையேறி சிரிக்க
    நரகமாகிக் கொண்டிருக்கிறது
    நாம் வாழும் வாழ்வு
    நிதர்சன வரிகள் !

    ReplyDelete
  25. உலகின் இன்றைய போக்கினைப் படம் பிடித்துக் காட்டும் அற்புதக் கவிதை.

    ReplyDelete
  26. அடுக்கடுக்காக உண்மைகள்,அழகான வார்த்தைகள், நடப்பை நறுக்கென்று சொல்லும் கவிதை
    த. ம. 14

    ReplyDelete
  27. மொத்தத்தில்
    தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
    செயலிழந்து கிடக்க
    கேடுகெட்டவை எல்லாம்
    அரியனையேறி சிரிக்க
    நரகமாகிக் கொண்டிருக்கிறது
    நாம் வாழும் வாழ்வு//

    இது தான் நடப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ள அவலத்தை அருமையாக கவிதை ஆக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  28. மொத்தத்தில்
    தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
    செயலிழந்து கிடக்க
    கேடுகெட்டவை எல்லாம்
    அரியனையேறி சிரிக்க
    நரகமாகிக் கொண்டிருக்கிறது
    நாம் வாழும் வாழ்வு

    உள்ளுரை அமைந்த சிந்தனை வரிகள் அருமையான கருத்து! வாழ்க! உங்கள் சிந்தனைத் திறன் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. நரகமாகிக் கொண்டிருக்கிறது
    நாம் வாழும் வாழ்வு//

    எவ்வளவு அழகாக சொல்லீட்டீங்க ஐயா உண்மைதான்.

    ReplyDelete
  30. செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
    செய்யாமை யானும் கெடும்

    என்னும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப, தீர்மானிக்க வேண்டியவற்றின் மௌனச் செயல்பாடு, கேடு கெட்டவைகளை அரியணை ஏற்றிட, நம் வாழ்க்கை நலங்கெட்டுப் போகிறது.

    மிக மிக அருமையான பதிவு. எடுத்துக் காட்டியிருக்கும் உதாரணங்கள் அத்தனையும் மறுக்க இயலா உண்மைகள். மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  31. ஒரு கவிதைக்குள்
    அனைத்து முக்கிய
    தவறுகளையும் அழுத்தமாக கூறிவிட்டீர்கள்!

    சூப்பர் கவிதை!

    ReplyDelete
  32. உங்களின் வரிகள் அனைத்தும் மிக அருமை. அதில் நீங்கள் சொன்ன இந்த உண்மைகள் மனதை சுட்டு செல்லும் உண்மைகள்

    தொடர்புகளை பயனும் "பசையும்" தீர்மானிக்க
    போலியாகிப் போகிறது நட்பு

    காதலை சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
    கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

    ReplyDelete
  33. நிஜத்தை வார்த்தைகளாக செதுக்கி பதித்துவிட்டீர்கள்! வரும் தலைமுறையை யோசித்துப்பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது!

    ReplyDelete