Monday, September 10, 2012

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

30 comments:

  1. தூங்கச் செய்யவோ
    ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
    கவலையை மறக்கவோ
    களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
    வாழ்வை ரசிக்கவோ
    ரசித்தததை சுருக்கமாய் விளக்கவ....
    இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது ஐயா.

    ReplyDelete
  2. காதலை..
    காமத்தை...
    வீரத்தை..
    கோவத்தை
    சோகத்தை..
    வருத்தத்தை..
    நட்பை..
    அன்பை..

    இன்னும் இந்த பூமியில் பரவிக்கிடக்கும் அத்தனை ரசங்களையும் அற்புதமாய் தாங்கி செல்லும் ஆயுதம்...


    கவிதை...
    கவிதை...

    ReplyDelete
  3. கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
    உலகினில் மாற்று ஏது சொல்
    என்றும்போல உன் அருளை
    எனக்குநீ வாரிவழங்கிச் செல்

    கவிதை எழுதும் கலை கைவந்தால் அவர்கள் பெரும் பாக்கிய சாலிகள் தான்

    ReplyDelete
  4. கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
    உலகினில் மாற்று ஏது சொல்
    என்றும்போல உன் அருளை
    எனக்குநீ வாரிவழங்கிச் செல்

    கவிதை எழுதும் கலை கைவந்தால் அவர்கள் பெரும் பாக்கிய சாலிகள் தான்

    ReplyDelete
  5. அட...அட...அழகுக் கவிதை. அதுவும தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு சுவையோ சுவை. ஒட்டக் காய்ச்சிய உரைநடைதான் கவிதை என்பது உண்மைதான். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே கவிதை. நன்று!

    ReplyDelete
  6. கவிதையை ரசிக்க வைக்கும் கவிதை..நன்று.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தலைப்பு ரசிக்க வைக்கிறது.கவிதை எப்போதும்போல. கவிதைப் பெண்ணைக் காதலிக்கும் ரகசியமும் வெளிவந்திருக்கு !

    ReplyDelete
  8. யாதுமாகி நின்றாய் போற்றி ..
    யாம் அறிந்த உணர்வே போற்றி ....
    இப்படி எக்கச் சக்கம் போற்றி போட்டு
    பாடவேணும்போல் போல் உள்ளது
    கவிதை மீது உள்ள காதலால் ஐயா .
    மிக்க நன்றி சிறப்பான இப் பகிர்வுக்கு .

    ReplyDelete
  9. கவிதைப்பெண்ணுக்கு சிறப்பான வரவேற்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  10. ரசிக்க வைக்கும் வரிகள் சார்...

    /// மடமை மரம் முறிக்க
    சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
    கூர்மிகுக் கோடாலியே ///

    அருமை... நன்றி...

    ReplyDelete

  11. குறி வைத்த இலக்கினைச் சரியாகத் தாக்குகிறதா.? உங்கள் நம்பிக்கைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. ------------- ---------------------------------- ---------------
    உங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...
    -------------------------------------------------- ---------- --

    ReplyDelete
  13. அதுதானே... கவிதையில் சொல்ல முடியாதது எது....

    அதுவும் உங்களுக்கு?

    மிகவும் இனிய கவிதை...

    ReplyDelete
  14. கவிதைபெண் ரசிக்கவைக்கிறாள் !

    ReplyDelete
  15. // கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
    உலகினில் மாற்று ஏது சொல் //

    ” எமக்குத் தொழில் கவிதை “ - என்றான் பாரதி

    ReplyDelete
  16. த.ம.12
    //கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
    உலகினில் மாற்று ஏது //
    நிச்சயம் இல்லை

    ReplyDelete
  17. //கவிஞனும் கற்பனையும்
    கந்தர்வ மணம்புரிந்து
    கூடிக் களிக்கப் பிறக்கும்
    அதியக் குழந்தையே//

    புதுக் கவிதை களவு மணம்புரிந்து வரும் குழந்தை என்றால், மரபுக் கவிதை கற்பு மணம்புரிந்து வரும் குழந்தையா?? என்று சிந்திக்க வைக்கும் வரிகள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. மிகவும் இனிய கவிதை!!!!

    ReplyDelete
  19. ரசிக்க வைக்கும் அருமையான வரிகள் சார்..

    ReplyDelete
  20. ஒட்டக் காய்ச்சிய உரைநடை தான் கவிதை....!!

    ஆழ்ந்த கருத்து! அழகான விளக்கம்.
    அருமை ரமணி ஐயா.

    ReplyDelete
  21. கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
    உலகினில் மாற்று ஏது சொல்....
    ஆம் மாற்று இல்லைதான்.
    கவிதாயினியின் பூரண அருள் பெற்றவர்தான்
    நீங்கள் சந்தேகமேயில்லை. நன்றி

    ReplyDelete
  22. ஓட்டக் காய்ச்சிய பால் சுவையில் அமிர்தம். ஓட்டகாய்ச்சிய உரைடையில் பிறக்கும் கவிதை அதைவிட இனிமை என்பதை அழகான புதுமையான உவமையாக சிந்தித்திருக்கிறீர்கள் ரமணி சார்!

    ReplyDelete
  23. ஏதாவது நாலு வரிய செலக்ட் பண்ணி குறிப்பிடலாம்னா எல்லா வரிகளுமே நல்லாயிருக்குங்க.
    பாராட்டுக்கள்..

    ReplyDelete

  24. கவிதைப் பெண்ணிடம் கதி நீ
    என்று கிடக்கும் அழகே அழகு !

    ReplyDelete
  25. திரு ரமணி சாரின் அழகு கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. எண்ணச் சுமைகளை
    எளிதாக ஏற்றிச் செல்ல
    ஏதுவான எழில்மிகு வாகனமே..''
    இப்படிப் பல வரிகள். மிக்க நன்று .சுவை.
    நல்வாழ்த்து. (10லிருந்து 14 வரை விடுமுறை யெர்மனியில்)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. ஒட்டக்காய்ச்சிய உரைநடை! கவிதைக்கு இப்படியொரு இனிய இலக்கணம் வரைந்த கவிஞர் தாங்களாகத்தான் இருப்பீர்கள். இந்த ஒற்றை வரியில்தான் எத்தனைப் பொருள்! வாசிக்க வாசிக்க கவிதையின் வெவ்வேறு பரிமாணங்களைக் கண்டு அசந்துபோனேன். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete