Tuesday, September 11, 2012

தமிழ் பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

49 comments:

  1. தமிழ் பாரதியை நினைவு கூறுவது போல் அமைத்துள்ள
    கவிதை அருமை.

    ReplyDelete
  2. நான் முதல் ஒட்டு போடவேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் விஜயலக்‌ஷ்மி முந்திக் கொண்டார்.
    த.ம 2

    ReplyDelete
  3. கவிதை உலகின் கதாநாயகன் அவன் ஒருவன் மட்டுமே..

    ReplyDelete
  4. // ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
    பாழ்பட்டு புதையுண்டு போகாது //

    இப்பொழுது இந்தியாவில் யாரும் பேசாத ஒரு மொழி சமஸ்கிருதம் என்பது உண்மையே ! தமிழ் மொழி வேதகாலத்திற்கு முற்பட்டது, இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இனி வருங்காலத்தில், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடைத் தரகர் தேவையில்லை என்ற நிலையை நாம் எடுப்போமானால், இந்த சமஸ்கிருதம் காணாமல் போகும் என்பது உண்மையே. புரட்சிகரமான கருத்தை எளிய கவிதையில் வழங்கியது மிக அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. புலவர் கை திருவோடு.... அட!
    புதிய முறையில், உங்கள் பாணியில் மகாகவிக்கு அஞ்சலி ஜோர்!

    ReplyDelete
  6. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தமிழ் பாடும் பாட்டு --வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. மாக கவிக்கே உரித்த வரிகள் சார்

    ReplyDelete
  10. மகா கவியை தமிழன்னையே சிறப்பிப்பது மிகச்சிறந்த பொருத்தம்! சிறப்பான படைப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    ReplyDelete
  11. " தன்னிகரில்லாக் கவிஞனே
    என தவப்புதல்வனே
    உன்னை இந்நாளில் நினவு கூர்வதில்
    நானும் மகிழ்வு கொள்கிறேனடா "
    அருமை ! வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  12. பழந்தமிழ் அழகை பாமரருடன் இணைத்து ரசித்தவன் என்னும் வரிகளில் சொக்கினேன். தமிழைப் போற்றிப் பாடிய தன்னிகரில்லாக் கவிஞன் அல்லவா அவன்? தமிழ் அவனைப் போற்றிப் பாடுவதில் வியப்பென்ன? அற்புத வரிகளுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  13. கைவிலங்கொடித்துக் காத்தவனே
    ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
    பாழ்பட்டுப் புதையுண்டுப் போகாது
    பாமரருடன் இணைத்து ரசித்தவனே

    இரசித்துப் படித்தேன் ரமணி ஐயா.

    ReplyDelete
  14. தமிழ் பாடுவதாய் அமைந்த பாடல் மிக அருமை.

    ReplyDelete
  15. நினைவுநாளில் மகா கவிஞனுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதை அருமை.த.ம.8

    ReplyDelete
  16. கவிதை அருமையாய் இருக்கிறது ஐயா

    ReplyDelete
  17. உலகமா கவிக்கு ...நல்லதொரு சமர்ப்பணம்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. அமரகவிக்கு அற்புதமான அஞ்சலி..
    பலே பாண்டியா!

    ReplyDelete
  20. நிறைவான அஞ்சலி.
    நான் அட போடுவதற்குள் ஸ்ரீராம் முந்திக்கொண்டார்.

    ReplyDelete
  21. பாட்டுக்கு ஒரு புலவன் பாரதிக்கு இன்று நினைவுநாள்! கவிஞரோடு சேர்ந்து நானும் அஞ்சலி செய்கிறேன்!


    ReplyDelete
  22. //உன்னை இந்நாளில் நினவு கூர்வதில்
    நானும் மகிழ்வு கொள்கிறேனடா
    உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
    நாளும் பெருமை கொள்கிறேனடா//

    சிறப்பு அய்யா..

    ReplyDelete
  23. பாரதியை நினைவு வைத்திருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் ஐயா. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  24. //மனனனைக் குளிர்விக்கும் //

    புள்ளி வைக்க மறந்திட்டிங்க :)

    ReplyDelete
  25. த‌மிழ், தான் ப‌ட்ட‌ பாட்டை எல்லாம் ப‌ட்டிய‌லிட்டு, த‌ன்னை உச்சியேற்றிய‌வ‌னை நினைவுகூர்ந்த‌து அருமை.

    ReplyDelete
  26. அருமையான படைப்பு! ஆஹா!
    நானும் பாரதிக்குப் புகழுரை எழுதியுள்ளேன்..பார்த்து தங்கள் கருத்தைச் சொல்லவும்!

    ReplyDelete
  27. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள் அருமை ஐயா.

    ReplyDelete
  28. மிகவும் அருமை சார்.

    ReplyDelete
  29. தங்கத்தமிழ பாடும் வைரவரிப்பாட்டு

    ReplyDelete
  30. எட்டையபுரத்து கவிஞனின் மணி மகுடத்தில் இது ஒரு மயிலிறகு...அருமை (15 )

    ReplyDelete
  31. மகாகவியை நினைத்தாலே புல்லரிக்கிறது , அவருடைய நினைவு தினத்தில் நல்ல நினைவுகளை தந்தமைக்கு நன்றி ... கவிதை அருமை

    ReplyDelete
  32. தமிழை மீட்டெடுத்த மகாகவியை மீண்டும் எங்கள் நினைவில் உங்கள் பொன்னான வரிகளால்
    பதிந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  33. முண்டாசுக் கவிக்கு அருமையான அஞ்சலி....

    த.ம. 16

    ReplyDelete
  34. தலைப்பே ரொம்ப வித்தியாசமாயிருக்கு சார்.
    வரிகள் அழகு

    த. ம 17

    ReplyDelete
  35. தமிழே தன் பெருமை கூறி . தன் தற்போதைய நிலைமைக்குக் காரணமானவரை வாயார வாழ்த்தியதான சிந்தனை சிறப்பே . உயர பெருமை தருவாரை நினைத்துக்கூட பார்க்காத உலகில் இக்கவிதை நல் பாடம் நடத்துகின்றது

    ReplyDelete
  36. அருமை ஐயா !! சிறப்பான சிந்தனை !!

    ReplyDelete
  37. கவிதந்த பாரதியை நினைக்க வைத்த கவியும் தலைப்பும் அழகு!

    ReplyDelete
  38. வணக்கம் நண்பரே,
    தாய்த் தமிழே தன்
    தவப் புதல்வனுக்கு
    பாடும் பாடல் இங்கே
    பிள்ளைத்தமிழ் போல
    ஒலிக்கிறது....

    ReplyDelete
  39. கைவிலங்கொடித்துக் காத்தவனே
    ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
    பாழ்பட்டுப் புதையுண்டுப் போகாது
    பாமரருடன் இணைத்து ரசித்தவனே


    இன் தமிழை அழைந்துவந்து கைகளில் தந்த பாரதிக்கு மகுடம் சூட்டியகவிதை

    ReplyDelete
  40. அருமையான விளக்கம் மிகவும் கவர்ந்தது நன்றி சகோ

    ReplyDelete
  41. சிறப்பான சிந்தனை !! மிகவும் அருமை

    ReplyDelete
  42. தமிழ் பாடும் பாட்டு தங்களுக்கும்
    சேர்த்தே அணி செய்கிறது !

    ReplyDelete
  43. மிகவும் இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  44. கவிதை உலக அரசன் பற்றிய பதிவு மிக்க நன்று.. நன்றி .நல்வாழ்த்து. (விடுமுறையால் வர முடியவில்லை.)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  45. மிக அருமையான கவிதை........பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete