Thursday, September 13, 2012

நல்லோர் நட்பு

நெருக்கிக் கட்டப்பட்ட
மணமிக்க
ரோஜா மலர் மாலைதான் ஆயினும்
பிணத்தின் மீது
போடப்பட்ட மறு நொடி முதல்
நாற்றமெடுக்கத் தொடங்கி
முகம் சுழிக்கச் செய்து விடுகிறது

மங்கல நிகழ்வு முடிந்து
நாட்கள் பல கடந்த பின்னும்
வாடி உதிர்ந்தது போக
ஒட்டிக்கொண்டிருக்கிற
ஒன்றிரண்டு இதழ்களிலும் கூட
மலர்ந்த போது இருந்த மணம்
தொடரத்தான் செய்கிறது

35 comments:


  1. உண்மையாகவா. பிணத்தின் மீது போட்ட மாலைகளை முகர்வோமா.?

    ReplyDelete
  2. G.M Balasubramaniam //

    தவிர்க்க முடியாமல் நுகர்ந்தபடி
    (நட்பைத் தொடர்ந்தபடி) தானே இருக்கிறோம்
    இல்லையா ?நல்ல நட்பை
    இழக்கக் கூடிய நிலை வந்தபின்னும் கூட
    நட்பாய் இருந்த காலத்தை நினைத்து
    மகிழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்
    இல்லையா ?

    ReplyDelete
  3. கவிதையும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  4. நல்ல கருத்து. பின்னூட்டத்தில் நீங்கள் தந்திருக்கும விளக்கமும் மிகச் சரியே.

    ReplyDelete
  5. எல்லாவற்றிர்க்கும் மனது தான் காரணம்...
    அருமையான கவிதை ரமணி ஐயா.

    ReplyDelete
  6. கவிதை அருமை
    விளக்கம் அதனினும் அருமை!
    த.ம.3

    ReplyDelete
  7. அருமையான கவிதை ..அதற்க்கு பின்னூட்டத்தில் தந்த விளக்கம் மிக மிக அருமை

    ReplyDelete
  8. நல்லதொரு சிந்தனை! நல்ல நட்பு அமைவது இறைவன் அளிக்கும் வரம்! சிறப்பான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    ReplyDelete
  9. பின்னூட்ட கேள்வி பதில் நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. அருமை சார்! முடிந்தால் என்னுடைய வலைப்பூ பக்கம் வந்து பதிவுகள் குறித்த கருத்தினைப் பகிர்ந்திட வேண்டுகிறேன்.நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  11. நல்ல கவிதை..பின்னூட்ட விளக்கம் சூப்பர் ..அய்யா

    ReplyDelete
  12. மணம்
    தொடரத்தான் செய்கிறது

    ReplyDelete
  13. அருமையான கவிதை. விளக்கமும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. தொடருங்கள்.

    ReplyDelete
  14. உண்மையான விளக்கம் சார்
    அருமை
    த. ம 5

    ReplyDelete
  15. வணக்கம் ரமணி சார்,
    உண்மையான வார்த்தைகள்...
    மனமிக்க மலராயினும்
    சேரும் இடத்தின் பொருட்டே
    அதன் மனத்தின் இயல்பு
    என்பதை
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  16. க‌விதை த‌ரும் பொருளும்; த‌லைப்பு, க‌விதை வ‌ழி உண‌ர்த்தும் பொருளும் ம‌காப்பொருத்த‌ம்! ச‌வ‌த்தின் மேலிட்ட‌ மாலையை நுக‌ர‌ விரும்பாத‌து போல் ம‌ன‌ம்கிழித்துச் சென்ற‌ ந‌ட்பின் நினைவுக‌ளையும் புற‌க்க‌ணிக்க‌வே செய்கிறது ம‌ன‌சு.

    ReplyDelete
  17. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

    இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

    என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

    தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

    ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

    ReplyDelete
  18. நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற உவமைகள் வித்தியாசமாக உள்ளது.சிறிய கவிதைக்குள் பெரிய கருத்து பொதிந்துள்ளது.
    த,ம7

    ReplyDelete
  19. கவிதையும் கவிதைக்கு விளக்கமும் மிக நன்று...

    த.ம. 8

    ReplyDelete
  20. தவிர்க்க முடியாமல் நுகர்ந்தபடி
    (நட்பைத் தொடர்ந்தபடி) தானே இருக்கிறோம்
    இல்லையா ?நல்ல நட்பை
    இழக்கக் கூடிய நிலை வந்தபின்னும் கூட
    நட்பாய் இருந்த காலத்தை நினைத்து
    மகிழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்
    இல்லையா ?// விளக்கம் அழகு!

    ReplyDelete
  21. நல்லோர் நட்பினை நன்றாகவே மிகச்சிறந்த உதாரணங்களுடன் விளக்கியுள்ளீர்கள்.

    மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  22. மிகப்பெரிய அர்த்தங்கள் சொல்லும் வாசகங்கள்..ஆழமான வரிகள்.

    ReplyDelete

  23. கவிதையில் தலைப்பு பற்றிய செய்தி என்று யூகிக்க வேண்டி உள்ளது. தலைப்பு நீக்கிப் பார்த்தால் ABSTRACT எண்ணங்கள் போல்தான் தோன்றியது. பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  24. இப்படித்தான் சில நட்புகளை விட்டுவிடவும் முடியாம, தொடரவும் முடியாம இருக்கோம். நட்பை பற்றிய கவிதை அருமை

    ReplyDelete
  25. நட்பூவானதும் விளக்கமளித்ததும் அருமை ஐயா.

    ReplyDelete
  26. கவிதையும், விளக்கமும் அருமை சார்.
    த.ம.14

    ReplyDelete
  27. மணக்கிறது .
    எனினும் நல்லோர் நட்பைப் பற்றி ஓரிரு வரிகள்
    சேர்த்து இருந்தால் இன்னும்
    கூடுதலாக மணம் பெற்று இருக்கும்.

    ReplyDelete
  28. நட்பை ரோஜா மலருக்கு ஒப்பிட்டு, நல்லோரிட‌த்தில் அது எப்படி மணம் வீசுகிறது என்பதையும் நல்லவரல்லாதோரிடம் அதே மலர் எப்படி நாற்றமடிக்கிரது என்பதையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!! மிகச் சிறப்பான படைப்பு!

    ReplyDelete
  29. உண்மையான நட்பு வாழ்வின் அதிஷ்டம் !

    ReplyDelete
  30. engu serkirom-
    enpathai poruththuthaane-
    ayya!

    nalla sonneenga!

    ReplyDelete
  31. கவிதை மிக அருமை.
    சகோதரி மேலே கூறியது போல, நல்ல நட்பின் வாசத்துடன் கூடிய வசந்தத்தை
    ஒரு தனி கவிதையாய் தாரும் ஐயா!

    நன்றி.
    நாடோடி

    ReplyDelete
  32. அருமையான கவிதை........பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete