Wednesday, September 26, 2012

துவக்கமல்ல முடிவே முக்கியமானது

துவக்கத்தைவிட முடிவு முக்கியமானது என்பது
விளையாட்டுக்கு மட்டுமல்ல
தலைமைக்கும் மிகச் சரியாகப் பொருந்தும்

அடுத்தத் தெரு தலைவராயினும் சரி
அகில உலகத் தலைவராயினும் சரி
யாரும் பிறப்பெடுக்கையிலேயேபெருந்தன்மையோடும
தலைமைப் பண்போடும் பூவுலகில் அவதரிப்பதில்லை

சராசரியாக அவர்கள் வலம் வருகையில்
அவர்களது சுய நலத்தைக் கீறிச் செல்லும்
ஒரு சிறு நிகழ்வு அல்லது அதிர்வு
அவர்களது சிந்தனைக்குள் தீமூட்டிப்போகிறது

அது
ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக
மன்னனால் கொல்லப்பட்ட தனது சகோதரனின் 
மரணமாகவோ
பயணச் சீட்டு கையிலிருந்தும் அவமதிக்கப்பட்ட
நிகழ்வாகவோ
எப்படி முயன்ற போதும்
தன் இனத்திற்கு முக்கியமளித்து
தன்னைப் புறக்கணித்த தலைமையின்
அலட்சியமாகவோ
கூட இருந்திருக்கக் கூடும்

சராசரிகள் சுய நலக் கீறலை
மருந்திட்டு ஆற்றிக் கொள்ளவோ முயல்வோ
அல்லது தனி நபர் தாக்குதலாய் எண்ணி
பழி கொள்ளத் துடிக்கையிலே
தலைவர்கள் மாறுபட்டு சிந்திக்கிறார்கள்
பிரச்சனையின் ஆணிவேரைக் தேடிப் பிடித்து
அதனை அடியோடு அழித்தொழிக்க முயல்கிறார்கள்

காலம் காலமாய் வேறூன்றிப் போன கயமைகளை
சமுகத்தின் களங்கங்களை சாபகேட்டினை அவலங்களை
அடியோடழிக்கும் அதீத முயற்சியில்
தன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை
அனைத்தையும் ஆகுதியாக்கி  
தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்

மாறாக சிலர் மட்டும்
தன் முயற்சியால் உயரப் பறந்தும் உச்சம் தொட்டும்
அழுகிய மாமிசப் பிண்டங்களைத் தேடும் வல்லூறாய்
மீண்டும்வட்டமடித்து துவக்கத்திற்கே வந்து சேர்ந்து
தான்.  தன் சுகம். தன் குடும்ப நலம் என
தன்னை தன் மனத்தைச் சுருக்கிக் கொண்டு
அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டு
சமூகத்தின் அவலச் சின்னமாகிப் போகிறார்கள்
ஒரு தலைமுறை கெடக் காரணமாகியும் போகிறார்கள்

எனவே
துவக்கத்தை விட முடிவு முக்கியமானது என்பது
விளையாட்டுக்கு மட்டுமல்ல
தலைமைக்கும் மிகப் பொருந்துமென்பது
மிகச் சரி தானே ?

40 comments:

  1. /// தான்... தன் சுகம்... தன் குடும்ப நலம்... என
    தன்னை தன் மனத்தைச் சுருக்கிக் கொண்டு... ///

    மிகச் சரியே...

    ReplyDelete
  2. இதை தமிழக தலைவர் என்று சொல்லுபவர் நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு

    ReplyDelete
  3. ///மாறாக சிலர் மட்டும்
    தன் முயற்சியால் உயரப் பறந்தும் உச்சம் தொட்டும்
    அழுகிய மாமிசப் பிண்டங்களைத் தேடும் வல்லூறாய்
    மீண்டும்வட்டமடித்து துவக்கத்திற்கே வந்து சேர்ந்து
    தான். தன் சுகம். தன் குடும்ப நலம் என
    தன்னை தன் மனத்தைச் சுருக்கிக் கொண்டு
    அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டு
    சமூகத்தின் அவலச் சின்னமாகிப் போகிறார்கள்
    ஒரு தலைமுறை கெடக் காரணமாகியும் போகிறார்கள்//

    நிதர்சன உண்மைகள்

    ReplyDelete
  4. ''...பிறப்பெடுக்கையிலேயேபெருந்தன்மையோடும
    தலைமைப் பண்போடும் பூவுலகில் அவதரிப்பதில்லை...முடிவு முக்கியமானது ...'''

    சரியே...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  5. தான் தன் குடும்பம் என்று சுய நலமாய் வாழ்வதனால் ஒரு தலைமுறை கெட காரணமாய் விடுகின்றார்கள் உண்மை. ஆனால் தன்னைத்தான் காதலனாயிற் எனைத்தொன்றும் துன்னற்க தீவினை பால் என்று வள்ளுவர் சொல்கின்றாரே . அதிலும் உண்மை இருக்கின்றது

    ReplyDelete
  6. காலம் காலமாய் வேறூன்றிப் போன கயமைகளை
    சமுகத்தின் களங்கங்களை சாபகேட்டினை அவலங்களை
    அடியோடழிக்கும் அதீத முயற்சியில்
    தன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை
    அனைத்தையும் ஆகுதியாக்கி
    தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
    காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்

    உண்மை முற்றிலும் உண்மையான கருத்து இது .
    ஆனால் இப்பேர்ப்பட்டவர்கள் இந்தக் காலத்தில்
    மிகக் குறைவாக இருப்பதே வருத்தமான விடயம் :(
    வாழ்த்துக்கள் ஐயா நல்லதொரு ஆக்கத்தை வெளியிட்டமைக்கு .

    ReplyDelete
  7. நல்ல கருத்தாக்கம் .உண்மையில் எல்லோரும் சிந்திக்கவேண்டிய விடயம்.
    தன் முயற்சியால் உயரப் பறந்தும் உச்சம் தொட்டும்
    அழுகிய மாமிசப் பிண்டங்களைத் தேடும் வல்லூறாய்
    மீண்டும்வட்டமடித்து துவக்கத்திற்கே வந்து சேர்ந்து
    தான். அருமையான உவமானம் .நன்றி ஐயா பகிர்வுக்கு

    ReplyDelete
  8. காலம் காலமாய் வேறூன்றிப் போன கயமைகளை
    சமுகத்தின் களங்கங்களை சாபகேட்டினை அவலங்களை
    அடியோடழிக்கும் அதீத முயற்சியில்
    தன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை
    அனைத்தையும் ஆகுதியாக்கி
    தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
    காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்

    நாட்டுக்கு உழைத்தவர்கள் மக்கள் மனதில் தங்கமாய் தான் ஜொலிக்கிறார்கள். அவர்கள் தங்கமான தலைவர்கள்.
    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. தலைமையில் உள்ளவர்கள் கொஞ்சம் யோசிக்கத்தான் (இதை வாசிக்கவும்)வேண்டும்.

    ReplyDelete
  10. அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

    ReplyDelete
  11. மிக,மிகச் சரி ரமணி சார்.அற்புதமான சிந்தனை.அழகான உவமை.உயரப் பறந்த பின்பு தாழப் பார்க்கும் வல்லூறை உவமித்து இருக்கும் விதம் அருமை.

    ReplyDelete
  12. எல்லாருமே நல்ல தன்மையுள்ள தலைவராகிவிட்டால், புதிய தலைவர்களுக்குத் தேவையில்லாமல் போய்விடும்.! இங்கு ஆலமரங்கள் குறைவு..முட்செடிகளே அதிகம்! இதுவும் இவ்வுலகின் விந்தைகளில் ஒன்று!

    நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. மிக அருமையான சிந்தனை. ஆழ்ந்து யோசிக்க வைத்தன வரிகள். நீங்கள் சொல்வது மிகமிகச் சரியே.

    ReplyDelete
  14. First யாரு போறாங்குறது முக்கியமில்ல. Lastல யாரு first வறாங்கங்குறது தான் முக்கியம்னு சிம்பு ஒரு படத்துல பன்ச் அடிப்பாரே.. அது ஞாபகம் வருதுங்க.

    நல்லதொரு பதிவு.
    :-)

    ReplyDelete

  15. தலைமை பண்பு எப்படியும் உருவாகலாம் என் அருமையாக சொல்லி உள்ளீர்கள்.....

    ReplyDelete
  16. // எனவே
    துவக்கத்தை விட முடிவு முக்கியமானது என்பது
    விளையாட்டுக்கு மட்டுமல்ல
    தலைமைக்கும் மிகப் பொருந்துமென்பது
    மிகச் சரி தானே ?//

    சரியான தலைப்பு ! சரியான முடிவு!சொல்லப்பட்ட செய்தி மிகவும் பொருத்தம்!

    ReplyDelete
  17. // எனவே
    துவக்கத்தை விட முடிவு முக்கியமானது என்பது
    விளையாட்டுக்கு மட்டுமல்ல
    தலைமைக்கும் மிகப் பொருந்துமென்பது
    மிகச் சரி தானே ?//
    மிகவும் சரி!

    ReplyDelete
  18. //தன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை
    அனைத்தையும் ஆகுதியாக்கி
    தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
    காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்//

    தலைமைக்கு இலக்கணம் !
    தேவை இக்கணம் !!

    ReplyDelete
  19. வரி சொல்லும் உண்மை அதன் படி நடந்தால் நன்மை.

    ReplyDelete
  20. ரெம்ப சரியா சொனீங்க சார்

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. துவங்கினால் தானே முடிக்கமுடியும்...

    ஆனால் நல்ல துவக்கம் கெட்ட முடிவாகவோ.. கெட்ட துவக்கம் நல்ல முடிவாகவோ மாறுவதற்கான வாய்ப்பும் பொறுப்பும் தலைமையின் கையில் உள்ளது....

    சிந்திக்கவைத்த சிந்தனைகள்! நன்று. :-)

    ReplyDelete
  23. முடிவாகத்தான் சொல்கிறீர்கள். அருமை.
    அப்பாதுரை இன்னும் மார்க் போட வரவில்லையா? :))

    ReplyDelete
  24. மிக எதார்த்தமான வரிகள் சார்! எப்பொழுதும் போல என்னை சிந்திக்க வைத்துவிட்டு போகிறது சார்!
    ////
    அனைத்தையும் ஆகுதியாக்கி
    தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
    காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்
    ////
    நோக்கம் நல்லதானால் பயணமும் முடிவும் இனிமையே!

    ReplyDelete
  25. அருமையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி ஐயா.

    ReplyDelete
  26. ஐயா எப்படி சுகம் ?...என் தளத்தில் நீண்டநாள்
    தங்கள் வரவைக் காணாமல் மனம் என்னமோ போல்
    இருந்தது .நீங்கள் நலந்தானா ?.....

    ReplyDelete
  27. யார் யார் தங்களுக்கானதாய் நினைத்தாலும் திருந்திக்கொள்ள நல்ல வார்த்தைகள் கொண்ட
    கவிதை !

    ReplyDelete
  28. இதை அச்செடுத்து என் அறையில் மாட்டியிருக்கிறேன்.

    ReplyDelete

  29. தொடக்கமோ முடிவோ கையாளும் முறைகள் மிக முக்கியம். THE MEANS ARE MORE IMPORTANT THAN THE ENDS.

    ReplyDelete
  30. சொல்ல வந்ததை அருமையான நடையில்
    சொல்லி இருக்கிறீர்கள் .

    ReplyDelete
  31. புரிய வேண்டியவங்களுக்கு புரியுமா?

    ReplyDelete
  32. நல்ல சிந்தனை....

    ReplyDelete
  33. துவக்கமே முடிவாய்ப்பொன நிகழ்வுகளை நம் சமகால சமூகத்தில் நிறையவே பார்த்து விட்டோம்,கேட்டும் விட்டோம்.இன்னும் கேட்டும்,பார்க்கவுமாய் காத்திருக்கிறோம்.ஆகவே நல்ல துக்கம் நல்ல முடிவாகவும்,நல்ல முடிவுகள் நல்ல துவக்கஹ்டில் ஆரம்பமானவை என அறுதியிட்டுக்கூறி விடமுடியவில்லை.

    ReplyDelete
  34. தோன்றிர் புகழோடு தோன்றுதல் சாத்தியமில்லை.என்றாலும் பின்னர் அடையாளப் படயுத்திக் கொண்டவர்களை மறைமுகமாக அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்.உங்கள் கவிதையில் துவக்கம் முடிவு இரண்டும் அருமை.

    ReplyDelete
  35. அருமையான விஷயங்களை எளிமையாகத் தந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete