Sunday, October 7, 2012

ஒரு சிறு நிகழ்வு-தொண்டர்களின் செயல்பாடு

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை
சாலையில் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டால்
ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் எப்படி
நடந்து கொள்வார்கள்-ஒரு ஜாலி கற்பனை 

அ.இ.அதி.மு.க:

பிரச்சனையே இல்லை.சட்டென பாய்ந்து எடுத்து
பையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவான்

தி.மு.க :

சட்டென அவசரப்பட்டு எடுத்துவிடமாட்டான்.
காலால் மறைத்து வைத்துக் கொண்டு
யாராவது பார்க்கிறார்களா என நோட்டம் விட்டு
பின் நைசாக எடுத்து பையில் போட்டுக் கொண்டு
கிளம்பி விடுவான்

காங்கிரஸ் :(தமிழ் நாடு மட்டும் )

பார்த்ததும் குனிந்து எடுத்து விடமாட்டான்
எடுத்துக்  கொடுக்க யாராவது வருகிறார்களா
என சாலையை நோட்டம் விட ஆரம்பித்துவிடுவான்

கம்யூனிஸ்ட்:

தானும் எடுக்கமாட்டான்
அடுத்தவரையும் எடுக்கவிடமாட்டான்

( ஒரு நிகழ்வில்கட்சித்  தொண்டரின்  பெயரை
முதலில்  சொல்லாமல்  மைமாக  நடித்து
 மட்டும் காட்டினேன்

எல்லோரும்  தொண்டர்களை
மிகச் சரியாக கணித்தார்கள்
ரசித்துப் பாராட்டவும் செய்தார்கள்

 மற்ற பிரதான கட்சித் தொண்டர்கள்  குறித்து
பதிவர்கள் ஜாலி  கற்பனையைத் தொடரலாமே)

47 comments:

  1. ஹா ஹா ஹா செம வித்தியாசமான கற்பனை அண்ணா!

    ReplyDelete
  2. நல்லது.
    நகைச்சுவை.
    விசமம்.
    மனக் கொதிப்பு
    உண்மை நிலை...
    இப்படிப் பல.
    சுவை.
    நல்வாழ்த்து.
    (முகநூலில் போடும் போதுநான் பாய்ந்து வருகிறேன்)
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. அருமையான கற்பனை!கலக்கல்

    ReplyDelete
  4. மாத்தியோசி - மணி //


    தங்கள் முதல் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. Lakshmi

    நல்ல கற்பனை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. kovaikkavi //

    சுவை.
    நல்வாழ்த்து.
    (முகநூலில் போடும் போதுநான் பாய்ந்து வருகிறேன்)//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  7. குட்டன் //

    அருமையான கற்பனை!கலக்கல்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  8. ரமணி ஐயா....

    போட்டது தான் போட்டீர்கள்...
    ஒரு ஆயிரம் ரூபாயாகப் போடக் கூடாதா...
    போட்டிருந்தால் காங்கிரஸ் காரரும் உடனே குனிந்து எடுத்திருப்பார்..

    ReplyDelete
  9. வித்தியாசமான கற்பனை....

    த.ம. 4

    ReplyDelete
  10. //ஒரு நிகழ்வில்கட்சித் தொண்டரின் பெயரை முதலில் சொல்லாமல் மைமாக நடித்து மட்டும் காட்டினேன்///
    அதை வீடியோவாக எடுத்து போட்டிருந்தால் நாங்களும் பார்த்த்து ரசித்திருபோமே...

    அழகான கற்பனை ...வித்தியாமான பதிவு உங்களின் கவிதைகளை ரசித்து வந்தாலும் இது போன்ற வித்தியாசமான உங்கள் படைப்புகள் மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது

    ReplyDelete
  11. அண்ணா ! அபாரமான கற்பனை :))))))))

    ReplyDelete
  12. பணம்படுத்தும்பாடு. கற்பனையான அரசியல் நையாண்டி அருமை.

    ReplyDelete
  13. ம்ம்ம்... நீங்கள் எப்படி நடித்துக் காட்டியிருப்பீர்கள் என்பதை மனக்கண்ணில் காட்சியாக ஓடவிட்டு ரசித்தேன். கலாட்டாவான ரசனை உங்களுக்கு. அருமை ஐயா.

    ReplyDelete
  14. ரமணி ஸார்! அருமையான கற்பனைக்கு நன்றி.
    ஆனால் நான் செய்துள்ள சிறு மாற்றம்..

    ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை
    சாலையில் ஏதேனும் ஒரு தமிழன் தவறி போட்டுவிட்டு செல்லும்போது
    அதை பார்க்கும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் எப்படி
    நடந்து கொள்வார்கள்-ஒரு ஜாலி கற்பனை

    மு.க..அதை எடுத்து தன் பையில் பத்திரப்படுத்திவிட்டு, விரைந்து சென்று முன்னால் செல்லும் தமிழனிடம் "நீங்கள் ஒரு ஐம்பது ரூபா தாளை தவற விட்டுவிட்டீர்கள் அதை நான் எடுத்து உங்களிடம் கொடுக்கலாம் என விழையும்போது பின்னால் இருந்து வேகமாக பாய்ந்த அம்மா அதை என்னிடம் இருந்து பிடுங்கி சென்றுவிட்டார்."

    ஜெயா:பின்னாலே வரும் ஜெயா சொல்வார்.."அந்த மு.க சொல்வதை நம்பாதீர்கள்.உங்கள் பையிலிருந்து பணம் கீழே விழுவதற்கே அவர் உங்கள் பையில் செய்த ஒட்டைத்தான் காரணம்.செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போ பழியை என் மீது போடப் பார்க்கிறார்.

    விஜயகாந்த்: "உங்கள் பையிலிருந்து பணம் கீழே விழுவதற்கே மு.க உங்கள் பையில் செய்த ஒட்டைத்தான் காரணம்.பணம் விழுந்தவுடன் அதை எடுக்க அம்மாவால் குனிய முடியாதலால் நான் குனிந்து, அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.அவர் அதை மறந்து விட்டு ஏதோ தானே தனியாக அதை எடுத்ததாக கூறுகிறார்.நீதி கேட்டு நான் ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கும் செல்லத்தான் போகிறேன்"

    ராமதாஸ்: "உங்களை மு.க, அம்மா இருவரும் ஏமாற்றி வருகின்றனர்.என்னை உங்கள் பணத்திற்கு காவலாக வைத்தால் அதை கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பேன்.

    சோனியா: எனக்கு யார் எடுத்தார்,யார் அதை இப்போ வைத்துள்ளார் என்பது பற்றி கவலை இல்லை.அந்த பணத்தை யாரும் அதன் சொந்தக்காரரிடம் திருப்பி கொடுக்க கூடாது.அதுதான் முக்கியம்.எடுத்த பணத்தில் பாதியை எனக்கு கொடுத்துவிட வேண்டும்.

    வை.கோ:"உங்கள சகோதரன் அண்டை நாட்டில் தன் இருபது ரூபா தாளை தவற விட்டு விட்டு தவித்துக்கொண்டிருக்கிறான்.அவன் பணத்தை முதலில் மீட்டுத்தர வேண்டும் பிறகுதான் உங்கள் பணம்!"

    தமிழன்:இதோ என் முடிவு.அனைவரும் என்னை பின் தொடர்ந்து வாருங்கள்.நான் ஐந்து கிலோமீட்டருக்கு ஒருமுறை ஒரு ஐம்பது ரூபாவை கீழே போட்டுக்கொண்டே போவேன்.அதை மு.க வும் ஜெயாவும் மாறி மாறி எடுத்துக்கொள்ள வேண்டும்.மற்றவர்கள் இவர்கள் இருவரிடமும் கூட்டு சேர்ந்து பணத்தைப்பிரித்துக்கொள்ள வேண்டும்.நான் போண்டியாகும் வரை இது தொடரும் இது என் தலைவிதி.அண்ணா முதலில் போட்ட நாமம் வாழ்க.அதை அண்ணாவிற்கே போட்டவர்கள் நீடூழி வாழ்க.


    ReplyDelete
  15. சிரிக்க வைத்த கற்பனை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  16. இதில் பணமும்,மனமும் அல்ல பிரச்சனை.நம்மில் நிறைந்திருக்கிறதாய் இருக்கிற நிலைமையே காரணம் எனக்கொள்ளபடுகிறது,மற்றபடி தொண்டர்கள் நம் சமூகங்களிலிருந்து வருபவர்கள்தானே?இதில் தானும் எடுக்காமல்.பிறரையும் எடுக்க விடாதவர் தனக்கு சொந்தமில்லாத பொருளை தொட வேண்டாம்,அதை உரியவரிடம் சேர்ப்பிக்கிற தருணம் வரை என்கிற நிலையாய் இருக்கலாம்.

    ReplyDelete
  17. தங்களது சேட்டையும், வாசகர்களின் சேட்டைடும் அபாரம்...

    ReplyDelete
  18. அருணா செல்வம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. வெங்கட் நாகராஜ் //

    வித்தியாசமான கற்பனை....//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. Avargal Unmaigal said...

    அழகான கற்பனை ...வித்தியாமான பதிவு உங்களின் கவிதைகளை ரசித்து வந்தாலும் இது போன்ற வித்தியாசமான உங்கள் படைப்புகள் மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. angelin //

    அண்ணா ! அபாரமான கற்பனை :))))))))//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  22. Seeni said...

    nalla karpanai //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. கரந்தை ஜெயக்குமார் //

    நல்ல கற்பனை //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. திண்டுக்கல் தனபாலன் //

    கலக்கல் கற்பனை.//திண்டுக்கல் தனபாலன் s.//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ //

    பணம்படுத்தும்பாடு. கற்பனையான அரசியல் நையாண்டி அருமை.//


    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  26. பால கணேஷ் //

    ம்ம்ம்... நீங்கள் எப்படி நடித்துக் காட்டியிருப்பீர்கள் என்பதை மனக்கண்ணில் காட்சியாக ஓடவிட்டு ரசித்தேன். கலாட்டாவான ரசனை உங்களுக்கு. அருமை ஐயா.//


    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. NKS.ஹாஜா மைதீன் //

    ஹா ஹா ஹா...சூப்பர்..//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. Ganpat //

    நல்ல பதிவெழுதி பெயர் வாங்கும்
    பதிவர்களும் இருக்கிறார்கள்.
    நல்ல பின்னூட்டம் கிடைப்பதாலேயே
    சிறப்புப் பெறும் பதிவர்களும் இருக்கிறார்கள்
    இதில் நான் இரண்டாம் வகை
    என் பதிவை விட தங்கள் பின்னூட்டத்தையும்
    அப்பாத்துரை மற்றும் சுபாஷிணி அவர்களின்
    பின்னூட்ட்டத்தையும் எதிர்பார்த்தே பலர்
    பதிவுக்கு தொடர்ந்து வருகிறார்கள்
    தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
    வித்தியாசமான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. Seshadri e.s. //

    சிரிக்க வைத்த கற்பனை! பகிர்விற்கு நன்றி!//


    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  30. விமலன் //

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. இரவின் புன்னகை //

    தங்களது சேட்டையும், வாசகர்களின் சேட்டைடும் அபாரம்.//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. அமைதிச்சாரல் //

    அட்டகாசமான கற்பனை.//


    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. நீங்கள் எல்லாம்
    எங்களை கிண்டலடித்து
    சிரித்துகொண்டிருங்கள்

    எங்களை மாறி மாறி ஆட்சி பீடத்தில்
    அமர்த்தி கொள்ளையடிக்க உரிமம்
    கொடுக்கும் உங்களின் அறியாமையை
    பார்த்து அழுவதா சிரிப்பதா என்று
    எங்களுக்கு தெரியவில்லை ?

    என்று

    அவர்கள் உங்களை பார்த்து சிரிப்பது
    என்று உங்கள் காதில் விழப்போகிறது?

    ReplyDelete
  34. Pattabi Raman,

    அவர்களுக்கு நான் சொல்வது..

    எதுவும் அறியாத பெரும்பான்மையோர் ,உங்களை மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்த்தி கொள்ளையடிக்க உரிமம்
    கொடுக்கிறார்கள்.

    எல்லாம் அறிந்த,எங்களைப்போன்ற,
    சிறுபான்மையினரோ,எங்களால் ஒன்றும செய்ய முடியாது என்பதையும் அறிந்து, கிண்டலடித்தாவது மனதை தேற்றிக்கொள்கிறோம்.

    ReplyDelete
  35. ரமணி ஸார்,

    உங்கள அபரிமிதமான அன்பிற்கும்,பரந்த மனதிற்கும்,தன்னடக்கத்திற்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கம்.
    நான் ஏற்கனவே சொன்னதுதான்...
    ஸ்ரீராமருக்கு ஏதோ ஒரு அணில் போல, ஸ்ரீ.ரமணிக்கு ஏதோ ஒரு Ganpat.

    அன்புடன்,
    Ganpat

    ReplyDelete
  36. நன்றி திரு கண்பட் அவர்களே
    காலத்தின் கோலங்களை
    ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளவும்

    அவைகளை நம் உள்ளத்தில்
    வசிக்க அனுமதித்தால்
    அவைகள் நம் மனதின்
    நிம்மதியை புசிப்பதொடு
    மட்டுமல்லாமல் நம்
    மகிழ்ச்சியையும்
    நசித்துவிடும்
    பின்னூட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  37. ஹை இது வித்தியாசமாய் இருக்கே

    மற்ற கட்சிகள் பற்றியும் சொல்லியிருக்கலாமே

    ReplyDelete
  38. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete