Monday, October 8, 2012

ஆத்திக நாத்திகப் பார்வை

நாத்திகன் இப்படி ஆரம்பித்தான்

"தொப்புள் கொடியிலிருந்து
ஒரு தாமரைக்கொடியாம்
அதிலொரு தாமரைப் பூவாம்
அதில் நான்கு முகங்களுடனும்
மனைவியுடன்
கையில் வேதப்புத்தகங்களுடன் ஒருவராம்
அவர்தான் படைப்பவராம்

கேட்கவே கேலிக் கூத்தாயில்லை "

ஆத்திகன் பதட்டமடையவில்லை

"படைப்பவன் எப்போதும்
நாற்திசைகளிலும் நடப்பதை
அறியும் திறன் படைத்தவனாகவும்
முன்னோர்களின் பொக்கிஷங்களைக் கற்று
கைப்பிடிக்குள் கொண்டவனாகவும்
எப்போதும் பக்கத் துணையாக
கற்றலையும் நுண்ணறிவையும் கொண்டவானகவும்
இருந்தால்தானே
நல்ல படைப்புகளை தர ஏதுவாகும்

கூடுதலாக
மார்க்ஸுக்கு வாய்த்த ஒரு
ஏங்கெல்ஸ்  போல
மலர் கைகளில் வைத்துத் தாங்கக் கூடிய
செல்வந்தனும் கருணை மிக்கவனும்
படைப்பாளின் திறனறிந்தவனும் இருந்தால்
கூடுதல் சிறப்புதானே "  'என்றான்

"என்ன சொல்ல வருகிறாய்
எனக்கேதும் புரியவில்லை '
எரிச்லுற்றான் நாத்திகன்   

" எந்தக் கதைக்கான காரணத்தையும்
 எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும்
புரிந்து கொள்ள முயன்றால்
இதுவும் புரியும்" என்றான் ஆத்திகன் 

 "அப்படியானால்
பிரம்மன் இருக்கிறான் என்கிறாயா
 பிரம்மன்தான் படைக்கிறான் என்கிறாயா "
ஆவேசப்பட்டான் அவன்

"இல்லையில்லை
அப்படிச் சொல்லவில்லை
படைப்பவன் பிரம்மன் போல்
திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
படைப்பவன் எல்லாம்
 நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "
அமைதியாகச் சொன்னான் இவன்


( அச்சப்பட வேண்டாம் அடுத்தது திருமால் )

81 comments:

  1. இல்லையில்லை
    அப்படிச் சொல்லவில்லை
    படைப்பவன் பிரம்மன் போல்
    திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
    படைப்பவன் எல்லாம்
    நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "
    //உண்மை//
    என்னுடைய பக்கத்தில் "தனிமை!"
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  2. அப்டிப்போடுங்க!!!

    பிரம்மாக்கள் நிறைஞ்ச உலகம் இது:-)))))

    ReplyDelete
  3. //படைப்பவன் எல்லாம் நிச்சயம் பிரம்மன் என்கிறேன்"//

    ஜூப்பர்.. பிரம்மாவே :-)

    ReplyDelete
  4. வணக்கம் ரமணி சார்..
    படைப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் அருமை..

    ReplyDelete
  5. Seshadri e.s.//

    தங்கள் முதல் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. சிந்தனை நன்று!

    ReplyDelete
  7. துளசி கோபால் //

    அப்டிப்போடுங்க!!பிரம்மாக்கள் நிறைஞ்ச உலகம் இது://

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. ♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!

    அருமை//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. அமைதிச்சாரல் //

    //படைப்பவன் எல்லாம் நிச்சயம் பிரம்மன் என்கிறேன்"//

    ஜூப்பர்.. பிரம்மாவே :-)//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. RAMVI //

    விளக்கம் அருமை..//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. புலவர் சா இராமாநுசம் //

    சிந்தனை நன்று!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. பார்வைகள் பலவிதம்..!

    இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதையே படைப்பு எனலாம்! அது சிந்தனைகளுக்கும் பொருந்தும்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. இதே போல் தான் அனைத்து தெய்வத் தத்துவங்களுமே ....
    உதாரணம் ..... இச்சா சக்தியும் , க்ரியா சக்தியும் [ energy ] தான் முருகனின்
    இரு மனைவியரும் என்பது ..... மேல் ஓட்டை உடைத்து அதன் உள்ளிருக்கும்
    பருப்பை எடுத்துச் சுவைக்கும் கலை அறியாதோருக்கு எல்லாமே நையாண்டி தான் ...
    நன்று சொன்னீர்கள்.

    ReplyDelete
  14. படைப்பதனால் நான் இறைவன் என்று கண்ணதாசன் அழுத்தமாய். பெருமையாய்க் குறிப்பிட்டார். பல விமர்சனங்களையும் எதிர் கொண்டார். நீங்கள் சொல்லியிருப்பது மெத்தச் சரி.

    ReplyDelete
  15. பிரம்மன் படைத்த
    இந்த உலகத்தில்
    ப்ரம்மாக்கள்தான்
    இருப்பார்கள்

    சிவ லோகத்தில்
    சிவ கணங்கள்
    இருப்பதைப்போல

    பிரம்மனோ சிவனோ
    அனைத்தும்
    அவரவர் மனதின்
    கற்பனை பாத்திரங்களே

    மனமுள்ள வரைக்கும்
    அனைவரும் இருப்பார்கள்
    வந்து போவார்கள்

    மனமிறந்தால் அனைவரும்
    மடிந்து போவார்கள்

    மாறாது இருப்பதையும்
    மாரிக்கொண்டிருப்பவைகளையும்
    சாட்சியாக
    இருந்துகொண்டு
    அனைத்தையும்
    கண்டு கொண்டிருக்கும்
    ஒரு பொருள் என்றும் மாறாது

    அதுதான் நீ என்று
    அறிகிறாயோ அன்று வரை
    மோதிக்கொள்ளுவார்கள்
    ஆத்திகனும் நாத்திகனும்
    உன் மனதில்

    ReplyDelete
  16. படைப்பின் கடவுள் பிரம்மன் வடிவம் உணர்த்திய உண்மை பற்றிய விளக்கம் அபாரம். உலகப் படைப்பும் அதுவே. எழுத்தாளன் படைப்பும் அதுவே . படைப்பாளியும் பிரம் ஆகின்றான். அவன் படைப்பின் தன்மை குறித்து. உங்கள் பக்கம் வந்தால் ஆராய்வு தளைக்கும்.நன்றி சார்

    ReplyDelete
  17. " எந்தக் கதைக்கான காரணத்தையும்
    எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும்
    புரிந்து கொள்ள முயன்றால்
    இதுவும் புரியும்"

    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  18. நல்ல சிந்தனை வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. ஓ! இப்படிக்கூட பிரம்மாவை கூறலாமோ....

    த.ம. 6

    ReplyDelete
  20. அருமையான சிந்தனை

    ReplyDelete
  21. ஆத்திகன் நாத்திகன் இடையே நிகழும் உரையாடலை சிறப்ப பதிவு செய்தமை பாராட்டுக்குரியன ஆனால் நாத்திகனை சினம் கொண்டவனாக கட்டுவது சற்று நெருடல் கவிதை சிறப்பான கருத்து மழை பொழியட்டும் பாராட்டுகள்

    ReplyDelete
  22. இல்லையில்லை
    அப்படிச் சொல்லவில்லை
    படைப்பவன் பிரம்மன் போல்
    திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
    படைப்பவன் எல்லாம்
    நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "

    நாசூக்காக தெளிவு படுத்தப் பட்ட
    உண்மை !..சிறப்பாக உள்ளது .
    வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி
    பகிர்வுக்கு .புதிய கதைத் தொடர்
    ஆரம்பமாகி உள்ளது நேரம் இருந்தால்
    முழுமையாக வாசித்து தங்கள் கருத்தினைத்
    தந்தால் மனம் மகிழும் .நன்றி .

    ReplyDelete
  23. படைப்பவன் இறைவனென்றால் நானும் கடவுளே. இதை என் வூட்டுக்காரர்கிட்ட வந்து சொல்லுங்கையா

    ReplyDelete
  24. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பமா?
    நால்வகை வர்ணங்களா!
    வேண்டவே வேண்டாம்!
    ஒரு கற்பனை பிரம்மனே...
    இந்தியாவை இந்த ஆட்டு ஆட்டுகிறது!

    ReplyDelete
  25. குழப்பமான கவிதை.

    நாத்திகன் படைப்பைப் பற்றிக் கேட்கவில்லை. ஏன் படைக்கும் கடவுள் அப்படி உருவகப்படுத்தப்படவேண்டுமென்றுதான் கேட்கிறான்.

    அதற்கு ஆத்திகன் ஆத்திகத்தனமாக கடவுள் ஏன் அவ்வுருவில் என்பதை விளக்காமல் மனிதர்களுக்கு ஜோடனையாக வைக்கிறான்.

    படைக்கும் கடவுள் பிரம்மா. அதுதான் சொல்லப்படுகிறது. நாத்திகனும் அதைத்தான் சுட்டிக் கேட்கிறான். கற்பனைகளிலும் ஏன் விபரீதக்கற்பனை என்ற தொனிதான் நாத்திகன் கேள்வியில் இருக்கிறது.

    அப்பிரம்மாப்பக்கத்தில் முன்னோர் எழுதிய பொக்கிஷங்கள் என்றால், பிரம்மாவைப்படைத்தது ஆர் கவிஞரே? முன்னோர்கள் கடவுளைவிட பெரிய ஆட்களோ! கடைசியில் நாத்திகனின் அடைப்படை வாதம்தான் ஜெயிக்கிறது இங்கே: கடவுளை மனிதன் படைத்தான்!

    ReplyDelete
  26. நல்ல சிந்தனை சார்...
    கடவுள் மனிதனை படைத்தாரோ இல்லையோ,நிச்சயமாக சொல்லுவேன் கடவுளை படைத்தவன் மனிதன் தான்...

    ReplyDelete
  27. முட்டையா...?
    கோழியா...?
    இல்லை இல்லை...
    அந்த முட்டையைச் செய்தவன் யாரு..?
    அந்தக் கோழியைச் செய்தவன் யாரு...?

    கவிதையைப் படித்ததும் எங்கெங்கொ செல்கிறது மனம்...!!

    நன்றி ரமணி ஐயா.

    ReplyDelete
  28. ரமேஷ் வெங்கடபதி //

    பார்வைகள் பலவிதம்..!

    இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதையே படைப்பு எனலாம்! அது சிந்தனைகளுக்கும் பொருந்தும் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    சுருக்கமான ஆயினும் அதிகப் பொருள்கொண்ட
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ஸ்ரவாணி //

    ..... மேல் ஓட்டை உடைத்து அதன் உள்ளிருக்கும்
    பருப்பை எடுத்துச் சுவைக்கும் கலை அறியாதோருக்கு எல்லாமே நையாண்டி தான் ...
    நன்று சொன்னீர்கள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. பால கணேஷ் //

    .......நீங்கள் சொல்லியிருப்பது மெத்தச் சரி. //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. Pattabi Raman //

    மனமுள்ள வரைக்கும்
    அனைவரும் இருப்பார்கள்
    வந்து போவார்கள்

    மனமிறந்தால் அனைவரும்
    மடிந்து போவார்கள்


    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. சந்திரகௌரி //

    படைப்பின் கடவுள் பிரம்மன் வடிவம் உணர்த்திய உண்மை பற்றிய விளக்கம் அபாரம்.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. இராஜராஜேஸ்வரி //

    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்..//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. திண்டுக்கல் தனபாலன் //

    நல்ல சிந்தனை வரிகள்..//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. கோவை2தில்லி //

    ஓ! இப்படிக்கூட பிரம்மாவை கூறலாமோ.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. NKS.ஹாஜா மைதீன் //

    super sir //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. குட்டன் //

    அருமையான சிந்தனை //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. பிரமனுக்கு அடுத்து திருமால் என்ன சொல்லப்போகிறார். :)) காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  39. படைப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் அருமை

    ReplyDelete
  40. படைப்பவனை பற்றிய தங்கள் சிந்தனை வரிகள் அருமை


    ReplyDelete
  41. மாலதி //

    . நாத்திகனை சினம் கொண்டவனாக கட்டுவது சற்று நெருடல் கவிதை சிறப்பான கருத்து மழை பொழியட்டும் பாராட்டுகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    (தங்கள் கருத்து யோசிக்கவைக்கிறது )

    ReplyDelete
  42. அம்பாளடியாள் //

    புதிய கதைத் தொடர்
    ஆரம்பமாகி உள்ளது நேரம் இருந்தால்
    முழுமையாக வாசித்து தங்கள் கருத்தினைத்
    தந்தால் மனம் மகிழும் .நன்றி

    நிச்சயமாக
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ராஜி //

    படைப்பவன் இறைவனென்றால் நானும் கடவுளே. இதை என் வூட்டுக்காரர்கிட்ட வந்து சொல்லுங்கையா//

    நிஜமாகவா நம்பாமல் இருக்கிறார்
    ஒருவேளை பிரம்மா என்றால்
    ஆண்பாலுக்கு மட்டும் பொருந்தும்
    என நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  44. passerby //

    குழப்பமான கவிதை.

    நாத்திகன் படைப்பைப் பற்றிக் கேட்கவில்லை. ஏன் படைக்கும் கடவுள் அப்படி உருவகப்படுத்தப்படவேண்டுமென்றுதான் கேட்கிறான்.//

    அப்படி ஏன் உருவகப் படுத்தினான்
    என்கிற சிந்தனையில் பிறந்ததுதான் இது
    அருமையான தெளிவான விரிவான
    பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  45. விஜயன் //

    நல்ல சிந்தனை சார்...
    கடவுள் மனிதனை படைத்தாரோ இல்லையோ,நிச்சயமாக சொல்லுவேன் கடவுளை படைத்தவன் மனிதன் தான்.//

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. அருணா செல்வம் //

    கவிதையைப் படித்ததும் எங்கெங்கொ செல்கிறது மனம்...!!நன்றி ரமணி ஐயா.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. மாதேவி //

    பிரமனுக்கு அடுத்து திருமால் என்ன சொல்லப்போகிறார். :)) காத்திருக்கின்றோம்.//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. Lakshmi //

    படைப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் அருமை //


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. r.v.saravanan //

    படைப்பவனை பற்றிய தங்கள் சிந்தனை வரிகள் அருமை //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. படைப்பவரெல்லாம் பிரம்மா தான்....
    அடுத்து திருமால் என்ன சொல்லப் போகிறார்....

    தெரிந்து கொள்ள ஆவலுடன்....

    த.ம. 12

    ReplyDelete
  51. அருமையான படைப்பு.

    ReplyDelete
  52. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. துரைடேனியல் //

    அருமையான படைப்பு.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. இலக்கிய படைப்புக்கும் பொருந்துமோ.....
    அருமை

    ReplyDelete
  55. இல்லையில்லை
    அப்படிச் சொல்லவில்லை
    படைப்பவன் பிரம்மன் போல்
    திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
    படைப்பவன் எல்லாம்
    நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "

    அருமையான சிந்தனை வரிகள்

    ReplyDelete
  56. சிட்டுக்குருவி //

    இலக்கிய படைப்புக்கும் பொருந்துமோ.....
    அருமை//


    நிச்சயமாகப் பொருந்தும்
    கவியரசர் கூட படைப்பதனால் என் பேர் இறைவன்
    எனத் தானே பாடி மகிழ்கிறார்
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. கரந்தை ஜெயக்குமார் //

    அருமையான சிந்தனை வரிகள் //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. படைப்பவன் எல்லாம்
    நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "//

    சும்மா நச்சுன்னு உண்மையை சொல்லிட்டீங்க குரு ....சூப்பர்...!!!!

    ReplyDelete
  59. அப்படி சொல்லுங்க

    ReplyDelete
  60. எல்லோரிடமும் பிரம்மா.... அருமையான சிந்தனை.

    ReplyDelete
  61. MANO நாஞ்சில் மனோ //

    சும்மா நச்சுன்னு உண்மையை சொல்லிட்டீங்க குரு ....சூப்பர்...!!

    தங்கள் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. முத்தரசு (மனசாட்சி) //

    அப்படி சொல்லுங்க //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. ஸ்ரீராம். //

    எல்லோரிடமும் பிரம்மா.... அருமையான சிந்தனை.//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  64. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. சரியான பார்வை.
    எந்த நாத்திகனும் முழுமையான நாத்திகனல்ல.எந்த ஆத்திகனும் முழுமையான ஆத்திகனும் அல்ல.

    ReplyDelete
  66. நாற்த்திசைகளிலும் அறியும் புலன் பெற்ற மனிதர்கள் அமைவது கடினமே/

    ReplyDelete
  67. T.N.MURALIDHARAN //.

    சரியான பார்வை.
    எந்த நாத்திகனும் முழுமையான நாத்திகனல்ல.எந்த ஆத்திகனும் முழுமையான ஆத்திகனும் அல்ல.//


    தங்கள் வரவுக்கும்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. விமலன் //

    நாற்த்திசைகளிலும் அறியும் புலன் பெற்ற மனிதர்கள் அமைவது கடினமே/



    அன்றைய மனிதர்களுக்கு புலன்
    இன்றைய மனிதர்களூக்கு கருவி
    அவ்வளவே வித்தியாசம் என நினைக்கிறேன்
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. படைப்பவன் பிரம்மா தான் ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  70. தலைப்பு என்னை பலவிதமாக யோசிக்கவைத்தது ரமணிசார்... கவிதை வரிகளை ஒருமுறை, இரண்டுமுறை, மீண்டும்.... மீண்டும் வாசிக்கவைத்தது.... நான் யோசித்தது சரி என்றால் இங்கே கடவுள்பக்தி உள்ளவரைப்பற்றியோ அல்லது கடவுளே இல்லை என்போர் பற்றியோ வாதம் இல்லை என்று தோன்றுகிறது....

    ஆத்திகப்பார்வை..... எல்லாச்செயலுக்கும் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பவைப்பது..... நாத்திகப்பார்வை.... இல்லை... அப்படி இல்லை... நாம் தான் சக்தி.... நாம் தான் படைப்பது என்று எதிர்ச்சொல் சொல்வது.....

    பிரம்மன் என்று இங்கே குறிப்பிட்டிருப்பது படைப்புகள் படைக்கும் அத்தனை படைப்பாளிகளையும் தான் என்று நான் நினைக்கிறேன்.... குழந்தையை பெற்றுத்தரும் தாயும் குழந்தைக்கு தெய்வமே.. ப்ரம்மனே... சூக்‌ஷுமத்தை அறிந்தவர் மனிதரிலும் மேலாக உயர்வாக கருதப்படுவர்....

    தன் படைப்புகளை பகிரும் ஒவ்வொரு எழுத்தாளனும் ப்ரம்மனே... என்று தொடங்குகிறது வரிகள்....

    நாத்திகப்பார்வை கொண்டவர் படைப்பாளியை ஏற்றுக்கொள்வதில்லை.. அவர் படைப்பதையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் கருத்தை அளிக்காமல் கேலிக்கூத்தாகச்சொல்லி படைப்பவரின் மனம் நோகவைக்க செய்யும் யுக்தியாக இருந்தால்.... ஆத்திகப்பார்வைக்கொண்டவர் எதிர்க்காமல், சண்டையிடாமல் பொறுமையாக அதன் காரண காரியங்களை விளக்குவதில் தொடர்கிறது..... மிக அருமையாக... மிக அற்புதமாக..... ஆளைப்பார்க்காதே... அவர் செயலைப்பார்..... ஆளைப்பார்த்து எடைபோடாதே... அவர் திறமைகளைப்பார்த்து கற்றுக்கொள்... பாராட்டவும்.... படிப்பினையும்..... என்று சொல்லவைக்கிறது ஆத்திகப்பார்வைக்கொண்டவர் சொல்லும் ஒவ்வொரு நச் கருத்துள்ள சொற்கள்....

    நம்புவோருக்கு கல்லும் தெய்வம்.... நம்பாதவருக்கோ தெய்வம் எதிரில் வந்தாலும் சிவில் ஐடி வெச்சிருக்கியா? என்று கேட்கவைக்கும் கோணம்....

    ReplyDelete
  71. படைப்பவன்... அதாவது ஒரு எழுத்தாளனோ, அல்லது சிற்பக்கலையில் தேர்ச்சிப்பெற்றவனோ அல்லது கவிஞனோ, அல்லது ஓவியனோ, மிகப்பெரிய பொறுப்பில் வகிப்பவனோ..... ஒவ்வொரு படியாக ஒவ்வொரு அங்கமாக கடந்து அதன் நல்லவை கெட்டவை, அதன் பயன்கள், அதன் நிறைகள் குறைகள். குறைகள் என்றால் தீர்க்க வழிகள் இப்படி எல்லாமே கடந்து வந்த ஒருவரால் மட்டுமே ப்ரம்மாவாகமுடியும்... ஒரு கம்பனியில் தொழிலாளியாக இருப்பவர் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் மானேஜராகவும் முடியாது.... முடிவுகளை சடுதியில் சொல்லவும் இயலாது... தீர்வுகளை தர இயலாது... மானேஜர் இடத்துக்கு வரனும்னா... நாலும் நலம்பெற கற்று... அனுபவங்களைப்பெற்று.... முண்ணனியாக வந்து மானேஜர் இடத்துக்கு வந்தப்பின்னர்... தொழிலாளியின் வலியும் அறிவார்... அதற்குரிய தீர்வையும் தருவார்... தொழிலாளியின் உழைப்பையும் திறமையையும் மதிப்பார்... அதற்கேற்றபடி ஊதியத்தையும் உயர்த்திக்கொடுப்பார்... எந்த ஒரு காரியம் எடுத்துக்கொண்டாலும் அதில் முழுமையாக தேர்ச்சிப்பெற்று முதிர்ந்த ஒருவரால் தான் அதை திறன்பட நடத்த இயலும்...

    ஒரு எழுத்தாளனாக இருந்தால் சுற்றும் புறமும் நடக்கும் நிகழ்வுகளை கண் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மனமும் மூளையும் ஒருசேர சேகரிக்கும் தகவல்களை வேகமாக ஒரு கணிணியின் ஆற்றலுடன் சுவாரஸ்யமாக மாற்ற இயலும்.... அதை எல்லோரும் ரசிக்கும் விதமாக படைக்கவும் விருந்தாக்கவும் முடியும்....அப்படி அல்லாது நாலு பேர் பார்க்கும் ஒரு காட்சி அந்த நான்கு பேரில் ஒருத்தர் எழுத்தாளனாக இருந்தால் அவர் மனதில் கதையாகவோ கட்டுரையாகவோ அந்த காட்சி முழுமைப்பெறும்... சிற்பக்கலையாளனோ சிற்பம் வரிப்பான்.... கவிஞரோ கவிதை வரிகளில் கருத்தை உள்ளடக்கி தன் திறனையும் கற்பனையையும் சேர்த்து அதை அழகிய கவிதையாக படைத்துவிடுவார்... ஓவியனோ அதை இன்னும் தன் திறனையும் கூட்டி ஓவியமாக படைத்துவிடுவார்...

    ReplyDelete
  72. " எந்தக் கதைக்கான காரணத்தையும்
    எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும்
    புரிந்து கொள்ள முயன்றால்
    இதுவும் புரியும்"


    ஆமாம் எதுவும் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் அமைகிறது.. மனிதன் தெய்வமாகிறதும் மனிதன் மிருகமாகிறதும் மனிதன் மனிதநேயத்துடன் இருப்பதும்.....

    புரிந்து அறிபவனே புத்திசாலியாகிறான்
    அறிந்து தெளிபவனே அறிஞனாகிறான்
    எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருப்பவனே
    ஞானியாகிறான்....

    மூன்றுக்குள்ள வித்தியாசம் இந்த கவிதைப்பொருளில் அடங்கிவிட்டது ரமணிசார்....

    காரணம் இல்லாமல் காரியமும் இல்லை கதையும் இல்லை....
    படைப்பவன் காரணம் தெரியாமலா கருவை கதையாக்கி படைத்திருப்பான்? கவிதையாக்கி படைத்திருப்பான்? அதை உணரும் சக்தி வேண்டுமெனில் அந்த படைப்பவனின் கண்ணோட்டத்தோடு பார்க்கும் சக்தி வாசிப்போருக்கு அவசியப்படுகிறது....

    அர்த்தம் இல்லாத எதுவும் அவசியத்திற்கில்லாமல் போய்விடும்....

    சிந்திக்க தெரிந்தவன் சிந்தனை அலைகளை எப்போதும் தன்னைச்சுற்றி மிதக்கவிடுவான்.... தன் பயனுக்கு என்று வரும்போது சட்டென அதை உபயோகப்படுத்திக்கொள்வான்....

    எதையும் உள்நுழைந்து ஆராய்ந்து அறிந்து தெளிந்து புத்திசாலியாக இருப்பவன் கேள்விகள் கேட்பான்... எதிர்க்க அல்ல... தன்னை இன்னும் பண்படுத்திக்கொள்ளவும்... சமநிலையில் வைத்துக்கொள்ளவும்... அறிந்ததை தனக்கு பயனுள்ளதாகவும்....

    திறமை உள்ளவனே படைக்கவும் ஆர்வம் காட்டுகிறான்...
    ” படைப்பவன் எல்லாம் பிரம்மன் என்றேன் “

    என்ன ஒரு உறுதியான வரி இது... ஆமாம்... தெரிந்தவன் தான் களத்தில் குதிப்பான்... வெற்றிக்கோப்பையை மீட்டு வருவான்.... தெரியாதவன் கற்கும் ஆவலில் இருந்தால் அவனும் படைப்பவனாவான் கற்றுத்தேர்ந்து....

    அட்டகாசமான தலைப்புலத் தொடங்கி வாசிப்போர் எல்லோரையுமே சிந்திக்கவைத்த ஒவ்வொரு வரிகளும் க்ளாஸ் ரமணிசார்....அன்புவாழ்த்துகள் ரமணிசார்... வாசிப்போரையும் சிந்திக்கவைத்தமைக்கு...

    ReplyDelete
  73. kovaikkavi //

    படைப்பவன் பிரம்மா தான் ஐயா.//

    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete

  75. மஞ்சுபாஷிணி //

    தங்கள் பின்னூட்டத்தினால் தான்
    எனது படைப்புகள் பெருமை கொள்கின்றன
    என உறுதியாகச் சொல்லலாம்.
    பல சமயங்களில் சரியான அலைவரிசையில்
    சிந்திப்பவர்களுக்கு தூரம் ஒரு பொருட்டில்லை
    என உணர்ந்து கொண்டேன்.
    இன்னும் ஆழமாக சிந்திக்கத் தூண்டும்
    தங்கள் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. அருமை.
    நன்றி சார்.

    ReplyDelete
  77. Rathnavel Natarajan //

    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete