Wednesday, November 28, 2012

சாணக்கியத் தனத்தை தொடருங்கள்


அரசியல் வித்தகரே
தமிழகத்துச் சாணக்கியரே
எந்தச் சோதனையையும் சொந்தச் சாதனையாக்கி
மக்களை முட்டாளாக்குவதை
கைவந்தக் கலையாகக் கொண்ட
தமிழகத்தின் மூத்தத் தலவரே

இப்போதும் எங்களை மண்ணைக் கவ்வ விட்டு
நீங்கள்  வெற்றி வாகை சூடியதை எண்ணி எண்ணி
எத்தனை மகிழ்வு கொள்கிறோம் தெரியுமா ?

அன்னிய முதலீடு ஆபத்தானதுதான்
பல லட்சம் பேர் வாழ்வாதாரம்
பாதிக்கப்படக் கூடும்தான்
அதற்காக மந்திரியாயிருக்கிற மகனை
விட்டுக் கொடுக்கமுடியுமா ?
சட்டத்தின் கோரக்கைகள் தேடுகிற
பேரனைக் காக்க வேண்டாமா?
இன்னும் மகள் பிரச்சனை
நில ஆக்கிரமிப்புப் பிரச்சனை என
பூதாகாரமாய் ஆயிரம் பிரச்சனை இருக்க
மக்கள் பாதிப்புக்காக
இருக்கிற பதவியையும் விட்டு விட
நீங்கள் என்ன உள்ளூர் அரசியல்வாதியா ?

கடலில் தூக்கிப்போட்டாலும்
எங்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்
என எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
எப்படி அடித்தாலும் தாங்கிக் கொள்ளும்படியான
தடித்த தோள்களைப் பெற்ற நாங்கள்
இதையும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்

மருமகன் இறந்த பின்புதான்
வாஜ்பாயீ தலைமையிலான அரசு
ஒரு மதசார்புள்ள கட்சியின் அரசு என்பதை
எத்தனைத்  தெளிவாகப் புரிந்து கொண்டு
எங்களுக்கும் புரிய வைத்தீர்கள்
அதைப் போன்றே
கடைசி ஆறு மாதத்தில்
இவர்களுக்கு எதிரான ஒன்றை
கண்டுபிடிக்காமலா போய்விடுவீர்கள் ?
நீங்கள் சொல்வதை
நாங்களும் நம்பாமலா போய்விடுவோம்

சில ஆண்டுகளாக உங்களை
குடும்பத் தலைவராக பார்த்துப் பழகிய நாங்கள்
இந்த  முடிவுக்கு குழம்பவில்லை
தங்களை அரசியல் தலைவராக
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்
தங்கள் முடிவால் குழம்பித் தவிக்கிறார்கள்
அவர்களை அப்போது
சரிபண்ணிக் கொள்வோம் தலைவரே
இப்போது தங்கள்
சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
முத்தமிழ் வித்தகரே


31 comments:

  1. சாணக்கியம் சாணமாகி நாறிக் கொண்டிருக்கிறது.....

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்...
    tm2

    ReplyDelete
  3. தன்னிலை நிலைக்க
    யாவரையும்
    எந்த நிலைக்கும்
    தள்ளக் கூடிய
    பெருந்தன்மை வாய்ந்தவர்....

    வாழட்டும் நூறாண்டு...

    ReplyDelete
  4. அரசியல் கவிதையா நாட்டு நடப்புகளின் நிதரிசனம் தெரியுது.

    ReplyDelete
  5. இப்போதெல்லாம் அவரது முடிவுகள் குழப்பத்தில் இருப்பதை போலத் தோன்றுகிறது..

    ReplyDelete
  6. எதையோ எதிலோ தோய்த்து அடித்ததை போன்ற வரிகள். ஆனால் உறைக்குமா என்பது????????

    ReplyDelete
  7. மிக மிக சரியாய் சொன்னிங்க.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. //சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
    முத்தமிழ் வித்தகரே//
    ஒரே ஒரு எழுத்துப்பிழை..

    சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
    முத்தமிழ் வித்தவரே

    என்றிருக்க வேண்டும்!

    ReplyDelete
  9. சரியாச் சொன்னீங்க....

    த.ம.5

    ReplyDelete
  10. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

    ReplyDelete
  11. ஆக அவருக்கு அடுத்த தேர்தலில் 13 ஓட்டுக்கள் குறையும் என்பது நிச்சயம்.

    ReplyDelete
  12. எனக்கு புரிஞ்சுடுச்சு

    ReplyDelete
  13. தெளிவான வரிகள் .........

    ReplyDelete
  14. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ம்ம்... ஐயா.

    ReplyDelete
  15. பதவி அதிகாரம் பணம் பலம் ...:(

    ReplyDelete
  16. குடும்பம்....குடும்பம்....குடும்பம்....குடும்பம்.... குடும்பத்தினருக்கு எல்லோருக்கும் பதவி ......பணம்.... பதவி .......பணம்..... பதவி ......பணம்..... பதவி ......பணம்..... பதவி ......பணம்..... அப்போ தமிழன்? இலவச அரிசி, அது ஜீரணிக்க சாராயம், கல்லீரல் காலி, அரசு மருத்துவ மனை அப்படியே நேரா கண்ணம்மா பேட்டை. இலங்கைத் தமிழன், கேள்வியே இல்லை, நேரா புதைக்கப் படவேண்டியவர்கள். எப்பேர்பட்ட தலைவனய்யா தமிழ்நாட்டுக்கு?

    ReplyDelete
  17. நேர்பட உறைப்பதுபோல் நயமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்க தமிழினம்

    ReplyDelete
  18. கடலில் தூக்கிப்போட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் நீங்கள் ஏறிச்செல்லலாம்..

    (உங்களைக் கவிழ்ககாமல் விடமாட்டேன் என்று எங்கோ படித்த நினைவு)

    அதனால் தான்அவர் தலைவராக இருக்கிறார்.

    ReplyDelete
  19. oh! ..politics.....good
    ..I read it.
    Thank you.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  20. ஆஹா ! அருவி போல் கொட்டுகிறது வார்த்தைகள்

    சமூகம் விழிப்புணர்வு பெறட்டும்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. ரமணி ஸார்,

    உங்கள் பதிவுகளில் நடப்பு அரசியல் பற்றிய கருத்துக்களை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

    ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியல்வாதி,பழம் தின்று கொட்டைப்போட்ட ஒரு டைனோசார்.ஈர்க்குச்சியால் அடிப்பதால் பயனேதுமில்லை.
    சிலபேர்களை எப்பொழுதும்,
    பலபேர்களை சிறிது காலமும்,
    ஏமாற்றி வியாபாரம் நடத்தும்,
    ஒரு கைதேர்ந்த வியாபாரி.

    எவ்வளவு முயன்றும்,
    'ம்'
    அவரை மாற்றமுடியவில்லை.
    இனி
    'ன்'மனது வைத்தால்தான்
    நமக்கு விடியல்..

    ReplyDelete
  22. நன்று சொன்னீர் அய்யா நன்று சொன்னீர்

    ReplyDelete
  23. பின்புலம் புரியாமலும் ரசிக்க முடிகிறது என்றால் பாருங்களேன்!!

    ReplyDelete
  24. என்ன செய்ய உலகமே அதை நோக்கித்தான் பயணிக்கிறது. நல்லா சொல்லிருக்கீங்க. அருமை.

    ReplyDelete
  25. சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
    முத்தமிழ் வித்தகரே

    ஏமாறக் காத்திருப்போம் !

    ReplyDelete
  26. கடலில் போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பார்!அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்.

    ReplyDelete
  27. எதிர் கட்சியாய் இருந்தால் எதிர்பார்
    ஆளும் கட்சி ஆதரித்தே ஆக வேண்டிய நிர்பந்தம்

    வவ்வால் வார்த்தை எடுத்து கொடுத்திருப்பார்
    முத்தமிழ் அறிஞர் முன் மொழிந்திருப்பார்

    ReplyDelete

  28. வணக்கம்!

    முத்தமிழின் வித்தகரின் மூளை வீச்சில்
    முக்கோடித் தேவா்களும் தோற்றே போவார்!
    புத்தமிழில் சொல்லேந்திச் சாலம் காட்டிப்
    புவிப்பந்தைக் கோமணத்தில் முடியப் பார்ப்பார்!
    கொத்தழிவில் தமிழினத்தார் கிடந்த போது
    சொத்தழியாச் சுகவாழ்வைக் காவல் செய்வார்!
    பித்தழியாப் பிறப்புகளோ வாழ்த்து பாடும்!
    முத்துவிழா! பவளவிழா! வெக்கக் கேடு!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    ReplyDelete