Monday, December 3, 2012

சில சந்தேகங்கள்


 சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?


23 comments:

  1. சிந்திக்க வைக்கிறீர்கள்...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. சரியான சந்தேகங்கள் தான்..

    ReplyDelete
  3. மனதில் தெளிவு இருந்தால் ஆண்டவன் கூடத் தேவை இல்லைதான்! :)))

    ReplyDelete
  4. //சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
    புத்திசாலிகளாய் ஜொலிக்க
    உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
    கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
    பள்ளியில் சேரவே
    தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?//


    ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடியே இதுக்கான பதிலை தனது ஆராய்ச்சியின் முடிவாக‌
    டேனியல் கோல்மென் சொல்லிவிட்டார்.
    நாமெல்லாம் ப்ரிட்டிஷ் லெகசி. ஒரு ஐ.க்யூ தான் லெவல் தாண்டினால் தான் புத்திசாலி.
    இந்த அடிப்படையில் பார்த்து பழகி புளித்துப்போய் விட்டது. இருந்தாலும் சில சமயம்
    பிரமித்துப்போயும் இருக்கிறோம். ஐ.க்யூ 40 கீழே. ஐ.க்யூ 150 இருக்கிற 150 பேர் அடிமாடு மாதிரி
    வேலை செய்கிறான்.
    What decides is not IQ but EQ
    இப்ப ஐ.க்யூ இல்ல. இ.க்யூ. எமொஷனல் கோஷன்ட்.
    ஒரு காரியத்தை எடுத்து அதை வெற்றிகரமா செய்யணும்னா அதற்கு தெரியவேண்டியதெல்லாம்
    அன்னிக்கு வள்ளுவர் சொன்னாரே அதுதான்.

    இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன் கண் விடல்.

    யார் யாரை எங்கெங்கே என்னென்ன செய்ய வச்சா
    உசர உசர போகலாம்.

    இதுதான் இ.க்யூ வின் பேஸிக் கன்டென்ட். ப்யூர் லாஜீஸ்டிக்ஸ்.

    அது இருக்கட்டும். உங்களுக்கு அந்த இ.க்யு லெவெல் என்னவென டெஸ்ட் பண்ணிக்கொள்ளவேண்டுமென்றால்
    இங்கே செல்லவும்.

    http://psychology.about.com/library/quiz/bl_eq_quiz.htm

    சுப்பு தாத்தா.
    எச்சரிக்கை.
    பின் குறிப்பு: பதிலளிப்பதில் உங்களுக்குத்தேவை அசாத்ய பொறுமை.

    ReplyDelete
  5. yosikka vachideeeenga ayyaa........

    ReplyDelete
  6. சிந்திக்க வைக்கும் வரிகளும்
    வினாவும் (4)

    ReplyDelete
  7. அற்புதமான சிந்தனை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்கள்...? என்று கேட்பது போல் பதிலை உள்ளே வைத்து கேள்வி கேட்டது அருமை இரமணி ஐயா.

    ReplyDelete
  9. பதில் கிடைத்தால் நல்லது !

    ReplyDelete
  10. சிந்திக்கவைத்தகவிதை நன்று

    ReplyDelete
  11. சிந்திக்க தூண்டும் வரிகள்

    ReplyDelete
  12. ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
    மட்டும்தானா ? அல்லது
    மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ? எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் கேள்வி . அருமை !

    ReplyDelete
  13. ஸ்ரீராம். said...
    மனதில் தெளிவு இருந்தால் ஆண்டவன் கூடத் தேவை இல்லைதான்! :)))

    இவர் கருத்தை நானும் ஏற்கிறேன்.

    ReplyDelete

  14. ஆண்டவன் மனிதனுக்குத் தேவை இல்லை. ஆனால் ஆண்டவன் பெயரில் அழுத்தமான கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. மறுப்பதறில்லை. சுப்புத்தாத்தா சொல்லும் இ.க்யூ. பெரும்பாலும் இதன் அடிப்படையில் பெறப்படுகிறது.

    ReplyDelete
  15. சிந்திக்கத் தூண்டும் வரிகள்....

    ReplyDelete
  16. தன்னை மீறி இங்கு யாரும் இல்லை என்ற செருக்கை மனிதரிடம் இருந்து அகற்ற அவதாரங்கள் தேவைப்பட்டிருக்கலாம்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  17. அன்பின் இனிய இரமணி! அன்று என் இல்லம் வந்து சென்றமைக்க மிக்க நன்றி! இக்கிருந்து சென்ற பயணத்தின் போது நெஞ்சில் ஏற்பட்ட கருவா !கவிதையாக வந்துள்ளது! நன்று!

    ReplyDelete
  18. நல்ல சந்தேகம்தான்! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  19. நெற்றியடி சந்தேகம் தான் அய்யா

    ReplyDelete
  20. சிந்திக்க வைக்கின்றது.

    ReplyDelete
  21. //நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
    அதிகம் சொல்லித் தருமோ ?//

    எனக்கும் இந்த எண்ணம் தோன்றும் அவ்வப்போது....

    சிறப்பான சிந்திக்க வைத்த கவிதை.

    த.ம. 10

    ReplyDelete
  22. சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு சந்தேகங்கள் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  23. சுப்புத் தாத்தாவின் பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete