Monday, December 24, 2012

"காலத்தை வென்றவன் காவியமானவன் "

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்


41 comments:

  1. மக்கள் திலகத்தை நினைவு கூர்ந்தது நன்று (2)

    ReplyDelete
  2. காலத்தை வென்றவரை காவியமானவரை
    இந்த நாளில் நன்றியோடு நினைவு கூருவோம்.
    இனிய நத்தார் - புதுவருட வாழ்த்து.

    அன்படன் வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. ரொம்ப காலத்திற்கு முன் படித்த ஒரு கேள்வி பதில் ஞாபகம் வருகிறது..
    கேள்வி:MGR மேனன் னாமே?
    பதில்:ஆம்..அவர் ஒரு phenomenon!
    =================================
    இது ஒரு வேளை உங்கள் ஐயத்தை தீர்க்கும் என நினைக்கிறேன்,ரமணி ஸார்!..

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய் இருந்ததால்தால் அவர் மகள் திலகமாக இருக்க முடிந்தது

    ReplyDelete
  6. எல்லாவற்றையும் தாண்டிய ஏதொ ஒன்று இன்றைய தலைவர்களிடம் இல்லாதது அவரிடம் இருந்தது. நல்ல பதிவு

    ReplyDelete
  7. மிகவும் அருமை! தலைவரை நினைவுகூர வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. என்றென்றும் மக்களின் மனதில் காவியமாய் இடம் பெற்றிருக்கும் மக்கள் திலகத்திற்கு, தங்களின் கீதாஞ்சலி அருமை. மக்கள் திலகத்தின் வெற்றிக்கும் நீடித்தப் புகழுக்கும் காரணம் என்று நான் நினைப்பது, மக்கள் யாரும் அவரை ஒரு நடிகராகவோ, அரசியல் வாதியாகவோ, முதல்வராகவோ எண்ணவில்லை. தங்களின் வீட்டில் உள்ளவர்களுள் ஒருவராக எண்ணினர். அதுதான் எம்.ஜி.ஆர். நன்றி

    ReplyDelete
  9. சிறப்பான கவிதை, சரியான நேரத்தில் சரியான கவிதை.

    ReplyDelete
  10. ஆத்மா //

    தங்கள் உடன் முதல் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. kovaikkavi //


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  12. Ganpat //

    :ஆம்..அவர் ஒரு phenomenon!
    =================================
    இது ஒரு வேளை உங்கள் ஐயத்தை தீர்க்கும் என நினைக்கிறேன்,ரமணி ஸார்!..//

    சுருக்கமாகவும் மிகச் சரியாகவும் சொன்னீர்கள்
    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    தெளிவுட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. முத்தரசு //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  14. T.N.MURALIDHARAN //

    எல்லாவற்றையும் தாண்டிய ஏதொ ஒன்று இன்றைய தலைவர்களிடம் இல்லாதது அவரிடம் இருந்தது. நல்ல பதிவு//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    தெளிவுட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. s suresh //

    மிகவும் அருமை! தலைவரை நினைவுகூர வைத்தமைக்கு நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  16. கரந்தை ஜெயக்குமார் //

    காரணம் என்று நான் நினைப்பது, மக்கள் யாரும் அவரை ஒரு நடிகராகவோ, அரசியல் வாதியாகவோ, முதல்வராகவோ எண்ணவில்லை. தங்களின் வீட்டில் உள்ளவர்களுள் ஒருவராக எண்ணினர். அதுதான் எம்.ஜி.ஆர். நன்றி//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    வ்ரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. semmalai akash //


    சிறப்பான கவிதை, சரியான நேரத்தில் சரியான கவிதை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. எம்ஜிஆர் என்றால் எம்ஜிஆர்தான். நானும் அவரது ரசிகன்தான்.அவரை நினைவு கூர்ந்த கவிஞருக்கு நன்றி!

    ReplyDelete
  19. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. தன் வீட்டு மக்களுக்காக சிந்திக்காமல் நாட்டு மக்களுக்காக சிந்திததால்தான் அவர் மக்கள் திலகம் ஆனார்.

    ReplyDelete
  21. "என் ராஜபாட்டை"- ராஜா //

    தன் வீட்டு மக்களுக்காக சிந்திக்காமல் நாட்டு மக்களுக்காக சிந்திததால்தான் அவர் மக்கள் திலகம் ஆனார்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    வ்ரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. வணக்கம்! ஐயா, தங்களின் இரு பதிவுகளை ஆவலுடன் நாளைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். மிக்க நன்றி! தொடர்ந்து கருத்திட்டு வழி நடத்துங்கள்!

    ReplyDelete
  23. //காலத்தை வென்றவரை காவியமானவரை
    இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
    அவர் புகழ் இன்றுபோல் என்றும் வாழ்க என
    வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்//
    ஆம். அவர் புகழ் என்றும் வாழ வேண்டுவோம்.

    ReplyDelete
  24. ஏழைப் பங்காளன‍க அவர் என்றும் இருந்ததால் காலத்தை வென்று இன்றும் காவியமாக வாழ்கிறார்! உண்மை தான் இரமணி!

    ReplyDelete
  25. உஷா அன்பரசு //

    வணக்கம்! ஐயா, தங்களின் இரு பதிவுகளை ஆவலுடன் நாளைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். மிக்க நன்றி! தொடர்ந்து கருத்திட்டு வழி நடத்துங்கள்!//

    மிக்க நன்றி
    தங்களால் அறிமுகம் செய்யப்பட்டதில்
    அதிக பெருமிதக் கொள்கிறேன்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. கே. பி. ஜனா...

    ஆம். அவர் புகழ் என்றும் வாழ வேண்டுவோம்.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  27. Seeni //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. புலவர் சா இராமாநுசம் //

    ஏழைப் பங்காளன‍க அவர் என்றும் இருந்ததால் காலத்தை வென்று இன்றும் காவியமாக வாழ்கிறார்! உண்மை தான் இரமணி!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. பதவி இருந்தும் அவரிடம்
    பணிவும் இருந்தது!

    இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  30. அருணா செல்வம் //

    பதவி இருந்தும் அவரிடம்
    பணிவும் இருந்தது!//

    தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. மறக்கமுடியாத மாமனிதர் !

    ReplyDelete
  32. ஹேமா //

    மறக்கமுடியாத மாமனிதர் !/

    தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  33. தீர்க்கமான வரிகள்..அவர் மக்களுக்கு உதவிகள் செய்தார் என்ற வார்த்தைகளை விட அவர் மக்களுக்கு தீங்குகள் செய்யவில்லை என்ற வார்த்தையால் அவரது புகழ் ஓங்கி ஒலிக்கின்றது..

    ReplyDelete
  34. மக்கள் தலைவன்றுக்கு உங்கள் கவிதைப் புகழாரம் மிக அருமை!

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. கவிப்ரியன் ..

    மக்கள் தலைவன்றுக்கு உங்கள் கவிதைப் புகழாரம் மிக அருமை!///

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  37. சிவா //
    தீர்க்கமான வரிகள்..அவர் மக்களுக்கு உதவிகள் செய்தார் என்ற வார்த்தைகளை விட அவர் மக்களுக்கு தீங்குகள் செய்யவில்லை என்ற வார்த்தையால் அவரது புகழ் ஓங்கி ஒலிக்கின்றது..//

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  38. காலத்தை வென்றவரைப் பற்றி அழகாய் கவிதை ஆக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. கோமதி அரசு //

    காலத்தை வென்றவரைப் பற்றி அழகாய் கவிதை ஆக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/
    //

    ReplyDelete