Wednesday, April 3, 2013

உள்ளும் புறமும் ( 4 )


தலைவரின் சிலைக்கு மேல்
அழுது வடிந்து கொண்டிருந்த தெரு விளக்கும்
குளிர்ந்த காற்றும் சில்லு வண்டுகளின் ஓசையும்
ஏழு மணி இரவை பத்து மணிபோல்
உணரச் செய்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.

ஆயினும் நான் எப்போதும் இரவு எட்டு மணிக்கே
அலுவலகத்திலிருந்து வீடு வந்து பழகி இருந்ததால்
இன்னும் சிறிது நேரம் இந்த இடம் குறித்து
இவனிடம் மிகச் சரியாகப் புரிந்து கொள்வோம்
என முடிவு செய்தேன்

அவனும் தனக்குத் தெரிந்த தகவல்களை பிறருக்குச்
சொல்வதில் பெருமை கொள்பவனாகத் தெரிந்தான்.
கொஞ்சம் போதையிலும் இருந்ததால் கொஞ்சம்
உண்மையைப் பேசுவான் போலவும் பட்டது

காலை மாற்றிப் போட்டு சௌகரியமாக அமர்ந்தபடி
அவனே பேச்சைத்  தொடர்ந்தான்

"அதோ கிழக்கே தெரியிற இருபது வீடும்
அரசாங்க வீடுதான்.நாங்க எல்லாம்
கார்ப்பபரேசன் கூலிகள்
இந்தப் பொட்டல் காட்டில் மாடி வீடுகள்
கட்டும் வரை இங்கு குடி இருக்கும்படி ஓடு வீடு
போட்டுக் கொடுத்தாங்க. தண்ணீர் கிடையாது
விளக்குக் கிடையாது ரோடு கிடையாது
இருந்தாலும் வாடகை கம்மி என்பதால
சகிச்சிக்கிட்டோம்

முதல் வருஷம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை
இரண்டாம் வருஷம் இந்தப் பொட்டல் காடெல்லாம்
கருவேலம் முள் வளர்ந்து காடு மாதிரி
ஆகிப் போனதால முதல்ல ஒருத்தன் மட்டும்
சாராயம் விற்க ஆரம்பிச்சான்

நாங்க எல்லோரும் குடிப்பவர்கள்தான் அதுவும்
உசிலம்பட்டி காளப்பன்பட்டி சரக்கு.
நாங்க அடிமையாகிப் போனாம் அடுத்து அடுத்து
ஒவ்வொருவனாகக் கடை போட்டு விற்க ஆரம்பிக்க
டவுனில் இருந்து கூட்டம் சேரச் சேர பிரச்சனையும்
வர ஆரம்பித்துவிட்டது

முதல்லே அதிக போதையிலே சிலர்
ரோட்டில கிடந்தாங்க
ரோட்டில் மல்லுக் கட்ட ஆரம்பிச்சாங்க .
அது கூடபெரிசாத் தெரியலை.
நாள் போகப் போக போதையில் தடுமாறி
வழி மாறி எங்க வீட்டுப் பக்கம் வர ஆரம்பிச்சு
 திண்ணையில் படுக்க ஆரம்பிச்சு
அப்புறம் என்ன என்னவோ ஆகிப் போச்சு "

எனச் சொன்னவன் எதையோ நினைத்தபடி கொஞ்சம்
அமைதியாயிருந்தான்.எதையோ சொல்ல வந்தவன்
சுதாரித்துக் கொண்டு சென்சார் செய்கிறான்  எனப்
புரிந்து கொண்டேன்

பின் ஒரு பெருமூச்சு விட்டபடி அவனே தொடர்ந்தான்

"சரி இனியும் இந்தச் சனியனை இங்கே
இருக்கவிடக் கூடாதுன்னு போராட ஆரம்பிச்சோம்
வழக்கம்போல போஸ்டர் மனு கொடுக்கிறது
மறியல் பண்ணுறதுன்னு என்ன
என்னவோ செய்து பாத்தோம் ஒன்னும் நடக்கல
.அப்புறம்தான் இதுக்குப் பின்னால
பெரிய பெரிய ஆளுங்களும் அதிகாரிகளும்
இருக்கிறது புரிஞ்சது
.எங்களயே  காசு கொடுத்து ஒருத்தருக்கொருத்தர்
பிடிக்காத மாதிரி செஞ்சாங்க.சிலரை மிரட்டினாங்க
ஒரு கட்டத்துல இவகள எதுத்து எதுவும் செய்ய
முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு,

நாங்க ரொம்ப நம்பின ஜாதித் தலைவரும்
கவுன்சிலரும்கடை ஓட்டறதைப் பத்திப் பேசாம
 வேற உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க
செய்து தர்ரோம்னு சாராயக் காரனுக்கு
 வக்காலத்து வாங்க ஆரம்பிச்சுட்டாங்க

எங்களுக்கு கரண்ட் கேட்டோம் குழாய் கேட்டோம்
இந்தத் தலைவர்  சிலை வைக்கனும்னும் கேட்டோம்
நாங்காளா கேட்டப்ப கிடைக்காததெல்லாம்
 கடை ஓட்ட சம்மதிச்சதும் தானா கிடைச்சது.

குடிச்சவங்க இங்குட்டு வராதபடி பாத்துக்க
நாலு ஆளுங்கள போட்டாங்க்க இந்தச் சிலையைப்
பாத்துக்கிறது எங்கள்லேயே இரண்டு ஆளுங்களையும்
இருக்கச் சொல்லி மாசச் சம்பளம் கொடுத்திடுராங்க
நாங்க ஓசியிலே குடிக்சுக்கலாம்
,இன்னைக்கு என் டூட்டி
இதான் சாரே இந்த இடத்தோட வரலாறு..
இது மாறுங்க்கிற...சான்ஸே இல்லை.
நீதான்  யோசித்திருக்கனும்,
பேசாம கரச்சல் பார்ட்டி எவனுக்காவது
அஞ்சு  ஆறு வருஷம் வாடகைக்கு விட்டுட்டு
பிறகு குடி வா சாரே. உனக்கு இந்த ஏரியாவெல்லாம்
ஒத்து வராது  சாரே  "என்றபடி எழுந்தான்

உள்ளே குடித்து வந்த போதை இப்போதுதான்
வேலை செய்ய ஆரம்ப்பிக்கிரது என்பதை
அவன் பேச்சில்மரியாதை குறைவதைக் கொண்டே
 புரிந்து கொண்டு நானும் சொல்லிக் கொண்டு
 கிளம்பினேன்

எவ்வளவு சீக்கிரம்  வீட்டைவாடகைக்கு
விட்டு விட்டு கிளம்புகிறோமோ அதுதான் நல்லது
 என முடிவெடுத்தபடி வீடு நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்

எனக்கு நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ
நிச்சயம் தெரியவில்லை.காரணம் எனக்கு நேர் எதிரான
முடிவில் என் மனைவி இருந்தாள்

44 comments:

  1. //கொஞ்சம் போதையிலும் இருந்ததால் கொஞ்சம்
    உண்மையைப் பேசுவான் போலவும் பட்டது//

    இந்த சூப்பரான வரிகளில் தான் ஸ்டெடியாக நிற்கிறீர்கள் நீங்கள். ;))))

    >>>>>

    ReplyDelete
  2. //இந்தப் பொட்டல் காட்டில் மாடி வீடுகள்
    கட்டும் வரை இங்கு குடி இருக்கும்படி ஓடு வீடு
    போட்டுக் கொடுத்தாங்க. தண்ணீர் கிடையாது
    விளக்குக் கிடையாது ரோடு கிடையாது
    இருந்தாலும் வாடகை கம்மி என்பதால
    சகிச்சிக்கிட்டோம்//

    //சகிச்சிக்கிட்டோம்// ;)))))

    மிகவும் அருமை. சுவாரஸ்யம்.

    >>>> தொடரும் >>>>

    ReplyDelete
  3. //.அப்புறம்தான் இதுக்குப் பின்னால பெரிய பெரிய ஆளுங்களும் அதிகாரிகளும் இருக்கிறது புரிஞ்சது.

    எங்களயே காசு கொடுத்து ஒருத்தருக்கொருத்தர்
    பிடிக்காத மாதிரி செஞ்சாங்க.சிலரை மிரட்டினாங்க

    ஒரு கட்டத்துல இவகள எதுத்து எதுவும் செய்ய
    முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு,//

    குடிகாரனிடம் மட்டுமே இதுபோன்ற இனிமையான உண்மையான சொற்பொழிவுகளைக் நாம் கேட்டு ரஸிக்க முடியும்.

    ReplyDelete
  4. //நாங்காளா கேட்டப்ப கிடைக்காததெல்லாம்
    கடை ஓட்ட சம்மதிச்சதும் தானா கிடைச்சது.//

    சபாஷ். புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட ஜனங்கள்.

    >>>>>>

    ReplyDelete
  5. //குடிச்சவங்க இங்குட்டு வராதபடி பாத்துக்க நாலு ஆளுங்கள போட்டாங்க்க இந்தச் சிலையைப் பாத்துக்கிறது எங்கள்லேயே இரண்டு ஆளுங்களையும் இருக்கச் சொல்லி மாசச் சம்பளம் கொடுத்திடுராங்க நாங்க ஓசியிலே குடிக்சுக்கலாம்.//

    //நாங்க ஓசியிலே குடிக்சுக்கலாம்.//

    பின்னென்ன கவலை.

    //இன்னைக்கு என் டூட்டி//

    டூட்டி நேரத்தில் அவர் குடித்தது பத்தாது. நீங்களே இன்னும் கொஞ்சம் வாங்கித்தந்திருக்கலாம். அப்போது தான் விட்டுப்போன பல தகவல்களையும் அவரிடமிருந்து கறந்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.
    .
    //இதான் சாரே இந்த இடத்தோட வரலாறு..//

    வரலாறு சொன்ன பேராசிரியர் பெருங் குடிமகனார் வாழ்க வாழ்கவே. ! ;)

    ReplyDelete
  6. நாம் //எனக்கு நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ
    நிச்சயம் தெரியவில்லை.காரணம் எனக்கு நேர் எதிரான
    முடிவில் என் மனைவி இருந்தாள்//

    இந்தத்தொடரின் முடிவினில் நல்லதொரு கொக்கி.

    மேலிட உத்தரவை நாம் மீற முடியுமா என்ன?

    தொடருங்கள். சுவாரஸ்யம் தொடரட்டும்.

    ReplyDelete
  7. வாடகைக்கு விட்டு விட்டு விட்டுவேற இடம் போறது தான் இன்றைய நிலையில் பல இடங்களில் பொருத்தமாக இருக்கும் சிந்திக்கதூண்டும் பகிர்வு தொடரட்டும்!

    ReplyDelete
  8. வித்தியாசமான கதை. சொல்லும் விதமும் சுவாரசியம்.
    அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  9. அருமையாக கொண்டு செல்கின்றீர்கள்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. தொடருங்கள்... நானும் தொடர்கிறேன் இரமணி ஐயா.

    (போன பதிவுகளைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன்...)

    ReplyDelete
  11. சுவாரஸ்யமாக செல்கிறது...

    தொடர்கிறேன் ஆவலோடு...

    ReplyDelete
  12. ம்ம்..அப்புறம்...!

    ReplyDelete
  13. வாடகைக்கு ஆள் கிடைத்ததா?

    ReplyDelete
  14. அரசியலில் பணம் படுத்தும் பாடு எல்லாமே செய்யும் இதுதான் ஜனநாயக இந்தியா

    ReplyDelete
  15. இந்த மாதிரி இடத்திற்கு குடி இருக்க வருவார்களா !
    அடுத்த பதிவில் மனைவி என்ன முடிவு எடுத்தார்கள் அறிய ஆவல்.

    ReplyDelete
  16. முந்தைய பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன்.

    மனைவியின் முடிவு நேர் எதிர்! :)

    என்ன முடிவு எடுத்தீர்கள் எனப் பார்க்கலாம்!

    ReplyDelete
  17. எல்லா பகுதிகளையும் ஒரு சேரப் படித்து விட்டேன்.

    சுவாரசியமாக ஆரம்பித்து தொடர்கிறது.... அடுத்தது என்ன என்ற ஆர்வத்தோடு!

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் //

    தலை சிறந்த ஓவியன் கோடுகளில்
    கவனம் செலுத்துதல் போல மிகச் சரியாக
    நான் பதிவுக்கு அழுத்தம் கொடுத்த பகுதிகளைச் சுட்டிக் காட்டி
    என்னை ஊக்கிவிக்கும் தங்களுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. தனிமரம் //

    சிந்திக்கதூண்டும் பகிர்வு தொடரட்டும்!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//



    ReplyDelete
  20. T.N.MURALIDHARAN //

    வித்தியாசமான கதை. சொல்லும் விதமும் சுவாரசியம்.
    அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்./.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    .


    ReplyDelete
  21. வித்தியாசமான கதை. தொடருங்கள் அய்யா. தொடருகிறோம்.

    ReplyDelete
  22. சேக்கனா M. நிஜாம் //

    அருமையாக கொண்டு செல்கின்றீர்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  23. ஸ்ரீராம். //

    தொடர்கிறேன்./

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  24. அருணா செல்வம் //
    .
    தொடருங்கள்... நானும் தொடர்கிறேன்
    இரமணி ஐயா./

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  25. திண்டுக்கல் தனபாலன் //

    சுவாரஸ்யமாக செல்கிறது...
    தொடர்கிறேன் ஆவலோடு.../

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  26. ஸாதிகா //

    ம்ம்..அப்புறம்...!/

    /தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  27. rajalakshmi paramasivam//

    வாடகைக்கு ஆள் கிடைத்ததா?

    /தங்கள் வரவுக்கும் அக்கறையுடன் கூடிய
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  28. கவியாழி கண்ணதாசன் //

    /தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///



    ReplyDelete
  29. Seeni //

    thodarkiren ayyaa ...!///

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  30. கோமதி அரசு //
    .
    இந்த மாதிரி இடத்திற்கு குடி இருக்க வருவார்களா !
    அடுத்த பதிவில் மனைவி என்ன முடிவு எடுத்தார்கள் அறிய ஆவல்./

    /உங்கள் கேள்விக்கான பதிலுடனே
    பதிவு முடிகிறது லீட் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. வெங்கட் நாகராஜ் //
    ..
    எல்லா பகுதிகளையும் ஒரு சேரப் படித்து விட்டேன்.

    சுவாரசியமாக ஆரம்பித்து தொடர்கிறது.... அடுத்தது என்ன என்ற ஆர்வத்தோடு!///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  32. கரந்தை ஜெயக்குமார் //

    வித்தியாசமான கதை. தொடருங்கள் அய்யா. தொடருகிறோம்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  33. நேரத்தோடு போராடுவதால் 4 அங்கமும் ஒன்றாக வாசித்தேன்.
    கேள்வி எது வென்றால் , இது என்ன கற்பனைக்கதையா உண்மையா?
    ஆர்வமாகப் போகிறது.
    தொடருங்கள் வருவேன் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  34. kovaikkavi //
    நேரத்தோடு போராடுவதால் 4 அங்கமும் ஒன்றாக வாசித்தேன்.
    கேள்வி எது வென்றால் , இது என்ன கற்பனைக்கதையா உண்மையா?
    ஆர்வமாகப் போகிறது//

    நேரமின்மையின் போதும் என் பதிவு வந்து
    படித்துப் பாராட்டியது மனம் மகிழச் செய்தது
    மிக்க நன்றி

    ReplyDelete
  35. கதை சொல்வதிலும் வல்லவர் என்று தெரிகிறது, நீங்கள் கதையை எடுத்துச் செல்லும்/சொல்லும் பாங்கு!

    ReplyDelete
  36. Ranjani Narayanan //

    கதை சொல்வதிலும் வல்லவர் என்று தெரிகிறது, நீங்கள் கதையை எடுத்துச் செல்லும்/சொல்லும் பாங்கு!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  37. .
    கவியாழி கண்ணதாசன் //

    /தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  38. வித்தியாசமான ரசனையை தட்டி எழுப்பி இருக்கிறீர்கள் ,,,,,,,,,

    ReplyDelete
  39. புலோலியூர் கரன் ///

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  40. எந்த அளவு மனக்குழப்பம் அடைந்திருப்பீர்கள். தெரிகிறது.

    ReplyDelete
  41. Sasi Kala //

    எந்த அளவு மனக்குழப்பம் அடைந்திருப்பீர்கள். தெரிகிறது.//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete