Friday, April 5, 2013

உள்ளும் புறமும் (5)

அனைத்துப் பாவங்களிலுமே தலையாயதாக
குடியினைச் சொல்வதன் காரணமே குடி
ஒரு நொடியில் மனதில் எண்ணமாக மட்டுமே இருந்த
ஒரு தீய செயலை சட்டென வேகம் கொடுத்து
செயலாற்ற வைத்துவிடும்,சமதள நிலையை
சட்டென  முறித்து அறிவை ஓரம்கட்டி அந்த
நிமிடத்து உணர்வை செயலாற்றத் துவங்கிவிடும்
அதுவும் குடிகாரக் குழு என்றால் கேட்கவே வேண்டாம்
திருட்டு கொலை கொள்ளை பாலியல் பலாத்த்காரம்
அனைத்திலும் பிடிபடுபவர்களைப் பார்த்தால்
அவர்கள் எல்லாம் போதையில் இருந்தது புரியும்

கொசு நிறைந்த இடமே சுகாதாரக்கேடு என்றால்
சாக்கடை சூழ்ந்த இடத்தைப் பற்றிச்
சொல்லவா வேண்டும்.எனவே  இந்த வீட்டை
வாடகைக்கு விட்டு விட்டு எத்தனை சீக்கிரம்
வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே
புத்திசாலித்தனமானது என முடிவெடுத்தேன்

நான் பார்த்த கேட்ட அந்த குட்டிப் பாண்டிச்சேரி
கதையையெல்லாம் சொல்லி மனைவியையும்
குழந்தைகளையும் பயமுறுத்த வேண்டாம் எனக் கருதி
இயல்பாகச் சொல்வதைப் போல

"இந்த இடம் மிகவும் லோன்லியாக உள்ளது
கட்டும்போது தெரியவில்லை .இருந்து
பார்க்கும்போதுதான் தெரிகிறது.கூடிய சீக்கிரம்
வேறு வீடு பார்க்கிறேன்.ஒரு நானகு ஐந்து வருடத்தில்
ஏரியா பிரமாதமாக வந்து விடும்.அப்போது
மீண்டும் வந்து விடுவோம்.அது வரை வாடகைக்கு
விட்டு விடுவோம் "என்றேன்

மனைவி சட்டென எனது கருத்தை மறுத்தாள்/

"அட நீங்க வேற
நீங்க பாட்டுக்கு ஆபீஸ் போயிருவீங்க நான்
இத்தனை வருடம் வீட்டு ஓனர்களிடம் பட்ட பாடு,
அப்பப்பா.....உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா
வந்தாலே கூட இருக்கிற மாதிரி வந்திருக்காங்களா
இல்லேபோற மாதிரி வந்திருக்காங்களா என
ஜாடையா கேட்கிறது.உடம்பு சௌகரியம் இல்லாம
இரண்டு முறை லெட்ரின் போனா கூட இன்னைக்கு
ரெண்டு தடவை மோட்டார் போடவேண்டியதாகிப்
போச்சுன்னு நக்கலாப் பேசுறது.
இன்னும் நிறைய பட்டுட்டேன்
ஆம்பிளைகளுக்கு இதெல்லாம் தெரியாது
எனக்கு வெறுத்துப் போச்சுங்க
எலி வலையானாலும் தன் வலைங்கிறதுதான் சரி
பேசாம இங்கேயே இருப்போம் ஏரியா
முன்னேறுகிற போது முன்னேறட்டும் என்றாள்.

சரி இதற்கு மேலும் ஒளித்துப் பயனில்லை
விரிவாகச் சொல்லாவிட்டாலும் லேசாகச்
சொல்லிவைப்போம் எனக் கருதி
"இங்கே பக்கத்தில் சாராயம் விற்கிறார்கள்
உனக்கு அதெல்லாம் தெரியாது
அதனாலே இங்கே கொஞ்ச காலம் யாரும்
வீடு கட்டி வருவது கஷ்டம் .அதனாலே.... "
எனச் சொல்லி முடிப்பதற்குள் அவளே தொடர்ந்தாள்

"எனக்கு எல்லாம் தெரியுமுங்க பகலிலே மேற்கே
இருந்து இருட்ட ஆரம்பிச்சதும் பத்துப் பத்துப் பேரா
கிழக்கே போவாங்க,அதுல ஒரு பெருசுக்கிட்ட
 பேசினேன்எல்லாம் கட்டிட வேலை செய்யிரவங்க.
வேலை முடிஞ்சு போறப்ப எல்லோரும்
கொஞ்சம் குடிப்போம் தாயின்னாறு
பூரம் கிராமத்துச் ஜனங்க,கெட்டது தெரியாதவங்க
அங்கே கடை இருக்கிறது கூட எனக்கு
நல்லதாத் தான் படுது.இருட்ட ஆர்ம்பிச்சதுல இருந்து
நீங்க வரும் வரை கொஞ்சம் ஆள் நடமாட்டமாவது
இருக்கு .அது இல்லாட்டி ரொம்ப கஷ்டம் "என்றாள்

எனக்கு அவள் பேச்சு அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது
சரி அறியாமல் பேசுகிறாள்.இவளிடம் அதிகம் விளக்கி
பயமுறுத்திப்போனால் நம் பாடுதான் கஷ்டம்
அவள் போக்கிலேயே போய் மெதுவாகப்
புரியவைப்போம்என முடிவெடுத்து
"இப்போ என்ன செய்யலாம் சொல் "என்றேன்

"அப்படிக் கேளுங்க.முதல்ல ஆறு மணிக்குள்ள
வீடு வரப் பாருங்க காலையிலே இன்னும்
சீக்கிரம் கூடப் போங்க.முதல்ல கேஸ் ரேஷன் கார்ட்
அட்ரெஸையெல்லாம் சொந்த வீட்டுக்கு மாத்துங்க.
அப்படியே எல்லோருக்கும் பாஸ்போர்ட்
 எடுக்கப் பாருங்க அதுக்கு எப்படியும்
 மூணு மாசம் ஆகிப் போகும்
அதுக்குள்ள நமக்கும் ஏரியா ஒத்து வருமா
ஒத்து வராதான்னு நிச்சயம் தெரிந்து போகும் .
அப்புறம் நாம் மாறுவதைப் பற்றி யோசிக்கலாம் "
என்றாள்

அவள் சொற்படிக் கேட்டு பின் எதாவது
ஏடாகூடாமாக எதுவும்  நடந்து விட்டால் பின்
' ''பொமபளை நான்என்னைத் தங்க கண்டேன்.
நான் எனக்குத் தோணினதைச்
சொன்னேன்.நீங்க தான் நாலு இடம் போறவங்க
நீங்கதானே சரியா முடிவு செய்திருக்கனும் ''னு
பிளேட்டை என பக்கம் திருப்புவாள் எனத் தெரியும்
நிறைய அனுபவப் பட்டிருக்கிறேன்,

ஆனாலும்அவள் நிலையான முகவரிக்கு
அனைத்துரிகார்டுகளையும் மாற்றச் சொன்னது
சரியானதாகத்தான் பட்டது.அது மாற்றவும்
அது சமயத்திலேயே வேறு வாடகை வீடும்
பார்க்கவும் துவங்கினால சரியாக இருக்கும் என
முடிவு செய்து நான செயலில் இறங்கிவிட்டேன்

கேஸ் முகவரி ரேஸன் கார்டு முகவரி எல்லாம்
இரு மாதத்தில் மாற்ற முடிந்தது பாஸ்போர்ட் மட்டும்
அங்கு ஆன் லைனில் பதிந்த உடன் இன்னும் ஒரு
மாதத்தில் வீட்டிற்கு போலீஸ் என்கொயரி  வரும்
அது முடிந்ததும் பாஸ்போர்ட் வீட்டு விலாசத்திற்கே
வந்து விடும் எனச் சொன்னார்கள்,நானும் அதையும்
எதிர்பார்த்தபடி வெளியிலும் வீடு பார்க்கத்
துவங்கிவிட்டேன்.தோதாக இரண்டு வீடுகள் இருந்தது
பாஸ்போர்ட் வேலை முடிந்ததும் மனைவியிடம்
சொல்லிக் கொள்ளலாம் என இருந்தேன்

நான் ஒரு வெள்ளிக் கிழமை அலுவலகம்
முடிந்து வீடு வந்து வண்டியை நிறுத்தியதும்
"ஏங்க நீங்க சொன்னதுதாங்க சரி இந்த ஏரியா
நமக்கு சரிப்பட்டு வராது.
வேற இடம் பார்க்கலாங்க "என்றாள்

அவளுடைய திடீர் மாற்றம் கண்டு நான்
பயந்து போனேன்

"ஏன் என்ன ஆச்சு நான் இல்லாதப்ப ஏதும்
பிரச்சனை ஆச்சா பயப்படாம சொல் "என்றேன்

"அதெல்லாம் இல்லீங்க .மதியம் பாஸ்போர்ட்
என்கொயரிக்கு ஒரு போலீஸ்காரர் வந்தாருங்க
அவரு நீங்க எப்படிம்மா இந்த ஏரியாவிலே தனியா
இருக்கீங்க நாங்களே இருக்க மாட்டோம்,சார்
அதிகாரியா இருக்காருங்கிறீங்க .நல்லா விசாரித்து
வீடு கட்ட வேண்டாமான்னு சொல்லிட்டு
நாளைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அப்பத்தான்
உங்களுக்குத் தெரியும் சரியான காலிப் பயக ஏரியா
அது இதுன்னு பயமுறுத்திட்டுப் போயிட்டாருங்க
போலீஸ்காரரே இப்படிச் சொல்லவும் நான் ரொம்ப
பயந்து போயிட்டேங்க்க
அதுல இருந்து மனசே சரி இல்லீங்க
காலா காலத்திலே வேற வீடு பாருங்க "என்றாள்

நான் எடுத்து வைத்திருந்த முடிவையோ
வீடு பார்த்து வைத்திருக்க விவரங்களையோச்
சொல்லாமல் அவள் சொல்லிச் செய்வதைப் போல
"சரி பார்த்தால் போச்சு "எனச் சொல்லி முடித்தேன்
வீடு மாறுவதை விட அவள் சொல்லி மாறுவது
என்பது அவளுக்கு நிச்சயம் அதிக சந்தோஷத்தைக்
கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்

மறு நாள் காலையில் ஆபீஸ் போவதற்கு
முன்பாக போலீஸ் ஸ்டேஸன் போய் விவரங்கள்
கேட்டு விட்டுப்போகலாம் எனப் போனேன்

அங்கு நடந்த ஒரு சிறு சம்பவமும்
அதற்கு ஒருவன் கொடுத்த  விரிவான விளக்கமும்
இன்னும் அதிக அதிர்ச்சி தருவதாக இருந்தது,

(தொடரும் )


44 comments:

  1. ஒரு திகில் தொடர் படித்தது போல் இருக்கிறது...

    ReplyDelete
  2. கஷ்டப்படு வீடு கட்டி முடித்தாலும் கூட பின்னர் எத்தனை இடர்பாடுகள்! .தெளிவாகவும் சுவாரசியமாகவும்
    சொல்கிறீர்கள்.
    த.ம. 2

    ReplyDelete
  3. //அனைத்துப் பாவங்களிலுமே தலையாயதாக
    குடியினைச் சொல்வதன் காரணமே குடி
    ஒரு நொடியில் மனதில் எண்ணமாக மட்டுமே இருந்த
    ஒரு தீய செயலை சட்டென வேகம் கொடுத்து
    செயலாற்ற வைத்துவிடும்,சமதள நிலையை
    சட்டென முறித்து அறிவை ஓரம்கட்டி அந்த
    நிமிடத்து உணர்வை செயலாற்றத் துவங்கிவிடும்//- உண்மையான வார்த்தைகள். திகில் தொடர் கதை படிப்பது போலுள்ளது. அடுத்து?

    ReplyDelete
  4. சொந்த வீட்டில் வசிக்க இத்தனை சிக்கலா?!

    ReplyDelete
  5. காவல் நிலையத்தில் நடந்த சிறு சம்பவம் என்ன அறிய ஆவலை தூண்டுகிற மாதிரி முடித்து இருக்கிறீர்கள்.
    அடுத்தபதிவில் தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. பிறகு, என்ன ஆச்சு! ஆவலைத் தூட்டுகிறீர்கள்!

    ReplyDelete
  7. ம்ம்ம்ம். போலீஸ் ஸ்டேஷனில் என்ன சொன்னார்கள் எனத் தெரிந்து கொள்ள அடுத்த பகுதியை எதிர்பார்த்து!

    ReplyDelete
  8. போலீஸ்காரரே சொன்னதால் மனமாற்றம்...

    அதிர்ச்சியை அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  9. அதிர்ச்சிக்கு மேலே அதிர்சியாக தொடர்கின்றது.....பார்க்கலாம்.

    ReplyDelete
  10. //"அட நீங்க வேற, நீங்க பாட்டுக்கு ஆபீஸ் போயிருவீங்க நான் இத்தனை வருடம் வீட்டு ஓனர்களிடம் பட்ட பாடு,
    அப்பப்பா.....உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா
    வந்தாலே கூட இருக்கிற மாதிரி வந்திருக்காங்களா
    இல்லேபோற மாதிரி வந்திருக்காங்களா என
    ஜாடையா கேட்கிறது.உடம்பு சௌகரியம் இல்லாம
    இரண்டு முறை லெட்ரின் போனா கூட இன்னைக்கு
    ரெண்டு தடவை மோட்டார் போடவேண்டியதாகிப்
    போச்சுன்னு நக்கலாப் பேசுறது. இன்னும் நிறைய பட்டுட்டேன். ஆம்பிளைகளுக்கு இதெல்லாம் தெரியாது
    எனக்கு வெறுத்துப் போச்சுங்க

    எலி வலையானாலும் தன் வலைங்கிறதுதான் சரி
    பேசாம இங்கேயே இருப்போம் ஏரியா
    முன்னேறுகிற போது முன்னேறட்டும் என்றாள்.//

    அருமையான பேச்சு, சார்,

    நான் மிகவும் இதனை ரஸித்துப்படித்தேன்.

    பெண்கள் என்றால் இப்படித்தான் தைர்யசலியாகவும் இருந்து, மதியுக மந்திரி போல கணவனுக்கு அவ்வப்போது ஆலோசனைகளும் சொல்லணும்.

    >>>>>>

    ReplyDelete
  11. //"எனக்கு எல்லாம் தெரியுமுங்க பகலிலே மேற்கே
    இருந்து இருட்ட ஆரம்பிச்சதும் பத்துப் பத்துப் பேரா
    கிழக்கே போவாங்க,அதுல ஒரு பெருசுக்கிட்ட
    பேசினேன்எல்லாம் கட்டிட வேலை செய்யிரவங்க.
    வேலை முடிஞ்சு போறப்ப எல்லோரும்
    கொஞ்சம் குடிப்போம் தாயின்னாறு

    பூரா கிராமத்துச் ஜனங்க,கெட்டது தெரியாதவங்க
    அங்கே கடை இருக்கிறது கூட எனக்கு
    நல்லதாத் தான் படுது.

    இருட்ட ஆர்ம்பிச்சதுல இருந்து
    நீங்க வரும் வரை கொஞ்சம் ஆள் நடமாட்டமாவது
    இருக்கு .அது இல்லாட்டி ரொம்ப கஷ்டம் "என்றாள்//


    இது அதைவிட சூப்பரான விஷயம். எதிலும் ஓர் நன்மையுண்டுன்னு அழகாக பாஸிடிவ் ஆக நினைக்கிறாங்க பாருங்க! சபாஷ்.

    >>>>>.

    ReplyDelete
  12. பிறகு, என்ன ஆச்சு!

    ReplyDelete
  13. //"அதெல்லாம் இல்லீங்க .மதியம் பாஸ்போர்ட்
    என்கொயரிக்கு ஒரு போலீஸ்காரர் வந்தாருங்க
    அவரு நீங்க எப்படிம்மா இந்த ஏரியாவிலே தனியா
    இருக்கீங்க நாங்களே இருக்க மாட்டோம்,//

    போலீஸாக இருக்கவே லாயக்கு இல்லாத ஆளுங்க. எப்படித்தான் செலக்ட் செய்தாங்களோ! இதைச்சொல்ல வெட்கப்பட வேண்டாமா?

    போய் “சாமி” படம் பார்க்கச்சொல்லுங்க.

    //சார் அதிகாரியா இருக்காருங்கிறீங்க .நல்லா விசாரித்து
    வீடு கட்ட வேண்டாமான்னு சொல்லிட்டு நாளைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அப்பத்தான்
    உங்களுக்குத் தெரியும் சரியான காலிப் பயக ஏரியா
    அது இதுன்னு பயமுறுத்திட்டுப் போயிட்டாருங்க////

    தைர்யசாலியாக தெளிவாக இருந்த உங்கள் வீட்டுக்கார அம்மாவையே இந்த ஆளு இப்படிக் குழப்பி விட்டுவிட்டாரே!

    //”போலீஸ்காரரே இப்படிச் சொல்லவும் நான் ரொம்ப
    பயந்து போயிட்டேங்க்க அதுல இருந்து மனசே சரி இல்லீங்க. காலா காலத்திலே வேற வீடு பாருங்க” என்றாள்//

    அடப்பாவமே!

    >>>>>

    ReplyDelete
  14. //மறு நாள் காலையில் ஆபீஸ் போவதற்கு
    முன்பாக போலீஸ் ஸ்டேஸன் போய் விவரங்கள்
    கேட்டு விட்டுப்போகலாம் எனப் போனேன்

    அங்கு நடந்த ஒரு சிறு சம்பவமும்
    அதற்கு ஒருவன் கொடுத்த விரிவான விளக்கமும்
    இன்னும் அதிக அதிர்ச்சி தருவதாக இருந்தது,//

    வெரிகுட். நல்ல த்ரில்லிங்க்காக் கதையை நகர்த்திக்கொண்டு போய் முக்கியமான இடத்தில் ப்ரேக் போட்டு ”தொடரும்” போட்டுட்டீங்க! சபாஷ்.

    தொடரட்டும்.

    கதாசிரியருக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  16. இடையில் சில பகுதிகள் படிக்கவில்லை! இருந்தாலும் பதிவு சுவாரஸ்யம்! நன்றி!

    ReplyDelete
  17. ரொம்ப பிராக்டிகலா எழுதியிருக்கீங்க ! சீரியல் பார்த்தாற் போல இருந்தது ! அதைப் போலவே கடைசியில் சஸ்பென்ஸ் வைத்து தொடரும்... என்று முடித்துள்ளீர்கள் ! எல்லோரையும் போல், நானும் ஆவலுடன் உள்ளேன், அடுத்தப் பதிவிற்காக !

    ReplyDelete
  18. நல்ல சஸ்பென்ஸ்! கதையில் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறதே!

    ReplyDelete
  19. போலிஸ் நிலையத்தில் என்ன அதிர்ச்சி காத்திருந்தது?
    அறிய ஆவல்....

    ReplyDelete
  20. செம த்ரில்லிங்காப் போவுது..

    ReplyDelete
  21. வாடகைக்குக் குடியிருந்தாலும் பிரச்சினை தான்! சொந்தமாக வீடு வைத்திருந்தாலும் பிரச்சினை தான்! அருமையாக எழுதிக்கொன்டு போகிறீர்கள்!!

    ReplyDelete
  22. தொடருக்குத் தொடர் சஸ்பென்ஸ் அதிகரித்துக் கொண்டே செல்கிறது

    ReplyDelete
  23. அடுத்த பகுதி எப்போ என்று ஆர்வத்தை தூண்டும் படியாக உள்ளது!

    ReplyDelete

  24. ஸ்கூல் பையன் //

    ஒரு திகில் தொடர் படித்தது போல் இருக்கிறது...



    தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. T.N.MURALIDHARAN //

    கஷ்டப்படு வீடு கட்டி முடித்தாலும் கூட பின்னர் எத்தனை இடர்பாடுகள்! .தெளிவாகவும் சுவாரசியமாகவும்
    சொல்கிறீர்கள்.//

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. உஷா அன்பரசு //

    திகில் தொடர் கதை படிப்பது போலுள்ளது. அடுத்து?//

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  27. நிலாமகள் //

    சொந்த வீட்டில் வசிக்க இத்தனை சிக்கலா?!//

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. கோமதி அரசு //

    காவல் நிலையத்தில் நடந்த சிறு சம்பவம் என்ன அறிய ஆவலை தூண்டுகிற மாதிரி முடித்து இருக்கிறீர்கள்.
    அடுத்தபதிவில் தெரிந்து கொள்கிறேன்./

    /தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  29. புலவர் இராமாநுசம் //

    பிறகு, என்ன ஆச்சு! ஆவலைத் தூட்டுகிறீர்கள்!//

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  30. இத்தனை சுவாரசியமாக சொந்த அனுபவங்களை எழுத முடியும் என்பது வியப்பாக இருக்கிறது. ஆர்வத்துடன்..

    ReplyDelete
  31. அருமையாக, சுவாரசியமாக எழுதி, முக்கியமான தருணத்தில் நிறுத்தியது "நடந்தது என்ன?" என அறிய ஆவலைத் தூண்டுகிறது! தொடருங்கள் ஐயா! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  32. அப்பாதுரை

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Seshadri e.s.//

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. முந்தைய பகிர்வுகளை படித்துவிட்டு வருகிறேன் ஐயா.

    ReplyDelete
  35. பிள்ளைகளுக்கு பரிட்சை முடியும்வரை இணையம் வர நெருக்கடி நிலை.

    ReplyDelete

  36. வணக்கம்!

    உள்ளும் புறமும் உரைத்த கருத்தக்கள்
    சொல்லும் வழியைத் தொடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  37. பெண்கள் மனதை நன்றாக படித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  38. அனுபவிக்கும் போதுதான் அதன் கஷ்டமே தெரியும்/

    ReplyDelete
  39. Sasi Kala //

    பிள்ளைகளுக்கு பரிட்சை முடியும்வரை இணையம் வர நெருக்கடி நிலை.//

    முதலில் கடமை
    அடுத்தே இணையம் என்பதே
    சரியானது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. Sasi Kala //

    பெண்கள் மனதை நன்றாக படித்திருக்கிறீர்கள்//.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  42. விமலன் //

    அனுபவிக்கும் போதுதான் அதன் கஷ்டமே தெரியும்///

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete