Sunday, April 7, 2013

உள்ளும் புறமும் ( 6 )


உள்ளும் புறமும் ( 6 )

போலீஸ்காரர் வீடு தேடி வந்து வீட்டின்
இருப்பு குறித்து பார்த்துப் போனாலும்
ஸ்டேஷனில் செய்ய வேண்டிய பார்மாலிடீஸ்
குறித்துச் சொல்வதற்காகதான் முதலில்
என்னை மட்டும் வரச் சொல்லிப் போயிருக்கிறார்
எனத் தெரிந்து கொண்டேன்

எனவே எப்போதும்  வீட்டை விட்டுப் புறப்படும்
நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாகவே
கிளம்பிப்போய் போலீஸ் ஸ்டேஷன வாசலில்
வண்டியை நிழல் இருக்கும் இடமாகப் பார்த்து
நிறுத்தி விட்டு அங்கே ஸ்டேஷனுக்கு முன்பாகக்
கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலை ஒரு
சுற்றுச் சுற்றிவிட்டு பிள்ளையாருக்கும் ஒரு
கும்பிடு போட்டுவிட்டு வெளிவந்தபோது என்னையே
பார்த்துக் கொண்டிருந்த ஒருவன்
"சார் ஒரு நிமிஷம் "என்றான்

கட்டம் போட்ட கைலியும் குரொக்டையல்
அழுக்குப் பனியனும் வாரப்படாத பரட்டைத்
தலையுமாக இருந்த அவனை இதற்கு முன்பு
எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை

கொஞ்சம் அசட்டையாக "என்ன விஷயம் "
என்றேன்

"நீங்க வருவீங்கன்னு ஏட்டையா சொன்னார்
வந்தா அரை மணி நேரம் வெயிட்
பண்ணச் சொன்னார் "என்றான்

"நீ யார் ? எந்த ஏட்டையா இருக்கச் சொன்னார் ?
என்றேன் குழப்பத்துடன்

அவன் மிகத் தெளிவாகப் பேசினான்
"நான் தான் இங்கே எம்பார்மெண்ட்
என் பேரு பிச்சை
நீங்க புது நகரிலே வீடு கட்டி இருக்கீங்க
பாஸ்போர்ட் கேட்டு இருக்கீங்க இப்போ அது
ஸ்டேஷன் விசாரனைக்கு வந்திருக்கு
நேத்து ஏட்டையா உங்க வீட்டுக்கு வந்தப்ப
நீங்க இல்லை வீட்டில உங்களை வரச் சொல்லிட்டு
வந்திருக்கார் அதுதான் நீங்க வந்திருக்கீங்க
சரியா "என்றான்

சரி அந்த ஏட்டையா தெளிவானவராகத்தான்
இருப்பார் எனப் புரிந்து கொண்டேன்
அவர் மூலமாகவே அனைத்து டீலிங்கும்
இருக்க வேண்டும் என நினைக்கிறார் எனப்
புரிந்து கொண்டேன்.ஆனால இவன் எப்படி
முன் பின் பார்க்காமல் என்னை மிகச் சரியாக
எப்படித் தெரிந்து கொண்டான் என எனக்கு
ஆச்சரியமாக இருந்தது.அதைக் கேட்டும் விட்டேன்

"அதுதான் சார் எம்பார்மெண்ட் " என
பெருமையாகச் சொன்னவன் உள்ளே இன்ஸ்பெக்டரும்
ஒரு ஏட்டையா தவிர யாரும் இல்லையெனவும்
இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரியெனவும்
என் வீடு வந்த ஏட்டையா வந்தால்தான்
எதுவும் நடக்கும்  சரியாக நடக்கும்எனவும்
அதுவரை இங்கேயே கோவில் வாசலில்
உட்கார்ந்திருக்கலாம் எனவும் சொன்னான்,
எனக்கும் அது சரியெனப்பட்டது

சிறிது நேரம் வெளியில் உட்கார்ந்திருந்து
நான் வேலை பார்க்கும் அலுவலகம் மற்றும்
சொந்த ஊர் குறித்தெல்லாம் பேச
அவனும் அவனைப்பற்றியும் அவன் சித்தப்பா
பையன் ஒருவன் எங்க்கள் துறையில் வேலை
செய்வது குறித்துச் சொல்ல இருவரும் ரொம்ப
சகஜமாகிப் போனோம்.

பின் அவனே "ஒன்றும் இல்லை சார் நீங்க
நாலு பேருக்கும் பாஸ்போர்ட் போட்டா
கொண்டு வந்து இங்கே இருக்கிற ரெஜிஸ்டரில்
கையெழுத்துப் போடனும் சார்..ஒருத்தருக்கு
இரு நூறு கணக்கிலே எண்ணூறு கேப்பாங்க சார்
கொடுத்தா உடனே மேலே அனுப்பிச்சுருவாங்க சார்"
இதைத்தான் ஏட்டையாவும்  சொல்வாரு
நான் சொன்னதா காட்டிக்கிற வேனாம் " எனச்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு
டாடா சுமோ கார்கள் வழக்கத்தைவிட சற்று
அதிகமான தேவையற்ற வேகத்துடன் வந்து
ஸ்டேஷன் வாசலில் நின்றது

பின் வண்டியில் சினிமா பாணி அடியாட்கள் போல
ஏழெட்டு பேர் அமர்ந்திருக்க முன் வண்டியில்
முன் சீட்டில் இருந்து ஏறக்குறைய கில்லி
பிரகாஷ் ராஜ் போலவே  திமிராக
இறங்கிய ஒருவன் தனியாக
ஸ்டேஷனுக்குள் போனான்

இதைக் கவனித்த எம்பார்மெண்ட் பிச்சை
"எல்லாம் உங்க ஏரியாப் பிரச்சனைதான்
நிச்சயம் இன்னைக்கு ஒரு பெரிய ஏழரைதான்
ஆகப் போகுது " என்றான்

அவன் ஏழரைதான் என்றதும் அதுவும்
எங்க  ஏரியாதான் என்றதும் இன்னமும் அதிகம்
கலங்கிப் போனேன் நான்

(தொடரும் )


45 comments:

  1. கதை அருமையாகவே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் ஜாலியாக நகர்கிறது.

    அது என்ன ஏழரையோ?

    ஏழரை நாட்டுச்சனி பிடிக்கப்போவது போல ஒரே விசாரமாக உள்ளது.

    தொடருங்கள்,

    ReplyDelete
  2. viru viruppu....

    thodarungal ayyaa...!

    ReplyDelete
  3. எனக்கும் கலக்கமாய் உள்ளது அடுத்து என்ன நடக்கப் போகுதோ என்று .தொடருங்கள்

    ReplyDelete
  4. விறு விறுப்பு ஏறிக் கொண்டே செல்கிறது.

    ReplyDelete
  5. அட...இந்தத் தொடரை சினிமாவாக்கிரலாம் போலிருக்கே...!

    ராஜேஷ்குமார் நாவல் மாதிரி விறு விறு....!

    ReplyDelete
  6. "எல்லாம் உங்க ஏரியாப் பிரச்சனைதான்
    நிச்சயம் இன்னைக்கு ஒரு பெரிய ஏழரைதான்
    ஆகப் போகுது " என்றான்//

    கதையை எந்த இடத்தில் நிறுத்தினால் வாசகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தலாம் என்ற கலை தெரிந்து இருக்கிறது சார் உங்களுக்கு.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. விறு விறுப்பா இருக்கு அடுத்த தொடருக்கு காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  8. அது என்ன ஏழரையோ? //விறு விறுப்பாக போகிறது உங்கள் அனுபவம்.

    ReplyDelete
  9. ஏழரை ஆரம்பமா...? நாங்களும் "அடுத்து என்ன நடந்தது...?" என்று கலங்கித்தான் உள்ளோம்...

    ReplyDelete

  10. INTERESTING.! தொடருகிறேன்.

    ReplyDelete
  11. என்னதான் நடக்கிறது. ம்....ம்....எல்லாமே மாமுமாக இருக்கு..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. கதையின் இந்தப் பகுதிதான் படித்தேன்... அருமை ஐயா... அடுத்த பகுதியை எதிர் நோக்கியுள்ளேன்..

    ReplyDelete
  13. விறுவிறுப்பா இருக்கு
    தொடருங்கள்

    ReplyDelete
  14. என்ன ஆச்சோ அறியும் ஆவலில் நானும்.

    ReplyDelete


  15. திகில் கதைபோல இருக்கு!தொடருங்கள்!

    ReplyDelete
  16. திகில் அதிகமாத் தான் இருக்கு....

    ReplyDelete
  17. ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவரை இன்னும் குழப்பும் நிகழ்வுகள். அடுத்து என்ன நடந்தது? படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் //

    கதை அருமையாகவே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் ஜாலியாக நகர்கிறது//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  19. Seeni //

    viru viruppu....
    thodarungal ayyaa.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. கவியாழி கண்ணதாசன் //

    எனக்கும் கலக்கமாய் உள்ளது அடுத்து என்ன நடக்கப் போகுதோ என்று .தொடருங்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கரந்தை ஜெயக்குமார் //

    விறு விறுப்பு ஏறிக் கொண்டே செல்கிறது./

    /தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ //

    அட...இந்தத் தொடரை சினிமாவாக்கிரலாம் போலிருக்கே...!
    ராஜேஷ்குமார் நாவல் மாதிரி விறு விறு....///

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. கோமதி அரசு //

    கதையை எந்த இடத்தில் நிறுத்தினால் வாசகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தலாம் என்ற கலை தெரிந்து இருக்கிறது சார் உங்களுக்கு./

    /தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. உஷா அன்பரசு //
    .
    விறு விறுப்பா இருக்கு அடுத்த தொடருக்கு காத்திருக்கிறேன்..///

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. ஸாதிகா //

    அது என்ன ஏழரையோ? //விறு விறுப்பாக போகிறது உங்கள் அனுபவம்.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் //

    ஏழரை ஆரம்பமா...? நாங்களும் "அடுத்து என்ன நடந்தது...?" என்று கலங்கித்தான் உள்ளோம்..//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. G.M Balasubramaniam ''

    INTERESTING.! தொடருகிறேன்.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. T.N.MURALIDHARAN //

    மர்ம நாவல் போல விறுவிறுப்பு.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. kovaikkavi //

    என்னதான் நடக்கிறது. ம்....ம்....எல்லாமே மாமுமாக இருக்கு..//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. அகல் //

    கதையின் இந்தப் பகுதிதான் படித்தேன்... அருமை ஐயா... அடுத்த பகுதியை எதிர் நோக்கியுள்ளேன்..//.

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  31. முத்தரசு //

    விறுவிறுப்பா இருக்கு
    தொடருங்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Sasi Kala //

    என்ன ஆச்சோ அறியும் ஆவலில் நானும்./

    /தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  33. புலவர் இராமாநுசம் //


    திகில் கதைபோல இருக்கு!தொடருங்கள்!//

    /தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. கோவை2தில்லி //


    திகில் அதிகமாத் தான் இருக்கு....///

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. கீதமஞ்சரி //

    ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவரை இன்னும் குழப்பும் நிகழ்வுகள். அடுத்து என்ன நடந்தது? படித்துவிட்டு வருகிறேன்.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. மிகவும் விறுவிறுப்பு! தொடர்கிறேன்! தொடருங்கள்

    ReplyDelete
  37. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை

    அருமை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  38. விடுபட்டதை படித்துக்கொண்டேன்.

    ReplyDelete
  39. தொடர்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  40. Seshadri e.s. //

    மிகவும் விறுவிறுப்பு! தொடர்கிறேன்! தொடருங்கள்

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//



    ReplyDelete
  41. சேக்கனா M. நிஜாம் ''

    விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை//

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  42. மாதேவி //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  43. அருணா செல்வம் //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  44. தொடர்ந்து படிக்க முடியவில்லை. இந்த பாகத்திலிருந்து இப்போதுதான் படித்துக் கொண்டு போகிறேன். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சஸ்பென்ஸ்!

    ReplyDelete