Monday, May 20, 2013

பிரபஞ்ச சக்தியும் நாமும்

வெள்ளிக் கிண்ணத்தில் அமுதத்தை ஏந்தியபடி
தாயின் தவிப்போடு பிரபஞ்சம்
வெளியே பரிதவித்திருக்க

தாளிடப்பட்ட சிறிய வீட்டினுள்
தாழ்பாள் அகற்றத் தெரியாது
பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்

வேண்டும் வேண்டும் என நேர்மறையாக
கேட்பதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் ஆர்வத்தில்
பிரபஞ்சம் வெளியே துடித்துக் கொண்டிருக்க

வேண்டாம் வேண்டாம் என எதிர்மறையாக
வேண்டாதையெல்லாம் தொடர்ந்து கேட்டபடி
துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறோம் நாம்

நேர்மறையான  வேண்டுதலுக்கு வாரி வழங்கவும்
"அது அப்படியே ஆகட்டும் " என ஆசி வழங்கவுமே
அருளப்பட்ட பிரபஞ்சச் சக்தியிடம்

எதிர்மறையானவைகளைக் கேட்டுக் கேட்டே
எதுவும் கிடைக்காது நொந்து போகிறோம் நாம்
ஏமாற்றத்தில் வெந்து சாகிறோம் நாம்

ஒளி வேண்டிக் கேளாது இருள் விலகக் கேட்டும்
வளம் வழங்கக் கேளாது வறுமை போக்கக் கேட்டும்
சுகம் நிறையக் கேளாது துயர் நீக்கக் கேட்டும்

நாமும் வாழ்வில் எதுவும் பெறாது
 பிரபஞ்சத்தையும் கொடுக்க விடாது
வாழ்வில்"தப்பாட்டம் "ஆடி  நோகும் நாம்
இனியேனும்
பிரபஞ்ச சக்தியை புரிய முயல்வோமாக

இனியேனும்
கேட்கத் தெரிந்து
பெறவேண்டியதைப் பெற முயல்வோமாக
தட்டத் தெரிந்து
 திறவாத வாயில்களைத் திறக்க அறிவோமாக
தேடத் தெரிந்து
அடையாத உச்சங்களை அடைந்து மகிழ்வோமாக

49 comments:

  1. உண்மைதான், அழகாகக் கவியாக்கிவிட்டீர்கள் ரமணி ஐயா.

    ReplyDelete
  2. திறக்காத கதவுகள் திறக்க, அடையாத உச்சங்களை அடைய சரியானவற்றைக் கேட்டுப் பெறுவதற்கான தெளிவு நிச்சயம் ஏற்படத்தான் வேண்டும். அருமையாச் சொல்லி அசத்திட்டீங்களே ஸார்!

    ReplyDelete
  3. அடையாத உச்சங்களை அடைந்து மகிழ்வோமாக - உண்மையாக..

    ReplyDelete
  4. “ இருப்பதை விட்டு விட்டு, பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது! “ - என்பதை அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. என்ன செய்ய வேண்டுமென்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. ///இனியேனும்
    பிரபஞ்ச சக்தியை புரிய முயல்வோமாக///
    மிகப்பெரிய புரிதல்..
    ரமணி ஐயா..
    உங்கள் வார்த்தைகள் நெஞ்சில்
    பசுமரத்து ஆணியாய் பதிந்துவிட்டன...

    ReplyDelete
  7. //வெள்ளிக் கிண்ணத்தில் அமுதத்தை ஏந்தியபடி
    தாயின் தவிப்போடு பிரபஞ்சம்
    வெளியே பரிதவித்திருக்க

    தாளிடப்பட்ட சிறிய வீட்டினுள்
    தாழ்பாள் அகற்றத் தெரியாது
    பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்//
    மிக அற்புதமான சிந்தனை
    சரியானவற்றை கேட்கத் தெரியாதவர்களா கத் தான் இருக்கிறோம்..
    சிறப்பான வார்த்தைப் பிரயோகங்கள்

    ReplyDelete
  8. பிரபஞ்ச ரகசியம் பற்றி அழகாக சொன்னீர்கள் அற்புதமாய் உணர்த்தினீர்கள் தொடாருங்கள் ...

    ReplyDelete
  9. இதைவிட விளக்கம் வேறு இருக்கமுடியாது, சரியாக சொன்னீர்கள் குரு...!

    ReplyDelete
  10. இனி கேட்க்க வேண்டியவற்றை எல்லாம் நேரடியாக அதுவும் நிறையவே கேட்டிட வேண்டியது தான் :) சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  11. உங்கள் கவிதைக்குள் மிகப் பெரிய தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன...
    ஆழமாக வாசித்துப் பார்ப்போருக்கு அவை புரியும்..,

    ''உனக்குத் தேவையானது எதுவோ அதை உரிமையுடன் கேள்...
    என்ன காரணத்திற்காக என்பதெல்லாம் அவசியமில்லை...!''

    ''தரக் காத்திருக்கும் பிரபஞ்சத்திடம் கேட்பது நமது உரிமை. அதைக் கேட்பதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது மடமை...!''

    ''STRAIGHT FORWARD.. ஆகக் கேள். அதைவிட்டுப் புலம்பிக் கொண்டிராதே...''

    ''ஐயோ..பசிக்கிறது....பணம் கொடுங்கள்..' என்று மனிதர்களிடம் இரக்கும் பிச்சைக்காரனாக இல்லாமல், 'பணம் கொடு' என்று உரிமையோடு கேட்கும் பிரபஞ்சத்தின் பங்காளியாக இரு...!''

    ஐயா...இதற்குள் உள்ள உளவியல் மிக மிக அற்புதம்!

    ReplyDelete
  12. நேர்மறையான சிந்தனைகளில்தான் நினைப்பதை அடைய முடியும்!
    அருமை ஐயா
    த.ம-10

    ReplyDelete

  13. /ஒளி வேண்டிக் கேளாது இருள் விலகக் கேட்டும்
    வளம் வழங்கக் கேளாது வறுமை போக்கக் கேட்டும்
    சுகம் நிறையக் கேளாது துயர் நீக்கக் கேட்டும்/
    கேட்பது கிடைக்கப் பெற்றால் கேளாதது கிடைக்கும்தானே. உ-ம் இருள் விலகக் கேட்டால் ஒளி தானாகவே வரும்தானே.! வித்தியாசமாய் சிந்திக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. கேட்க வேண்டியதை கேட்டும். பெற வேண்டியரதை பெற முயற்சியும் வேண்டும் என்பதை அழகான வரிகளால் சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  15. அருமையான கவிதை! பிரபஞ்ச சக்தி பற்றி சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  16. அற்புதமாக உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  17. தப்பாட்டத்தை நிறுத்தினால் சக்தி புரியும்.அருமை ஐயா.

    ReplyDelete
  18. நேரான
    சிந்தனைகளே
    நம்மை
    நல்வழிப் படுத்தும்
    நன்றி அய்யா

    ReplyDelete
  19. ///ஒளி வேண்டிக் கேளாது இருள் விலகக் கேட்டும்
    வளம் வழங்கக் கேளாது வறுமை போக்கக் கேட்டும்
    சுகம் நிறையக் கேளாது துயர் நீக்கக் கேட்டும்///

    ஐயா... உலகில் இதுவேண்டும் அதுவேண்டுமென கேட்பதைவிட கேட்கும்போதே அதனுள்ளே இருக்கும் சூட்சுமமான கேள்விக்கும் விடைதரப்படும்வகையில் கேட்கவேண்டுமென மிக அழகாகக் கூறினீர்கள்.
    அருமை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ஐயா!

    த ம 13

    ReplyDelete
  20. பிரபஞ்ச ரகசியம் என்பது இதானோ?!

    ReplyDelete
  21. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  22. கிரேஸ்//.

    உண்மைதான், அழகாகக் கவியாக்கிவிட்டீர்கள் ரமணி ஐயா.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  23. பால கணேஷ் //

    \\. அருமையாச் சொல்லி அசத்திட்டீங்களே ஸார்!/

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. வேடந்தாங்கல் - கருண் //
    .
    அடையாத உச்சங்களை அடைந்து மகிழ்வோமாக - உண்மையாக..//


    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ//

    “ இருப்பதை விட்டு விட்டு, பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது! “ - என்பதை அழகாகச் சொன்னீர்கள்.//

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் //

    என்ன செய்ய வேண்டுமென்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா..///

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. மகேந்திரன் //

    மிகப்பெரிய புரிதல்..
    ரமணி ஐயா..
    உங்கள் வார்த்தைகள் நெஞ்சில்
    பசுமரத்து ஆணியாய் பதிந்துவிட்டன..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. T.N.MURALIDHARAN //

    மிக அற்புதமான சிந்தனை
    சரியானவற்றை கேட்கத் தெரியாதவர்களா கத் தான் இருக்கிறோம்..
    சிறப்பான வார்த்தைப் பிரயோகங்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  29. கவியாழி கண்ணதாசன்//

    பிரபஞ்ச ரகசியம் பற்றி அழகாக சொன்னீர்கள் அற்புதமாய் உணர்த்தினீர்கள் தொடாருங்கள் /

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. MANO நாஞ்சில் மனோ //
    .
    இதைவிட விளக்கம் வேறு இருக்கமுடியாது, சரியாக சொன்னீர்கள் குரு.///

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. அம்பாளடியாள் //

    ) சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் ஐயா .//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  32. S. Hameeth //aid..
    ''ஐயோ..பசிக்கிறது....பணம் கொடுங்கள்..' என்று மனிதர்களிடம் இரக்கும் பிச்சைக்காரனாக இல்லாமல், 'பணம் கொடு' என்று உரிமையோடு கேட்கும் பிரபஞ்சத்தின் பங்காளியாக இரு...!''

    ஐயா...இதற்குள் உள்ள உளவியல் மிக மிக அற்புதம்!

    சரியான புரிதலுடன் கூடிய தங்கள்
    விரிவான அருமையான பின்னூட்டம்
    அதிக உத்வேகமளிக்கிறது
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. உஷா அன்பரசு//

    நேர்மறையான சிந்தனைகளில்தான் நினைப்பதை அடைய முடியும்!
    அருமை ஐயா//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. G.M Balasubramaniam //

    சுகம் நிறையக் கேளாது துயர் நீக்கக் கேட்டும்/
    கேட்பது கிடைக்கப் பெற்றால் கேளாதது கிடைக்கும்தானே. உ-ம் இருள் விலகக் கேட்டால் ஒளி தானாகவே வரும்தானே.! வித்தியாசமாய் சிந்திக்கிறீர்கள்.//

    சரியான புரிதலுடன் கூடிய தங்கள்
    அருமையான பின்னூட்டம்
    அதிக உத்வேகமளிக்கிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. Sasi Kala //

    கேட்க வேண்டியதை கேட்டும். பெற வேண்டியரதை பெற முயற்சியும் வேண்டும் என்பதை அழகான வரிகளால் சொன்னீர்கள் ஐயா.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. s suresh s//

    அருமையான கவிதை! பிரபஞ்ச சக்தி பற்றி சிறப்பான பகிர்வு! நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. மாதேவி //

    அற்புதமாக உணர்த்தியுள்ளீர்கள்../

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  38. குட்டன் //

    தப்பாட்டத்தை நிறுத்தினால் சக்தி புரியும்.அருமை ஐயா//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  39. கரந்தை ஜெயக்குமார் //

    நேரான
    சிந்தனைகளே
    நம்மை
    நல்வழிப் படுத்தும்
    நன்றி அய்யா//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  40. இளமதி //

    உலகில் இதுவேண்டும் அதுவேண்டுமென கேட்பதைவிட கேட்கும்போதே அதனுள்ளே இருக்கும் சூட்சுமமான கேள்விக்கும் விடைதரப்படும்வகையில் கேட்கவேண்டுமென மிக அழகாகக் கூறினீர்கள்.
    அருமை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ஐயா!//

    சரியான புரிதலுடன் கூடிய தங்கள்
    விரிவான அருமையான பின்னூட்டம்
    அதிக உத்வேகமளிக்கிறது
    தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ராஜி '//

    பிரபஞ்ச ரகசியம் என்பது இதானோ?!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  42. ராமலக்ஷ்மி //

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  43. தாடி வைக்காத சூபி நீங்கள்.

    ReplyDelete
  44. அப்பாதுரை //

    கூடுதல் புகழ்ச்சி ஆயினும்
    மகிழ்வளிக்கத்தான் செய்கிறது
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. ரகசியம் வெளிப்பட்டதால் அனைவர்க்கும்
    பயனே . அதைப் பாராட்டுவது என் கடனே .

    ReplyDelete
  46. ததாஸ்து !

    ReplyDelete
  47. ஸ்ரவாணி //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete