Tuesday, May 21, 2013

சமை யலறை கூட போதிமரம்தானே

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
வெறுமனே இருக்கத் துவங்கிவிடுவேன்

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல

அதிகாலையில் இருந்து
அடுக்களையில் தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய் பரிமாறி
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது

மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததில் உடன் லயிக்க்கத் துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே

54 comments:

  1. ஆஹா... இதை ஒவ்வொரு கணவன்மாரும் உணர்ந்து விட்டால் இல்லறத்தில் என்றுமே தென்றல் வீசுமே! அருமையான கருத்தை பளிச்சென்று உரைத்தீர்கள் ஸார்!

    ReplyDelete
  2. அருமை..வார்த்தையே இல்லை..ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் வேலைகளைப் புரிந்துகொண்டால் போதுமே, நீங்கள் கவி வேறு படைத்துவிட்டீர்கள்!
    நன்றி!

    ReplyDelete
  3. ///சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
    அதைத் தன் செயலால் போதிக்கும்
    மனைவி கூட நமக்குப் புத்தன்தானே///

    சில குடும்பங்களில் கணவனும் புத்தனே......

    ReplyDelete
  4. புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
    அதைத் தருமிடமே போதிமரமெனில்
    சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே

    போதிமரமாய் கவிதையும் ..பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. @பால கணேஷ் ..

    ஆஹா... இதை ஒரு சில மனைவிமாரும் உணர்ந்து விட்டால் இல்லறத்தில் என்றுமே தென்றல் வீசும

    ReplyDelete
  6. புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
    அதைத் தருமிடமே போதிமரமெனில்
    சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
    அதைத் தன் செயலால் போதிக்கும்
    மனைவி கூட நமக்குப் புத்தன்தானே

    இவ் வகையில் பெற்ற தாயும் கூட போதிமரம்தான்
    இரமணி!

    ReplyDelete
  7. புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
    அதைத் தருமிடமே போதிமரமெனில்
    சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே//

    ஆஹா அருமை அருமை. ஞானம்பெற சமையலறையும் சிறந்த இடம்தான்

    ReplyDelete
  8. இந்த ஐயா அம்மாவ எதுக்கோ காக்கா பிடிக்கிறமாதிரியே தெரியுது கவிதை போற
    போக்கப் பார்த்தால் :) வாழ்த்துக்கள் ஐயா
    சிறப்பான சிந்தனை இதற்க்கு .

    ReplyDelete
  9. கவிஞரின் “ஞானம் பிறந்த கதை”.

    ReplyDelete
  10. வித்தியாசமான அழகான அருமையான சிந்தனை... இவ்வாறு இருந்தால் பிரச்சனை ஏது...? பாராட்டுக்கள்...

    ReplyDelete
  11. ஆண்களுக்காவது பணி ஓய்வு கிடைத்து விடுகிறது.. பெண்களுக்கு ஏது ஐயா வீட்டு பணி ஓய்வு? பெண் என்பவள் எழுந்திருக்கவே முடியாதளவு விழும் வரை ஓடிக்கொண்டுத்தானே இருக்கிறாள். அருமையான புரிதலுடன் எழுதிய கவிதைக்கு மிக்க நன்றி!
    த.ம-8

    ReplyDelete
  12. சமையலறையோ சாமியறையோ போதிமரத்தடியில் ஞானம் வந்தால்சரிதான்...
    ஐயா... மிக மிக அருமை! அழகிய கவிதையில் அற்புதமாய் விடயத்தைச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    த ம 9

    ReplyDelete
  13. //புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
    அதைத் தருமிடமே போதிமரமெனில்
    சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
    அதைத் தன் செயலால் போதிக்கும்
    மனைவி கூட நமக்குப் புத்தன்தானே//

    மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. //சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
    அதைத் தன் செயலால் போதிக்கும்
    மனைவி கூட நமக்குப் புத்தன்தானே//

    இது உண்மையைத் தவிர வேறில்லை...

    ReplyDelete
  15. சமையலறை பெண்களுக்கு போதி மரம் என்றால்...
    பெண் உருவமெல்லாம் ஆண்களுக்கு போதி மரமாகும். நல்ல கருத்து ஐயா.

    ReplyDelete
  16. ரொம்ப காலம் கழித்துப் புரிந்து கொண்டீர்களோ...!!

    அருமையான படைப்பு. வணங்குகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete

  17. காணும் இடங்களில் இருந்தும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்தும் கற்க நிறையவே உள்ளது. போதி மரங்களை அடையாளம் கண்டு கொள்வதுதான் சிரமம். சமையலறை போதிமரம், மனைவி புத்தன். சிறப்பான சிந்தனை.

    ReplyDelete
  18. சூப்பர் சிந்தனை!அசத்தறீங்கசார்!

    ReplyDelete
  19. எல்லா கணவர்களுக்கும் சமையலறை ஒரு போதி மரமாகத்தெரிந்து விட்டால் இல்லற வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சிக்குரியதாயிருக்கும்!!

    அருமையான‌ க‌விதை!

    ReplyDelete
  20. புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
    அதைத் தருமிடமே போதிமரமெனில்
    சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
    அதைத் தன் செயலால் போதிக்கும்
    மனைவி கூட நமக்குப் புத்தன்தானே//

    அருமையாக சொன்னீர்கள்.
    மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. "சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே" கவிதைபொழிய மனைவி பல்சுவை விருந்து படைத்து விட்டாரோ :)))

    நல்ல சிந்தனை. எப்படிஎல்லாம் சிந்திக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்....

    ReplyDelete
  22. ஞானசாதனங்கள் கண்பார்வையில்; கண்மட்டும் வெட்டவெளியில்.. இப்படித்தானே வாழ்கிறோம்?! சிந்திக்க வைத்த கவிதை.

    ReplyDelete
  23. எந்தச் செயலையும் ஆர்வமுடன் செய்தால் அதில் அலுப்பு தெரியாது.... சமையலறை கூட சிந்திக்க வைக்கும் இடம்தான்....

    ReplyDelete
  24. நிச்சயமாக!

    தத்தாத்ரேயர் ஞானம் பெற்றவற்றுள் இது விட்டுப் போனதோ...

    ReplyDelete
  25. புதிய பார்வை அய்யா.
    ஓய்வில்லா பணி அல்லவா.

    ReplyDelete
  26. பால கணேஷ் //

    அருமையான கருத்தை பளிச்சென்று உரைத்தீர்கள் ஸார்!//

    தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. கிரேஸ் //

    அருமை..வார்த்தையே இல்லை..ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் வேலைகளைப் புரிந்துகொண்டால் போதுமே,//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. Avargal Unmaigal//

    சில குடும்பங்களில் கணவனும் புத்தனே......

    ஆஹா... இதை ஒரு சில மனைவிமாரும் உணர்ந்து விட்டால் இல்லறத்தில் என்றுமே தென்றல் வீசும//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. இராஜராஜேஸ்வரி //


    போதிமரமாய் கவிதையும் ..பாராட்டுக்கள்..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  30. புலவர் இராமாநுசம் //


    இவ் வகையில் பெற்ற தாயும் கூட போதிமரம்தான்/

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. கவியாழி கண்ணதாசன் //

    ஆஹா அருமை அருமை. ஞானம்பெற சமையலறையும் சிறந்த இடம்தான்//


    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  32. Ambal adiyal //

    வாழ்த்துக்கள் ஐயா
    சிறப்பான சிந்தனை இதற்க்கு .///

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  33. தி.தமிழ் இளங்கோ //
    .
    கவிஞரின் “ஞானம் பிறந்த கதை”.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. திண்டுக்கல் தனபாலன் //

    வித்தியாசமான அழகான அருமையான சிந்தனை... இவ்வாறு இருந்தால் பிரச்சனை ஏது...? பாராட்டுக்கள்...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  35. உஷா அன்பரசு //

    ஆண்களுக்காவது பணி ஓய்வு கிடைத்து விடுகிறது.. பெண்களுக்கு ஏது ஐயா வீட்டு பணி ஓய்வு? பெண் என்பவள் எழுந்திருக்கவே முடியாதளவு விழும் வரை ஓடிக்கொண்டுத்தானே இருக்கிறாள். அருமையான புரிதலுடன் எழுதிய கவிதைக்கு மிக்க நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. இளமதி //

    சமையலறையோ சாமியறையோ போதிமரத்தடியில் ஞானம் வந்தால்சரிதான்...
    ஐயா... மிக மிக அருமை! அழகிய கவிதையில் அற்புதமாய் விடயத்தைச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்//

    !தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் //

    மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்//!

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    .

    ReplyDelete
  38. rajalakshmi paramasivam //

    இது உண்மையைத் தவிர வேறில்லை...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. Sasi Kala //

    சமையலறை பெண்களுக்கு போதி மரம் என்றால்...
    பெண் உருவமெல்லாம் ஆண்களுக்கு போதி மரமாகும். நல்ல கருத்து ஐயா.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. அருணா செல்வம் //
    ..!!

    அருமையான படைப்பு. வணங்குகிறேன் இரமணி

    //.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  41. G.M Balasubramaniam //

    காணும் இடங்களில் இருந்தும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்தும் கற்க நிறையவே உள்ளது. போதி மரங்களை அடையாளம் கண்டு கொள்வதுதான் சிரமம். சமையலறை போதிமரம், மனைவி புத்தன். சிறப்பான சிந்தனை.//

    //.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. குட்டன் //

    சூப்பர் சிந்தனை!அசத்தறீங்கசார்!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. மனோ சாமிநாதன் //

    எல்லா கணவர்களுக்கும் சமையலறை ஒரு போதி மரமாகத்தெரிந்து விட்டால் இல்லற வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சிக்குரியதாயிருக்கும்!!

    அருமையான‌ க‌விதை!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. கோமதி அரசு //

    அருமையாக சொன்னீர்கள்.
    மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. மாதேவி //.


    நல்ல சிந்தனை. எப்படிஎல்லாம் சிந்திக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.../

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  46. அப்பாதுரை ''

    ஞானசாதனங்கள் கண்பார்வையில்; கண்மட்டும் வெட்டவெளியில்.. இப்படித்தானே வாழ்கிறோம்?! சிந்திக்க வைத்த கவிதை.//

    கண்கள் அருகே இமையிருந்தும்
    கண்கள் இமையைப் பார்ப்பதில்லை "தானே"

    ReplyDelete
  47. ezhil //

    எந்தச் செயலையும் ஆர்வமுடன் செய்தால் அதில் அலுப்பு தெரியாது.... சமையலறை கூட சிந்திக்க வைக்கும் இடம்தான்..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. நிலாமகள் //

    நிச்சயமாக!

    தத்தாத்ரேயர் ஞானம் பெற்றவற்றுள் இது விட்டுப் போனதோ../

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  49. T.N.MURALIDHARAN //

    யாரும் யோசிக்காத புதிய பார்வை./

    மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி/

    /

    ReplyDelete
  50. கரந்தை ஜெயக்குமார் //

    புதிய பார்வை அய்யா.
    ஓய்வில்லா பணி அல்லவா./

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete