Sunday, June 30, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (15

இரவு வெகு நேரம் கடற்கரை மணலிலேயே
பேசியபடி படுத்திருந்து பின் ஆஸ்பத்திரி திரும்பினோம்

மறு நாள் காலை குளித்து முடித்து ஊருக்குத் திரும்ப
எங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு மிகச் சரியாக
ஒன்பது மணிக்கு டாக்டர் அறைக்கு வந்து சேர்ந்தோம்

டாக்டரும் முதல் நபராக எங்களை அழைத்து
மருத்துவ அறிக்கை மற்றும் மருந்து மாத்திரைகள்
மற்றும் மதுரை டாக்டருக்கென தனியாக ஒரு
கடிதம் எனக் கொடுத்து சீக்கிரம் குணமடைய
"வாழ்த்துக்கள் "எனக் கூறி "வேறு ஏதேனும்
கேட்கவேண்டியிருக்கிறதா "என்றார்

கணேசன் ஒன்றுமில்லையென தலையசைக்க
நான்தான் புற்று நோய் குறித்து சில தகவல்கள்
தெரிந்து கொண்டால் நல்லது என்கிற
அடிப்படையில்சில கேள்விகள் கேட்டுவைத்தேன்.

அவரது பதிலில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்

புற்று நோயை உண்டாக்கவும் முடியாது
தடுக்கவும் முடியாது

புற்று நோய் என்றால் கட்டாயம் மரணம்தான்
என்பதில்லைஅதனுடன் வாழப் பழகவேண்டும்.
ஒருவன் இறக்கும்போது
புற்று நோயும் அவனுடன் இறந்துவிடும்

புற்று நோய் பரம்பரை நோயுமல்ல
தொற்று நோயும் அல்ல

புகையிலை குட்கா சிகரெட் மற்றும் கண்ட கண்ட
ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவு
மற்றும் அலங்காரப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு
புற்று நோய் வர கூடுதல் வாய்ப்புண்டு

ஆரம்ப அறிகுறியிலேயே கண்டுபிடிக்கப்பட்டால்
புற்று நோயை குணப்படுத்துவது எளிது

இறுதியாக கணேசனின் உண்மையான நோயின்
நிலை குறித்தும் கேட்டேன்

நோயின் தீவீரத்தைக் குறைக்கும்படியான
மருந்துகள் கொடுத்துள்ளதாகவும்
.வலி குறைக்கும்படியான மருந்துகளும்
கொடுத்துள்ளதாகவும் சொன்னார்

உடலில் மருந்தினால் ஏற்படும் மாறுதல் குறித்து
வாரத்திற்கு ஒருமுறை மதுரை டாக்டரிடம் செக்கப்
செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்

குடலில் நோய் முற்றி இருப்பதால்
உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும்படியும்
தொடர்ந்து வயிற்றுப் போக்கோ மஞ்சள் காமாலையோ
வராமல் கவனமாக இருக்கும்படியும்
பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்

ஏனெனில் மருந்து தோற்று நோய் ஜெயிப்பதற்கான
திட்டவட்டமான அறிகுறி அது என்றார்

இறுதியாக "சீக்கிரம் குணமடைய  வாழ்த்துக்கள்"
என கணேசனின் கைகுலுக்கி வாழ்த்துக்களைச் சொல்ல
நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்

வெளியே வந்ததும் "சிறிது நேரம் அந்த எதிர் பார்க்கில்
உட்கார்ந்து இருந்து போவாமா "என்றான் கணேசன்

அவன் ஏதோ விரிவாகப் பேச விரும்புகிறான் எனப்
புரிந்து கொண்டு நானும் சரியெனச் சொல்லி
உடன் சென்று பூங்காவில் இருந்த பெஞ்சில்
அமர்ந்து கொண்டேன்

அவன் சிறிது நேரம்  பேசவேண்டியதை
மனதுக்குள் சொல்லிப்பார்ப்பதுபோல மௌனமாக
இருந்துவிட்டு பேசத் துவங்கினான்

"நான் ஆறு மாதங்களுக்குப் பின் இருக்கமாட்டேன்
என்கிற உறுதியோடு நினைத்துப்பார்க்கையில்தான்
நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எத்தனை
அர்த்தமற்றது என்றும் எனது கருத்தையும்
நம்பிக்கையையும் எத்தனை வலுக்கட்டாயமாக
குடும்பத்திலும் உறவினர்களிடத்தும் திணித்து
அற்ப சந்தோதோசப்பட்டுள்ளேன் என எனக்கு
இப்போது புரிகிறது.

ஆறு மாதங்களுக்குப் பின் இருந்தால் மிக்க
சந்தோசம்,இல்லையென்றாலும் கவலையில்லை
என்கிற மன உறுதியோடு இனியாவது
ஒரு நல்ல கணவனாக தந்தையாக மகனாக
வாழப் போகிறேன்

தயவு செய்து புற்று நோய் முற்றியுள்ள விவரம்
குறித்து மட்டும் யாரிடமும் தவறியும்
வாய்விட்டு விடாதே " எனச் சொல்லி
என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்

அதற்குப் பின் ஒரு மூன்று மாத காலம்
அவன் எடுத்த முடிவுகள் அவன் செய்த காரியங்கள்
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க
இப்போது கூட என்னால்அந்தப்
பிரமிப்பில் இருந்து மீளவோ
கண்ணீரை அடக்கவோ நிச்சயமாக முடியவில்லை

(தொடரும் )

28 comments:

  1. //ஒருவன் இறக்கும்போது புற்று நோயும் அவனுடன் இறந்துவிடும்//

    நல்லவேளையாப்போச்சு !.

    பல பயனுள்ள தகவல்கள் கொடுத்து முன்னெச்சரிக்கை + விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள்.

    தொடரட்டும்.

    ReplyDelete
  2. இறுதிப் பகுதி வாசிக்கக் கண்கள் கலங்கியது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. ஒரு நல்ல கணவனாக தந்தையாக மகனாக
    வாழப் போகிறேன்//
    சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் இருக்கும் வரை அனைவரையும் நன்கு வைத்துக் கொள்ள வேண்டும் அவர் நினைத்தது மகிழ்ச்சி, ஆனால் அவர் நிலை கண்டு வருத்தமாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. உடன் பிறந்தே கொல்லும் நோய், என்பதனை புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். இந்த பதிவைப் படிக்கும்போது, புற்று நோயால் இறந்த எனது சித்தப்பா மற்றும் தூரத்து அத்தை ஆகியோர் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வந்து, மனது கனத்தது.

    ReplyDelete
  5. புற்று நோய் பரம்பரை நோயுமல்ல
    தொற்று நோயும் அல்ல//பரம்பரையாய் வருவதாக சொல்வார்களே ? அப்படியில்லையா?

    ReplyDelete
  6. கண்ணீரை அடக்க இயலவில்லை, புற்று நோய்க்கும் ஒரு புற்று நோய் வராதா.

    ReplyDelete
  7. அப்படி என்னதான் செஞ்சார்?! அறிய ஆவல்..,

    ReplyDelete
  8. மனது கனமாகிப்போனது ....

    ReplyDelete
  9. /// இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எத்தனை
    அர்த்தமற்றது என்றும் எனது கருத்தையும்
    நம்பிக்கையையும் எத்தனை வலுக்கட்டாயமாக
    குடும்பத்திலும் உறவினர்களிடத்தும் திணித்து
    அற்ப சந்தோப்பட்டுள்ளேன்... ///

    சொல்ல வார்த்தைகள் இல்லை...

    ReplyDelete
  10. மனத்தின் பாரம் கூடிக் கொண்டே போகிறது அய்யா.

    ReplyDelete
  11. :(

    புற்று நோய்க்கு புற்று நோய் வராதா? அதானே.....

    ReplyDelete

  12. இருக்கப் போவது எவ்வளவு நாட்கள் என்பது நோய் வந்தவருக்கு மட்டுமல்ல , எல்லோருக்குமே பொருந்தக் கூடியது. ஆகவே எல்லோரும் நல் வாழ்வு வாழ முயற்சி செய்ய வேண்டும். நாளை என்பதே கற்பனைதானே....!

    ReplyDelete
  13. தாளமுடியாத துயரம்.... தொடருங்கள்!

    ReplyDelete
  14. புற்று நோய்... மிக துயரமான நோய்...

    ReplyDelete
  15. விழிப்புணர்வு பகிர்வு...

    விடுபட்ட பகுதிகளையும் வாசித்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
  16. நல்லதொரு பகிர்வு! புற்று நோய் குறித்த தகவல்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  17. இறப்பு விரைவில் உறுதி என்று தெரிந்து வி்ட்டால் சில மனிதர்களுக்கு தெளிவும் துணிவும் வருவது உண்டு!

    ReplyDelete
  18. நோயில்லாதவரும் ஒரு நாள் போய்த்தானே சேரவேண்டும். மருந்துகளால் வலியையும் நாட்களையும் கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப்போடலாம் அவ்வளவே....

    ReplyDelete
  19. தொடருகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  20. திருப்பதி சென்றிருந்ததால் கடந்த இரண்டு பகுதிகளை இப்போதுதான் படித்தேன். முடிவு தெரிந்து விட்டது வருத்தம் நெஞ்சை பிசைகிறது. இதை புத்தகமாகவே வெளியிடலாம் ரமணி சார்.
    உங்கள் எழுத்து நடை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
    த,ம 10

    ReplyDelete
  21. அவர் அதன்பின் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிய, இப்போது நினைத்தாலும் நீங்கள் அடையும் பிரமிப்பை நானும் ‌அடைய... தொடர்ந்து வருகிறேன்!

    ReplyDelete

  22. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் உள்ள இது போன்ற சோகங்கள் கடவுள் இருக்கிறாரா இல்லையா என சந்தேகிக்க வைக்கிறது... சில அடிப்படைத் தகவல்களும் இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள் ..நன்றி

    ReplyDelete
  23. மனது கனத்துப்போய்விட்டது........... தொடர்கிறேன்.

    ReplyDelete
  24. அவருக்காவது தாம் இறக்க போவது தெரிந்ததால் குடும்பத்தீற்கு என்ன நல்லது செய்யலாம் என்ரு நினைக்கிறார் ஆனால் நாமோ?

    ReplyDelete
  25. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது!

    ReplyDelete
  26. மனத்தை கனக்கச்செய்யும் பதிவு. முடிவில் இந்நோய் பற்றி அவர் மனைவியும் குடும்பமும் அறிய நேரும்போது அதை தங்களிடம் மறைப்பதற்கு உடந்தையாய் இருந்த உங்களையும் அல்லவா தவறாக எண்ணக்கூடும்?

    ReplyDelete