Saturday, July 27, 2013

ஆடியும் தம்பதிகள் பிரிந்திருத்தலும்,,,,(அவல்) (1)

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான
காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

47 comments:

  1. யோசிக்க வேண்டிய செய்திதான் அய்யா. ஆனால் ஆடி மாதத்தைக் காரணம் கூறி தம்பதிகளை பிரித்து வைப்பது முதல் குழந்தைக்கு மட்டும்தானே? பிறகு இல்லையே ஏன்?

    ReplyDelete
  2. தாய்க்கு மிகுந்த சிரமம் என்பது உண்மை...

    ReplyDelete
  3. i think its kind of issue, need to think about...!!!!

    ReplyDelete
  4. இப்படியும் ஒரு கோணம். இதுவரை அறியாதது.

    ReplyDelete
  5. இருக்கலாம்.ஆடியில் திருமணம் வேண்டாம் என்பதற்கும் அதுதான் காரணமோ

    ReplyDelete
  6. என்னுடைய சொந்த அனுபவத்தில் என் மூத்த பிள்ளை பங்குனியிலும், மூன்றாவது மகன் சித்திரையில் அதுவும் விடியற்கால வேளையில் பிறந்தவர்கள் தான்.

    வேலை வாய்ப்பிலோ, உத்யோகத்திலோ, சம்பளத்திலோ, அந்தஸ்திலோ, பெர்சனாலிடியிலோ, கோபத்திலோ, லீடர்ஷிப்பிலோ மிகவும் உச்சத்தில் செளகர்யமாகவே உள்ளனர்.

    நன்கு படித்து, சிறு வயதிலேயே மிகப்பெரிய அதிகாரிகளாக ஆகிவிட்டனர். பிறர் பார்த்தால் பொறாமை கொள்வது போன்ற நிலைமையில் தான் உள்ளனர்.

    ReplyDelete
  7. தம்பதியினரை எக்காரணம் கொண்டும் பிரித்து வைத்தல் கூடவே கூடாது என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. எனக்கும் ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்தான்
    தோன்றுகிறது

    ReplyDelete
  9. இது புதுசா இருக்கே!! இருந்தாலும் இருக்கும்.

    ReplyDelete
  10. அடடா நம்ம அரசனுங்க விவரமானவங்களாதான் இருக்காயிங்க, ஆனால் வரலாறுகளை எழுதி வைக்காமல் தின்னுட்டு தூங்கியும் இருக்காங்க...!

    ReplyDelete
  11. ஒரு வேளை இப்படியும் இருக்குமோ?
    அண்ணல் ஒன்று நிச்சயம் ரமணி சார். பல புது தம்பதிகள், உங்களுக்கு மானசீகமாக நன்றி சொல்வார்கள்,உங்கள் பதிவின் தயவால் அவர்கள் பிரியாதிருக்கும் பட்சத்தில்

    ReplyDelete
  12. //அண்ணல் // என்பதை ஆனால் என்று வாசிக்கவும். தட்டச்சு பிழை ஏற்பட்டு விட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  13. இப்படியும் இருந்திருக்கலாம்.....

    த.ம. 5

    ReplyDelete
  14. கரந்தை ஜெயக்குமார் //

    யோசிக்க வேண்டிய செய்திதான் அய்யா. ஆனால் ஆடி மாதத்தைக் காரணம் கூறி தம்பதிகளை பிரித்து வைப்பது முதல் குழந்தைக்கு மட்டும்தானே? பிறகு இல்லையே ஏன்//


    நீங்கள் சொல்வதும் யோசிக்கவேண்டியதுதான்
    தங்கள் முதல் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. திண்டுக்கல் தனபாலன் //

    தாய்க்கு மிகுந்த சிரமம் என்பது உண்மை.

    .தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

    ReplyDelete
  16. கோவம் நல்லது //.

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  17. T.N.MURALIDHARAN //

    இப்படியும் ஒரு கோணம். இதுவரை அறியாதது.//

    தங்க்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. கவியாழி கண்ணதாசன்//.
    .
    இருக்கலாம்.ஆடியில் திருமணம் வேண்டாம் என்பதற்கும் அதுதான் காரணமோ//

    நீங்கள் சொல்வதும் யோசிக்கவேண்டியதுதான்
    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் //
    .
    என்னுடைய சொந்த அனுபவத்தில் என் மூத்த பிள்ளை பங்குனியிலும், மூன்றாவது மகன் சித்திரையில் அதுவும் விடியற்கால வேளையில் பிறந்தவர்கள் தான்//
    அந்த அந்த மாதத்தில் அதி காலையில்
    பிரம்ம முஹூர்த்தத்தில் பிறந்த
    குழந்தைகளுக்கு லக்னம் அந்த ராசியிலேயே
    இருக்கும் அந்த வகையில் சித்திரை அதிகாலையில்
    பிறந்த தங்கள் புதல்வருக்கும் லக்னம்
    மேஷத்தில்தான் இருக்கும்
    அதன்படிப் பார்க்க தங்கள் புதல்வர்
    அனைத்திலும் சிறந்து விளங்குதலில்
    ஆச்சரியப்பட ஏதுமில்லை என்பதுதான்
    இந்தக் கருத்தின் சாராம்சம்

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    .

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் //

    தம்பதியினரை எக்காரணம் கொண்டும் பிரித்து வைத்தல் கூடவே கூடாது என்பது என் கருத்து.//

    தங்கள் கருத்தே என் கருத்தும்


    ReplyDelete
  21. Avargal Unmaigal //

    எனக்கும் ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்தான்
    தோன்றுகிறது/

    /நிச்சயம் அப்படித்தான் இருக்கும்
    சந்தேகம் வேண்டாம்

    ReplyDelete
  22. நிலாமகள் //

    இது புதுசா இருக்கே!! இருந்தாலும் இருக்கும்.//

    தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ //
    .
    அடடா நம்ம அரசனுங்க விவரமானவங்களாதான் இருக்காயிங்க, ஆனால் வரலாறுகளை எழுதி வைக்காமல் தின்னுட்டு தூங்கியும் இருக்காங்க...//

    தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ஜி+ இணைப்பிற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. rajalakshmi paramasivam //

    ஒரு வேளை இப்படியும் இருக்குமோ?
    ஒன்று நிச்சயம் ரமணி சார். பல புது தம்பதிகள், உங்களுக்கு மானசீகமாக நன்றி சொல்வார்கள்,உங்கள் பதிவின் தயவால் அவர்கள் பிரியாதிருக்கும் பட்சத்தில்//

    அதற்காகத்தான் இந்தப் பதிவையே எழுதினேன்
    ஏதோ நம்மால் ஆனது
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. வெங்கட் நாகராஜ்//

    இப்படியும் இருந்திருக்கலாம்.....//

    தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  26. நல்ல சிந்தனைப் பதிவு ஐயா.
    வழமைபோல் நான் தாமதமாக வந்தமையால் முன்னுக்கே கருத்துகள் பரிமாறப்பட்டுவிட்டன.

    தம்பதிகளை பிரித்து வைக்கக்கூடாது.என் கருத்து அதே. ஆனால்.....
    சித்திரைக் கத்திரி வெய்யிலில் பிரசவிக்கும் தாய்க்கும் சேய்க்கும் நலனை நினைவில் கொள்வது நல்லதுதானே....

    வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.6

    ReplyDelete
  27. திருமணம் முடிந்தவுடன் புதிய உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்பட எவ்வளவோ சம்பிரதாயங்கள். அவற்றுள் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  28. அரசனாகும் யோகம் கூட உண்டு//
    புதிய தகவலாக இருக்கிறது.

    ReplyDelete

  29. என் மூத்த மகன் பங்குனியிலும், இளையவன் சித்திரையில் அதிகாலையிலும் பிறந்தவர்கள். ஆயிரம் கதைகள் . அவரவர் சொந்தமாக சிந்திக்கவேண்டும். கணவன் மனைவியர் இணைவதோ இல்லாததோ அவரவர் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  30. புதிய தகவல்! உண்மையாகவும் இருக்கலாம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  31. இதை படிக்கும் போது எனக்கு வேறொன்று நினைவுக்கு வருகின்றது.

    பாலைவனத்தை கடப்பவன் தான் சிரமத்தைப் பற்றி யோசிக்கின்றான். பாலைவனத்தில் வசிப்பவர்கள் அந்த சிரமத்தை தங்கள் வாழ்க்கையில் இயல்பாகவே எடுத்துக் கொள்கின்றார்கள்.

    ReplyDelete
  32. அம்மா சிம்ம ராசின்னு சொன்னாங்க
    அய்யா நாத்திகவாதி அதனால தெரியாது

    அட

    நாம மேஷ ராசிதான் பிறந்தது கூட காலை 9.10 மணிக்கு

    அடுத்த அரசர் நான்தான்

    ReplyDelete
  33. அட! இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? சுதந்திர இந்தியாவில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் இல்லையோ?

    ReplyDelete
  34. எங்களுக்கு இந்தப் பிரட்சனையே இல்லைங்க.
    நாங்க (பெண்கள்)எந்த நாட்கள், எந்த நேரத்தில் பிறந்தாலும் வீட்டிற்கு என்றும் மாக ராணிகள் தான்.

    இந்த வகையில் பாவம் தான் ஆண்கள்!!!

    தகவலுக்கு நன்றி இரமணி ஐயா.

    ReplyDelete
  35. கிட்டத்தட்ட இது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இன்னொன்றையும் நினைத்துப்பார்க்க வேண்டும். சூரியன் உச்சமாக இருப்பவர்கள் வகுப்பறையாகட்டும், வேலை செய்யும் இடமாகட்டும், உறவினர் வீட்டு விசேஷமாகட்டும்...எதிலும் தனித்து தெரிவார்கள். அதாவது அந்த அளவுக்கு செயல்திறன் இருக்கும். இப்போது வார்டுக்கு ஒரு கவுன்சிலர் இருக்கும்போதே மக்களின் கோவணத்தையும் உருவப்பார்க்கிறார்கள். இப்படி தெருவுக்கு குறைந்தது 10 பேராவது பொணமா இருந்தாலும், மாப்பிள்ளையா இருந்தாலும் அது நானாக மட்டுமே இருக்கணும் என்று கிளம்பினால் நாடு தாங்காது ஐயா.

    ஒரு அலுவலகத்தில் அல்லது கடையில் பணிபுரிபவர்களில் சிலர் சொல் பொறுக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் விஷயம் ஒன்றும் இருக்காது. ஆனால் வெகு சிலர் காரியத்தில் சூரனாக இருப்பார்கள். அவர்களை தேவையில்லாமல் முதலாளி கூட திட்ட முடியாது. இப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரம், சிம்ம ராசி என்று எதாவது ஒரு வகையில் சூரியனுடன் சம்மந்தப்பட்டவர்களாக இருக்க 90 சதவீதம் வாய்ப்பு இருக்கும். (மீதம் 10 சதவீதம் ?................ மறைமுகமாக இந்த அமைப்பு இருக்கும்.)

    ReplyDelete
  36. ஆடி மாசத்துக்கு ஏற்ற சரியான தலைப்பு….


    சரி அப்டி என்ன தான் எழுதி இருக்கீங்கன்னு பார்க்க வந்தால் நம்ம தமிழ்நாட்டில் எல்லாரும் புது தம்பதியர் ஜாலியா அம்மா வீட்டுக்கு படை எடுக்கும் இந்த ஒரு மாச லீவுக்கும் வேட்டு வைப்பது போல ஒரு சேதி..

    ஆனால் இது ஆச்சர்யமான செய்தி… ஏன்னா இதுவரை நான் கேட்டு வந்தது நீங்க சொன்னது போலவே பேறுகாலம் உஷ்ண சமயத்தில் என்பதால் தாய்க்கும் சிரமமாகும் என்றே…

    இப்ப இப்படிச்சொல்லும்போது யோசிக்க வைக்கிறது நிறைய விஷயங்களை…


    வோல் சே கங்கா அப்டின்னு ஒரு புத்தகம் படித்தால் நிறைய விஷயங்கள் அறிய வரலாம்…

    அந்த காலத்திலேயே இது தொடங்கிவிட்டதா? பேஷ் பேஷ்… அரச குலத்தை தவிர வேறு எங்கும் இதுப்போன்ற பராக்கிரமன் பிறந்துவிட்டால் அரசர்களையும் காட்டுக்கு அனுப்பிவிடும் துணிச்சல் பெற்றவர்கள் எதற்கும் துணிந்தவர் அப்போதே புரட்சி வெடித்து அரசர்குலம் மட்டுமே அரியணை ஏறவேண்டும் என்றக்காட்சி தவிடுபொடியாகி இருக்கும்..


    அதனாலயே இப்படி ஒரு கட்டுக்கதையை உருவாக்கி அதை எல்லோரும் வழி வழியாக இதோ நாமளே ஃபாலோ பண்றோமே… இப்படி இருக்கும்போது இனியா விழித்தெழப்போகிறோம் இதைப்படித்துன்னு ஆயாசம் தோணுது ரமணிசார்…


    இதுல எனக்கென்ன கவலைன்னா….. எனக்கும் இந்த ஆடிமாசம் எப்படா பிறக்கும் அம்மாவீட்டுக்கு ஓடிரலாம்னு காத்துக்கிட்டு இருந்தால்.. அதற்கு முன்னரே கர்ப்பம் தரித்துவிட்டதால் அந்தவாய்ப்பும் இழந்தாச்சு…


    இப்படியும் நடந்திருக்கலாம்னு கண்டிப்பா எல்லாருமே யோசிக்கும் இந்த விஷயத்தை எல்லோரும் படித்து.. ஆடிமாதம் தள்ளுபடி இருக்கட்டும் உடையிலும் நகையிலும்.. ஆனால் ஆடிமாசத்தில் அம்மா வீட்டுக்கு தள்ளிவிட வேண்டாம் பாவம் புதுமணத் தம்பதியர் என்று சப்போர்ட் செய்கிறது வரிகள்….

    அன்பு நன்றிகள் ரமணி சார்….

    ReplyDelete
  37. ஓ...காரணங்கள் இதுதானா ?!

    ReplyDelete
  38. இப்படியும் ஒருகாரணம் இருக்கின்றதா .

    ReplyDelete
  39. இளமதி said...
    //
    தம்பதிகளை பிரித்து வைக்கக்கூடாது.என் கருத்து அதே. ஆனால்.....
    சித்திரைக் கத்திரி வெய்யிலில் பிரசவிக்கும் தாய்க்கும் சேய்க்கும் நலனை நினைவில் கொள்வது நல்லதுதானே../


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. தி.தமிழ் இளங்கோ said..//
    .
    திருமணம் முடிந்தவுடன் புதிய உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்பட எவ்வளவோ சம்பிரதாயங்கள். அவற்றுள் இதுவும் ஒன்று

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    .

    ReplyDelete
  41. கோமதி அரசு said...//

    அரசனாகும் யோகம் கூட உண்டு//
    புதிய தகவலாக இருக்கிறது./

    /தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  42. G.M Balasubramaniam said...//

    என் மூத்த மகன் பங்குனியிலும், இளையவன் சித்திரையில் அதிகாலையிலும் பிறந்தவர்கள். ஆயிரம் கதைகள் . அவரவர் சொந்தமாக சிந்திக்கவேண்டும். கணவன் மனைவியர் இணைவதோ இல்லாததோ அவரவர் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்து இருக்க வேண்டும்//

    ./தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. s suresh said...//

    புதிய தகவல்! உண்மையாகவும் இருக்கலாம்! பகிர்வுக்கு நன்றி!///

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  44. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?
    ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
    சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான்.

    சூரியன் உச்சத்தில் இருந்தால் சீக்கிரம் தலைமை பதவி கிடைக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவன் கணவன்/அப்பா . ஆனால் குழந்தை சீக்கிரம் தலைமை பதவி அடைய வேண்டும் எனில் என்ன நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டுமா?

    சித்திரையில் "முதல்" குழந்தை பிறந்தால் அப்பனை காவு வாங்கிவிடுவான்.அப்பனுக்கு விரைவான முன்னேற்றத்தையும் அளித்து அப்புறம் தூக்கிடுவான். குழந்தை விரைவில் குடும்பத் தலைவனாகிவிடும். இதனால் தான்ஆடியில் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.
    எல்லோருக்கும் இப்படி ஆகுமா என்றால் இல்லை என்பதே எனது பதில்.

    மற்ற அமைப்புகளை பொறுத்து சிலருக்கு உறவில் அதீத சிக்கல், பிரிய நேரிடுதல் போன்றவை நடக்கும்.

    நான் பார்த்த ஒரு ஜாதகத்தோடு இது பொருந்தியது.
    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/08/blog-post.html

    ReplyDelete
  45. அய்யா,

    இப்படி எத்தனை தந்திரங்கள் மன்னர்கள் செய்துள்ளார்களோ?

    ReplyDelete