Thursday, July 25, 2013

கவிமூலம்

மெள்ள மெள்ளத் துள்ளிவரும்
வெள்ளியலை போலே-என்
உள்ளமெங்கும் இன்ப அலை
எல்லாம் உன்னாலே

தள்ளத் தள்ள மீதுவிழும்
பிள்ளைசுகம் போலே-வேறு
எண்ணம் வரஉந்தன் வண்ணம்
மேவும் தன்னாலே

மெல்ல மெல்லத் தித்தித்கிற
வெல்லக்கட்டி போலே-உன்னை
எண்ண எண்ண சுகம்சேர்க்கும்
பெண்ணே பொன்மானே

வெல்ல வெல்லத் தழைக்கின்ற
மூவாசைப் போலே- காலம்
செல்லச் செல்ல சுவைகூட்டும்
கண்ணே கலைமானே

உள்ளத் துள்ளே மலராக
மணக்கின்ற மாதே-உன்னை
எண்ணிச் சொல்லும் உளறல்கூட
நற்கவிதை ஆமே

51 comments:

  1. // உள்ளத் துள்ளே மலராக
    மணக்கின்ற மாதே-உன்னை
    எண்ணிச் சொல்லும் உளறல்கூட
    நற்கவிதை ஆமே //

    நல்ல வரிகள்..

    ReplyDelete
  2. வெல்லக்கட்டி போலே தித்தித்கிற, சுகம்சேர்க்கும் வரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உள்ளத் துள்ளே மலராக
    மணக்கின்ற மாதே-உன்னை
    எண்ணிச் சொல்லும் உளறல்கூட
    நற்கவிதை ஆமே
    >>
    இந்த விசயம் அம்மாக்கு தெரியுமாப்பா?!

    ReplyDelete
  4. @ ராஜி - அம்மாவைத் தானே கருதி எழதியது.
    ---------------------
    சிலவேளை நானும் வார்த்தைப் பந்தல் போடுவதுண்டு . ஆனால் அருத்தமுடன். மிக நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. ஐயா தங்கள் புது முயற்சி அனைவரின நெஞ்சிலும் அமுதை ருசிக்க வைத்தது..

    ReplyDelete
  6. துள்ளி வருங்கவி மூலம் தழுவியே
    சொல்லும் சுகமோ இதம்!

    ரசிக்கவைக்கும் கவிதை ஐயா!
    திரும்பத் திரும்பப் படிக்கிறேன் வியந்து!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. //மெல்ல மெல்லத் தித்தித்கிற
    வெல்லக்கட்டி போலே-உன்னை
    எண்ண எண்ண சுகம்சேர்க்கும்
    பெண்ணே பொன்மானே//

    ;)))))

    அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. கவிதை வரிகள் அருமை.

    எமனோடு விளையாடி..21 வது பாகம் எப்போது?

    ReplyDelete
  9. மெள்ள மெள்ளத் துள்ளிவரும்
    வெள்ளியலை போலே-என்
    உள்ளமெங்கும் இன்ப அலை
    எல்லாம் உன்னாலே//

    எப்போதும் இன்ப அலை சுகம் தரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. துள்ளல் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நற்கவிதை ஆமே..

    ReplyDelete
  12. அழகிய கவிதையுள் ஒளிந்திருக்கும் உவமை நயத்திலும் பொருள் நயத்திலும் மனம் பறிகொடுத்தேன்.
    \\தள்ளத் தள்ள மீதுவிழும்
    பிள்ளைசுகம் போலே\\
    நினைக்கும்போதே நெஞ்சம் மலரச்செய்யும் இனிமை. துள்ளுகின்ற மனத்தில் விளைந்த கவிமூலம் என்னும் கவிமூலம் கண்டோம் காதல் உள்ளம். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  13. உளறல் கூட கவிதையாய் உருக்கொண்டு நிற்பது ஒரு தனி சுகமே/

    ReplyDelete
  14. சங்கவி//

    தங்கள் முதல் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் ரசனையுடன் கூடிய பின்னூட்டம்
    மகிழ்வளிக்கிறது,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ராஜி //

    இது அம்மா குறித்த கவிதையே
    உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. kovaikkavi //
    @ ராஜி - அம்மாவைத் தானே கருதி எழதியது.
    ---------------------
    சிலவேளை நானும் வார்த்தைப் பந்தல் போடுவதுண்டு . ஆனால் அருத்தமுடன். மிக நன்று.//

    தங்களைப்போல பொருள் ஆழத்துடன்
    அதீத சிந்தனையுடன் எழுதுவது கடினமே
    எப்போதேனும் சந்தமெட்டில் எழுதிப்பார்க்கலாமே
    என தோணுவதை எழுதுகிறவன் நான்
    என்வே அதிகம் எதிர்பார்க்கவேண்டியதில்லை
    வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. Sasi Kala //

    ஐயா தங்கள் புது முயற்சி அனைவரின நெஞ்சிலும் அமுதை ருசிக்க வைத்தது

    .உங்கள் கவிதைகளைப்படிக்க வந்த
    ஆர்வத்தில் எழுதியதுதான்
    நன்றாக இருப்பின் அதன் பெருமை
    உங்களையும் சேரும்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  19. வேடந்தாங்கல் - கருண் //

    அருமையான வரிகள்..//

    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. இளமதி //
    துள்ளி வருங்கவி மூலம் தழுவியே
    சொல்லும் சுகமோ இதம்!

    ரசிக்கவைக்கும் கவிதை ஐயா!
    திரும்பத் திரும்பப் படிக்கிறேன் வியந்து!//

    வியந்து என்கிற வார்த்தை மிகவும் பிடித்தது
    வரவும் கவிதையிலேயே பின்னூட்ட்டம் இட்டதும்
    மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...


    ;))))) அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.//

    சந்த உணர்வு மழுங்கவேண்டாம் என
    அவ்வப்போது இப்படி எழுதுவது
    வேறு காரணமில்லை
    உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. ஸாதிகா//


    கவிதை வரிகள் அருமை.
    எமனோடு விளையாடி..21 வது பாகம் எப்போது?//

    அதிக சோகமாக உள்ளது என
    சில நண்பர்கள் குறைபட்டுக் கொண்டதால்
    கொஞ்சம் நிறுத்தியுள்ளேன்
    எனக்குள்ளும் பாதியில் நிறுத்தியது
    சங்கடமாகத்தான் உள்ளது
    தாங்கள் விசாரித்தது சந்தோசமளிக்கிறது
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. கோமதி அரசு s//.

    மெள்ள மெள்ளத் துள்ளிவரும்
    வெள்ளியலை போலே-என்
    உள்ளமெங்கும் இன்ப அலை
    எல்லாம் உன்னாலே//

    எப்போதும் இன்ப அலை சுகம் தரட்டும்//

    முதல் வரி ஏதோ யோசிக்கையில்
    நினைவுக்கு வர அந்தச் சந்தம் பிடிக்க
    எழுதினேன்
    ரசித்துப்பின்னூட்டமிட்டமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. s suresh //

    துள்ளல் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!//

    உடன் வரவுக்கும் பாராட்டுக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. வார்த்தைகளை அழகாய் கோர்த்து ரசம் மிகு கவிதை புனைந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  26. Madhu Mathi //

    நற்கவிதை ஆமே.//

    பிரம்ம ரிஷி ஆனேன்

    ReplyDelete
  27. T.N.MURALIDHARAN said//

    சந்தம் விளையாடும் கவிதை
    அருமை//

    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  28. / வெல்ல வெல்லத் தழைக்கின்ற
    மூவாசைப் போலே- காலம்
    செல்லச் செல்ல சுவைகூட்டும்
    கண்ணே கலைமானே/ முக்காலத்தைய உண்மை. உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. கீத மஞ்சரி//
    அழகிய கவிதையுள் ஒளிந்திருக்கும் உவமை நயத்திலும் பொருள் நயத்திலும் மனம் பறிகொடுத்தேன்.
    \\தள்ளத் தள்ள மீதுவிழும்
    பிள்ளைசுகம் போலே\\
    நினைக்கும்போதே நெஞ்சம் மலரச்செய்யும் இனிமை. துள்ளுகின்ற மனத்தில் விளைந்த கவிமூலம் என்னும் கவிமூலம் கண்டோம் காதல் உள்ளம். பாராட்டுகள் ஐ

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான கவித்துவமான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. விமலன் //..
    உளறல் கூட கவிதையாய் உருக்கொண்டு நிற்பது ஒரு தனி சுகமே/

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. டினேஷ் சுந்தர் said...//

    வார்த்தைகளை அழகாய் கோர்த்து ரசம் மிகு கவிதை புனைந்திருக்கிறீர்கள்//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. G.M Balasubramaniam said...//

    / வெல்ல வெல்லத் தழைக்கின்ற
    மூவாசைப் போலே- காலம்
    செல்லச் செல்ல சுவைகூட்டும்
    கண்ணே கலைமானே/ முக்காலத்தைய உண்மை. உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள்

    நான் உங்கள் பெஞ்சுக்கு அடுத்த பெஞ்ச்தானே
    வயதான் பின் வரும் அன்புடன் கூடிய காதல்
    எத்தனை சுகமானது என்பது எனக்கும் கொஞ்சம்
    புரியும்தானே
    வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//



    ReplyDelete
  33. அருமையான கவிதை.

    ReplyDelete
  34. இளமை வாசம் வீசும் கவிதை, சூப்பர் குரு....!

    ReplyDelete
  35. தித்திக்கும் கவிதை.....

    ReplyDelete
  36. மெட்டு போட்டு மெருகேற்றிப் பாடத் தோணுதுங்க!

    ReplyDelete
  37. ஆஹா......அருவிபோலஓசைகொட்டுதே.மீண்டும்மீண்டும்படிக்கத்தோனுதே

    ReplyDelete
  38. காதல் வந்தால் உளறல்கூடக் கவிதைதான் !

    ReplyDelete
  39. சந்த வரிகள் அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  40. rajalakshmi paramasivam //

    அருமையான கவிதை

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//

    .

    ReplyDelete
  41. கரந்தை ஜெயக்குமார் said..//
    .
    சுகமான கவிதை//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  42. MANO நாஞ்சில் மனோ //

    இளமை வாசம் வீசும் கவிதை, சூப்பர் குரு/

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  43. வெங்கட் நாகராஜ் said..
    .
    தித்திக்கும் கவிதை.//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  44. அப்பாதுரை said...//


    மெட்டு போட்டு மெருகேற்றிப் பாடத் தோணுதுங்க! /
    /
    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கவியாழி கண்ணதாசன் said...//

    ஆஹா......அருவிபோலஓசைகொட்டுதே.மீண்டும்மீண்டும்படிக்கத்தோனுதே

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  46. ஹேமா said...//

    காதல் வந்தால் உளறல்கூடக் கவிதைதான் !//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//



    ReplyDelete
  47. Seshadri e.s. said...//

    சந்த வரிகள் அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete