Friday, August 23, 2013

சென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)

சிந்தையிலே சென்றஆண்டு
சந்திப்பு கமகமக்க
சென்னைநோக்கி சந்தோஷமா வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே சென்னைநோக்கி வாரோம்

புலவரையா ஏற்றிவைத்த
சுடரொளியின் பரவசத்தில்
உழன்றிடவே சென்னை நோக்கி வாரோம் -எம்மை
உரமேற்றிக் கொள்ளவென்றே வாரோம்

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே சென்னை நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத சூதுவாது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்ல சென்னை நோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய சென்னைநோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்


(தொடரும்

44 comments:

  1. இத்தனை 'ரோம் 'படித்ததும் நினைவிற்கு வந்தது ...எல்லா சாலைகளும் ரோமை நோக்கி ..இல்லை இல்லை ..சென்னை நோக்கி !சரிதானே ரமணி சார் ?

    ReplyDelete
  2. கிளம்பியாச்சி... உற்சாகமாய் வாரோம்...

    ReplyDelete
  3. 'பதிவுலகின் பாரதியாரே' உங்கள் கவிதை அருமை

    ReplyDelete
  4. //ஜாதிமத சூதுவாது
    ஏதுமில்லை எமக்கென்ற
    சேதிசொல்ல சென்னை நோக்கி வாரோம்-அதற்குத்
    தெளிவானச் சாட்சியாக வாரோம்//

    உண்மையான வரிகள்... மகிழ்ச்சி ஐயா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும்....

    ReplyDelete
  6. நான் ஞாயிற்றுக்கிழமை காலைல வரேன்.

    ReplyDelete
  7. வாங்க ! வாங்க !
    நெஞ்சம் நிறைய நடப்பையும்
    மகிழ்ச்சியையும் அள்ளிட்டு போங்க
    அனைவரும் !

    ReplyDelete
  8. நட்ப்பையும் .....

    ReplyDelete
  9. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் .வாருங்கள்

    ReplyDelete
  10. ரமணி சாரே !!
    வாங்க வாங்க...

    மதுரை நகரிலே டவுன் ஹால் ரோடுலே
    ஆவணி மூல வீதியிலே, கோவில் வாசற்படி பக்கத்துலே
    திருநெல்வேலி அல்வா

    அந்தக்காலத்துலே
    அதாவது
    ஆயிரத்து தொளாயிரத்து
    அறுபத்து ஒண்ணிலே

    பனங்கல்கண்டு பாலு
    மஞ்சள் தூள் மிளகு போட்டு
    இளஞ்சூடா கொடுத்த
    கடைகள் இன்னும் இருக்குதா ?

    மேல பெருமாள் மேஸ்தரி தெருவிலே
    ப்ரேம நிவாஸ் ஹோடல் ஒன்னு
    சூடா இட்லி வகையா வகையா
    சட்னி, மிளகாய்பொடி, சாம்பார்
    இரவு எப்ப போனாலும் கிடைக்குமே !!
    இன்னும் இருக்குதா ?


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  11. ஐயாவின் வரிகளும் அதற்கு சுப்பு தாத்தாவின் பதில் வரிகளும் அழகு..

    ReplyDelete
  12. சிறப்பான கவிதை!
    மகிழ்ச்சி ஆரவாரம் இங்குவரை கேட்கிறதையா!
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா....

    பதிவர் விழாக் காண பாங்காய் எல்லோருடனும் பழக
    இதைவிட்டால் வேறு என்ன மகிழ்ச்சி!

    அருமை! அருமை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete

  13. இன்னும் இருக்குதா. ? இருந்தால் வாங்கிக் கொண்டு போங்கள். சுப்புத் தாத்தாவுக்குக் கொடுக்கும்போது எல்லோருக்கும் அதை காட்டவாவது செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! திரும்பும் திசையெங்கும் இதுவே பேச்சு!!! கலகலப்பு ஆரம்பம்!!!

    ReplyDelete
  15. அருமையான கவிதை.
    பதிவர் திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. Bagawanjee KA said...//

    முதல் வரவிற்கும் அருமையான
    புதிய அர்த்தத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. திண்டுக்கல் தனபாலன் said...//

    உற்சாகமேற்படுத்திப் போகும்
    அருமையான பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  18. Avargal Unmaigal said...//

    பாராட்டு மழையில் நனைந்து
    குளிர்ந்தும் போனேன்
    பயந்தும் போனேன்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. ஸ்கூல் பையன் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ /


    /தங்கள் வாழ்த்துக்கு
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  21. ராஜி //

    வாங்கோ வாங்கோ
    வரவேற்க வாசலில் காத்திருக்கிறோம்


    ReplyDelete
  22. ஸ்ரவாணி //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  23. வேடந்தாங்கல் - கருண் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி





    ReplyDelete
  24. கவியாழி கண்ணதாசன் /

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  25. கலாகுமரன் ///


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  26. sury Siva //

    எல்லாமே இருக்கு
    கொஞ்சம் இடம் மாறி இருக்கு
    பெயர் கொஞ்சம் மாறி இருக்கு
    அவசியம் மதுரை வாங்கோ
    உங்களை வரவேற்கும் பாக்கியம் தாங்கோ


    ReplyDelete
  27. Sasi Kala /


    /ரசித்து பின்னூட்டமிட்டது
    மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. இளமதி /

    /உணர்வுபூர்வமான தங்கள் பின்னூட்டம்
    மனம் கவர்ந்தது மிக்க நன்றி


    ReplyDelete
  29. Madhu Mathi /

    /அசத்தப் போவது நீங்கள்
    அதை அனுபவிக்கப் போவது நாங்கள்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி





    ReplyDelete
  30. T.N.MURALIDHARAN //

    அசத்தப் போவது நீங்கள்
    அதை அனுபவிக்கப் போவது நாங்கள்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி





    ReplyDelete
  31. G.M Balasubramaniam /

    /நிச்சயமாக
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  32. MaaththiYosi Jeevan //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  33. கரந்தை ஜெயக்குமார் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்


    ReplyDelete
  34. கரந்தை ஜெயக்குமார் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்


    ReplyDelete
  35. கோமதி அரசு //


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  36. when did the blogger's meet happen sir? has it already happened? or is it yet to happen? when and where if so--? could you pls let me know? can any one attend?

    ReplyDelete
  37. Thanks for the information sir! I could try attending...

    ReplyDelete