Thursday, August 22, 2013

பதிவர் சந்திப்புக் கவிதை (1)

சித்தம் எல்லாம் சென்னை நோக்கித்
திரும்பிக் கிடக்குதே--இன்னும்
பத்து நாளு இருக்கு தேன்னு
புலம்பித் தவிக்குதே

நித்தம் நித்தம் பதிவில்  பார் த்து
ரசித்த பதிவரை-நேரில்
மொத்த மாகப் பார்ப்ப தெண்ணி
மகிழ்ந்து துடிக்குதே

நட்பைத் தொடர பதிவைத் தொடரும்
மொக்கைப் பதிவரும்-சொல்லும்
வித்தை அறிந்து வியக்க வைக்கும்
கவிதைப் பதிவரும்

சித்த மதனில் பேதங் களின்றி
சேரும் நாளிதே -உலகின்
ஒட்டு மொத்த பதிவர் மனமும்
நாடும் நாளிதே

கடவுள் பெருமை நாளும் எழுதி
கலக்கும் பதிவரும் -அதனை
மடமை என்று பதிவு போடும்
புரட்சிப் பதிவரும்

இடமாய் வலமாய் அமர்ந்து நட்பை
சுகிக்கும் நாளிதே
கடலில் நதியாய் விரும்பிச் சேரும்
இனிய நாளிதே

கடமை முடித்துக் கரையில் இருக்கும்
மூத்த பதிவரும் -மிரட்டும்
கடமை ஆற்றைக் கடக்கத் திணரும்
இளைய பதிவரும்

வயது மறந்து நட்பில் உறைந்து
மகிழும் நாளிதே-வாழ்வுப்
பயண நெறியைப் பகிர்ந்துப் புரிந்து
தெளியும் நாளிதே


(தொடரும் )

52 comments:

  1. ஆஹா, அருமை. வாழ்த்துகள். சென்று வாருங்கள் ... அன்பை வென்று வாருங்கள்.

    ReplyDelete
  2. சித்தம் எல்லாம் சென்னை நோக்கித்
    திரும்பிக் கிடக்கு
    >>
    இங்கயும் அதே நிலைதான்!!
    பரவாயில்லை நமக்கு கம்பெனிக்கு ஆள் கொடுக்க நிறை பேரு இருக்கீங்க போல!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஐயா .மகிழ்வான இந்த நாள் மறக்க
    முடியாத நாளாக அமையட்டும் அனைவருக்கும் !
    சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள் .

    ReplyDelete
  4. #நட்பைத் தொடர பதிவைத் தொடரும்
    மொக்கைப் பதிவரும்-#
    நான் இந்த லிஸ்டிலேதானே வருகிறேன் ?சொல்லுங்க ரமணி சார் ,சொல்லுங்க !

    ReplyDelete
  5. பதிவர்களை இப்போதே சந்திக்க வைத்து விட்டீர்கள் .
    நன்று !

    ReplyDelete
  6. subbu thatha sings your song here.
    You may listen.

    If you permit, I shall publish it.
    As otherwise, I shall delete it.


    http://www.youtube.com/watch?v=iR7XZsRHpLs

    subbu thatha.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  7. கடலில் நதியாய் விரும்பிச் சேரும்
    இனிய நாளிதே... அழகா சொன்னீங்க ஐயா. மனதின் எண்ணங்களை வார்த்தைகளாக வடித்துவிட்டீர்கள். வருக வருக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  8. த,ம 2 என்னது?சகோதரி ராஜி அவர்களே திருநெல்வேலிக்கே அல்வாவா?

    ReplyDelete
  9. http://www.youtube.com/watch?v=iR7XZsRHpLs

    subbu thatha.
    www.vazhvuneri.blogspot.co//

    mபாடல் பெருமை பெற்றது
    எப்படி நன்று சொல்வதெனத் தெரியவில்லை
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. கவிதை சிறப்பு..உஙகளை முன்னமே எதிர்பார்க்குறேன்..

    ReplyDelete
  11. ஆஹா கவி பாமாலை!! கலக்கல்! பதிவர் சந்திப்பு - சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்!!

    ReplyDelete
  12. எண்ணங்களைக் குவித்து இனிமை கூட்டி
    வன்ணங்களாய் நல்ல வார்த்தை சேர்த்துச்
    சொல்லும் விழாக்கவிச் சிறப்பினிலே துயர்
    கொள்ளுதே என்மனம் கிடைக்காத பேறெண்ணி!...

    மிகமிக உணர்வு பூர்வமான கவிதை ஐயா!
    அருமை! வாழ்த்துக்கள்!

    உங்கள் கவிதை வரமுடியாமல் தவிக்கும் எனக்கு
    மேலும் ஏக்கத்தை அதிகரிக்கின்றது!

    விழாச் சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete

  13. நேரம் அறிந்த பதிவு.உள்ளதைச் சொல்லும் வரிகள். செல்வோரின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் வரிகள். செல்ல இயலாதோரை ஏங்க வைக்கும் வரிகள். பாராட்டுக்கள் ரமணிசார்.

    ReplyDelete
  14. பதிவர்களின் திருவிழா மிகச் சிறப்பாக நடக்க உள்ளது என்பதை உங்கள் கவிதை வரிகள் காட்டுகின்றன. நானும் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன், ரமணி ஸார்!
    உங்கள் கவிதை திரு சுப்பு அவர்களின் குரலில் ஆஹா, ஓஹோ தான்!

    ReplyDelete
  15. ஜிஎம்பி ஐயா அவர்கள் சொல்வது போல் செல்ல இயலாதோரை ஏங்கவைக்கும் வரிகள். அதில் நானும் அடக்கம். உள்ளத்தின் குதூகலம் எழுத்தில் குதித்தோடுகிறது. பதிவர்களை இணைக்கும் திருநாளின் பெருமை பாடும் பாடல் படைத்தமைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  16. இதுவும் தொடருமா? அட!
    பதிவர் விழாவில் உங்களைச் சந்தித்துப் பேசக் காத்திருக்கும் பலரை அறிவேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. Super. Write more after the get together.

    ReplyDelete
  18. எல்லா பதிவுகளிலும் எல்லோரையும் ஈர்க்கும்
    பொல்லாப்பு சொல்லாத படைப்பின் ரகசியம்
    சொல்லா விட்டால் தூக்கம் வராது
    நில்லா ஊற்றாய் நிதமும் வருவதெப்படி

    ReplyDelete
  19. இன்ப நாளிதே! இதயம் தேடுதே !என்பது போல் பதிவர் திருவிழாவில் நட்புகளை சந்திக்க துடிக்கும் கவிதை அருமை.
    பதிவர் திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்.விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. சென்ற வருடம் கலந்துகொள்ளும் தருணம் வாய்த்தது...
    இந்த வருடம் கிடைக்கவில்லை...
    உங்கள் கவிதை என்னை ஏக்கம் கொள்ளச் செய்கிறது...

    ReplyDelete
  21. பதிவர் திருவிழாவிற்கு சென்று வாருங்கள் ரமணி சார்.
    மகிழ்வாய் நண்பர்கலுடன் உரையாடி மகிழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. PARITHI MUTHURASAN said...//
    அருமை.ஹா..ஹா//


    தங்கள் முதல் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...//
    ஆஹா, அருமை. வாழ்த்துகள். சென்று வாருங்கள் ... அன்பை வென்று வாருங்கள்./

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  24. ராஜி said...
    சித்தம் எல்லாம் சென்னை நோக்கித்
    திரும்பிக் கிடக்கு//
    >>
    இங்கயும் அதே நிலைதான்!!
    பரவாயில்லை நமக்கு கம்பெனிக்கு ஆள் கொடுக்க நிறை பேரு இருக்கீங்க போல!//


    ! நிச்சயமாக
    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. Ambal adiyal said...
    வாழ்த்துக்கள் ஐயா .மகிழ்வான இந்த நாள் மறக்க
    முடியாத நாளாக அமையட்டும் அனைவருக்கும் !
    சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள் //

    .தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. Bagawanjee KA said...
    #நட்பைத் தொடர பதிவைத் தொடரும்
    மொக்கைப் பதிவரும்-#
    நான் இந்த லிஸ்டிலேதானே வருகிறேன் ?சொல்லுங்க ரமணி சார் ,சொல்லுங்க !//

    தினம் ஒரு அருமையான நகைச்சுவை
    பதிவு தரும் நீங்கள் எப்படி
    மொக்கை கணக்கில் வருவீர்கள்
    நீங்கள் அசத்தல் பதிவர் என்பதே சரி

    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. ஸ்ரவாணி said...//
    பதிவர்களை இப்போதே சந்திக்க வைத்து விட்டீர்கள் .
    நன்று !//

    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  28. Ramani S said...
    ஸ்ரவாணி //

    சென்றமுறை அவசர பணியின் நிமித்தம்
    சீக்கிரம் சென்றுவிட்டீர்கள் என நினைக்கிறேன்
    இம்முறை இறுதி நிகழ்வுவரை இருக்கும்படியாக
    வருவீர்கள் என நம்புகிறோம்

    ReplyDelete
  29. meenakshi said...
    subbu thatha sings your song here.
    You may listen.//

    அவர் பாடியதால்தால் என் பாடல்
    பெருமை பெற்றது
    அவர் பாடியதை நான் பொக்கிஷம் போல
    காத்து வைத்திருக்கிறேன்
    சுப்பு தாத்தாவுக்கு அனேக கோடி நமஸ்காரம்




    ReplyDelete
  30. Sasi Kala said...//
    கடலில் நதியாய் விரும்பிச் சேரும்
    இனிய நாளிதே... அழகா சொன்னீங்க ஐயா. மனதின் எண்ணங்களை வார்த்தைகளாக வடித்துவிட்டீர்கள். வருக வருக காத்திருக்கிறோம்.//

    மிகச் சரியாக ரசித்து பின்னூட்டமிட்டது
    மனம் கவர்ந்தது
    மிக்க நன்றி//


    ReplyDelete
  31. Madhu Mathi said...//
    த,ம 2 என்னது?சகோதரி ராஜி அவர்களே திருநெல்வேலிக்கே அல்வாவா?/


    /தங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்
    மிக்க நன்றி


    ReplyDelete
  32. MaaththiYosi Jeevan said...//
    ஆஹா கவி பாமாலை!! கலக்கல்! பதிவர் சந்திப்பு - சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்//


    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  33. இளமதி said...
    எண்ணங்களைக் குவித்து இனிமை கூட்டி
    வன்ணங்களாய் நல்ல வார்த்தை சேர்த்துச்
    சொல்லும் விழாக்கவிச் சிறப்பினிலே துயர்
    கொள்ளுதே என்மனம் கிடைக்காத பேறெண்ணி!...
    மிகமிக உணர்வு பூர்வமான கவிதை ஐயா!
    அருமை! வாழ்த்துக்கள்!
    உங்கள் கவிதை வரமுடியாமல் தவிக்கும் எனக்கு
    மேலும் ஏக்கத்தை அதிகரிக்கின்றது!
    விழாச் சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!//


    தங்கள் மனம் திறந்த விரிவான பாராட்டு
    மனம் கவர்ந்தது ,மிக்க நன்றி...

    ReplyDelete
  34. G.M Balasubramaniam said...

    நேரம் அறிந்த பதிவு.உள்ளதைச் சொல்லும் வரிகள். செல்வோரின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் வரிகள். செல்ல இயலாதோரை ஏங்க வைக்கும் வரிகள். பாராட்டுக்கள் ரமணிசார்./
    /
    மனம் குளிரச் செய்யும்
    கவித்துவமான அருமையான பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. Ranjani Narayanan said...
    பதிவர்களின் திருவிழா மிகச் சிறப்பாக நடக்க உள்ளது என்பதை உங்கள் கவிதை வரிகள் காட்டுகின்றன. நானும் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன், ரமணி ஸார்!
    உங்கள் கவிதை திரு சுப்பு அவர்களின் குரலில் ஆஹா, ஓஹோ தான்!//

    வெறும் கல்லாய்க் கிடந்த என் கவிதை
    அகலிகை மோட்சம் பெற்றதைப்போல
    சுப்புத் தாத்தாவால் பெருமை பெற்றது
    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. Ranjani Narayanan //

    தங்கள் பதிவுகளின் ரசிகன் நான்
    ஆகையினால் தங்களைச் சந்திப்பதில் நானும் பெரும்
    ஆவலாக உள்ளேன் .வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  37. கீத மஞ்சரி said..//.
    ஜிஎம்பி ஐயா அவர்கள் சொல்வது போல் செல்ல இயலாதோரை ஏங்கவைக்கும் வரிகள். அதில் நானும் அடக்கம். உள்ளத்தின் குதூகலம் எழுத்தில் குதித்தோடுகிறது. பதிவர்களை இணைக்கும் திருநாளின் பெருமை பாடும் பாடல் படைத்தமைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.//

    நான் மிக விரும்பித் தொடரும்
    சிறந்த பதிவரால் சிறப்பு என பாராட்டப் படுவது
    கூடுதல் மகிழ்வு தருகிறது
    வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. அப்பாதுரை said...
    இதுவும் தொடருமா? அட!
    பதிவர் விழாவில் உங்களைச் சந்தித்துப் பேசக் காத்திருக்கும் பலரை அறிவேன்.
    வாழ்த்துக்கள்//பல்வேறு நிகழ்வுகள் குறித்து
    ஒவ்வொரு படைப்பைத் தருவதற்குப் பதில்
    ஒரு நிகழ்வுக்கு பலவித படைப்புகள்
    தர முயற்சிக்கலாமே எனப் பட்டது

    ஆர்வமாய் சந்திக்க இருப்பவர்களுக்கு
    சந்தித்த பின் நிச்சயம் ஒரு ஏமாற்றம் இருக்கும்
    மழை பேஞ்சா வெள்ளைக்கோழின்னு
    தெரிஞ்சுதானே போகும்

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. vanathy said...
    Super. Write more after the get together.//

    நிச்சயமாக
    தங்கள் வாழ்த்து எனக்கு அதிக
    மகிழ்வு தந்தது மிக்க நன்றி




    ReplyDelete
  40. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை. வாழ்த்துகள்....//


    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  41. கவியாழி கண்ணதாசன் said...
    எல்லா பதிவுகளிலும் எல்லோரையும் ஈர்க்கும்
    பொல்லாப்பு சொல்லாத படைப்பின் ரகசியம்
    சொல்லா விட்டால் தூக்கம் வராது
    நில்லா ஊற்றாய் நிதமும் வருவதெப்படி//

    பூவோடு சேர்ந்த நார் எனச் சொல்லலாமென
    என நினைக்கிறேன்


    ReplyDelete
  42. கோமதி அரசு said...//
    இன்ப நாளிதே! இதயம் தேடுதே !என்பது போல் பதிவர் திருவிழாவில் நட்புகளை சந்திக்க துடிக்கும் கவிதை அருமை.
    பதிவர் திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்.விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்//

    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. கரந்தை ஜெயக்குமார் said...
    அருமையான பதிவு ஐயா/


    தங்கள்உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    /

    ReplyDelete
  44. மகேந்திரன் said...
    சென்ற வருடம் கலந்துகொள்ளும் தருணம் வாய்த்தது...
    இந்த வருடம் கிடைக்கவில்லை...
    உங்கள் கவிதை என்னை ஏக்கம் கொள்ளச் செய்கிறது...//


    சென்ற பதிவர் சந்திப்பில் தங்களுடன்
    இருந்த நினைவுகள் இன்னமும் பசுமையாய்
    என்னுள் பதிந்திருக்கிறது
    அடுத்த சந்திப்பில் அவசியம் சந்திப்போம்...

    ReplyDelete
  45. rajalakshmi paramasivam said...//
    பதிவர் திருவிழாவிற்கு சென்று வாருங்கள் ரமணி சார்.
    மகிழ்வாய் நண்பர்கலுடன் உரையாடி மகிழ வாழ்த்துக்கள்//

    தங்கள் வாழ்த்து அதிக மகிழ்வளிக்கிறது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி//


    .

    ReplyDelete
  46. பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. விமலன் said...//
    பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்

    /தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  48. நட்பில் திளைத்து மகிழும் நாள். மகிழ்ந்திருங்கள்.

    ReplyDelete