Saturday, August 10, 2013

போதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்

தேவைகள் மூன்றும்
ஒழிந்து ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குடிசை வாசல்களில்
சாக்கடை ஓரங்களில்
நாளும் பொழுதும்
செத்துச்  செத்து வாழ்ந்துகொண்டிருக்கும்
கோடிக்கணக்கானோருக்கு மத்தியில்

ஆசைகள் மூன்றும்
அடையமுடியாதுபோனதால்
அர்த்தமற்றுப்போனதால்
புண்ணிய ஸ்தலங்களில்
நதியோரக் கரைகளில்
ஒவ்வொரு நாளும்
சாவதற்காகவே  வாழ்ந்து கொண்டிருக்கும்
லட்சக் கணக்கானோருக்கு இடையில்

மூவாசையும் அனுபவித்தும்
அடங்காது திமிருவதால்
மாட மாளிகைகளில்
வஸந்த மண்டபவங்களில்
ஒவ்வொரு கணமும்
உணர்வாலும் உடலாலும்
வாழ்ந்துக்  களித்துக் கொண்டிருக்கும்
ஆயிரக் கணக்கானோருக்கு எதிரில்

முதல் பத்தில்
மாளிகைவாசியாய் உல்லாசமாய்
இரண்டாம் பத்தில்
குடிசை வாசல் பாவியாய்
மூன்றால் பத்தில்
ஞானியாய்ப் பரதேசியாய்
மாதத்திற்குள்ளே மூன்றையும்
அனுபவிக்கும் நடுத்தரவாசிகூட.

இளம் பிராயத்தில்
மன்னனாய் சுகவாசியாய்.
வாலிப வயதில்
தேடித்திரிந்த பரதேசியாய்
முடிவாக போதிமரத்தடியில்
ஞானமடைந்த புத்தனாகத்தான்
ஒருவகையில் தெரிகிறான் எனக்கு

இன்னும் ஆழமாகச் சிந்திக்கையில்
சிகரம் ஏறி உச்சத்தில்
இறங்காது நிலைத்திருத்தல் கூட எளிது
சிகரமும் சமதளமும்
மாறி மாறி ஏறி இறங்கியும்
இந்த நவீன புத்தன்போல்
மனம் சோராது இருத்தலும்
வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
இன்றைய  நிலையில்
நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு

உங்களுக்கு ?

39 comments:

  1. //மாதத்திற்குள்ளே மூன்றையும்
    அனுபவிக்கும் நடுத்தரவாசிகூட.//

    அருமையான படைப்பு.

    //இந்த நவீன புத்தன்போல் மனம் சோராது இருத்தலும்
    வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
    உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில் நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு //

    எனக்கு இது எப்போதோ தோன்றிவிட்டது. தங்களைப் போல இதை அருமையாக ஓர் கவிதையாகவோ, கதையாகவோ, கட்டுரையாகவோ ஆக்கி, ஓர் பதிவினைக்கொடுக்கத்தான் தெரியவில்லை.

    யாதோ ..... பிரச்சனை. ;)))))

    ReplyDelete
  2. ஆம். வாய்ப்பினும் குற்றம் புரியாது
    கட்டுப்பாட்டுடன் இருப்பவரே சிறந்தவர்.
    உங்கள் கவிதைகள் அனைத்தும் காட்சியின்
    மறுபக்கத்தை உரைப்பதாக இருப்பது சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிகரமும் சமதளமும்
    மாறி மாறி ஏறி இறங்கியும்//
    நீங்கள் சொன்னதுபோல் இருப்பதுதான் வாழ்க்கைத் தத்துவம்.மிக நேர்த்தியாக சொல்லியுலீர்கள்.ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது.

    ReplyDelete
  4. //வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
    உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில்
    நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு///

    எனக்கும்தான்

    ReplyDelete
  5. அந்தகால போதிமரத்து புத்தன் சொன்னது ஆசையை அடக்கு என்று ஆனால் இந்த கால புத்தர்கள் சொல்வது அதிகம் ஆசைப்படு என்று

    ReplyDelete
  6. கவிதையை படித்து முடிக்கையில் என்னே செய்கிறது மனதிற்குள்....

    நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது புத்தர்கள் மத்தியில்தான் என்று...

    ReplyDelete
  7. //உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில்
    நிச்சயம் சாத்தியமில்லை //

    உண்மை....

    நடுத்தர வாசிகள் அனைவருமே புத்தர்கள்....

    ReplyDelete
  8. //வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
    உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில்
    நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு///

    வாழ்வியல் தத்துவம் ??!!

    ReplyDelete
  9. ஐயா...

    போதி மரத்துப் புத்தன் சொன்னதில் பாதியாவது எம் தலையில் ஏற்றினோமா? இல்லையே...
    புத்தன் என்றாலே அமைதி அடக்கம் என்பது சொல்லாமலே நினைவுக்குள் வந்துவிடும்.

    ஆனால் இன்று நாமோ...
    எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு இருந்தைதையும் இழந்தாய் போற்றி என்றல்லவா திரிகிறோம்...!

    சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதை!

    வாழ்த்துக்கள்!

    த ம.5

    ReplyDelete
  10. வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
    உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில்
    நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு

    உங்களுக்கு ?//
    எங்களுக்கும் அப்படித்தான்.
    நீங்கள் சொல்வது உண்மை என்று தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  11. அன்பு நிறைந்த ரமணி சார்,

    தங்களை கணிணி தொடர் பகிர்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்...

    http://manjusampath.blogspot.com/2013/08/blog-post_11.html

    ReplyDelete
  12. நவீன புத்தகர்கள் பற்றிச் சரியாகச் சொன்னீர்கள். இவர்களின் ஞானம் போதிமரத்தடிக்கு அப்பாற்பட்டது.

    ReplyDelete
  13. வாழ்க்கை சக்கரத்தின் ஏற்றஇறக்கத்தில் ஏற்படும் ஆட்டத்திலிருந்து சாமானியன் தன்னை வீழ்ந்துவிடாமல் காத்துக்கொள்வதிலேயே கவனமாய் இருக்கவேண்டியிருப்பதால் ஆசைபடுவதற்கோ, ஆசைபடாமல் இருப்பதற்கோகூட பழக்கபடாதவனாகவே வாழ்ந்து முடித்துவிடுகிறான். இதில் அவனை புத்தன் என்றோ சித்தன் என்றோ எப்படி பகுப்பது என்பது பெரிய கேள்வி.

    ReplyDelete
  14. //வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
    உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில்
    நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு///

    அருமை! யோசிக்க வைத்த பதிவு! நன்றி ஐயா!

    ReplyDelete
  15. மனம் சோராது இருத்தலும்
    வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்

    வாழ்க்கையின் தாரக மந்திரத்தை மிக எளிமையாய். உங்களால் மட்டுமே முடியும் ஐயா. நன்றி

    ReplyDelete
  16. யோசிக்கவைக்கிறது பதிவு.

    ReplyDelete
  17. வாழ்வின் யதார்த்தத்தைப் பற்றி நிறைய யோசிக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  18. இன்றைய புத்தர்கள்!சிந்தனையைத் தூண்டுகிறது

    ReplyDelete
  19. சிந்தனையைத்தூண்டும் கவிதை.

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    //மாதத்திற்குள்ளே மூன்றையும்
    அனுபவிக்கும் நடுத்தரவாசிகூட.//

    அருமையான படைப்பு

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  21. ஸ்ரவாணி said..//.
    ஆம். வாய்ப்பினும் குற்றம் புரியாது
    கட்டுப்பாட்டுடன் இருப்பவரே சிறந்தவர்.
    உங்கள் கவிதைகள் அனைத்தும் காட்சியின்
    மறுபக்கத்தை உரைப்பதாக இருப்பது சிறப்பு.
    வாழ்த்துக்கள்.//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. கவியாழி கண்ணதாசன் said...//
    சிகரமும் சமதளமும்
    மாறி மாறி ஏறி இறங்கியும்//
    நீங்கள் சொன்னதுபோல் இருப்பதுதான் வாழ்க்கைத் தத்துவம்.மிக நேர்த்தியாக சொல்லியுலீர்கள்.ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. Avargal Unmaigal said..//.
    அந்தகால போதிமரத்து புத்தன் சொன்னது ஆசையை அடக்கு என்று ஆனால் இந்த கால புத்தர்கள் சொல்வது அதிகம் ஆசைப்படு என்று/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  24. Seeni said...///
    nalla sonneeng ayyaa...//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  25. கவிதை வீதி... // சௌந்தர் // said..//
    .
    கவிதையை படித்து முடிக்கையில் என்னே செய்கிறது மனதிற்குள்....//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  26. வெங்கட் நாகராஜ் said...
    //உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
    இன்றைய நிலையில்
    நிச்சயம் சாத்தியமில்லை //
    உண்மை....
    நடுத்தர வாசிகள் அனைவருமே புத்தர்கள்...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    .

    ReplyDelete
  27. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  28. இளமதி said...
    ஐயா...

    போதி மரத்துப் புத்தன் சொன்னதில் பாதியாவது எம் தலையில் ஏற்றினோமா? இல்லையே...
    புத்தன் என்றாலே அமைதி அடக்கம் என்பது சொல்லாமலே நினைவுக்குள் வந்துவிடும்.
    ஆனால் இன்று நாமோ...
    எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு இருந்தைதையும் இழந்தாய் போற்றி என்றல்லவா திரிகிறோம்...!
    சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதை!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. கோமதி அரசு said...

    எங்களுக்கும் அப்படித்தான்.
    நீங்கள் சொல்வது உண்மை என்று தான் சொல்லவேண்டும்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  30. Manjubashini Sampathkumar said..//.
    அன்பு நிறைந்த ரமணி சார்,

    தங்களை கணிணி தொடர் பகிர்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்...

    அழைப்புக்கு நன்றி
    தொடர முயற்சிக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்//

    ReplyDelete
  31. அப்பாதுரை said...//
    நவீன புத்தகர்கள் பற்றிச் சரியாகச் சொன்னீர்கள். இவர்களின் ஞானம் போதிமரத்தடிக்கு அப்பாற்பட்டது.//

    தங்கள் வரவுக்கும் கூடுதலாக சிந்திக்கத் தூண்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. அகலிக‌ன் /

    /மாற்று சிந்தனையை பதிவு செய்தமைக்கும்
    அடுத்த பதிவுக்கு அடியெடுத்துக் கொடுத்தமைக்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  33. Seshadri e.s. said...
    /
    அருமை! யோசிக்க வைத்த பதிவு! நன்றி ஐயா!/

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  34. கரந்தை ஜெயக்குமார் said...[[
    மனம் சோராது இருத்தலும்
    வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
    வாழ்க்கையின் தாரக மந்திரத்தை மிக எளிமையாய். உங்களால் மட்டுமே முடியும் ஐயா. நன்றி///


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  35. வேடந்தாங்கல் - கருண் said...//
    யோசிக்கவைக்கிறது பதிவு.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. Ranjani Narayanan said..//
    .
    வாழ்வின் யதார்த்தத்தைப் பற்றி நிறைய யோசிக்க வைத்த வரிகள்..

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  37. குட்டன் said...//

    இன்றைய புத்தர்கள்!சிந்தனையைத் தூண்டுகிறது//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  38. மாதேவி said...//
    சிந்தனையைத்தூண்டும் கவிதை.//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete