Monday, August 12, 2013

கவிஞனாகிப் பயனற்றுப்போகாதே நீ

கண்ணில்படும் எப்பொருளையும்
கைவசப்படுத்திச் செம்மைப்படுத்தி
எப்படிக் காசாக்கலாம் என நினைக்கும்
வியாபாரிகளுக்கான உலகில்
வியாபாரத்திற்கான உலகில்....

அன்றாட நிகழ்வுகள் எதையும்
எப்படி ஊதி ஊதிப் பெரிதாக்கலாம்
எப்படி  ஓட்டாக்கலாம் என  நினைக்கும்
அற்பர்களுக்கான பூமியில்
அரசியல்வாதிகளுக்கான  பூமியில்...

சமநிலைதாண்டிப் பெருக்கெடுக்கும்
ஆசைகளை உணர்வுகளை
எப்படி அனுபவிக்கலாம் என எண்ணும்
கயவர்களுக்கு மத்தியில்
சுயநலமிகளுக்கு மத்தியில்...

கையிலகப்பட்ட அரியபொருளையும்
கண்ணிலகப்பட்ட புதிய நிகழ்வையும்
பொங்கிப் பெருகும் மன உணர்வுகளையும்
எப்படி ப் படைப்பாக்கலாம் என மட்டுமே எண்ணும்
அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
உறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ

52 comments:

  1. நல்ல அறிவுரை...உண்மை
    நாட்டில் கவிதை புத்தகங்கள் போட்டு
    இத்துப்போனவர்கள் நிறைய...

    ReplyDelete
  2. அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
    ஊருக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ
    >>
    அந்த அறிவுரை சொல்ல கூட கவிதை தான் வேணும் போல. அதனால, கவிதை நல்லது!!

    ReplyDelete
  3. அருமையான கவிதை சார். நல்ல ஐடியாவும் கூட! சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பார்கள்! இந்த நிலைமையை மாற்ற வேண்டும்!!

    கலைஞர்களின் உழைப்பும் கடின உழைப்பே - அதற்கும் கூலி கிடைத்தாக வேண்டும்!!

    ReplyDelete
  4. கையிலகப்பட்ட அரியபொருளையும்
    கண்ணிலகப்பட்ட புதிய நிகழ்வையும்
    பொங்கிப் பெருகும் மன உணர்வுகளையும்
    எப்படி ப் படைப்பாக்கலாம் என மட்டுமே எண்ணும்
    அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
    உறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ//

    உலக நிகழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டிய கவிதை! நன்றி ஐயா!

    ReplyDelete
  5. ஏனிந்த கோபமோ ?
    பொருளாதாரப் பயன் இல்லையென்றால் என்ன ?!
    வாழ்வாதார உணர்வுகளை வெளிப்படுத்த
    முடிவதே வரம் அல்லவா ?

    ReplyDelete

  6. அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப் போகாதே
    கவிஞனாகவும் ஆகியிரு, என்று எடுத்துக் கொள்ளலாமா.?

    ReplyDelete
  7. அற்பக் கவிஞராக ஆகாமல் அற்புதக் கவிஞர்களாக ஆகுங்கள்... நல்ல கவிதை...

    ReplyDelete
  8. நல்ல கவிஞனாய் உறவுக்கும், தனக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் கவிதை படைக்கட்டும் கவிஞர்கள்.
    கவிஞர்களுக்கு நல்ல அறிவுரை.

    ReplyDelete
  9. ஐயா!...
    கவிஞனென்றால் எப்படி எதை எழுதணும், எழுதக்கூடாது என அருமையான வரைவிலக்கணம் தந்தீர்கள். நல்ல அறிவுரை!

    சிந்திக்க வைத்த சிறப்பான வரிகள்!

    வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete
  10. கவிஞன் ஆனால் ..?

    என்னவோ நினைத்து வாசிக்க போனேன் இறுதியில் புரிந்தது தலைப்பின் அர்த்தம்

    அருமை வாழ்த்துக்கள்
    தம7

    ReplyDelete
  11. //அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
    உறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ// நடைமுறை இதுதானோ..அருமையான கவிதை ஐயா, நன்றி!

    ReplyDelete
  12. அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
    உறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ

    அற்பக்கவிஞனா..?? அற்புதக்கவிதை ..!!

    ReplyDelete
  13. ஆயிரமாவது பதிவுக்கு
    வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா ..!

    ReplyDelete
  14. அற்புதமாய் இருக்கின்றது கவிதை!

    ReplyDelete
  15. கவிதை அற்புதம்...
    வாழ்த்துக்கள் ஐயா,

    ReplyDelete
  16. அற்புதக் கவிதை ஐயா.
    தாங்கள் சொல்வது அற்பக் கவிக்குப்
    பொருந்தலாம்
    தங்களைப் போன்ற
    அற்புதக் கவிஞர்களுக்குப்
    பொருந்தாது

    ReplyDelete
  17. ///கையிலகப்பட்ட அரியபொருளையும்
    கண்ணிலகப்பட்ட புதிய நிகழ்வையும்
    பொங்கிப் பெருகும் மன உணர்வுகளையும்
    எப்படி ப் படைப்பாக்கலாம் என மட்டுமே எண்ணும்
    அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ///

    புகழ்வது போல இகழ்வது என்பதை எல்லோரும் அறிவார்கள் ஆனால் நீங்கள் இகழ்வது போல புகழ்ந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் கவிஞரே

    ReplyDelete
  18. கவிஞன் எப்படி பிறரிடமிருந்து வித்தியாசப்படுகிறான் என்பதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  19. வெறும் கவிஞனாக மட்டும் ஆகாதே!
    அருமை ஐயா

    ReplyDelete
  20. // வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம் //

    மாற்று சிந்தனை வரிகள்! சிந்திப்போம்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. // வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம் //

    மாற்று சிந்தனை வரிகள்! சிந்திப்போம்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. // வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம் //

    மாற்று சிந்தனை வரிகள்! சிந்திப்போம்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. வணக்கம்
    இன்று இந்தியாவின் சுதந்திர நாளில் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/08/blog-post_15.html?showComment=1376568104980#c892188592548843204 இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. ஒரு புதிய சிந்தனையை தூண்டிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  25. PARITHI MUTHURASAN //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. ராஜி said...//

    >>
    அந்த அறிவுரை சொல்ல கூட கவிதை தான் வேணும் போல. அதனால, கவிதை நல்லது!!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. பிரபல எழுத்தாளர் மணி மணி said...//

    அருமையான கவிதை சார். நல்ல ஐடியாவும் கூட! சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பார்கள்! இந்த நிலைமையை மாற்ற வேண்டும்!!

    //தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. Seshadri e.s. said...

    உலக நிகழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டிய கவிதை! நன்றி ஐயா!////

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ஸ்ரவாணி said...//

    ஏனிந்த கோபமோ ?
    பொருளாதாரப் பயன் இல்லையென்றால் என்ன ?!
    வாழ்வாதார உணர்வுகளை வெளிப்படுத்த
    முடிவதே வரம் அல்லவா ?//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  30. வேடந்தாங்கல் - கருண் said...//

    எதற்காக இந்தக் கோபமோ?/

    /தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. G.M Balasubramaniam said...//

    அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப் போகாதே
    கவிஞனாகவும் ஆகியிரு, என்று எடுத்துக் கொள்ளலாமா.?/

    /நிச்சயமாக




    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. இரவின் புன்னகை said...//
    அற்பக் கவிஞராக ஆகாமல் அற்புதக் கவிஞர்களாக ஆகுங்கள்... நல்ல கவிதை.


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

    .

    ReplyDelete
  33. கோமதி அரசு said...//

    நல்ல கவிஞனாய் உறவுக்கும், தனக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் கவிதை படைக்கட்டும் கவிஞர்கள்.
    கவிஞர்களுக்கு நல்ல அறிவுரை//

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


    ReplyDelete
  34. இளமதி said...//
    ஐயா!...
    கவிஞனென்றால் எப்படி எதை எழுதணும், எழுதக்கூடாது என அருமையான வரைவிலக்கணம் தந்தீர்கள். நல்ல அறிவுரை!//

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

    ReplyDelete
  35. சீராளன் said...
    கவிஞன் ஆனால் ..?
    என்னவோ நினைத்து வாசிக்க போனேன் இறுதியில் புரிந்தது தலைப்பின் அர்த்தம்
    அருமை வாழ்த்துக்கள் //
    .
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

    ReplyDelete
  36. கிரேஸ் said..//


    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


    ReplyDelete
  37. இராஜராஜேஸ்வரி said..//.

    அற்பக்கவிஞனா..?? அற்புதக்கவிதை .//.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

    .

    ReplyDelete
  38. rajalakshmi paramasivam said...//

    அற்புதமாய் இருக்கின்றது கவிதை!/


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  39. சே. குமார் said...//

    கவிதை அற்புதம்...
    வாழ்த்துக்கள் ஐயா//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


    ,

    ReplyDelete
  40. கரந்தை ஜெயக்குமார் said...//

    அற்புதக் கவிதை ஐயா.
    தாங்கள் சொல்வது அற்பக் கவிக்குப்
    பொருந்தலாம்
    தங்களைப் போன்ற
    அற்புதக் கவிஞர்களுக்குப்
    பொருந்தாது//


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  41. Avargal Unmaigal said...//
    ///
    //புகழ்வது போல இகழ்வது என்பதை எல்லோரும் அறிவார்கள் ஆனால் நீங்கள் இகழ்வது போல புகழ்ந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் கவிஞரே//

    மிகச் சரியாக பதிவின் உட்கிடக்கையறிந்து
    பின்னூட்டமிட்டது மகிழ்வளித்தது
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  42. T.N.MURALIDHARAN said...//

    நிஜம் சொல்லும் கவிதை//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


    .

    ReplyDelete
  43. ராமலக்ஷ்மி said...//

    கவிஞன் எப்படி பிறரிடமிருந்து வித்தியாசப்படுகிறான் என்பதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  44. குட்டன் said...//

    வெறும் கவிஞனாக மட்டும் ஆகாதே!
    அருமை ஐயா//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  45. வெங்கட் நாகராஜ் said..//
    .
    அருமையான கவிதை./
    /
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///



    ReplyDelete
  46. தி.தமிழ் இளங்கோ said...
    // வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம் //

    மாற்று சிந்தனை வரிகள்! சிந்திப்போம்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

    ReplyDelete

  47. 2008rupan said..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  48. Ranjani Narayanan said..//
    .
    ஒரு புதிய சிந்தனையை தூண்டிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


    ReplyDelete