Wednesday, September 11, 2013

பாட்டுக்கொருவனின் பாதம் பணிவோம்

நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

சுடர்மிகும் அறிவுடன் அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

எமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

ஊருக்குழைத்தலே தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
 பரிமளிக்க முடிகிறது

30 comments:

  1. இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்..

    அருமையான நினைவஞ்சலி..

    ReplyDelete
  2. நல்லதொரு நினைவஞ்சலி. மண்ணிலிருந்து மறைந்தபின்னும் மனதைவிட்டு மறையாதிருக்கிறான்.

    ReplyDelete
  3. எற்றி எதிரொலிக்கும் தமிழ்.
    சுற்றிப் பல தலைமுறைகளையும்
    பற்றிப் பாய்கிறது பாசியின்றி.
    பற்றுடை பாரதி வரிகள்
    வெற்றி வரிகள, பாரினிலே.
    அஞசலிகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. பாரதியின் வார்த்தைகளைக் கோர்த்து நீங்கள் உருவாக்கிய பாமாலை மணக்கிறது !

    ReplyDelete
  5. அருமையான நினைவஞ்சலி! இரமணி! சொல்லாடல் அருமை!

    ReplyDelete
  6. அஞ்சலி பாடல் மிக அருமை! எத்தனை பேருக்கு தெரியும். இன்று “அவன்”பிறந்த நாள் என்று!?

    ReplyDelete
  7. அருமையான சொல்லாடலுடன் அற்புதமான நினைவஞ்சலி..

    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. ராஜி...

    இன்று அவர் நினைவுநாள். :)

    ReplyDelete
  9. சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா .

    ReplyDelete
  10. மிகவும் அருமை.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. //நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்
    அதனால்தானே மடமை இருளில்
    ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
    பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது
    //
    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பாட்டுக்கொருவனுக்காய் தொடுத்த பாச்சரம் மணக்கிறது. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete

  13. பாரதியின் ஓரிரு கவிதை வரிகளைக் கொண்டே சிறப்பான ஒரு பா அஞ்சலிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. அழகாகச் சொன்னீர்கள் மகாகவியின் கவித்திறனை!

    ReplyDelete
  15. //காலத்தை வென்றவாய் காவிய மானவனாய்
    பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
    பரிமளிக்க முடிகிறது// அருமை ஐயா..
    உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் உண்மை..

    ReplyDelete
  16. எத்தனை அழகாய் பாரதியின் பாக்களைவைத்தே அவருக்கே சமர்ப்பணமாய்.....

    அற்புத கவிஞர்தான் நீங்கள் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
    பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
    பரிமளிக்க முடிகிறது.//

    பாரதி காலத்தை வென்றவர் தான்.
    பாரதி என்றும் வாழ்வார் உங்கள் கவிதையில்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  18. பாரதியின் இடத்தை எந்த ஜென்மத்திலும் யாராலும் நிரப்ப முடியாது...

    ReplyDelete
  19. //இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்//மிக அருமை!

    ReplyDelete
  20. நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்
    அதனால்தானே மடமை இருளில்
    ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
    பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது
    ............அருமையான வார்த்தைகள்
    நல்ல துவக்கம்

    ReplyDelete
  21. பாரதி நினைவுநாளில் ஒரு கவிதாஞ்சலி!

    ReplyDelete
  22. மகா கவிக்கு
    மதுரைக் கவியின்
    கவிதாஞ்சலி
    அருமை

    பாரதியின்
    நினைவினைப்
    போற்றுவோம்

    ReplyDelete
  23. பாரதியின் நினைவு நாளன்று , அழகாய் ஒரு பாமாலை.
    பாரதி புகழ் பரவட்டும்!

    ReplyDelete
  24. //இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்
    அதனால்தானே இளம்வயதில்
    காலனவன் அழைத்தபோதும்
    காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
    பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
    பரிமளிக்க முடிகிறது//

    சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  25. பாரதி பற்றிய இந்த கவிதையில் அவரின் பெயர் எங்கும் இல்லையென்றாலும் ஒவ்வொரு வரியும் அவரை நினைவு படுத்தியது......உண்மைதான் அவனை தலை வணங்கி போற்றுவோம் !

    ReplyDelete
  26. அற்புதமான நினைவஞ்சலி. பாரதியை ஒவ்வொரு வரியும் நினைவுக்குக் கொண்டுவந்தது.

    ReplyDelete
  27. வணக்கம்
    ஐயா

    கவிதையின் வரிகள் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  28. எமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்
    அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
    அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
    கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

    உண்மை தான், அருமையான நினைவு அஞ்சலி வாழ்த்துக்கள்.

    ReplyDelete