Saturday, September 14, 2013

கவிதைக்குச் செய்யும் தொண்டு

பாட்டுக் கூட பேச்சைப் போல
சுலுவா இருக்கணும் மாமா-அதைக்
கேட்கும் போதே மனசுத் தானா
துள்ளிக் குதிக்கணும் மாமா

நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
ஏதும் தவறியும் மாமா-உன்
பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
கவனம் கொள்ளணும் ஆமா

நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
காத்தைப் போலவும் மாமா -ஓடும்
ஆத்து நீரில் மிதந்து போகும்
பூவைப் போலவும் மாமா

ஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்
பாப்பா போலவும் மாமா-உன்
பாட்டு என்றும் இயல்பா  இருக்கணும்
சொல்லிப் புட்டேன் ஆமா

எதுகை மோனை தேடி அலையும்
நிலமை உனக்குமே வந்தா-பாட்டில்
புதுசா சொல்ல விஷயம் தேடி
அலையும் கஷ்டமும் வந்தா

பொசுக்குனு எழுதும் ஆசைய விட்டு
வெளியே வந்துடு மாமா -அதுகூட
கவிதைத் தாயவ மகிழ நாம
செய்கிற தொண்டுதான் மாமா

28 comments:

  1. வணக்கம்
    ஐயா
    பொசுக்குனு எழுதும் ஆசைய விட்டு
    வெளியே வந்துடு மாமா -அதுகூட
    கவிதைத் தாயவ மகிழ நாம
    செய்கிற தொண்டுதான் மாமா

    கவிதையின் வரிகள்அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக மிக பிரமாதம் சார்! வரிக்கு வரி ரசித்தேன்!

    நல்ல தொரு அறிவுரையும் எனக்கு!

    ReplyDelete
  3. //
    நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
    ஏதும் தவறியும் மாமா-உன்
    பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
    கவனம் கொள்ளணும் ஆமா

    நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
    காத்தைப் போலவும் மாமா -ஓடும்
    ஆத்து நீரில் மிதந்து போகும்
    பூவைப் போலவும் மாமா//

    ReplyDelete
  4. //
    நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
    ஏதும் தவறியும் மாமா-உன்
    பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
    கவனம் கொள்ளணும் ஆமா
    நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
    காத்தைப் போலவும் மாமா -ஓடும்
    ஆத்து நீரில் மிதந்து போகும்
    பூவைப் போலவும் மாமா//

    ஆஹா!

    ReplyDelete
  5. முறைப் பொண்ணு கவிதை வர வேண்டிய முறையை சொன்னது எல்லா 'மாமா'களுக்கும் பொருந்தும !

    ReplyDelete
  6. அசத்தலான வரிகள். அருமை அய்யா..

    ReplyDelete
  7. ஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்
    பாப்பா போலவும் மாமா-உன்
    பாட்டு என்றும் இயல்பா இருக்கணும்
    சொல்லிப் புட்டேன் ஆமா

    பொங்கிப் பெருகும்
    புது வெள்ளமாக உற்சாக பகிர்வுகள்..!

    ReplyDelete
  8. கிராமத்து பாடல் மாதிரியே மனதை வருடுகிறதே கவிதை....!

    ReplyDelete
  9. நாட்டுப்புற பாணியில் கவிதை நெஞ்சம்
    கவர்கிறது.

    ReplyDelete
  10. ''..எதுகை மோனை தேடி அலையும்
    நிலமை உனக்குமே வந்தா...''

    இடிக்குதே!....
    தங்கள் கருத்தை நாட்டுப் பாணியில் அழகாகச் சொன்னீர்கள்
    மிக சுவையாக உள்ளது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. இப்போதெல்லாம் ஜாலிக்காக எழுதும் கவிதைகள் மிகவும் ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள். ஓணம் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஜாலியான பாட்டு ஜாலிய ரசிக்க வச்சுது நிறைவு வரிகள் சூப்பர்.

    ReplyDelete
  13. பட்டணத்து மாமாவுக்கு பட்டிக்காட்டு முறைப்பெண் சொல்லித் தரும் கவிதை இலக்கணம்.

    ReplyDelete
  14. கவிதைக்குச் செய்யும் தொண்டை அழகாகச் சொன்னீர்கள்.

    நன்று.

    ReplyDelete
  15. நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
    காத்தைப் போலவும் மாமா -ஓடும்
    ஆத்து நீரில் மிதந்து போகும்
    பூவைப் போலவும் மாமா//ஆஹா என்ன சொல்நயம்..சபாஷ் ரமணிசாருக்கு.தொடருங்கள்.த.ம 8

    ReplyDelete


  16. ஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்
    பாப்பா போலவும் மாமா-உன்
    பாட்டு என்றும் இயல்பா இருக்கணும்
    சொல்லிப் புட்டேன் ஆமா

    இராகம் போட்டு பாடவேணும் மாமா-இது
    இரமணி ஐயா பாட்டுதானே ஆமா
    சோகம் கூட பறந்துபோகும் மாமா-நான்
    சொல்லிப் புட்டேன் சொல்லிப் புட்டேன்
    ஆமா!

    ReplyDelete
  17. நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
    ஏதும் தவறியும் மாமா-உன்
    பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
    கவனம் கொள்ளணும் ஆமா
    நல்ல அறிவுரை.

    நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
    காத்தைப் போலவும் மாமா -ஓடும்
    ஆத்து நீரில் மிதந்து போகும்
    பூவைப் போலவும் மாமா
    கவிதை தென்றலாய் சுகம் அளிக்க வேண்டும் அருமை.

    ஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்
    பாப்பா போலவும் மாமா-உன்
    பாட்டு என்றும் இயல்பா இருக்கணும்
    சொல்லிப் புட்டேன் ஆமா/
    குழந்தை சிரிப்பாய் கவிதை இருக்க வேண்டும்
    வெகு அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. எத்தனை அழகா மாமாவிற்கு சொன்னாங்க..சில நேரங்களில் உறக்கமும் இல்லாது போகிறதே எழுத நினைத்து விட்டால்..

    ReplyDelete
  19. அழகான கவிதை வரிகள்.....

    மிகவும் ரசித்துப் படித்தேன்.....

    த.ம. 14

    ReplyDelete
  20. //அதுகூட கவிதைத் தாயவ மகிழ நாம
    செய்கிற தொண்டுதான் மாமா//

    முறைப்பெண்
    முறைக்காமல்
    முறையாக யோசித்து,
    முடிவாகச் சொல்லியுள்ளது
    முற்றிலும் சரியானது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. தென்றலாய் குழந்தையின் அழகு சிரிப்பாய் நிச்சயம் இந்தக் கவிதை அமைந்துள்ளது!!

    ReplyDelete
  22. தொண்டுகள் எல்லாம் பூப்போல அழகாய் தொடுத்து எடுத்து சொன்னார் மாமா. அப்படியே கவனமாக எடுத்துக் கொண்டு தொண்டு செய்வேன் ஆமா.

    அருமையாக இலகுவாக விளக்கி இருக்கிறீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.

    ReplyDelete
  23. கவிதை மட்டுமல்ல; எழுதுகிற எல்லாமே இதுபோல இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று என்ன வைத்தது உங்கள் கவிதை. வெகுவாக ரசிக்க வைத்தன ஒவ்வொரு வரியும்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete