Sunday, September 8, 2013

விளையாட்டுக் களமும் வாழ்க்கைக் களமும்

வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச் சாரங்களே
களத்தில் எவரின் நிலையையும்
முடிவு செய்து ப் போகிறது

மூன்றின் கருணை நிழல்களும்
தன்மீது படியாத வரையில்
பரப்பிரம்மப்  பார்வையாளனாய்
இருக்கையில் விழிப்பவனே

 வலிமையின் ஆதிக்கத்தில்
நுணுக்கமும் தெளிவும் அடங்கிக் கிடக்க
இளைஞனாய் விளையாடுபவனாய்
களத்தில் மிளிர்பவனே

நுணுக்கத்தின் ஆதிக்கத்தில்
வலிமையும் தெளிவும் சாய்ந்து கொள்ள
நடுவயதினனாய் பயிற்சியாளனாய்க்
களத்தில் தொடர்பவனே...

தெளிவின் ஆதிக்கத்தில்
வலிமையும் நுணுக்கமும் ஒடுங்கிவிட
முதியவனாய் நடுவராய்
களத்தில் நிற்பவனே...

மூன்றின் வீரியமும்
முற்றாக குறைந்துவிட
முதிர்ச்சியுற்ற  பார்வையாளனாய்
இருக்கையில் அடங்கிவிடுகிறான்

ஆம்.....
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட

14 comments:

  1. வணக்கம்
    ஐயா

    வலிமையின்
    நுணுக்கத்தின்
    தெளிவின்
    விகிதாச்சாரங்கள்தான்
    ஒருவரின் நிலைப்பாட்டை
    நிச்சயம் செய்து போகிறது
    விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
    வாழ்க்கைக் களத்தினிலும் கூட

    உண்மையான கருததுள்ள வரிகள் ஐயா.... அருமை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    வலிமையின்
    நுணுக்கத்தின்
    தெளிவின்
    விகிதாச்சாரங்கள்தான்
    ஒருவரின் நிலைப்பாட்டை
    நிச்சயம் செய்து போகிறது
    விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
    வாழ்க்கைக் களத்தினிலும் கூட

    உண்மையான கருத்துள்ள வரிகள் ஐயா.... அருமை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இறுதிப் பந்தியின் கருத்து சரியான கருத்தே!
    பணி தொடர வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  4. சிறப்பன வாழ்க்கைத் தத்துவம் .பகிர்வுக்கு நன்றி கலந்த
    பாராட்டுக்கள் ஐயா .

    ReplyDelete
  5. மூன்றின் வீரியமும்
    முற்றாக குறைந்துவிட//உண்மை அதற்குள் முதியவனாகிறான்

    ReplyDelete
  6. ஆரம்பம் எப்படியோ முடிவும் அப்படியே!
    அதற்குள் பந்தாக அடிபடும் எம் வாழ்க்கை. அதன் அனுபவங்கள்!

    அருமையாக அதைக் கூறியிருக்கின்றீர்கள்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    த ம. 6

    ReplyDelete
  7. வாழ்வின் களம் விரிந்து கிடக்கிறது/விளையாடலாம்/

    ReplyDelete
  8. அனைவரின் வாழ்க்கைப் பதிவு.
    அருமை.

    ReplyDelete
  9. தெளிவின்
    விகிதாச்சாரங்கள்தான்
    ஒருவரின் நிலைப்பாட்டை
    நிச்சயம் செய்து போகிறது
    அருமை ஐயா அருமை

    ReplyDelete
  10. இன்று 9.9.2013 வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. //விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
    வாழ்க்கைக் களத்தினிலும் கூட//


    சிந்திக்க வைத்த வரிகள் சார்..... அருமையான கவிதை !

    ReplyDelete