Sunday, October 20, 2013

சிரிப்பும் திரு நாளும்

என்று வருமோ என்று வருமோ-என்று
ஏங்க வைக்கும் ஒரு நாள்-
இன்று நாளை என்று நாளை-நம்மை
எண்ண வைக்கும் ஒருநாள்
கன்று போல வயதை மீறி-நம்மைத்
துள்ள வைக்கும் ஒரு நாள்
எங்கும் உலகில் இதுபோல் இல்லை-நம்
உவகைப் பெருக்கும் நன்னாள்

வருகை தன்னை உறுதி செய்து-மருமகன்
மகிழ்வை விதைக்கும் ஒருநாள்
புதுவகை வெடிவகை பட்டியல் அனுப்பி-பேரன்
மகிழ்வைப் பெருக்கும் ஒருநாள்
இதுவரை அறியா இனிப்பினைச்செய்து-மனைவி
மகிழ்வை உயர்த்தும் ஒருநாள்
இதுபோல் உலகில் எங்கும் இல்லை-நாம்
உணர்ந்து மகிழும் திருநாள்

விடிய எழுந்து குளித்து முடித்து-கோடி
உடுத்தி மகிழும் ஒருநாள்
புதிது புதிதாய் சுவைத்து மகிழ்ந்து-சுகத்தில்
சொக்கிக் கிடக்கும் ஒருநாள்
முடிந்தால் புதிய சினிமாப் பார்த்து-அதில்
மூழ்கித் திளைக்கும் ஒருநாள்
இதுதான் திருநாள் எனவே நினைத்தால்-நாம்தான்
உலகின் முதல்நிலை முட்டாள்

தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
தின்றுத் தீர்க்க இல்லை
பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
மனித இனமே இல்லை
இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
பொதுவென் றாக்கி ரசிப்போம்

34 comments:

  1. வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்//

    இதுதான் உண்மையான பண்டிகை இல்லையா குரு ? சூப்பர்ப்....!

    ReplyDelete
  2. தீபாவளி வருதுன்னாலே பெண்களுக்கு பயமும் கூடவே வந்துடுமே!! பலகாரம், சமையல்ன்னு.., பொழுதன்னிக்கும் வேலை இருந்துட்டே இருக்குமே!!

    ReplyDelete
  3. பட்டாசு மட்டுமல்ல மகிழ்வு இங்கே
    பகிர்ந்துண்ணும் உணவே தான் மகிழ்வு என்று
    தித்திக்கும் வார்த்தையாலே தீட்டிய கவிதை
    திறக்கட்டும் பல கண்களைத்தான் ஒளியாய் நின்று .

    தீபாவளி சிறப்புப் பகிர்வு அருமை ! வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  4. தீபாவளித் திரு நாளை முன்னிட்டு அருமையான எண்ண ஓட்டங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அருமை!///பிள்ளை பார்க்க உண்டு திரிபவன்-நிச்சயம்
    மனித இனமே இல்லை.///(ராஜி )இவ வேற!!!

    ReplyDelete
  6. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ஞாபகம் வந்த பாடல் :

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்...
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்...

    ReplyDelete
  7. ''..திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்..''
    திருநாள் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. // தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
    தின்றுத் தீர்க்க இல்லை
    பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
    மனித இனமே இல்லை
    இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம் //

    திருநாள் என்றால் என்னவென்று எடுத்துரைத்த கவிஞருக்கு நன்றி! முன்னதாகவே எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்1

    ReplyDelete
  9. தீபாவளி சிறப்புக் கவிதை மிக அருமை.
    ஈந்து உவக்கும் இன்பமே தனி தான்.

    ReplyDelete
  10. //இதுதான் திருநாள் எனவே நினைத்தால்-நாம்தான்
    உலகின் முதல்நிலை முட்டாள்// எப்படி ஒரு திருப்புமுனை..உங்கள் கவிதையில்! ஆனால் சரியான திருப்பம்..நன்று ஐயா! பகிர்தலுக்கு நன்றி!

    ReplyDelete
  11. //தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
    தின்றுத் தீர்க்க இல்லை
    பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
    மனித இனமே இல்லை
    இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்//

    சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  12. ஒரு ஏழை ஊதட்டைசிரிக்க வைக்க மனசு அனைவருக்கும் வந்துவிட்டால் இங்கு அனைத்து நாளும் பண்டிகைகளே....


    நல்லதொரு அழகிய அர்த்தமுள்ள கவிதை...

    ReplyDelete
  13. அருமையான வர்ணனைகள்..
    பண்டிகைகள் மகிழ்ச்சிதான்..

    ReplyDelete
  14. ஆஹா தீபாவளி வந்துடுச்சே! கவிதையில் சொல்லிய மகிழ்வுகள் மத்தாப்பூக்கள் சிதறியது போல் இனிமையாக இருந்தது..

    ReplyDelete
  15. திருநாள் என்பதற்கான அர்த்தத்தை விளக்கும் பாடல்...

    இனிமையாய் உள்ளது...

    ReplyDelete
  16. தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
    தின்றுத் தீர்க்க இல்லை
    பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
    மனித இனமே இல்லை
    இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்//
    தீபாவளி திருநாள் எப்படி கொண்டாடினால் மகிழ்ச்சி என்பதை அழகாய் சொல்லி விட்டீர்கள். மிகவும் நன்றி. இல்லாதவர்களுக்கு தீபாவளி திருநாளில் உதவி செய்து அவர்கள் முகத்தில் பூவாய் மலரும் சிரிப்பை கண்டு மகிழ்தல் நலமே!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்

    அழகான திருநாள் என்ணங்கள்..!

    ReplyDelete
  18. திருநாளின் சரியான அர்த்தம் பொதிந்த கவிதை.

    அருமை இரமணி ஐயா.

    ReplyDelete
  19. //இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்//
    மிகச் சரியாக சொன்னீர்கள் .

    ReplyDelete
  20. அருமையான படைப்பு! திருவிழாக்களே மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளத்தான்! நல்ல கருத்தமைந்த கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. //இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்//

    அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. தீபாவளியை போல் பாடலும் இனிமையாக உள்ளது

    இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்//

    ரசித்தேன்

    ReplyDelete
  23. இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்

    பண்டிகையின் சிறப்பு கூட்டும் வரிகள்

    ReplyDelete
  24. வசதியானவனுக்கு எல்லாம் நாளும் தீபாவளிதான் ஆனால் ஏழைக்கோ தீபாவளியும் நாளும் ஒரு சாதாரண திருநாள்தான். அதனால் ரமணி சார் சொன்னபடி பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம் அவர்களையும் தீபாவளியின் சந்தோஷத்தை அனுபவிக்க வைப்போம்

    அருமையானதொரு பதிவு (tha.ma 12)

    ReplyDelete
  25. வணக்கம்
    ஐயா

    இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து- வறியோர்முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்

    கவிதையின் வரிகள் மனதை கவந்தது... தீபாவளிக் கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்ற-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. வணக்கம்

    த.ம-வாக்கு-1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  27. பகிர்ந்துண்டு வாழ்தலே
    பாங்கான திருநாளாம்..
    உங்கள் சொற்களை
    வழிமொழிகிறேன் ஐயா...

    ReplyDelete
  28. தீபாவளி சிறப்புக்கவிதை மிக அருமை... தங்களின் தமிழை ரசித்தேன்... ரூபனின் கவிதைப்போட்டியில் இது பரிசை தட்டும் என நம்புகிறேன்...

    ReplyDelete
  29. பட்டாசு பண்டிகை

    ReplyDelete
  30. தங்களின் கருத்துரைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

    ReplyDelete


  31. விடிய எழுந்து குளித்து முடித்து-கோடி
    உடுத்தி மகிழும் ஒருநாள்
    புதிது புதிதாய் சுவைத்து மகிழ்ந்து-சுகத்தில்
    சொக்கிக் கிடக்கும் ஒருநாள்
    முடிந்தால் புதிய சினிமாப் பார்த்து-அதில்
    மூழ்கித் திளைக்கும் ஒருநாள்
    இதுதான் திருநாள் எனவே நினைத்தால்-நாம்தான்
    உலகின் முதல்நிலை முட்டாள்

    தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
    தின்றுத் தீர்க்க இல்லை
    பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
    மனித இனமே இல்லை
    இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
    முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
    திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
    பொதுவென் றாக்கி ரசிப்போம்

    படித்தேன் படித்தேன் படித்தேன்! எப்படித் தேன் இனிக்கிறது என ,படித்தேன் மீண்டும் படித்தேன்! சுவை தேன்!

    ReplyDelete
  32. அருமையாய்ச் சொன்னீர்கள் ஐயா!

    எத்தனை சுப தினங்கள் வந்தபோதும்
    அத்தனையிலும் அடுத்தவர் நலனையும்
    சித்தமதில் கொண்டுநடந்தால் அதைவிடச் சிறப்பேது...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. விடிய எழுந்து குளித்து முடித்து-கோடி
    உடுத்தி மகிழும் ஒருநாள்.
    கூடி இருந்து ஆடி பாடி மகிழும் திரு நாள்.
    வாடி வதங்கும் வதனங்களும் மகிழும் திருநாள்.
    சாதம் தனை வடித்து உண்ண உதவி மகிழும் நன்னாள்.

    நன்றாக சொன்னீர்கள். அருமை, உதவி செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் தனி தான்.

    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete