Tuesday, October 22, 2013

அரசியல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும் மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச்செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஸ அணிகளாக
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம்ம் பிழைப்புத் தேடி
"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி

30 comments:

  1. வெறும் பிரச்சாரம் தான்... நடைமுறையானால் நல்லது... (ஆனால் சந்தேகம் தான்...!)

    ReplyDelete
  2. விதிகள் மீறப்படுவது மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதே...! விளையாட்டு என்ற வார்த்தையை 'வினை'யாட்டு என்று மாற்றி விடலாம்!

    ReplyDelete
  3. நாம யாரு!? எந்த அணில இருக்கோம்ன்னு கூட புரியாம நமக்கே தெரியாம நாமளும் இந்த விளையாட்டில்..,

    ReplyDelete
  4. “விதிகள் மீறிய விளையாட்டு“ - என்ன செய்வது அரசியலும் விளையாட்டாக மாறிவிட்டப் பிறகு?

    அருமையான பதிவு இரமணி ஐயா.
    எப்படித்தான் யோசிக்கிறீர்களோ...!!!!!?

    ReplyDelete
  5. விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
    மீறப்படத்தான் என ஆகி
    பழக்கப்பட்டும் போய்விட்டது//
    விதிகளை மீறுவதே நல்ல பொழுது போக்காகி விட்டதே!

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமை ரமணி ஐயா! விதிகளை மீறுவதும் சதிகளை செய்வதும் என்றாகிவிட்டது...

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது போல் விளையாட்டு மைதானங்கள் இல்லை.போர்களங்கள் தான். பலரும் நினைப்பதை கவிதையாய் வடித்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.....
    தொடருங்கள்.

    ReplyDelete
  8. நடைமுறை ஆனால் சந்தோசமே..

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா.
    தங்களது தளத்திற்கு எனது முதல் வருகை. விதிமீறல் என்பது இப்போது சாணக்கியத்தனம் என்று தவறாக பிரசாரப்படுத்தப்படுகிறது. அரசியல் விளையாட்டில் போலியாய் உலா வருபவர்களை களையெடுக்க மாற்றம் வேண்டும் மக்கள் மனதில்..நல்லதொரு கவிதைக்கு நன்றீங்க அய்யா.

    ReplyDelete
  10. //விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல மீறப்படத்தான் என ஆகி பழக்கப்பட்டும் போய்விட்டது//

    கொடுமை தான்.

    எனினும் அதை எடுத்துசொல்லியுள்ளது அருமையான ஆக்கம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மைதானத்திற்குள் நுழையும்போது, நடுவு நிலையோடு வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஆட்டம் துவங்கியுடன் ஒரு அணிக்குள் ஐக்கியமாகி ஆதரவு நிலை எடுத்து விடுகின்றனர். வரப்போகும் தேர்தலில் விளையாடப் போகும் இரு அணிகளை மையப்படுத்திய அருமையான கவிதை.

    ReplyDelete
  12. விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
    மீறப்படத்தான் என ஆகி
    பழக்கப்பட்டும் போய்விட்டது

    பார்வையாளர்கள் கூட
    பார்வையாளர்களாக இல்லை
    இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

    மிகவும் ஆணித்தரமான உண்மை ஐயா . வெற்றி தோல்வி
    இரண்டையும் மகிழ்வாய் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தைத்
    தரும் விளையாட்டானது இன்று வினையாகவே தான் தொடர்கின்றது .
    சிறந்த நற் கருத்திற்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. arumaiyaaka sollideenga ayyaa...!

    ReplyDelete
  14. நாகரீகம் மட்டுமல்லாது..
    நாட்டின் வெற்றி தோல்வி..
    அங்கீகாரம் வளர்ச்சி நிலை இப்படி
    எல்லாவற்றையும் விளையாட்டின் வழியே
    நிலைகுத்தப் பார்க்கிறார்கள்..
    அதை முக்கால்வாசி செய்தும் விட்டார்கள்..
    காசைக் கொடுத்து வெறும் கையில் முழம்போடும்
    விளையாட்டை பார்த்துவிட்டு நாமும்
    ஏக்கமுடன் திரும்புகிறோம்..
    மிகச்சரியான சொல்லாடலுடன் புனையப்பட்ட
    கவிதை ஐயா..

    ReplyDelete
  15. ஆட்டம் முடிய போதை தெளிய
    மீண்டும் சராசரியாய் உருமாறி
    கடந்து போகிறார்கள்
    தத்தம்ம் பிழைப்புத் தேடி
    "மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி

    சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  16. விதிகள் என்பதே
    மீறுவதற்குத்தான்
    என்னும்
    புதிய விதி
    தோன்றி
    பல காலமாகிவிடடதை
    அருமையாய் சுட்டியுள்ளீர்கள்
    நன்றி

    ReplyDelete
  17. விதிகளை மீறுவது ஒரு விதியாகிவிட்டது

    ReplyDelete
  18. FAIR PLAY என்பது ஆட்டங்களில் மட்டுமல்ல. வாழ்விலும் எங்கும் எதிலும் அனுஷ்டிக்க வேண்டிய ஒன்று. அடுதவன் எல்லாமே எதிரி என்ற எண்ணம் புரையோடிக் கிடக்கிறது அவலம்தான். அழகாய் சொன்னவிதம் ரசிக்க வைத்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. மிக அருமையான கருத்துள்ள கவிதை... எனக்குத்தெரிந்து இது கவிதையில் இதுவரையிலும் யாரும் தொடாத கரு என்றுதான் நினைக்கிறேன்...
    கருத்துக்களும், வார்த்தை கோர்த்தலும் மிக மிக அருமை...
    சமூகக்கவிதைகள் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கான அருமையான உதாரணம் இது...
    மனதைக்கவர்ந்தது சார்... மிக மிக ரசித்தேன்...

    ReplyDelete
  20. #மைதானங்கள் எவையும்
    இப்போது மைதானங்களாக இல்லை
    போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன#
    வாக்கு சாவடிகளும் வாக்கு போட்டவனை சாவடிக்கும் களங்கள் ஆகி விட்டன !
    த.ம 16

    ReplyDelete
  21. அருமை. யோசிக்க வைத்தது...

    ReplyDelete
  22. தமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

    உங்கள் பொன்னான நேரங்களை செலவு செய்து நீங்கள் எழுதும் ஒரு ஒரு பக்கங்களுக்கும் Ad30days Network உங்களுக்கு சன்மானம் வழங்கும். நீங்கள் செய்யவேண்டியது http://publisher.ad30days.in/publishers_account.php சென்று உங்கள் ப்ளாக் மற்றும் உங்களை தொடர்புகொள்ளும் விபரங்களை அளிப்பது மட்டும்மே. மேலும் விபரங்களுக்கு http://ad30days.in பார்க்கவும்

    ReplyDelete
  23. விதிகளே மீறத்தான் ஆகிவிட்டது!.. கவிதையின் 10 ,11 வரிகளுக்கிடையே பின் தொடர் பட்டி நீண்டு இரண்டொரு எழுத்துக்களை மறைத்து தெரிகிறது. ஒருவேளை எனக்கு மட்டுமான்னு தெரியலை..

    மிக்க நன்றி!

    ReplyDelete
  24. போர்க்களங்களான மைதானங்கள் உண்மைதான்! சகிப்புத் தன்மையும் மாற்றுக் கருத்துக்கும் இப்போது இடமில்லாமல்தான் போய்விட்டன! அருமை! நன்றி!

    ReplyDelete
  25. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!

    ReplyDelete