Wednesday, December 25, 2013

சிகரம் தொட்டு மகிழ்வோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

25 comments:

  1. வணக்கம்
    கவிஞர் (ஐயா)

    நூலைப் பொருத்தே
    சேலையின் வனப்பு
    வேரைப் பொருத்தே
    செடியின் செழிப்பு
    எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு

    சிறப்பானவரிகள் .மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. //எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு//
    சிறப்புமிகு வரிகள் ஐயா நன்றி
    த.ம.3

    ReplyDelete
  4. ஏற்றமோ, தாழ்ச்சியோ, எண்ணங்களைப் பொறுத்து அமைகிறது எனும் கருத்து அருமை.

    ReplyDelete
  5. வாழ்வில் எதிர்படும் தடைகளை நொறுக்கி
    சிகரம் தொட்டு மகிழ்வோம்//வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான வரிகள்... த.ம 5

    ReplyDelete
  7. சிகரம் தொட வாழ்த்துக்கள்,சிகரம்வாய்க்கப்பெற்று விட்டால் மிகவும்நல்லதே/

    ReplyDelete
  8. அய்யா வணக்கம். அதாவது “நினைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குது”ங்கிறீங்க... சிரமப் படாமல் சிகரம் தொடமுடியாதுங்கிறீங்க... நல்ல பதிவு நன்றி

    ReplyDelete
  9. நூலைப் பொருத்தே
    சேலையின் வனப்பு
    வேரைப் பொருத்தே
    செடியின் செழிப்பு
    எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு//

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எண்ணத்தை பத்தி எவ்வளவு அழகா சொல்லிட்டிங்க... சிறப்பு!

    த.ம-9

    ReplyDelete
  11. சிறப்பான வாழ்வுக்கான வழி. மனதை தூய்மையாக வைத்துக் கொள்வதே. நல்ல பகிர்வு. நன்றிப்பா!

    ReplyDelete
  12. எண்ணங்கள் சீரானால் நல்வண்ணமாகும் வாழ்வென்று மிக அருமையாக வாழ்கையில் உயர்வினை அடைய வழிகூறும் கவிதை
    மிக அருமை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. ''..எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு..''
    Pon moli....Nan moli.
    Eniya
    vaalththu.
    Vetha-Elangathilakam.

    ReplyDelete
  14. எண்ணத்தை பொருத்தே மனதின் சிறப்பு! சத்தியமான வார்த்தைகள்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  15. எண்ணமே வாழ்வு! வேறென்ன? அழகான கவிதை!

    ReplyDelete
  16. //நூலைப் பொருத்தே
    சேலையின் வனப்பு
    வேரைப் பொருத்தே
    செடியின் செழிப்பு
    எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு//

    அற்புதமான வரிகள்.

    இனி நாம் சிகரம் தொடுவது மிகவும் எளிதே ;)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  17. எண்ணம் போல் வாழ்வு என்பதை அருமையாகச் சொன்னீர்கள் !
    +1

    ReplyDelete
  18. அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. //எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு//

    அருமையாச் சொன்னீங்க.....

    த.ம. +1

    ReplyDelete
  20. எண்ணம் இனிதானால் எல்லாம் இனிதாகும். உள்ளத்தனையது உயர்வு அல்லவா? அழகான சிறப்பான கருத்துக்கள். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  21. சிகரம் தொடுவதற்கான வழிகளைக் சிறப்பாக உங்கள் பாணியில் கூறி விட்டீர்கள் நன்று

    ReplyDelete

  22. இந்தக் கவிதை உதித்தது கூட எண்ணத்தில்தான் ! 'நச்' - சென்ற வார்த்தைகள் - நான் உங்கள் ரசிகனாகி விட்டேன் ! எனது புத்தாண்டுக் கவிதையைப் படித்து விட்டு, கருத்து பகிருங்களேன். மிகவும் பெருமையாய் நினைப்பேன் !

    http://psdprasad-tamil.blogspot.com/2013/12/newyearprayer.html

    ReplyDelete
  23. //நூலைப் பொருத்தே
    சேலையின் வனப்பு
    வேரைப் பொருத்தே
    செடியின் செழிப்பு
    எண்ணம் பொருத்தே
    மனத்தின் உயர்வு
    மனத்தைப் பொருத்தே
    வாழ்வின் சிறப்பு//

    அருமை!! எப்படி இப்படி உங்களுக்கு அருமையான கவிதை வரிகள் தினம் தினம் கொட்டுகின்றன!!!!!!

    வியப்பு!! ரசிப்பு!! பாராட்டு!! வாழ்த்து உங்கள் கவிதைகள் பெருக!!!

    ReplyDelete