Friday, December 27, 2013

குழந்தைகளோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவை  உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

இவை எதற்கும் நேரமில்லையெனில்
கவலை கொள்ளவேண்டாம்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

28 comments:

  1. சாத்வீகமான உண்மை.குழந்தைகளோடு இருக்கும்போது கவலைகள் மறந்தும் கனமும் மகிழ்ந்தே இருந்திடலாம்

    ReplyDelete
  2. குழந்தைகளோடு இருக்கும்போது சொர்க்கம் நம் கையில். என் பிள்ளைகளேல்லாம் பெரிசாகிட்டுது. அதனால எதிர்வீட்டு குழந்தைதான் இப்ப என் செல்லம்.

    ReplyDelete
  3. குழந்தைகளோடு குழந்தைஆனால் குதூகலத்திற்கு பஞ்சமில்லைதான் !

    ReplyDelete
  4. உண்மை தான் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ///இவை எதற்கும் நேரமில்லையெனில்
    கவலை கொள்ளவேண்டாம்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்///

    அதற்கும் நேரமில்லையென்றால் உங்களின் கவிதையை படித்தாலே இவை அனைத்தையும் ஒன்றாக கிடைக்குமே tha.ma 6

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அதுஇவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்
    மிகச் சரியாக விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம்
    த.ம 7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. உண்மையே பொறுமை இருந்தால் , ரசிக்கும் மனோபாவம்
    இருந்தால் .

    ReplyDelete
  9. சந்தோஷத்துக்குச் சுருக்கு வழி!

    ReplyDelete
  10. ''..குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்..''
    அனுபவிக்கிறேன் பேரன் மூலம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. குழலினிது யாழ் இனிது என்பார்
    மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர்
    அருமை
    நன்றி ஐயா
    த.ம.9

    ReplyDelete
  12. இயற்கையை ரசியுங்கள் அல்லது செயற்கைத் தனம் இல்லாத குழந்தைகளை ரசியுங்கள் என்பதை அருமையாகக் கவியாக்கி உள்ளீர்கள் !

    ReplyDelete
  13. குழந்தைகள் எல்லா மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லவர்கள். கவலைகள் அத்தனையும் , பறந்தும், மறந்தும் போவது உண்மை.

    ReplyDelete
  14. உண்மைதான் ஐயா! தீங்கிழைக்காத் திகட்டாத பேரின்பம் மழலைகளிடம் காணும் இன்பம்!

    மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  15. இவை எதற்கும் நேரமில்லையெனில்
    கவலை கொள்ளவேண்டாம்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்//

    குழந்தைகள் மொழி நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துமே.
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.
    11வது வாக்கு.

    ReplyDelete
  16. சொன்ன அனைத்தும் அருமை. அதுவும் கடைசியில் சொன்னது .....

    த.ம. +1

    ReplyDelete
  17. குழந்தைகள் போல் மனம் சிரித்திருக்க
    குவலையம் தன்னில் மனம் மகிழ
    அரியதோர் வரமாய் இவ்வாண்டு
    அகத்தினில் நிறைந்திட வாழ்த்துக்கள் ஐயா ....

    ReplyDelete
  18. மகிழ்வூட்டிடும் மழலைச்செல்வங்கள் ! பற்றிய பதிவு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  19. malalaijin mozhiil azhkiya thamil padikkalam

    ReplyDelete
  20. // இவை எதற்கும் நேரமில்லையெனில்
    கவலை கொள்ளவேண்டாம்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும் //

    அனுபவமான மொழிகள்! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

    ReplyDelete
  21. //இவை எதற்கும் நேரமில்லையெனில்
    கவலை கொள்ளவேண்டாம்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்//
    இயற்கையும், குழந்தையும் ஒன்றே! நம் மனதை சந்தோஷமாக, எந்தக் கவலையும் அண்டவிடாது உதவுவதில்! அதுவும் செல்வத்துள் எல்லா செல்வம் மழலைச்செல்வம்!!!

    நல்லதொரு, இனிமையான கவிதை!! பிரமிப்பு!

    ReplyDelete
  22. மனம் குளிர்கிறது.

    ReplyDelete
  23. குழந்தைகளோடு இருந்தால் என்றும் சந்தோஷமே... சரியாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  24. பிஞ்சுமொழி பேசும் மழலைகளுடன் நேரம் செலவழித்தால் நெஞ்சம் அளவிலா ஆனந்தம் அடையும். கருத்தும் சொன்ன விதமும் மிக சிறப்பு

    ReplyDelete
  25. "குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்" எனச்
    சிறப்பாக வழிகாட்டியுள்ளீர்கள்.
    குழந்தைகளோடு இணைந்திருக்கையில்
    இன்பம் வருமே!

    ReplyDelete
  26. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete